Monday, December 30, 2024

அதிகாலையில் வீட்டு வாசலில் கோலம் போடுவது எதற்காக?

அதிகாலையில் வீட்டு வாசலில் கோலம் போடுவது எதற்காக?

வெட்டி வேலையா? மூட நம்பிக்கையா?

நம் வீட்டு பெண்கள் ஒரே ஒரு கோலம் போடுவதால் எக்கசக்க நன்மை இருக்குன்னா உங்களால் நம்ப முடியுமா? ஆனால் அதுதான் உண்மை… வரிசையா சொல்றேன் கேட்டுக்கோங்க…

அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரம்ம முகூர்த்தம் என்று சொல்வார்கள். காரணம் என்ன தெரியுமா? அந்த நேரத்தில் ஓசோன் படலம் கீழ் இறங்கி பூமியின் மேற்பரப்பில் தவழ்ந்திருக்கும்.

அந்த நேரத்தில் நாம் வெளியே வந்து அந்த காற்றை சுவாசித்தால் உற்சாகம் பிறக்கும் சுறுசுறுப்பு கிடைக்கும். (அதிகாலையில் பேப்பர் போடுபவர் பால் ஊற்றுபவர் உற்சாகத்துக்கு சுறுசுறுப்புக்கு காரணம் இதுதான்) மனது ஒருநிலையில் அமைதியாக நிர்மலமாக இருக்கும். அதனால்தான் மாணவ மாணவிகளை அதிகாலை எழுத்து படிக்கச்சொல்வது. ஒரு முறை படித்தாலே மனதில் பதிந்துவிடும் என்பதால்தான்.

அது மட்டுமில்லை பெண்கள் கோலம் போடும்போது குனிந்து நிமிர்ந்து கோலம் போடுவதால் சிறந்த உடற்பயிற்சி யோகாசனம். (அதைவிட்டதால்தான் இன்று அதே பயிற்சியை காசு கொடுத்து கார்பரேட் கம்பெனி பிட்னஸ் செண்டர்/ யோகா கிளாஸ் போய் செய்கிறார்கள்)

அதுமட்டுமில்லை கோலம் போடுவது எந்திரம் எழுதுவது போல சிந்தனை ஒருநிலைப்பட்டு குடும்பத்தில் எப்பேர்பட்ட சிக்கல் ஏற்பட்டாலும் தீர்க்கும் திறனுக்கு பயிற்சியாக அமையும்.

அதுமட்டுமில்லை அந்த காலத்தில் கோலத்தை அரிசி மாவில்தான் போடுவார்கள். இது அணில், குருவிகள், எறும்புகளுக்கு உணவாக செல்லும் நல்ல தர்ம சிந்தனையை உருவாக்கும். புண்ணியம். 

அதுமட்டுமில்லை கோலம் போடுவதற்கு முன்னர் வாசலை சுத்தம் செய்து பசுமாட்டு சாணியால் தெளிப்பார்கள் இது பாக்டீரியாவையும் கதிர்வீச்சையும் தடுக்கவல்லது.

இப்படி நம் வீட்டு பெண்கள் தினம் ஒரு கோலம் போடுவதால் கிடைத்த நன்மை அத்தனையும் இழந்தது மட்டுமில்லை பெண்களை நோயாளியாக்கியதுதான் மிச்சம்.

இதை எல்லாம் நாம் எப்போது உணர்வோம்?

நம் மரபு கலாச்சாரம் பண்பாடு பழக்கவழக்கம் எல்லாமே காரண காரியத்தோடு நம் நன்மைக்காக அர்த்தத்தோடு உருவாக்கப்பட்டவையே.

நம் முன்னோர்களின் ஒவ்வொரு செயலிலும் நம் ஆரோக்கியத்துக்கான மருத்துவம் இருந்தது. மூடநம்பிக்கை இல்லை.

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி 


 

குழந்தை இடைவிடாது அழுதால் திருஷ்டியா? வியாதியா? பயமா?

 

குழந்தை இடைவிடாது அழுதால் திருஷ்டியா? வியாதியா? பயமா?

 

பொதுவாகவே இடைவிடாது பச்ச குழந்தை அழுதால் திருஷ்டி பட்டுவிட்டது என்று சொல்லி…

 

ஒரு ஈர் குச்சியில் மூன்று மிளகாய் வத்தல் சொருகி அதன் நுனியில் ஒரு வெள்ளை பருத்தி துணியை சுற்றி நல்லெண்ணையில் நனைத்து பற்ற வைத்து குழந்தையின் முன் இடம் வலமாக ஆட்டுவார்கள்.

 

எதையாவது பார்த்து பயந்தோ அல்லது கனவு கண்டோ அதை நினைவில் சொல்லதெரியாமல் அழுதுகொண்டே இருக்கும் குழந்தை இந்த புதிய ஒளியை கண்டு அதிசயத்து பார்க்கும்.

 

அதன் பார்வை அந்த ஒளியின் மீதே இருக்கும். அதன் ஆழ்மனதில் பதிந்த பய உணர்வு மெல்ல மெல்ல அகலும். அதன் மனதில் இந்த வெளிச்சம் மட்டுமே நினைவில் நிறையும்.

 

அத்தோடு மிளகாயும் எண்ணையும் கலந்த புகை நெடி குழந்தையின் சுவாசத்தை சீர் செய்யும். நெஞ்சில் கோழை சளி இருந்தால் இருமல் தும்மல் மூலம் வெளியேறும்.

 

சிறு குழந்தைகள் கண்ணால் சிவப்பு வெள்ளை நிறங்கள் மட்டுமே இனம் காணமுடியும். மற்ற நிறங்கள் தெரியாது. எனவேதான் இந்த ஏற்பாடு. 

 

வளர்ந்த குழந்தைகளுக்கு கண் கொட்டாங்கச்சியில் மிளகாய் கல் உப்பு போட்டு எரியவிட்டு சுற்றி போடுவார்கள்.

 

இதன் மூலம் கெட்ட நீர் வியர்வையாக வெளியேறும். இதன் நெடியில் சுவாசம் சீரடையும் சுவாச பாதையில் உள்ள சளி தும்மல் மூலம் வெளியேற்றவே இந்த ஏற்பாடு.

 

இதை எல்லாம் நாம் எப்போது உணர்வோம்?

 

நம் மரபு கலாச்சாரம் பண்பாடு பழக்கவழக்கம் எல்லாமே காரண காரியத்தோடு நம் நன்மைக்காக அர்த்தத்தோடு உருவாக்கப்பட்டவையே.

