Monday, December 30, 2024

அதிகாலையில் வீட்டு வாசலில் கோலம் போடுவது எதற்காக?

அதிகாலையில் வீட்டு வாசலில் கோலம் போடுவது எதற்காக?

வெட்டி வேலையா? மூட நம்பிக்கையா?

நம் வீட்டு பெண்கள் ஒரே ஒரு கோலம் போடுவதால் எக்கசக்க நன்மை இருக்குன்னா உங்களால் நம்ப முடியுமா? ஆனால் அதுதான் உண்மை… வரிசையா சொல்றேன் கேட்டுக்கோங்க…

அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரம்ம முகூர்த்தம் என்று சொல்வார்கள். காரணம் என்ன தெரியுமா? அந்த நேரத்தில் ஓசோன் படலம் கீழ் இறங்கி பூமியின் மேற்பரப்பில் தவழ்ந்திருக்கும்.

அந்த நேரத்தில் நாம் வெளியே வந்து அந்த காற்றை சுவாசித்தால் உற்சாகம் பிறக்கும் சுறுசுறுப்பு கிடைக்கும். (அதிகாலையில் பேப்பர் போடுபவர் பால் ஊற்றுபவர் உற்சாகத்துக்கு சுறுசுறுப்புக்கு காரணம் இதுதான்) மனது ஒருநிலையில் அமைதியாக நிர்மலமாக இருக்கும். அதனால்தான் மாணவ மாணவிகளை அதிகாலை எழுத்து படிக்கச்சொல்வது. ஒரு முறை படித்தாலே மனதில் பதிந்துவிடும் என்பதால்தான்.

அது மட்டுமில்லை பெண்கள் கோலம் போடும்போது குனிந்து நிமிர்ந்து கோலம் போடுவதால் சிறந்த உடற்பயிற்சி யோகாசனம். (அதைவிட்டதால்தான் இன்று அதே பயிற்சியை காசு கொடுத்து கார்பரேட் கம்பெனி பிட்னஸ் செண்டர்/ யோகா கிளாஸ் போய் செய்கிறார்கள்)

அதுமட்டுமில்லை கோலம் போடுவது எந்திரம் எழுதுவது போல சிந்தனை ஒருநிலைப்பட்டு குடும்பத்தில் எப்பேர்பட்ட சிக்கல் ஏற்பட்டாலும் தீர்க்கும் திறனுக்கு பயிற்சியாக அமையும்.

அதுமட்டுமில்லை அந்த காலத்தில் கோலத்தை அரிசி மாவில்தான் போடுவார்கள். இது அணில், குருவிகள், எறும்புகளுக்கு உணவாக செல்லும் நல்ல தர்ம சிந்தனையை உருவாக்கும். புண்ணியம். 

அதுமட்டுமில்லை கோலம் போடுவதற்கு முன்னர் வாசலை சுத்தம் செய்து பசுமாட்டு சாணியால் தெளிப்பார்கள் இது பாக்டீரியாவையும் கதிர்வீச்சையும் தடுக்கவல்லது.

இப்படி நம் வீட்டு பெண்கள் தினம் ஒரு கோலம் போடுவதால் கிடைத்த நன்மை அத்தனையும் இழந்தது மட்டுமில்லை பெண்களை நோயாளியாக்கியதுதான் மிச்சம்.

இதை எல்லாம் நாம் எப்போது உணர்வோம்?

நம் மரபு கலாச்சாரம் பண்பாடு பழக்கவழக்கம் எல்லாமே காரண காரியத்தோடு நம் நன்மைக்காக அர்த்தத்தோடு உருவாக்கப்பட்டவையே.

நம் முன்னோர்களின் ஒவ்வொரு செயலிலும் நம் ஆரோக்கியத்துக்கான மருத்துவம் இருந்தது. மூடநம்பிக்கை இல்லை.

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி 


 

No comments:

Post a Comment