Friday, December 6, 2024

இடி இடிக்கும்போது ஏன் அர்ஜுனா? அர்ஜுனா? என்று சொல்லவேண்டும்?

இடி இடிக்கும்போது ஏன் அர்ஜுனா? அர்ஜுனா? என்று சொல்லவேண்டும்?

மூட நம்பிக்கையா? ஆன்மீக தினிப்பா?

நம்ம ஊரில் இடி இடித்து மழை பெய்யும் போது நம் வீட்டு பெரியவர்கள் அர்ஜுனா அர்ஜுனா என்று சொல்வார்கள். நம்மையும் சொல்லச்சொல்வார்கள்.

உடனே நம்ம வீட்டு இளசுகள்..நீ அர்ஜுனான்னு சொன்ன உடனே அவன் வில்லையும் அம்பையும் எடுத்திட்டு வந்து இடி சததமே இல்லாம பன்னிடுவானாக்கும் என்று கேலி செய்வார்கள்.

இடிதாங்கி கண்டுபிடிச்சி எத்தனையோ ஆண்டுகள் ஆச்சி, அதை கட்டிடத்தின் மேல வைக்காம இன்னமும் அர்ஜுனான்னு புலம்பிட்டு இருக்கியேன்னு பகுத்தறிவுவாதிகள் இடியில் இருந்து தப்பும் அறிவியல் உபகரணம் பற்றி சொல்வார்கள்.

ஆனால் நம் முன்னோர் சொன்னதின் உண்மை காரணம் என்ன  தெரியுமா?

இடி பலமாக இடிக்கும்போது சிலரது காது அடைத்து ங்கொய்ன்னு சத்தம் வரும். இதிலிருந்து  தப்ப அர்ஜுனா அர்ஜுனா என்றால் போதும் காது அடைக்காது.

“அர்” என்று சொல்லும்போது நாக்கு மடித்து மேல் தாடையை தொடும். “ஜூ” என்று சொல்லும் போது வாய் குவித்து காற்று வெளியேற தொடங்கும். “னா” என்று சொல்லும்போது வாய் முழுமையாக திறந்து காற்று வெளியே போகும். 

இப்படி காற்று வெளியேறுவதால் காது அடைக்காது. (இடி இடிக்கும்போது நீங்களும் முயற்சித்து பார்க்கலாம்.)  அதற்குதான் அர்ஜுனாவை நம்மவர்கள் துணைக்கு அழைத்தார்கள்.

அர்ஜுனன் பெயரை உச்சரிப்பது மனதுக்கு பலம் என்ற ஆன்மீக காரணத்துடன் அறிவியலை நம் முன்னோர்கள் எளிமையாக செலவில்லாமல் நம்மை கடைபிடிக்கவைத்து ஆரோக்கியம் காத்தார்கள்.

நாம் தான் காரணம் தெரியாமல் புரியாமல் தமிழர் பழக்கவழத்தை மூட நம்பிக்கை மூட பழக்கம் என்று கடைபிடிக்காமல் கைவிட்டுவிட்டோம்.

இப்ப புரியுதா அர்ஜுனா? அர்ஜுனா?

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை.

எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி

 


 

No comments:

Post a Comment