 

நம் முன்னோர்களின் ஒவ்வொரு செயலிலும் நம் ஆரோக்கியத்துக்கான மருத்துவம் இருந்தது.

 

அதில் மூடநம்பிக்கை இல்லை.     

 

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

 

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

 

தமிழன் திமிரானவன்

 

சுந்தர்ஜி 


Wednesday, December 25, 2024

ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி வாழ்க.. அப்படின்னா? என்ன?

 

ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி வாழ்க.. அப்படின்னா? என்ன?

ஆலமரம் அடிமரம் இற்றுப்போனாலும் விழுதுகள் தாங்கிப்பிடிக்கும். அதுபோல விழுதாக குடும்பத்தை தாங்கிப்பிடிக்க வேண்டும் என்றே இந்த வாழ்த்து. ஆலமரம் காற்றில் உள்ள கரியமில வாயுவை உறிஞ்சி ஆக்ஸிஜனை 20 மணி நேரம் வெளியிடும் தன்மை கொண்டது. அதுபோல தனக்கு இடர்வந்தாலும் அதை தாங்கிக்கொண்டு குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நன்மையே செய்யவேண்டும் என்ற பொருளிலும் இந்த வாழ்த்து.

அருகம்புல் ஒவ்வொரு கணுவிலும் வேர் பிடிக்கும் தன்மை கொண்டது. இடையே வெட்டுப்பட்டாலும் கணுவில் இருந்து துளிர்த்து தழைக்கும். அதுபோல எந்த இடர் வந்து சிதைத்தாலும் சிதையாமல் குடும்பத்தை காக்கும் குணம் வேண்டும் என்றே இந்த வாழ்த்தின் பொருள்.

இதை எல்லாம் நாம் எப்போது உணர்வோம்?

நம் மரபு கலாச்சாரம் பண்பாடு பழக்கவழக்கம் எல்லாமே காரண காரியத்தோடு நம் நன்மைக்காக அர்த்தத்தோடு உருவாக்கப்பட்டவையே.

நம் முன்னோர்களின் ஒவ்வொரு செயலிலும் நம் ஆரோக்கியத்துக்கான மருத்துவம் இருந்தது. மூடநம்பிக்கை இல்லை.

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி

 

 


சக்கிலசனாசனா” என்றால் என்ன என்பது பற்றி யாருக்காவது தெரியுமா?

 

61. “சக்கிசலனாசனா” என்றால் என்ன என்பது பற்றி யாருக்காவது தெரியுமா?

தெரிந்தோ தெரியாமலோ அந்த காலத்தில் நம் வீட்டு பெண்கள் செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் அர்த்தம் நிறைந்து இருந்தது. ஆரோக்கியம் சார்ந்து இருந்தது.

அமராமல் குனிந்து கோலம் போடுவதால் கற்பபை பலப்படும் என்பது எத்தனை பேர் அறிந்து வைத்துள்ளோம்?

தானியங்கள் உரலில் குத்துவதும், அம்மி அரைப்பதாலும் கைகள் பலப்படும் சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பு ஏறாது.

அதே போல மாவாட்டுவதும் பெண்களுக்கு ஒரு சிறந்த பயிற்சி என்று எத்தனை பெண்கள் உணர்ந்திருக்கிறார்கள்?

மாவாட்டுவதால் தொப்பை குறையும் தசைகள் இறுகும். மாதவிடாய் தொந்திரவை சரி செய்யும்

இதுக்கெல்லாம் வீட்டில் மெஷின் வாங்கி வச்சிட்டு…

பெண்கள் தொப்பையை குறைக்கவும் கொழுப்பை குறைக்கவும் சர்க்கரை இரத்த கொதிப்பு குறைக்கவும் மூச்சு பயிற்சிக்காவும்…

கார்பரேட் கம்பெனிகளின் நவீன பிட்நெஸ் செண்டர் - உடற்பயிற்சி கூடத்தில் மாதாமாதம் காசு கொடுத்து அங்கு உள்ள மெஷினில் இதே வேலையை பயிற்சி என்ற பெயரில் செய்துட்டு வராங்க… 

என்னத்த சொல்ல?        

அதெல்லாம் சரிப்பா அந்த “சக்கிசலனாசனா”” என்றால் என்ன என்றுதான கேட்கறீங்க?

அதுதான் கார்பரேட் கம்பெனிக்காரன் தொப்பையை குறைக்க மாவாட்டுவது போல செய்யச்சொலும் யோகாசதனத்தின் பெயர்.

இதை எல்லாம் நாம் எப்போது உணர்வோம்?

நம் மரபு கலாச்சாரம் பண்பாடு பழக்கவழக்கம் எல்லாமே காரண காரியத்தோடு நம் நன்மைக்காக அர்த்தத்தோடு உருவாக்கப்பட்டவையே.

நம் முன்னோர்களின் ஒவ்வொரு செயலிலும் நம் ஆரோக்கியத்துக்கான மருத்துவம் இருந்தது. மூடநம்பிக்கை இல்லை.

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி

 


 

கடவுள் வேறு… கடவுள் சிலைகள் வேறு…

 

 

கடவுள் வேறு… கடவுள் சிலைகள் வேறு…

மக்களை காக்கும் தெய்வசிலையையே திருடிச்செல்லும் போது,                   தன்னையே தற்காத்துக்கொள்ளாத தெய்வம் நம்மை எப்படி காக்கும்?

இதுதான் திராவிட பகுதறிவு – புளுத்தறிவு கேட்கும் கேள்வி.

இதுக்கு மெத்த படித்த ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு ஞானம் உள்ள நம்மில் அனேகம் பேருக்கு பதில் சொல்ல தெரியாது. மழுப்பலாகத்தான் சமாளிக்கமுடியும்.

ஆனால் உண்மை இதுதான்…

சிலைகளே கடவுள் அல்ல. மூர்த்தி வேறு மூர்த்திமான் வேறு.

என்ன புரியவில்லையா? புரியும்படியே சொல்கிறேன்.

மூர்த்தி என்பது கற்ச்சிலை. மூர்த்திமான் என்பது அந்த  கற்சிலையில் நாம் ஆவாகனம் செய்யும் தெய்வம்.

மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு. பல்பை பார்க்க முடியும். மின்சாரத்தை பார்க்க முடியாது.

