ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி வாழ்க.. அப்படின்னா? என்ன?
ஆலமரம் அடிமரம்
இற்றுப்போனாலும் விழுதுகள் தாங்கிப்பிடிக்கும். அதுபோல விழுதாக குடும்பத்தை தாங்கிப்பிடிக்க
வேண்டும் என்றே இந்த வாழ்த்து. ஆலமரம் காற்றில் உள்ள கரியமில வாயுவை உறிஞ்சி ஆக்ஸிஜனை
20 மணி நேரம் வெளியிடும் தன்மை கொண்டது. அதுபோல தனக்கு இடர்வந்தாலும் அதை தாங்கிக்கொண்டு
குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நன்மையே செய்யவேண்டும் என்ற பொருளிலும் இந்த வாழ்த்து.
அருகம்புல் ஒவ்வொரு
கணுவிலும் வேர் பிடிக்கும் தன்மை கொண்டது. இடையே வெட்டுப்பட்டாலும் கணுவில் இருந்து
துளிர்த்து தழைக்கும். அதுபோல எந்த இடர் வந்து சிதைத்தாலும் சிதையாமல் குடும்பத்தை
காக்கும் குணம் வேண்டும் என்றே இந்த வாழ்த்தின் பொருள்.
இதை எல்லாம் நாம்
எப்போது உணர்வோம்?
நம் மரபு கலாச்சாரம்
பண்பாடு பழக்கவழக்கம் எல்லாமே காரண காரியத்தோடு நம் நன்மைக்காக அர்த்தத்தோடு உருவாக்கப்பட்டவையே.
நம் முன்னோர்களின்
ஒவ்வொரு செயலிலும் நம் ஆரோக்கியத்துக்கான மருத்துவம் இருந்தது. மூடநம்பிக்கை இல்லை.
புரிந்தவர் பயன்படுத்தி
பலனடைகிறார்கள்.
புரியாதவர்கள்
பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.
தமிழன் திமிரானவன்
சுந்தர்ஜி
No comments:
Post a Comment