பல்பில் மின்சாரம் பாயாது. அதனால் பல்பை திருடலாம்,ஷாக் அடிக்காது.. ஆனால் மின்சாரம் இல்லாமல் பல்பு எரியாது.

அதுபோல சிலையை திருடலாம். தெய்வம் தடுக்காது. திருடும் அவனால் அந்த சிலைக்கு தெய்வதன்மையை கொடுக்கமுடியாது.

அதுபோலத்தான் நம் பூஜை அறையில் இருக்கும் சுவாமி போட்டோக்களும் படங்களும் தெய்வதன்மை பெற்று இருக்கும்போது கடவுளாக வணங்கப்படுகிறது.

அந்த இடத்தை விட்டு கீழ் இறங்கிவிடால் அது வெறும் காகிதம் அல்லது படம்தான்.   

கிருபானந்த வாரியாரியார் சொற்பொழிவிலிருந்து… .

நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நின்ற நடு என்கிறார் இராமலிங்க வள்ளலார்.

அதாவது கள்ளனுக்கும் கருணைகாட்டும் கடவுள் என்றார்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


Saturday, December 21, 2024

தமிழன் குழந்தையின் இடுப்பிலோ கழுத்திலோ ஏன் தாயத்து கட்டப்படுகிறது?

 

தமிழன் குழந்தையின் இடுப்பிலோ கழுத்திலோ ஏன் தாயத்து கட்டப்படுகிறது?

திருஷ்டிக்கா?  காத்து கருப்பு படாமல் இருக்கவா? மூடநம்பிக்கையா?

இது எதுவும் இல்லை. 

தமிழன் ஸ்டெம் செல் ஆராய்ச்சியின் முன்னோடி என்றால் ஆச்சரியப்படாதீர்கள். அதுதான் உண்மை.

முற்காலத்தில் குழந்டை பிறந்த உடன் தொப்புள் கொடியை அறுத்தபின் அதை எறிந்துவிடாமல் சுத்தம் செய்து காயவைத்து பொடி செய்து அதைத்தான் தாயத்தில் வைத்து குழந்தையின் கழுத்திலோ இடுப்பிலோ கட்டிவிடுவார்கள்.

குழந்தை வளரும் காலத்தில் ஏற்படும் உடல் உபாதையை தவிர்க்கமுடியாமல் வைத்தியத்தால் குணப்படுத்த இயலவில்லை என்றால்

குழந்தையின் தாயத்தில் இருக்கும் தொப்புள் கொடி பொடியை சிறிது எடுத்து நோய்க்கு ஏற்றவாறு தேனிலோ அல்லது பாலிலோ கலந்து கொடுத்தால் எப்பேர்பட்ட வியாதியும் குணம் அடையும்.  

பிறகாலத்தில் எவனோ சொன்னான் என்று தாயத்தில் எந்திரத்தையும் நரிக்கொம்பையும் வைத்து வீதிதோறும் கூவி விற்கும் பழம்பெருமை மறந்த தமிழனை என்ன சொல்ல?

ஆனால் இதை இன்றைய ஆங்கில மருத்துவம் உணர்ந்து இப்போதெல்லாம் பிரசவத்தின் போது ஏதேதோ காரணம் சொல்லி நம் குழந்தை இளம் தாய்மார்களிடம் இருந்து வெட்டும் தொப்புள் கொடியை எடுத்து பதப்படுத்திதான் பல லட்சம் கோடிக்கு ஸ்டெம் செல் ஆராய்ச்சி செய்து நம்மிடமே வியாபாரம் செய்கிறார்கள்.

இதை எல்லாம் நாம் எப்போது உணர்வோம்?

நம் மரபு கலாச்சாரம் பண்பாடு பழக்கவழக்கம் எல்லாமே காரண காரியத்தோடு நம் நன்மைக்காக அர்த்தத்தோடு உருவாக்கப்பட்டவையே.

நம் முன்னோர்களின் ஒவ்வொரு செயலிலும் நம் ஆரோக்கியத்துக்கான மருத்துவம் இருந்தது. மூடநம்பிக்கை இல்லை.

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.                            

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி 


 

கற்பமான பெண்களுக்கு வளைகாப்பு ஏன் செய்யப்படுகிறது?

 

கற்பமான பெண்களுக்கு வளைகாப்பு ஏன் செய்யப்படுகிறது?

மூட நம்பிக்கையா? அல்லது வெறும் சடங்கு சம்பிர்தாயமா?

கருவுற்றிருக்கும் இளம் பெண்கள் பிரசவ காலம் நெருங்க நெருங்க உடல் மாற்றத்தினாலும் பிரசவ நிகழ்வின் பயத்தினாலும் மனதைரியத்தை இழந்து விடுவார்கள். ஒருவித பதட்டத்துடனேயே இருப்பார்கள்.

அவர்களை உற்றார் உறவினர் சகோதரிகள் சேர்ந்து தேற்றவே சீமந்தம் எனப்படும் வளைகாப்பு நடத்தப்படுகிறது.

சரி அதில் கண்ணாடி வலையல்களுக்கு ஏன் முக்கியத்துவம்? ஏன் கைநிறைய கண்ணாடி வலையல்கள் அணிவிக்கிறார்கள்?

தாயின் பனிக்குடநீரில் கவலையின்|றி நீந்திக்கொண்டு இருந்த கருவில் இருக்கும் குழந்தை ஆறாம் மாதம் முதல் வெளி உலக வெளி உலக சப்தங்கள் விசித்திரம் போன்ற சகலவிஷயங்களையும் கவனிக்க துவங்குகிறது.

தாயின் கையில் அணியப்பெற்ற கண்னாடி வலையல்களின் ஒலி குழந்தைக்கு உற்சாகத்தையும் நரம்பு மண்டத்தை தூண்டுவதாகவும் அமைகிறது.

கண்ணாடி வலையல்களின் ஓசை குழந்தைக்கு பாதுகாப்பான உணர்வையும் நல்ல மனநிலையையும் தரும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல கருவுற்ற இளம் பெண் நாள் முழுவதும் தாயின் நேரடி கண்காணிப்பில்தான் இருக்கவேண்டும். அப்போது இந்த கண்ணாடி வலையல் ஓசைதான் அடுத்த அறையில் இருந்தாலும் தூங்கும்போதும் கருவுற்ற பெண் இயல்பான நிலையில் இருப்பதை தாய்க்கு உணர்த்துகிறது.

நம் மரபு கலாச்சாரம் பண்பாடு பழக்கவழக்கம் எல்லாமே காரண காரியத்தோடு நம் நன்மைக்காக அர்த்தத்தோடு உருவாக்கப்பட்டவையே.

நம் முன்னோர்களின் ஒவ்வொரு செயலிலும் நம் ஆரோக்கியத்துக்கான மருத்துவம் இருந்தது. மூடநம்பிக்கை இல்லை.

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி

  


Friday, December 20, 2024

. குழந்தைக்கு நிலாவை - பறவையை காட்டி சோறூட்டுவதன் இரகசியம் என்ன?

 

. குழந்தைக்கு நிலாவை - பறவையை காட்டி சோறூட்டுவதன் இரகசியம் என்ன?

கருவில் இருக்கும் குழந்தைக்கு தொப்புள்கொடி வழியாகவே உணவு செல்கிறது.

குழந்தை பிறந்த பின்புதான் தொண்டை உணவு குழல் விரிவடைய தொடங்குகிறது. இது திட உணவு உண்ணுவதற்கேற்றவாறு முழுமையாக விரிவடைய 5 வருடங்கள் ஆகும்.

பறவையை நிலவை காட்டி சோறூட்டும்போது குழந்தை தலை மேல்நோக்கி இருப்பதால் தொண்டை மற்றும் உணவுக்குழல் விரிவடைகிறது.

அப்போது குழந்தை உண்ணும் திட உணவு இலகுவாக இறைப்பையை நோக்கி இறங்குகிறது. மேலும் தொண்டை குழலில் கீழ் நோக்கி இறாங்கும் அலைவு இயங்கங்கள் மற்றும் செரிமான ஊக்கிகளுக்கு நன்கு பயிற்சி கிடைக்கிறது.

இப்பயிற்சியின் மூலம் குழந்தையின் உணவு செரிமாண மண்டலம் ஆரோக்கியம் பெருகிறது.

மேலும் பறவையை நிலவை காட்டி சோறூட்டும்போது குழந்தைகள் உணவில் ஆர்வம் காட்டி உற்சாகமாக உண்கிறார்கள்.

நம் மரபு கலாச்சாரம் பண்பாடு பழக்கவழக்கம் எல்லாமே காரண காரியத்தோடு நம் நன்மைக்காக அர்த்தத்தோடு உருவாக்கப்பட்டவையே.

நம் முன்னோர்களின் ஒவ்வொரு செயலிலும் நம் ஆரோக்கியத்துக்கான மருத்துவம் இருந்தது. மூடநம்பிக்கை இல்லை.

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி 


சாம்பிராணி தூபம் போடுவதன் இரகசியம் என்ன?

 


சாம்பிராணி தூபம் போடுவதன் இரகசியம் என்ன?

ஆன்மீகமா? மூடநம்பிக்கையா?

நம் வீட்டில் இருக்கும் சுமங்கலி பெண்கள் தினமும் மாலையில் குளித்துவிட்டு விளக்கேற்றி சாம்பிராணி தூபமிடுவார்கள்.

கேட்டால் வீட்டில் உள்ள பீடைகள் தரித்திரம் போகும் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் செல்வம் பெருகும் என்று சொல்வார்கள்.

அதுமட்டும்தான் காரணமா என்றால் இல்லை. பிறகு எதுதான் உண்மை காரணம்?

சாம்பிராணி என்பது ஒரு மூலிகை மரத்தின் பிசின் ஆகும். அதை நெருப்பில் இடும்போது வரும் புகையால் வீடு நறுமணம் பெரும். வீட்டில் உள்ள கெட்ட வாடை அகலும்.

எதிர்மறை ஆற்றல் விலக்கி நேர்மறை ஆற்றல் பெருகும். சுவாச கோளாறு நீங்கி மூக்கடைப்பு விலகும்.சளிப்பிரச்சனைகள் தீரும்.

வீட்டில் உள்ள தேள், பல்லி, பூரான், எட்டுகால் பூச்சி போன்ற ஜந்துக்கள் தொல்லை சாம்பிராணி போடும் வீட்டில் இருக்காது. இருந்தாலும் ஓடிவிடும். 

அதனால்தான் நம் அனைத்து வழிபாட்டு முறைகளிலும் கூட சாம்பிராணி தூபம் போடும் வழக்கத்தை நம் மூதாதையர்கள் கடைபிடித்தார்கள். கம்யூட்டர் சாம்பிராணியில் அந்த பலன் கிடைக்காது.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை.

எல்லாம் நம் நன்மைக்கே, ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி

 


Wednesday, December 18, 2024

கறிக்குழம்பில் ஏன் உருளைகிழங்கோ முள்ளங்கியோ போடுகிறார்கள்?

 

 

கறிக்குழம்பில் ஏன் உருளைகிழங்கோ முள்ளங்கியோ போடுகிறார்கள்?

கறிக்குழம்பு அதிக அமிலத்தன்மை வாய்ந்தது. அதை காரதன்மையாக மாற்றுவதற்கு முள்ளங்கி போடுகிறார்கள்.

சிறுநீரக தொற்று கற்கள் உள்ளவர்களுக்கு கறிக்குழம்பு உபாதையை தரும். அதிலிருந்து விடுவிக்கும் நண்பன்தான் முள்ளங்கி.

கத்திரிக்காய் போடுவது கொழுப்பை கத்தரிக்கும் ஆற்றலுடையது என்பதால்.

 புலி போன்ற மாமிச உண்ணிகளுக்கு செரிமானம் ஆவதற்கு குறைவான நேரமே ஆகும். ஆனால் மனிதனுக்கு அசைவம் செரிமானம் ஆக 16 மணி நேரம் ஆவதால் புற்றுநோய் போன்ற உடல் நலக்கேடுகளை தவிர்க்க உருளைகிழங்கை போடுகிறார்கள்.

ஏனென்றால் உருளைகிழங்கில் நார்சத்து உள்ளது, மேலும் கறிக்குழம்பில் உள்ள அதிகப்படியான உப்பையும் குறைத்து சுவை கூட்டகூடியது உருளைக்கிழங்கு.

தமிழர்களின் பழக்கவழக்கம், வழிபாட்டு முறைகள் மட்டுமல்ல சமையலும் அறிவியல் மற்றும் ஆரோக்கியம் நிறைந்தது.

நம் மரபு கலாச்சாரம் பண்பாடு எல்லாமே காரண காரியத்தோடு நம் நன்மைக்காக அர்த்தத்தோடு உருவாக்கப்பட்டவையே.

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.          

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி

 

 

                                                              

 


ஏன் தமிழர் உணவில் மட்டும் அறுசுவை?

 

ஏன் தமிழர் உணவில் மட்டும் அறுசுவை? அறுசுவைகள் என்ன என்ன? அதன் பலன் என்ன? அது எந்த உணவில் இருக்கிறது?

காரம்: உடலுக்கு உஷ்ணத்தை கூட்டுவதுடன் உணர்ச்சியை கூட்டவும் குறைக்கவும் செய்யும் செரிமானத்தை தூண்டும்.

உணவு: மிளகு, வெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகாய், கடுகு.

கசப்பு: உடம்பில் உள்ள உதவாத கிருமிகளை அழித்து உடலுக்கு சக்தியை கூட்டும், சளியைக்கட்டுப்படுத்தும்.

உணவு: பாகற்காய், சுண்டக்காய், கோவைக்காய், வெந்தயம், வேப்பம்பூ, அதலக்காய். ஓமம்

இனிப்பு: உடல் தசையை வளர்க்கும் தன்மை கொண்டது. வாதத்தை  கூட்டும்.

உணவு: அரிசி, கோதுமை, கரும்பு, உருளை, பழங்கள், கருப்பட்டி.

புளிப்பு: இரத்த குழாயின் அழுக்கை நீக்க வல்லது. இரத்த சுத்திகரிப்பு.

உணவு: புளி, எலுமிச்சை, தயிர், மோர், மாங்காய், தக்காளி.

துவர்ப்பு: இரத்தம் வெளியேறாமல் தடுக்க வல்லது. இரத்தம் உரைவதை தடுக்க வல்லது. இன்சுலின் சுரப்பை தூண்டும். கனையம் நன்கு செயல்படும்.

உணவு: பாக்கு, அத்தி, வாழைகாய், மாதுளை, மஞ்சள், கொய்யா.வாழைப்பூ.

உவர்ப்பு(உப்பு) : ஞாபக சக்தியை அதிகரிக்கும். உப்பு அதிகரித்தால் உடல் கூடும். வீக்கம் வரும்.

உணவு: வாழைத்தண்டு, முள்ளங்கி, சுரைக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய்.

தமிழர்களின் பழக்கவழக்கம், வழிபாட்டு முறைகள் மட்டுமல்ல சமையலும் அறிவியல் மற்றும் ஆரோக்கியம் நிறைந்தது.

நம் மரபு கலாச்சாரம் பண்பாடு எல்லாமே காரண காரியத்தோடு நம் நன்மைக்காக அர்த்தத்தோடு உருவாக்கப்பட்டவையே.

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.                              

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.          

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி

 

 

 

 


 

Friday, December 13, 2024

கிணறு, ஏரி குளம் ஆறு போன்ற நீர்நிலைகளில் காசு போடுவதன் இரகசியம் என்ன? ஏன் போடவேண்டும் போடுவது சரியா? தவறா?

 

கிணறு, ஏரி குளம் ஆறு போன்ற நீர்நிலைகளில் காசு போடுவதன் இரகசியம் என்ன? ஏன் போடவேண்டும் போடுவது சரியா? தவறா?

அருள் / பொருள் வந்து சேரும் என்ற ஆன்மீகமா?  மூடநம்பிக்கையா?

இரண்டும் இல்லை நம் ஆரோக்கியத்துக்குதான் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால் அதுதான் உண்மை…

முற்காலத்தில் காசுகள் தங்கம் மற்றும் செப்பு உலோகத்தில்தான் செய்யப்பட்டது.

தங்கம் உயர்ந்த வசதியான அரண்மனைவாசிகள் பயன்பாட்டுக்கும் சாதாரண மக்கள் பயன்பாட்டுக்கு செப்பு காசுகளும் புழக்கத்தில் இருந்தது.

அக்காலத்தில் கிணறு, ஏரி, குளம், ஆறுதான் நம் குடிநீர் தேவைக்கும் நேரிடையாக பயன்பட்டது.

நாம் பயன்படுத்தும் நீரின் அசுத்ததை குறைக்கவும் விஷதன்மையை முறிக்கவும் செம்பு மிகபெரிய அளவில் பயன்படும்.

செப்பு பாத்திரத்தில் வைத்து பயன்படுத்தபடும் நீர் அருந்தி வருபவர்களுக்கு புற்றுநோய் தாக்காது என்பது அறிவியல் உண்மை.

அந்த காலத்தில் எல்லோரும் செப்பு பாத்திரம் பயன்படுத்த வசதி இல்லை. அனேகர் வீடுகளில் மண் பானைதான் உண்டு.

அப்போது எப்படி செப்பு நீர் அறுந்துவது?

அதற்கு விடைதான் தங்களிடம் உள்ள செப்பு காசுகளை நாம் பயன்படுத்தும் நீர்நிலைகளில் போடச்சொன்னார்கள்.

சும்மா காசுகளை நீர் நிலைகளில் போடச்சொன்னால் யாரும் போடவும் மாட்டார்கள். போட்டாலும் அதை களவாண்டுவிடுவார்கள் என்று பயமுறுத்தவவே இறைவன் பெயரைச்சொல்லி போடச்சொன்னார்கள்.

அது கிணறு ஏரி குளங்களில் அடியில் சென்று தங்கி அசுத்தை குறைக்கவும் விஷதன்மையை முறிக்கவும் பயன்பட்டது. நமக்கு புற்றுநோய் போன்று நீரால் வரும் நோய்கள் தவிர்க்கப்பட்டது.

ஆனால் காரணம் தெரியாததினால்தான் அந்த பழக்கம் இன்றும் தொடர்ந்து இரும்பு எஃகு காசுளானாலும் போடவும் செய்கிறார்கள்.

அதன் பரிநாம வளர்ச்சியே இன்று திருமண சீராக பெண்ணுக்கு செப்பு குடம் கொடுக்கும் முறையும், செப்பு பாத்திரத்தில் நீர் அறுந்தும் முறையும் உருவாகியது.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை.

எல்லாம் நம் நன்மைக்கே, ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி



Thursday, December 12, 2024

ஆடி காற்றில் அம்மியும் நகருமா?

 

ஆடி காற்றில் அம்மியும் நகருமா?

நகராது..

அப்புறம் ஏன் இப்படி ஒரு சொல்லடை பழமொழி? புரியவில்லையே?

ஆடிக்கு முன் மாதங்கள் கோடை வெயில் தகிக்கும் காலங்கள். சித்திரை கத்திரி வெயில் கொளுத்தும். அப்படி அடிக்கும் வெயில் சூட்டால் பலருக்கும் அம்மை நோய் உண்டாகும்.

ஆடியில் வரும்  காற்றும் சாரல் மழையும் குளிர்ச்சியை ஏற்படுத்தி பூமியின் சூட்டையும் நம் உடல் சூட்டையும் தணிக்கும். அதனால் உடல் சூட்டில் அம்மை கண்டவர்கள் உடல் குளிர்ந்து குணம் பெறுவார்கள்.

ஆகவே ஆடிக்கு பின் அம்மை நோய் நகர்ந்து சென்றுவிடும்.அதனால்தான் ஆடி காற்றில் அம்மையும் நகரும் என்றார்கள்.

ஆனால் அச்சொற்றொடர் சொல்வழக்கில் திரிந்து ஆடி காற்றில் அம்மியும் நகரும் என்றாகிவிட்டது.

பொருள் தெரியாமல் சொல்லிவந்ததால் வந்த குழப்பம் இது.

நம்முடைய அனேக கலாச்சார பண்பாட்டு பழக்கவழகத்தை இதுபோலததான் பொருள் தெரியாமல் சிதைத்துத்துவருகிறோம்.

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


நவராத்திரிக்கும் சுண்டலுக்கும் என்ன சம்பந்தம்?

 நவராத்திரிக்கும் சுண்டலுக்கும் என்ன சம்பந்தம்?

ஆன்மீகமா? மூடநம்பிக்கையா?

நம் ஆரோக்கியத்துக்குதான்…..

நவராத்திரி காலமான புரட்டாசி ஐப்பசி அடைமழை காலம். இதனால் சிலருக்கு தோல் நோய் அலர்ஜி ஏற்படும். பருவநிலை மாறுபடுவதால் பலருக்கு உடல் மந்தமாக இருக்கும்.

இந்த நிலையில் உடல் உபாதையை போக்கி சீராக்கும் சக்தி புரோட்டின் சத்து அதிகம் உள்ள நவதானிய சுண்டலுக்கு உண்டு.

அந்நாளில் நவராத்திரியின் போது நவகிரகங்களை சாந்தபடுத்த நவதானியங்களை உபயோகித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்துக்குரிய தானியத்தில் உணவு சமைத்து (கோதுமை, அரிசி, கடலைபருப்பு, பயத்தம் பருப்பு, கொண்டை கடலை, மொச்சைகொட்டை, உளுந்தம் பருப்பு, கொள்ளு, எள்ளு) படைத்து அனைவருக்கும் பிரசாதமாக வழங்குவர்.

பெண்களே இதில் முக்கிய பங்களிப்பதால் நாளடைவில் சக்தி வழிபாடாகி கொலு வைத்து அக்கம் பக்கம் உள்ளவர்களை வீட்டிற்கே அழைத்து ஒரு விழாவாக கொண்டாடி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தானியத்தில் சுண்டல் செய்து கொடுக்கும் வழக்கமாக வளர்ச்சி பெற்றிருக்கிறது.

இதனால் அக்கம்பக்கம் உள்ளவர்களிடம் ஏற்றத்தாழ்வின்றி, கருத்து வேறுபாடின்றி சுமூக உறவை பேணவும் இந்த நவராத்திரி பண்டிகை வழி வகை செய்கிறது.  

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை.

எல்லாம் நம் நன்மைக்கே, ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


 

Wednesday, December 11, 2024

நாம் தெய்வங்களுக்கு முக்கிய பூஜை பொருளாய் தேங்காய் வாழைப்பழம் வைத்து படைப்பது ஏன்?

 


நாம் தெய்வங்களுக்கு முக்கிய பூஜை பொருளாய் தேங்காய் வாழைப்பழம் வைத்து படைப்பது ஏன்?

ஏதாவது உட்பொருள் இருக்கிறதா? இல்லை வெ|றும் மூட நம்பிக்கையா?

எந்த பழமாக இருந்தாலும் சாப்பிடுவிட்டு கொட்டையை புதைத்தால் மீண்டும் முளைக்கும்.

ஆனால் தேங்காயும் வாழைப்பழமும் சாப்பிட்டுவிட்டு புதைத்தால் முளைக்காது.

வாழைகன்றில் இருந்துதான் புது மரம் முளைக்கும். அதே போல தேங்காயும் பயன்படுத்தாமல் முழு தேங்காயும் புதைத்தால்தான் முளைக்கும்.

அதாவது இது பிறவியற்ற நிலையாகிய முக்தியை காட்டுகிறது. எனது இறைவா மீண்டும் பிறவா நிலையை கொடு என்று உணர்த்தவே வேண்டுதலில் பூஜையில் நம் தெய்வங்களுக்கு தேங்காய் வாழைப்பழம் வைத்து படைக்கிறோம்.

நமது எச்சில் படாத இவற்றை தெய்வத்துக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள். நாமும் அதையே பின்பற்றி வருகிறோம்.

நம் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை.

நம் மரபு பழக்கவழக்கம் எல்லாமே காரண காரியத்தோடு நம் நன்மைக்காக அர்த்தத்தோடு உருவாக்கப்பட்டவையே.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது?

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது?

ஆன்மீக காரணமா? மூட நம்பிக்கையா?

புரட்டாசி மாதத்தில் அசைவம் விலக்கி பெருமாளை சேவிக்கவேண்டும் என்று பல குடும்பங்களில் வழிவழியாக சொல்லி கடைபிடித்து வருகிறார்கள்.

காரணம் கேட்டால் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் அதனால் அசைவம் சாப்பிட கூடாது என்றுதான் சொல்வார்கள். அதற்கு மேல் அவர்களுக்கு சொல்லத்தெரியாது.

ஆனால் உண்மை காரணம் நம் ஆரோக்கியத்துக்குதான் என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால் அதுதான் உண்மை.. ..

புரட்டாசி மாதம் வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம். ஆனால் பூமி குளிர மழை பெய்யாது. அதனால் சூட்டை கிளப்பி விடும் காலம் என்பார்கள்.

இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் அதிக கெடுதல் தரக்கூடியது.

இந்த காலத்தில் அசைவம் சாப்பிட்டு மேலும் சூட்டை அதிகப்படுத்தி நாமே உடல் நலத்தை கெடுத்துக்கொள்வது சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்வதற்கு சமம்.

புரட்டாசியில் அசைவம் சாப்பிடுவதால் ஏற்கனவே இருக்கிற உடல் சூட்டில் மேலும் அதிக சூட்டை கிளப்பி அஜீரண கோளாறு, வயிறு உபாதை,  சோம்பல், மறதி சலிப்பு ஏற்படுத்தும். கோபத்தையும் காமத்தையும் அதிகப்படுத்தும்

அதுமட்டுமின்றி சரிவர பெய்யாத மழையால் திடீர் வெப்ப மாறுதல் ஏற்பட்டு வைரஸ் கிருமிகள் உருவாகி சளி காய்ச்சல் தொந்திரவுகள் அதிகரிக்கும். இதனால் உடல் நலமும் மனநலமும் கெடும்.

இதை எல்லாம் செலவில்லாமல் தவிர்க்கவே புரட்டாசியில் அசைவம் விலக்கி விரதம் இருந்து மனதை ஒருநிலைப்படுத்தி பெருமாள் கோயிலுக்கு செல்லும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

காரணம் அங்குதான் துளிசி தீர்த்தம் தருவார்கள். அது காய்ச்சல், சளி, உடல்வலி போன்ற உபாதையை உண்டாக்கும் வைரஸ் கிருமிகளை அழிக்க வல்லது.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை.

எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி





 

Sunday, December 8, 2024

பிறந்த குழந்தை ஏன் தொடர்ச்சியாக அழுதுகொண்டே இருக்கிறது?

 

பிறந்த குழந்தை ஏன் தொடர்ச்சியாக அழுதுகொண்டே இருக்கிறது?

குழந்தை பிறந்த உடன் விழித்திருக்கும் நேரம் முழுவதும் பல நாட்கள் தொடர்ச்சியாக அழுதுகொண்டே இருப்பதை பார்த்திருக்கலாம்.

இந்த குழந்தைகள் எதற்கு இப்படி அழுகிறது என்று கேட்டால் யாருக்கும் சொல்ல தெரியாது. காரணமும் தெரியாது.

சரி அப்படி எதற்குதான் பிறந்த குழந்தை அழுதுகொண்டே இருக்கிறது?

ஓவ்வொரு குழந்தையும் தன் தாயின் கருவறையில் இருக்கும்போது பத்து மாதங்களும் விழித்திருக்கும் நேரங்களில் தொடர்ச்சியாக தாயின் இதய துடிப்பை கேட்டுக்கொண்டே இருக்கிறது. அதில் மெய்மறந்துதான் தூங்கவும் செய்யும்.

இந்த பத்து மாதங்கள் அமைதியாக கேட்டு ரசித்த அந்த இதய துடிப்பு பிறந்த பிறந்த பின்னர் கேட்காமல் போவதாலும் மற்ற சத்தங்கள் தன் காதை தொல்லை பன்னுவதாலும் தொடர்ந்து அழுகிறது.

அதனால் அழுகின்ற குழந்தையை தூக்கி நம் நெஞ்சில் அனைத்து வைத்துக்கொள்ளும் போது பழைபடி மீண்டும் அந்த இதய துடிப்பு ஓசையை கேட்டு உணர்ந்து இயல்பு நிலைக்கு திரும்புவதால் அழுகையை நிறுத்திவிடுகிறது.

என்ன நான் சொல்வது சரிதானே எம்குல பெற்றோர்களே…?

நம் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை.

நம் மரபு பழக்கவழக்கம் எல்லாமே காரண காரியத்தோடு நம் நன்மைக்காக அர்த்தத்தோடு உருவாக்கப்பட்டவையே.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


Saturday, December 7, 2024

நான்காவது விரலை மட்டும் ஏன் மோதிர விரல் எங்கிறோம்?


நான்காவது விரலை மட்டும் ஏன் மோதிர விரல் எங்கிறோம்?

உங்கள் பெருவிரல் (கட்டைவிரல்) பெற்றோர்களை குறிக்கும். ஆள்காட்டி விரல் உங்கள் சகோதரசகோதரிகளை குறிக்கும். நடுவிரல் உங்களை குறிக்கும். மோதிரவிரல் உங்கள் வாழ்க்கை துணையை குறிக்கும். சுண்டிவிரல் அதாவது கடைசிவிரல் உங்கள் பிள்ளைகளை குறிக்கும்.

இப்போது உங்களின் இரு உள்ளங்கைகளையும் நேருக்கு நேராக வைத்துக்கொள்ளுங்கள். நடுவிரலை மட்டும் மடித்து உள்ளங்கையில் ஒட்டி வைத்துக்கொள்ளுங்கள். மற்ற விரல்களை நீட்டி மற்ற விரல்களோடு ஒன்றோடு ஒன்று ஒட்டி வைத்துக்கொள்ளுங்கள்.

பெருவிரலை மட்டும் பிரித்துப்பாருங்கள் தனியாக விலக்கி அசைக்க முடியும். அதாவது உங்களின் பெற்றோர் எப்போதும் உங்களுடன் இருக்கமாட்டார்கள். பிரிவுக்கு உட்பட்டது.

பெருவிரலை மறுபடியும் ஒட்டி வைத்துக்கொண்டு ஆள்காட்டி விரலை விலக்கி பிரித்துப்பாருங்கள், முடியும் அதாவது உங்கள் சகோதரசகோதரிகள் எப்போதும் உங்களுடன் இருக்க மாட்டார்கள் பிரிவுக்கு உட்பட்டது.

அடுத்து சிறிய சுண்டி விரலை மட்டும் தனியாக பிரித்துப்பாருங்கள் முடியும். அதாவது உங்கள் பிள்ளைகள் எப்போதும் உங்களுடன் இருக்கமாட்டார்கள். பிரிவுக்கு உட்பட்டது.

கடைசியாக இப்போது உங்கள் மோதிரவிரலை மட்டும் தனியாக பிரித்து அசைத்துப்பாருங்கள் பிரிக்க முடியாது. சிரமப்படுவீர்கள்.

அதுபோல கணவன் மனைவி எப்போதும் பிரியாமல் ஒன்றாக இணைந்து சேர்ந்து வாழவேண்டும் என்பதற்காகவே திருமணத்தில் தம்பதிகளுக்கு மோதிரம் அணிவிக்கிறோம்.  

நம் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை.

நம் மரபு பழக்கவழக்கம் எல்லாமே காரண காரியத்தோடு நம் நன்மைக்காக அர்த்தத்தோடு உருவாக்கப்பட்டவையே.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி

 

Friday, December 6, 2024

இடி இடிக்கும்போது ஏன் அர்ஜுனா? அர்ஜுனா? என்று சொல்லவேண்டும்?

இடி இடிக்கும்போது ஏன் அர்ஜுனா? அர்ஜுனா? என்று சொல்லவேண்டும்?

மூட நம்பிக்கையா? ஆன்மீக தினிப்பா?

நம்ம ஊரில் இடி இடித்து மழை பெய்யும் போது நம் வீட்டு பெரியவர்கள் அர்ஜுனா அர்ஜுனா என்று சொல்வார்கள். நம்மையும் சொல்லச்சொல்வார்கள்.

உடனே நம்ம வீட்டு இளசுகள்..நீ அர்ஜுனான்னு சொன்ன உடனே அவன் வில்லையும் அம்பையும் எடுத்திட்டு வந்து இடி சததமே இல்லாம பன்னிடுவானாக்கும் என்று கேலி செய்வார்கள்.

இடிதாங்கி கண்டுபிடிச்சி எத்தனையோ ஆண்டுகள் ஆச்சி, அதை கட்டிடத்தின் மேல வைக்காம இன்னமும் அர்ஜுனான்னு புலம்பிட்டு இருக்கியேன்னு பகுத்தறிவுவாதிகள் இடியில் இருந்து தப்பும் அறிவியல் உபகரணம் பற்றி சொல்வார்கள்.

ஆனால் நம் முன்னோர் சொன்னதின் உண்மை காரணம் என்ன  தெரியுமா?

இடி பலமாக இடிக்கும்போது சிலரது காது அடைத்து ங்கொய்ன்னு சத்தம் வரும். இதிலிருந்து  தப்ப அர்ஜுனா அர்ஜுனா என்றால் போதும் காது அடைக்காது.

“அர்” என்று சொல்லும்போது நாக்கு மடித்து மேல் தாடையை தொடும். “ஜூ” என்று சொல்லும் போது வாய் குவித்து காற்று வெளியேற தொடங்கும். “னா” என்று சொல்லும்போது வாய் முழுமையாக திறந்து காற்று வெளியே போகும். 

இப்படி காற்று வெளியேறுவதால் காது அடைக்காது. (இடி இடிக்கும்போது நீங்களும் முயற்சித்து பார்க்கலாம்.)  அதற்குதான் அர்ஜுனாவை நம்மவர்கள் துணைக்கு அழைத்தார்கள்.

அர்ஜுனன் பெயரை உச்சரிப்பது மனதுக்கு பலம் என்ற ஆன்மீக காரணத்துடன் அறிவியலை நம் முன்னோர்கள் எளிமையாக செலவில்லாமல் நம்மை கடைபிடிக்கவைத்து ஆரோக்கியம் காத்தார்கள்.

நாம் தான் காரணம் தெரியாமல் புரியாமல் தமிழர் பழக்கவழத்தை மூட நம்பிக்கை மூட பழக்கம் என்று கடைபிடிக்காமல் கைவிட்டுவிட்டோம்.

இப்ப புரியுதா அர்ஜுனா? அர்ஜுனா?

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை.

எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி

 


 

விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கச்சொன்னார்கள் ?


விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கச்சொன்னார்கள் ?

பக்தியா? மூடநம்பிக்கையா?

நம் முன்னோர்கள் சில செயல்களை நமக்கு தெரியாமலே புரியாமலே பழக்கமாக்கிவிட்டார்கள்.

அதில் இதுவும் ஒன்று

ஆடி மாதத்தில் பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள வண்டல் மணல்களை அடித்து சென்று இருக்கும்.

அதனால் ஆற்றில் நீர் பூமிக்கு கீழே இறங்காமல் நேராக சென்று கடலில் கலந்து வீணாகிவிடும், (அந்த காலத்தில் இப்போது இருப்பது போல தண்ணீர் தேக்க அணைகள் இல்லை).

ஆனால் களிமண் இருக்கும் இடத்தில் தண்ணீர் உறிஞ்சி பூமிக்கு கீழே சென்று நிலத்தடி நீர் பெருகும்.

அதுதான் வறட்சி காலங்களிலும் ஆற்றில் நீர் வராத இல்லாத காலங்களிலும் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் உதவும்.

அதனால் விநாயகர் சதுர்த்தியன்று ஒவ்வொரு வீட்டிலும் களிமண்ணால் விநாயர் சிலை செய்து வழிபட்டு ஆற்றில் கரைக்கச்சொன்னார்கள்.

அதை ஏன் மூன்று அல்லது ஐந்து நாட்கள் கழித்து ஆற்றில் கரைக்கவேண்டும்?

ஈரக்களிமண் ஆற்று நீரின் வேகத்தில் சீக்கிரம் கரைந்து சென்றுவிடும். சற்று காய்ந்த களிமண் கரையாமல் அப்படியே ஆற்றின் கீழ் சென்று படிந்துவிடும்.

இதனால் ஆற்றில் வரும் நீர் களிமண்ணால் உறிஞ்சப்பட்டு கீழே நிலத்தடி நீராக சென்று கொண்டே இருக்கும்.

இது அன்றைய ஆற்றங்கரை நாகரீகத்தின் தண்ணீர் ஆதாரத்திற்கு முக்கிய காரணம்.

இதையே வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் களிமண் கொண்டுபோய் ஆற்றில் போட்டுவிட்டு வாருங்கள் நல்லது என்று சொன்னால் எத்தனை பேர் கேட்பார்கள்.?

அதுமட்டுமில்லை அன்று எந்தவித தொழில்சாலைகளும் இல்லாத காலத்தில் ...

விவசாயிகளிடம் இருக்கும் பணம் மற்ற தொழில் செய்பவர்களுக்கு சுழற்சி ஆகவே ஒரு பண்டிகையாகவும் கொண்டாடச்சொன்னார்கள்.

இது தெரியாத மண்டூஸ்கள் இன்று விநாயகர் சிலைகளை பிளாஸ்டர் ஆப் பாரிசில் செய்து ஆற்றிலும் கடலிலும் போட்டு நீர்நிலைகளை பாழ்படுத்தி வருகிறார்கள்.

என்னத்த சொல்ல?

நம் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை.

நம் மரபு பழக்கவழக்கம் எல்லாமே காரண காரியத்தோடு நம் நன்மைக்காக உருவாக்கப்பட்டவையே.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி