Thursday, November 21, 2024

வீட்டிலும் கோயிலிலும் விளக்கேற்றுவது ஏன்?

 

வீட்டிலும் கோயிலிலும் விளக்கேற்றுவது ஏன்?

செக்கில் ஆட்டிய சுத்தமான நல்லெண்ணை கொண்டு ஏற்றப்படும் அகல் விளக்கு சுடருக்கு..

தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை அதாவது நெகட்டிவ் எனர்ஜியை எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் சக்தி உண்டு.

அவ்வாறு ஈர்க்கப்படும்போது நம்மை சுற்றி பாசிட்டிவ் எனர்ஜி அதாவது நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.

நம் சுற்றுபுறம் பிரகாசமாகவும், நேர்மறை ஆற்றலுடன் துஷ்ட சக்திகளை அண்டவிடாமல் செய்கிறது.

அதனால்தான் வீட்டிலும் கோயிலிலும் விஷேசகாலங்களிலும் எந்த நிகழ்வும் விளக்கு ஏற்றியபின்னரே வேலையை தொடங்குகிறோம்,.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


நம் வீட்டு பெண்கள் மஞ்சள் பூசி குளிக்கும் இரகசியம் என்ன?

 


நம் வீட்டு பெண்கள் மஞ்சள் பூசி குளிக்கும் இரகசியம் என்ன?

மஞ்சள் பூசிய முகம் மங்களகரமாக இருக்கும். ஆண்களின் மனதை வசீகரித்து கொள்ளை கொள்ளும்.

மஞ்சள் மிகசிறந்த கிருமி நாசினி என்று நம் அனைவருக்கும் தெரியும்.

தெரியாதது..

மஞ்சள் பூசி குளிப்பதால் பெண்களுக்கு ஏற்படும் கொடிய புற்று நோயான கற்பபை வாய் புற்றுநோயை உருவாக்கும் ஹியூமன் பப்பிலோமா வைரஸ்  (எச் பி வி) அழிக்கப்படுவதும், புற்றுநோய் ஏற்பட்டவர்களுக்கு நோய் கட்டுப்படுவதும் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் கற்ப பையை அகற்றும் சிகிச்சையில் இருந்து விடுபடலாம்.

மஞ்சள் பூசி குளிப்பதால் கற்ப பை வாயில் கிருமி தொற்று இன்பெக்ஷன் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

மேலும் அதிக துர்நாற்றம், அதிக உதிர போக்கு, அதிக வயிற்று வலி, வெள்ளைப்படுதல் போன்ற பெண்களின் உடல் உபாதைகளுக்கு மஞ்சள் பூசி குளித்தல் மிகசிறந்த நிவாரணியாகவும் பயன்படுகிறது. 

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


Tuesday, November 19, 2024

வெற்றிலை போடுவது சம்பிரதாயமா? அதன் இரகசியம் என்ன?

வெற்றிலை போடுவது சம்பிரதாயமா? அதன் இரகசியம் என்ன?

பழந்தமிழர் மரபு பழக்கவழக்கம் எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்கப்பட்டவை.

வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறை மட்டுமல்லாது உடலை வலுப்படுத்தும் காரியங்களும் அதில் அடங்கி இருக்கும்.

வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும்போது அந்த சுவை உடலையும் மனதையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது. இதயத்தை வலுவடைய செய்கிறது

நம் உடம்பில் ஏற்படும் நோய்களுக்கு காரணம் வாதம், பித்தம், கபம். இதன் விகிதாச்சாரம் கூடும்போதோ அல்லது குறையும் போதுதான் நம்மை நோய் தாக்குகிறது.

இதை சமன் படுத்துவது வெற்றிலை போடும் பழக்கம்.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்ததை போக்க வல்லது.

சுண்ணாம்பில் உள்ள சத்து வாதத்தை போக்கும் தன்மையும் எலும்புகளுக்கு தேவையான கால்சியம் பற்றாக்குறையை சரி செய்யவும் உதவும்.

வெற்றிலையில் உள்ள காரம்  கபத்தை நீக்கிவிடும்.

தாம்பூலம் போடும் ஒரே ஒரு பழக்கத்தால் உடம்பில் உள்ள மூன்று விதமான தோஷங்களையும் போக்கும் தன்மை அமைந்து விடுகிறது.

இது மட்டுமல்லாமல், தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்ரி போன்றவை வாயில் உள்ள கிருமிகளை அழித்து ஜீரண சக்தியை அதிகரிக்க செய்கிறது. பல் சம்பந்தமான் பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகிறது.

10 இருபது வருடங்களுக்கு முன்பு வரை முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது.  காரணம் அவர்களிடம் இருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே.

குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடலுக்கு நேரிடையாக கிடைக்கும்போது எலும்புகள் வலுபெற்று விடுகிறது.

காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகம் இருக்க வேண்டும். காரணம் மதியம் நேர வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும்.

அதே போல மதிய உணவிற்கு பின் தாம்பூலத்தில் சுண்ணாம்பு அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.. அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுப்படுத்தும்.

இரவில் போடும் தாம்பூலத்தில் வெற்றிலையை அதிகம் எடுத்துக்கொண்டால் நெஞ்சில் கபம் அதிகம் தங்காது.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி



 

இறப்பு நிகழும்போது ஏன் ஆண் வாரிசுகள் தலையை மழித்துகொள்கிறார்கள்?

 


இறப்பு நிகழும்போது ஏன் ஆண் வாரிசுகள் தலையை மழித்துகொள்கிறார்கள்?

இறந்தவரின் சூட்சம தேகம் குடும்பத்தாரிடையே சிறிது நேரம் சுற்றி வரும். அதிலிருந்து வெளிப்படும் ரஜ-தம அதிர்வலைகள் அந்த வீட்டில் அதிகமாக இருக்கும்.

அது அந்த குடும்பதினரின் ஆண் வாரிசுகளிடம் தலை முடி மூலம் ஆகஷிக்கப்படுகிறது. அதனால் பாதிக்கப்பட்டவருக்கு தலைபாரம் அமைதியின்மை தலைசுற்றல் போன்ற உபாதைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

ஆண்களே ஈம சடங்குகளில் முக்கிய பங்கு வகிப்பதால் அவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதனால் அவர்களின் தலை முழுவதும் மழிக்கப்படுகிறது. இதனால் குடும்ப வாரிசுகள் ரஜ-தம பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


Sunday, November 17, 2024

பிறந்த குழந்தைகளுக்கு வசம்பை நூலில் கோர்த்து வளையல் போல் கையில் கட்டி விடுவதன் இரகசியம் என்ன?

 

பிறந்த குழந்தைகளுக்கு வசம்பை நூலில் கோர்த்து வளையல் போல் கையில் கட்டி விடுவதன் இரகசியம் என்ன?

குழந்தையின் ஆரோக்கியத்துக்கு தான்…

கையில் கட்டிய வசம்பை குழந்தை எப்போதும் வாயில் வச்சி சப்பி கடித்துக்கொண்டே இருக்கும் அதனால் குழந்தையின் உமிழ்நீருடன் சேர்ந்து வசம்பு வயிற்றுக்குள் சென்றுகொண்டே இருக்கும்..

இந்த வசம்பு குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.  இது குழந்தைகளின் நரம்பு செல்களை ஊக்குவித்து மூளையில் செயல்பாட்டை அதிகரிக்கும்.

அஜீரண கோளாரை சரி செய்யும், ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிறு உப்புசம், வயிறு பொருமலையும் சரி செய்யும், பூச்சிகடி வண்டுகடி போன்ற நச்சு விஷத்தன்மையையும் முறிக்கும் திறன் கொண்டது வசம்பு.

மேலும் பேச்சு துவக்கத்திற்கும் திக்குவாய் பிரச்சனையையும் சரி செய்யும் முக்கிய பங்கினையும் சிறப்பான மருத்துவமாகவும் பயன்படுகிறது வசம்பு. 

மழலைகளுக்கு வசம்பு சுட்ட கரியை எண்ணையில் குழைத்து நெற்றியிலும் கன்னத்திலும் திருஷ்டி பட்டுவிடகூடாது என்று பொட்டும் இட்டுவிட்டு நாக்கில் தடவுவதற்கும் அதுதான் காரணம்.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


ஆரத்தி எடுப்பது ஏன்? பழக்கமா? பண்பாடா? மூடநம்பிக்கையா?

 

ஆரத்தி எடுப்பது ஏன்? பழக்கமா? பண்பாடா? மூடநம்பிக்கையா?

ஆரோக்கியம் கிடைக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை.

ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாள தட்டில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீர் சிவப்பாக மாறும். அதில் கற்பூரம் ஏற்றி சம்பந்த பட்டவரின் இடம் வலம் மூன்று சுற்று சுற்றி விடுவதையே ஆரத்தி என்கிறோம்.

இது ஏன் செய்யப்படுகிறது?

ஓவ்வொரு மனிதனை சுற்றியும் ஆரா என்ற சூட்சும பகுதி இருக்கிறது. மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் கிருமி தொற்று முதலியவை அந்த சூட்சும பகுதியில் முதலில் பதிந்த பின்னர்தான் உடலில் புகுகிறது.

புதிதாக திருமணம் முடிந்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடிந்து வரும் இளம் தாய், நீண்ட தூரத்து ஆன்மீக பயணம் முடித்து வருபவர்கள், வெற்றி பெற்ற பின் வீடு திரும்புபவர்களுக்கு ஆரத்தி எடுக்கும் பழக்கம் தமிழர்களிடம் உண்டு.

இவர்கள்மேதான் பலரின் திருஷ்டி விழ வாய்ப்பிருக்கிறது. மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் தன்மை உண்டு. ஆரத்தி எடுக்கப்படும் நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம்.

ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேர வரும் விஷ அணுக்களை அழித்து நம் நலனை பேணுவதோடு ம|ற்றவர்களுக்கும் பரவாமல் தடுக்கப்படுகிறது,

வீட்டினுள் நுழையும் முன்னரே ஆரா சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் விஷ அணுக்களை அகற்றி தூய்மை படுத்திய பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டிற்குள் அழைத்து செல்வது தமிழர் பழக்கம்.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


Saturday, November 16, 2024

சாப்பிடும்போது இலையை சுற்றி நீர் தெளிப்பது ஏன்?

 


சாப்பிடும்போது இலையை சுற்றி நீர் தெளிப்பது ஏன்?

சாப்பிடும் போது இலையை சுற்றிலும் தண்ணீர் தெளிப்பது சின்ன எறும்புகளோ பூச்சிகளோ நமக்கு தெரியாமல் உணவில் விழுந்து உயிர் விடக்கூடாது என்பதற்காகவே.

சாப்பிடும் முன் இலையின் ஓரத்தில் கைப்பிடி சோறு சாதம் வைப்பது உணவு தானியங்கள் விளைவிக்கும் போது நமக்குத் தெரியாமல் சின்ன சின்ன உயிரினங்கள் புழு பூச்சிகள் கொல்லப்பட்டிருக்கும்.

அவைகளுக்கு வைக்கப்படும் பிண்டம்தான் அந்த கைப்பிடி சாதம் மற்றும் அந்த சாதம் பிற உயிர்களுக்கும் உணவாக வேண்டும் என்ற உயரிய நோக்கமே.

இப்படி எல்லா உயிர்களையும் நேசிப்பதே மதிப்பதே நம் தமிழர் பண்பாடு.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


உணவு வாழை இலையில் பரிமாறுவதன் இரகசியம் என்ன..?

 


உணவு வாழை இலையில் பரிமாறுவதன் இரகசியம் என்ன..?

வாழை இலை ஒரு நச்சு முறிப்பான், கிருமி நாசினி

உணவு இருட்டில் சமைக்க நேர்ந்து, சமைத்த உணவில் எதிர்பாராத விதத்தில் நச்சு கலந்திருந்தாலும் அல்லது வேறு வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும் அதற்கான உடனடி நச்சு முறிப்பான் வாழை. அதனால்தான் இலை சாப்பாடு.

தீ காயம் பட்டவரை வாழையிலையில்தான் படுக்க வைப்பார்கள். பாம்பு கடித்துவிட்டாலும் உடனடி முதலுதவி சிகிச்சை வாழை இலை சாறுதான் பருக கொடுப்பார்கள். உடனே நச்சு முறிந்துவிடும்.

எந்த வித நச்சும் முறிக்க படவேண்டும் என்றுதான் நான்கு பேர் கூடும் இடங்களிலும், திருமண பந்தலிலும், கோயில் திருவிழாக்களிலும் வாழை மரத்தை முதலில் கட்டி வைத்தான் தமிழன்.

அதாவது நச்சு முறிப்பான் உடன் கைகெட்டும் தூரத்தில் இருக்கவேண்டும் என்றுதான் அவ்வாறு செய்தான்.

வாழை இலையில் தினமும் சாப்பிட்டுவந்தால் தோல் பளபளப்பாகும். மந்தம் இளைப்பு, வலிமை குறைவு போன்ற பாதிப்புகள் நீங்கி உடல் பலம் பெரும்.

வாழை இலையில் உள்ள பச்சை தன்மை (குளோரோபில்) பசியை தூண்டி உண்ட உணவை எளிதில் ஜீரணிக்க செய்வதுடன் வயிற்று புண்ணையும் ஆற்றும் தன்மை கொண்டது. பித்ததையும் குறைக்கும் தன்மை உடையது.

பள்ளி கல்லூரி செல்லும் மாணவமாணவிகள் அலுவலகம் செல்பவர்கள் மதிய உணவை எடுத்து செல்ல வாழை இலையே மிகச்சிறந்தது உணவும் பழுதாகாமல் மாலை வரை அப்படியே இருக்கும்.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


அமுக்குவான் பேய் உண்மையா? நம்மை கொன்றுவிடுமா?

 


அமுக்குவான் பேய் உண்மையா? நம்மை கொன்றுவிடுமா?

இரவு நீங்கள் தூங்கிக்கொண்டு இருக்கும்போது, யாரோ உங்கள் மேல் ஏறி அமுக்குவது போல் இருக்கும். உங்களால் கண்னை திறக்க முடியாது.

கத்தலாம் என்றாலும் குரல் வெளியே வராது.. சரி திரும்பி படுக்கலாம் என்று நினைத்தாலும் முடியாது.

ஒரு நிமிடம் கழித்துதான் உங்களுக்கு விழிப்பு வரும் எதுவும் செய்ய முடியும்.

எழுந்து பார்த்தால் அருகில் யாரும் இருக்க மாட்டார்கள். என்னடா என்று திகைப்பீர்கள். இதுதான் அமுக்குவான் பேய் என்று சொல்லப்படுகிறது.

உயிரைக்கொல்லும் அளவு கொடூரமாக பேய் இல்லை என்றாலும் இதுவும் ஒரு முக்கியமான பேயாக நினைத்து பயப்படுகிறார்கள்.

உண்மையில் இது தூக்க பக்கவாதம் என்கிற சிறு கோளாறால் வருவது.

சில நேரம் உங்கள் மூளை விழித்துக்கொண்ட பிறகும், உங்கள் உடல் தூங்கிக்கொண்டே இருக்கும்.

அதனால்தான் உங்களால் எழவோ, கண்ணை திறக்கவோ பேசவோ இயலாது.

இந்த கோளாறு தூக்கத்தில் ஏற்படும் இடையூறினால் வருவது..

இந்த தனிமை தூக்க பக்கவாதம் எப்போதாவது இரண்டு நிமிடங்களுக்கு குறைவாக வந்தால் ஒன்றும் பிரச்சனை இல்லை. தானாகவே சரியாகிவிடும்/

அடிக்கடி ஏற்படும் தூக்க பக்கவாதம் அரைமணி நேரமாக நீடித்தால் உடன் மருத்துவரை அணுகவும், மந்திரவாதியிடம் இல்லை.

ஏன்றென்றும் அன்புடன்

சுந்தர்ஜி

மரபுவழி தமிழ் மருத்துவர்


உருமாலை கட்டுவது ஏன் என்ற இரகசியம் தெரியுமா ?

 


உருமாலை கட்டுவது ஏன் என்ற இரகசியம் தெரியுமா ?

அந்தஸ்துக்கல்ல… அழகுக்கல்ல…. ஆரோக்கியத்துக்குதான்…

தமிழர் மரபுகள் அனைத்தும் அறிவியல் பூர்வமான காரத்தோடுதான் ஏற்படுத்தப்பட்டது.

நமது மூளை தலையில் ஒரு திரவத்திற்குள் மிதந்துகொண்டுதான் இருக்கிறது.

அந்த திரவம் சூடேறினால் தலைவலி முதல் அனைத்து மூளை கோளாறுகளும் வர வாய்ப்பிருக்கிறது.

வெப்ப அயர்ச்சியால் மூளை சாவுகூட ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

அதனால்தான் கோடை காலத்தில் உச்சி வெயிலில் வரும் வயதானவர்கள் திடீர் மரணம் அடைகிறார்கள்.

தலையின் கருப்பு நிறம் என்பது சூரியனின் வெப்பத்தை ஈர்க்கும் தன்மை உடையது என்று நாம் அனைவரும் அறிந்ததே.

அதனால் விரைவில் தலை சூடாவதும் நடக்க கூடியதே.

உருமாலை கட்டு என்பது வெள்ளை பருத்தியினால் ஆன தூண்டுகொண்டு கட்டப்படுவது.

இது சரியாக தலையில் உள்ள மூளை திரவம் உள்ள பகுதியை மூடிவிடும்.. வெள்ளை நிறம் என்பதால் சூரிய கதிர்களை திருப்பி அனுப்பிவிடும்.

தலைக்குள் இறங்கும் சிறு வெப்பமும் பல அடுக்கு சுற்றுக்களால் மூளைக்கு வெப்பம் செல்லாதவாறு தடுக்கப்படுகிறது.

இயற்கையான பருத்தியின் குளிர்ச்சி ஈரப்பதத்தை வேர்வையை உறிஞ்சிகொள்வதால் உடல் பாதிப்படைவதில்லை.

அதே போல குளிர்காலத்திலும் பனியில் இருந்தும்..இதே உருமாலை நம்மை காக்கிறது…

உருமாலை காதோடு சேர்த்துக்கட்டப்படுவதால் காதின் வழியாக செல்லும் குளிர்ச்சி பனி தடுக்கப்பட்டு நமக்கு கதகதப்பை கொடுக்கும்.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


Friday, November 15, 2024

நாம் திருநீறு பூசுவது ஏன்?

 


நாம்திருநீறுபூசுவது ஏன்?                                                       அடையாளமா? ஆன்மீகமா? பக்தியா? மூடநம்பிக்கையா?

ஆரோக்கியம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?                   ஆனால் அதுதான் உண்மை…

திருநீறுக்கு திருமந்திரம் முதல் ஒளவையார் வரை நம் முன்னோர்கள் ஆயிரக்கணக்கான விளக்கம் சொல்லிவிட்டார்கள், சொல்லாதது…

அதிகாலையில் நாம் குளித்து முடித்த உடன் இறைவனை வேண்டி பசு சாணத்தில் பக்குவமாக பன்னீர் கலந்து செய்த திருநீறு நெற்றி நிறைய பூசுவது வழக்கம்.

நாம் குளித்து முடித்த பின்னர் தலையில் சரியாக துவட்டா விட்டாலோ அல்லது தலையில் நீர் இறங்கி விட்டாலோ…

தலை பாரமாக இருக்கும் சிலருக்கு அதன் மூலம் சளி கூட பிடிக்கும்…

தினமும் குளித்து முடித்த உடன் திருநீறு பூசுவதால் தலையில் இறங்கிய நீரை உறிஞ்சிவிடும்.

அதனால் தலைவலி தலைபாரம் சளி தொந்திரவுகள் நமக்கு வராது. இருந்தாலும் சரியாகிவிடும்.

மூன்று விரல்களை வைத்து நெற்றியின் இடது புறம் இருந்து வலது புறம் வரைக்கும் இழுத்து பூசும்போது…

நமது மூளைக்கு செல்லும் செயல்நரம்புகள் தூண்டப்பட்டு சுறுசுறுப்பையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.

சரி அதை ஏன் இறைவன் பெயரைச்சொல்லி செய்யவேண்டும்?

சஞ்சலப்படும் மனதை ஒருநிலைப்படுத்தி மன இறுக்கத்தை குறைக்கவும் ஆரோக்கியத்திற்காகவுமே திருநீறு பூசுகிறோம்.

தெய்வத்தின் பெயரைச்சொல்லி இலவசமாகவே நம் ஆரோக்கியம் காத்தார்கள் நம் முன்னோர்கள்.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


நம் வீட்டு பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பது அழகுக்கா?

 

நம் வீட்டு பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பது அழகுக்கா?

அதுமட்டுமில்லை…

நம் மூலாதார சக்தியின் பிறப்பிடம் நெற்றிக்கண். அதாவது நமது இரண்டு புருவத்தின் மத்தியில் உள்ள இடம்.

அது சூடு அடையாமல் இருக்கவும், நம் வீட்டு பெண்களை மற்றவர்கள் மயக்கி வசியம் செய்துவிடாமல் இருக்கவுமே..

நம் மூலாதார சக்தியை கஸ்தூரி மஞ்சள் குங்குமம் வைத்து மறைத்துவிடுகிறோம். (கஸ்தூரி மஞ்சள் குளிர்ச்சியை கொடுக்ககூடியது)

இது தெரியாமல் இப்போது எல்லாம் பெண்கள் பொட்டும் வைப்பதில்லை. அப்படியே வைத்தாலும் ஸ்டிக்கர் பொட்டு வைத்து ஒவ்வாமை ஏற்பட்டு அவதிப்படுகிறோம்.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமாக நம்மை காக்கவே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


விநாயகர் முன்னிலையில் தலையில் குட்டி போடுவதும் ஆசிரியர் மாணவனை தலையில் குட்டுவதும் ஏன்?

 


விநாயகர் முன்னிலையில் தலையில் குட்டி போடுவதும் ஆசிரியர் மாணவனை தலையில் குட்டுவதும் ஏன்?

ஆன்மீகமா? தண்டனையா? மூட நம்பிக்கையா?

மருத்துவமே என்றால் ஆச்சரியமா இருக்கா? ஆனால் அதுதான் உண்மை.

நாம் தலையில் குட்டிக்கொள்ளும் முன் நெற்றியின் மேல் இருபுறமும் TEMPLER LOBE.உள்ளது. இந்த இடத்தில்தான் நம் ஞாபக சக்தியை தூண்டும் நாடிகள்/ நரம்புகள் அமைந்துள்ளது.

இந்த இடத்தில் மெதுவாக குட்டிக்கொள்வதால் இந்த நாடிகள்/ நரம்புகள் தூண்டி விடப்படுகின்றன. இதனால் உடம்பில் சுறுசுறுப்பும் உள் எழுச்சியும் உண்டாகிறது. ஞாபக சக்தி மீட்கப்படுகிறது.

நெற்றிப்பொட்டில் நாம் குட்டிக்கொள்ளும்போது அங்கே உள்ளடங்கி இருக்கும் அமிர்த கலசம் லேசாக திறந்து அதில் உள்ள அமிர்தம் உடல் முழுவதும் பரவும் என்று யோகிகள் கூறுகிறார்கள்.

இதனை மனதில் கொண்டுதான் ஆசிரியர்கள் மாணவர்களை முன் நெற்றியில் குட்டி தண்டிப்பது போல் ஞாபக சக்தியை தூண்டிவிட்டு புத்திசாலியாக்கினார்கள்.

மற்றவர்கள் விநாயகர் முன்னிலையில் தலையில் குட்டி போட்டு ஞாபக சக்தியை பெருக்கி கொண்டார்கள்.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


தோப்புகரணம் போடுவது தண்டனையா? ஆன்மீகமா? மூட நம்பிக்கையா?

 


தோப்புகரணம் போடுவது தண்டனையா? ஆன்மீகமா? மூட நம்பிக்கையா?

தண்டனை என்றால் பிள்ளையாருக்கு முன் செய்யச்சொல்லமாட்டார்களே?

யோசித்தோமா? இல்லையே?

நமது சிறுமூளை, பெருமூளை செயல் நரம்புகள் காது மடல்களில்தான் வந்து முடிகின்றன.

நாம் இரு காது மடல்களையும் பிடித்துக்கொண்டு அமர்ந்து எழும்போது..

நம் இரு மூளையின் செயல் நரம்புகள் தூண்டபட்டு நமது மூளை நன்கு செயல்படத்தொடங்கும்.

ஆகவேதான் பள்ளியில் மக்கு மாணவர்களை தோப்புகரணம் போடவைத்து புத்திசாலியாக்கி வெற்றி பெற வைத்தார்கள்.

மற்றவர்களை இலவசமாக விநாயகர் முன் போடவைத்து சுறுசுறுப்பாக இருக்க வைத்தார்கள்.

அதை ஏன் விநாயகர் முன்னிலையில் போடனும்?

அப்பத்தான் நல்லா படிப்பு வரும் என்று சொல்லி போடச்சொல்வார்கள். காரணம் அதே சிந்தனையில் தோப்புகரணம் போடும்போது மனது ஒருநிலைப்பட்டு படிப்பில் கவனம் வரும் என்றுதான்.

இதை நமக்கு மூடநம்பிக்கை என்று கிறுத்துவ ஆங்கிலேயனும், திருட்டு திராவிடனும் சொல்லி ஏளனம் செய்து செய்யவிடாமல் மறக்கடித்துவிட்டு இதையே அவர்கள் கார்பரேட் மூலம் “ சூப்பர் பிரைன் யோகா ” என்று பல ஆயிரம் கோடிகள் வியாபர பொருளாக்கி சம்பாதிக்கிறார்கள்.

நான் சொல்வது பொய் என்று உணர்ந்தால் நீங்களே கூகுளில் சூப்பர் பிரைன் யோகா என்று தேடிப்பாருங்கள் உங்களுக்கு நாம் எப்படி ஏமாற்றபட்டு வந்திருக்கிறோம் என்ற உண்மை புரியும்.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


Thursday, November 14, 2024

தமிழின் வலிமை, புலமை, பெருமை, சிறப்பு…

 


தமிழின் வலிமை, புலமை, பெருமை, சிறப்பு…

தமிழ் என்ற மொழியின் வார்த்தைக்கு எல்லா மொழியிலும் தமிழ்தான். அது தமிழ் மொழியின் வலிமை

இங்கிலீஷ் என்ற மொழியின் வார்த்தைக்கே ஆங்கிலம் என்று பெயர் வைத்தவன் தமிழன். அது தமிழ் மொழியின் புலமை.

நேற்றுவரை உருவாக்கப்பட்ட வார்த்தைக்கும் அழகு தமிழில் பெயர் உண்டு அதற்கு அர்த்தமும் உண்டு. அது தமிழ் மொழியின் பெருமை.

ஹிந்தியை தாய் மொழியாக கொண்டவர்கள் தங்கள் பெயருடன் ஹிந்தி என்ற வார்த்தையை இணைத்துக்கொள்ள முன் வரவும் இல்லை, முடியவும் முடியாது.

ஆங்கிலம் முடியாது, கன்னடம் முடியாது, தெலுங்கு முடியாது, மலையாளம் முடியாது. எந்த மொழியின் பெயரையும் தன் பெயருடன் சேர்த்துகொள்ள மாட்டார்கள்.

ஏன் என்றால் மற்ற மொழிகள் எல்லாம் மொழியாக மட்டுமே வரையறுக்கப்பட்டது.

ஆனால் தமிழை தன் பெயருடன் சேர்த்து தமிழன்பன், தமிழ் செல்வன், தமிழரசி, தமிழரசன், தமிழ்வாணன், செந்தமிழ் செல்வி, என்று சொல்ல முடியும்.

தமிழர் மட்டுமே தமிழை வெறும் மொழியாக மட்டும் எண்ணாமல் உயிராக நேசிக்கிறான்..

அதனால்தான் நம் தமிழ் மொழி நெடுகாலம் கடந்தும் 40 ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்பும் அழியாமல் வளர்கிறது.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


 



பண்டிகைக்கும் வேப்பிலைக்கும் என்ன சம்பந்தம்?

 

பண்டிகைக்கும் வேப்பிலைக்கும் என்ன சம்பந்தம்?

ஓரு சம்பந்தமும் இல்லை.

நம் ஆரோக்கிய பாதுகாப்புக்குதான் வேப்பிலை பண்டிகையின் போது பயன்படுத்தப்படுகிறது.

வேப்பிலை ஒரு அனைத்துவகை கிருமி நாசினி என்பது நம் அனைவருக்கும் அறிந்ததுதான்.

முன்நாளில் கோயிலில் கொடி ஏற்றி பண்டிகை தொடங்கிவிட்டால்…

ஊர் முழுக்க வேப்பிலை தோரணம் கட்டி தொங்கவிடப்படும். அப்படியே ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் சொருகி வைக்கப்படும்.

காரணம் பண்டிகைக்கு மக்கள் ஒன்று கூடும் போது தொற்று வியாதிகள் பரவாமல் இருக்கவே.

கோயில் பண்டிகை கொடி ஏற்றிவிட்டால்…

உள்ளூர்காரர்கள் அசலூர் செல்லவோ… வெளியூர்காரர்கள் உள்ளூர் வரவோ அனுமதி இல்லை.

இந்த கட்டுப்பாடும் வெளி ஊரில் இருந்து தொற்றுகிருமியோ வியாதியோ உள்ளூர் மக்களிடம் பரவாமல் இருக்கவே.

ஒவ்வொரு பண்டிகை முடிவிலும் கட்டாயம் மஞ்சள் நீராட்டு உண்டு.

காரணம் தவறுதலாக நம்மிடம் ஏதாவது தொற்று கிருமியோ வைரஸ் கிருமியோ வந்துவிட்டாலும்..

மஞ்சள் நீராட்டில் அனைத்து கிருமிகளும் அழிக்கப்பட்டு நம் ஆரோக்கியம் காக்கப்படும். மஞ்சளும் ஒரு கிருமி நாசினி என்பது அறிந்ததுதானே..

பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் பண்டிகையில் வெறும் வேப்பிலையும் மஞ்சளும் கொண்டு…

தெய்வத்தின் பெயரைச்சொல்லி இலவசமாகவே நம் ஆரோக்கியம் காத்தார்கள் நம் முன்னோர்கள்.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


பெண்கள் மெட்டி அணிவது அடையாளத்திற்கா? பேஷனுக்கா? மூடநம்பிக்கையா?

 


பெண்கள் மெட்டி அணிவது அடையாளத்திற்கா? பேஷனுக்கா? மூடநம்பிக்கையா?

இது எதுவும் இல்லை.

இது அறிவியல் பூர்வமான பழக்கம்.

பெண்களின் கற்பபை நரம்புகள் காலின் இரண்டாவது விரலில் வந்துதான் முடிகிறது.

திருமணம் நடந்த உடன் பெண்கள் மெட்டி அணிந்து நடக்கும்போது..

கால்விரலில் உள்ள கற்பபை நரம்புகள் தூண்டப்பட்டு கற்பபை நன்கு செயல்படத்தொடங்கும். குழந்தை பிறப்பு துரிதமாகும்.

திருமணத்திற்கு முன்னரும் கணவர் இறந்த பின்பும் கற்பபைக்கு வேலை இல்லை. அதனால் அப்போது பெண்கள் மெட்டி அணிவதில்லை.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


வீட்டில் துளசி மாடத்திற்கு என்ன வேலை?

வீட்டில் துளசி மாடத்திற்கு என்ன வேலை?

துளசி ஒரு நாளில் 22 மணி நேரம் ஆக்ஸிஜனை வெளியிடும் தன்மை உள்ளது.

துளசி ஒரு அனைத்து வகை கிருமி நாசினி.

அது இருக்கும் இடத்திற்கு விஷ ஜந்துக்கள், பூச்சிகள், வராது.

தினமும் அதிகாலை எழுந்து குளித்து முடித்து சூரிய நமஸ்காரத்திற்கு பின்னர்…

துளசி மாடத்தை சுற்றி வந்து 6 துளசி இலைகளை பறித்து நன்றாக மென்று தின்றுவந்தால்….

நம்மை எந்த விஷ காய்ச்சலும், வைரஸ் கிருமிகளும், தொற்று வியாதிகளும் அண்டவே அண்டாது. சுவாச பிரச்சனை கோலாறும் வராது.

பெருமாள் கோயிலில் கூட இதனால்தான் துளசி தீர்த்தம் வழங்கப்படுகிறது..

துளசி மாடம் உள்ள வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கிய இரகசியம் இதுதான்.

எங்க கிளம்பிட்டீங்க? உங்க வீட்டிலும் துளசி மாடம் வைக்கவா? அப்ப சரி…

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


 

Wednesday, November 13, 2024

மொட்டை போடுவது ஏன்? ஆன்மீகமா? மூட நம்பிக்கையா?

 


மொட்டை போடுவது ஏன்? ஆன்மீகமா? மூட நம்பிக்கையா?

இரண்டும் இல்லை… நம் ஆரோக்கியத்துக்குதான்…

சிறு வயதில் குழந்தைகளுக்கு/ சில பெரியவர்களுக்கும்தான் தலையில் ஈறு பேன் பொடுகு தொல்லை அதிகம் இருக்கும்.

காரணம் தலையை நன்கு அலசி சுத்தமாக பராமரிக்க முடியாது தெரியாது.

அதனால் ஏதாவது ஒரு கடவுள் பெயரைச்சொல்லி மொட்டை போட்டுவிட்டால்..

தலை சுத்தமாகிவிடும் பேன் ஈறு பொடுகு தொல்லை இருக்காது.. முடியும் நன்கு வளரும்.

இப்ப புரியுதா மொட்டை இரகசியம்.

சரி அதை ஏன் கடவுள் பெயரைச்சொல்லி கோயிலில் போடவேண்டும்?

வீட்டிலோ அல்லது கடையிலோ போடலாமே?

மொட்டை போடுவதாக ஏதாவது ஒரு சாமிக்கு…

பரிட்சையில் வெற்றி பெற வேண்டும் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் அல்லது நோய் குணமாக வேண்டும் இப்படி ஏதாவது ஒரு குறிக்கோள் வேண்டுதல் இருக்கும்…

அப்படி வேண்டும் பொழுது அந்த குறிக்கோளையே நினைத்துகொண்டு இருப்பதால்…

மனது அலைபாயாமல் ஒருநிலைப்பட்டு மூளையை நன்கு செயல்பட வைத்து…

நம் உடலில் நேர்மறை ஆற்றல் உருவாக்கி நோயை குணப்படுத்தும், பரிட்சையிலும் கவனமாக இருந்து படித்து நல்ல மதிப்பெண் பெற்றுவிடுவார்கள், குறிக்கோளை அடைந்துவிடுவார்கள்.

அதனால்தான் தெய்வத்திடம் வேண்டுதல் வைத்து கோயில் சென்று சுற்றத்துடன் நட்புடன் சென்று முடி காணிக்கை செலுத்த படுகிறது.

அது குடும்ப மொத்தத்திற்கும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும்.

இது வீட்டில் போடும் மொட்டைக்கோ அல்லது கடையில் போடும் மொட்டைக்கோ கிடைக்காது… 

எங்க கிளம்பிட்டீங்க? திருப்பதிக்கா? பழனிக்கா? அப்ப சரி…

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


தும்மினால் ஆயுசு நூறு….!!!!!!

 

தும்மினால் ஆயுசு நூறு….!!!!!!

தும்மல் வந்தால் சளி வரும் சத்தம் வரும்…

அதெப்படிங்கானும் ஆயுசு நூறு வரும்?

நமது உடல் ஒரு அற்புதமான தானே சுயமாக இயங்கும் இயந்திரம்.

நம் மூக்கின் வழியே உடலுக்கு தேவை இல்லாத அசுத்தமோ, தூசியோ சென்றுவிட்டால்..

காற்றின் மூலம் தும்மலை ஏற்படுத்தி அந்த வேண்டாத தூசியை வெளியேற்ற முயற்சிக்கிறது.

காற்றின் மூலம் அந்த தூசியை வெளியேற்ற முடியாவிட்டால்…

நம் உடலில் சளியை உற்பத்தி செய்து அதில் அந்த தூசியை ஒட்ட வைத்து வெளியேற்ற முயற்சி செய்கிறது.

அதனால் சளி வந்தால் சீந்திவிட்டு போங்க 3 நாளில் / தூசி வெளியேறிவிட்டால் தானே சளி சரியாகிவிடும்.

இல்லை என்றால் அந்த தூசி நம் நுரையீரலில் தங்கி உடல் உபாதையை கொடுக்கும். அதற்கு பெயர் நுறையீரல் தொற்று.

நமக்கு தும்மலோ சளியோ வந்தால் தேவை இல்லாமல் உடனே மருத்துவரை அணுகி  உடலின் செயல்பாட்டை தடுத்து சொந்த காசில் நமக்கு நாமே சூன்யம் வைத்துக்கொள்கிறோம்.

தும்மினால் சளி வந்தால் மூக்கின் வழியாக சென்ற தூசியோ நம் உடலுக்கு தேவை இல்லாத பொருளோ வெளியேற்றப்படுகிறது.

பிறகு நமக்கு ஆரோக்கியம்தானே?

அதனால்தான் தும்மினால் ஆயுசு நூறு என்று சொல்லி அதை அத்தோடு வைத்தியம் பார்க்கச்சொல்லாமல் முடித்துகொண்டார்கள்.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் நம்முடைய ஆரோக்கியத்தை அடிப்படையாக கொண்டது.. மூடநம்பிக்கையை அடிப்படையாக கொண்டது இல்லை.

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


மார்கழி மாலையில் வீளக்கேற்றினால் மகாலட்சுமி வருவாளா?


மார்கழி மாலையில் வீளக்கேற்றினால் மகாலட்சுமி வருவாளா?

மார்கழி மாதம் முழுவதும் மாலையில் 6 மணிக்கு வீட்டில் அகல்  விளக்கேற்றி வழிபட்டால்…

நம் வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வாள் என்று சொல்வார்கள்..

உண்மையா? ஏன் அப்படி சொன்னார்கள்?

இது உண்மையில் நம் ஆரோக்கியத்திற்கு சொல்லப்பட்டதே.

மார்கழி மாதம் முழுவதும் பனிகாலம்..

பனிப்பொழிவின் போது நம் வீட்டை வெப்பபடுத்தி நம் வீட்டு குழந்தைகளையும் மற்றவர்களையும்…

சளி மற்றும் குளிர்கால காய்ச்சலில் இருந்து பாதுகாப்பு கொடுத்து நம்மை காக்கவே வீடு முழுவதும் அகல் விளக்கு ஏற்றிவைத்து வழிபடச்சொன்னார்கள்.

சரி அதை ஏன் மகாலட்சுமியுடன் தொடர்பு படுத்தி சொன்னார்கள்? மகாலட்சுமி வரவில்லையே என்பவர்களுக்கு…

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.. செல்வத்துக்கு அதிபதி மகாலட்சுமி. இப்ப புரியுதா?

திருட்டு திராவிட பகுத்தறிவுவாதிகள் சொல்வதை கேட்டு இவற்றை தவிர்த்து மருத்துவமனை போய்த்தான் செலவு செய்து உடம்பை கெடுத்துகொள்வோம் என்றால் யார் என்ன செய்யமுடியும்?

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் நம்முடைய ஆரோக்கியத்தை அடிப்படையாக கொண்டது.. மூடநம்பிக்கையை அடிப்படையாக கொண்டது இல்லை.

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி

 

சனி நீராடு என்றால் என்ன? ஏன் செய்ய வேண்டும்?

 


சனி நீராடு என்றால் என்ன? ஏன் செய்ய வேண்டும்?

நம் உடலின் வெப்பநிலை ஒரே சீராக இருக்க வேண்டும்…

நம் காலசூழ்நிலையாலும், நாம் உட்கொள்ளும் உண்வு முறைகளாலும், வேலை தன்மையாலும் நம் உடல் வெப்பநிலை அதிகரிக்கும். சமநிலை அற்று இருக்கும்.

அதனால் தலைவலி சளி உடல் அசதி வலி நீர்கடுப்பு, மலச்சிக்கல் போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படும்.

இதை தவிர்க்கவும், நம் தோலில் உள்ள வெப்பநிலையை போக்கும் துளைகளில் உள்ள அடைப்புகளை நீக்கவும்,,,

வாரத்தில் ஒரு நாள்..

சுத்தமான செக்கில் ஆட்டிய நல்லெண்ணை கொண்டு உடல் முழுவதும் பூசி ஒரு மணிநேரம் ஊரவைத்து…

பின்னர் வீட்டில் தயாரித்த சீவக்காயை வடி கஞ்சியில் கலந்து தலை மற்றும் உடல் முழுவதும் தேய்த்து குளித்தால்…

உடல் சூடு குறைந்து சமநிலை ஏற்படும். தலையும் சுத்தமாகும், தோலும் பளபளப்பாகும்.

பெண்கள் வெள்ளி கிழமையும், ஆண்கள் சனிக்கிழமையும் எண்ணை தேய்த்து குளிப்பது சிறந்தது.

எண்ணை தேய்த்து குளிக்கும் நாள் அன்று உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகள் மற்றும் தம்பதிகள் சம்போகம்/ தாம்பத்தியம் தவிர்ப்பது நல்லது.

எங்க கிளம்பிட்டீங்க? சனி நீராடுக்கா?/ எண்ணை தேய்ச்சி குளிக்கவா? அப்ப சரி…

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


Tuesday, November 12, 2024

விரதம் இருப்பது வேண்டுதலா? பக்தியா? மூட நம்பிக்கையா?

 

விரதம் இருப்பது வேண்டுதலா? பக்தியா? மூட நம்பிக்கையா?

இது எதுவும் இல்லை…

நம் உடல் மெஷின் போல 24 மணி நேரமும் இயங்கி கொண்டே இருக்கும். ஒருசில உறுப்புகளைத்தவிர மற்ற எல்லா உறுப்புகளும் உறக்கத்தில் ஓய்வு எடுக்கும்.

ஆனால் வயிறு அதாவது ஜீரண உறுப்பு?

காலையில் இருந்து இரவு வரை எதையாவது வாயில் வயிற்றில் போட்டுக்கொண்டே இருந்தால் ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு எப்படி கிடைக்கும்?

வயிற்று உறுப்புகளுக்கு ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுக்கவே…

நாம் வாரத்தில் ஒரு நாள் அம்மாவாசை ஏகாதேசி பெளர்ணமி போன்ற விஷேச தினங்களில் ஏதாவது ஒரு கடவுள் பெயரைச்சொல்லி விரதம் இருந்து ஓய்வு கொடுக்கச்சொன்னார்கள்.

ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுக்கும்போது. அது வயிற்றில் இருக்கும் கழிவுகளை அகற்றும் வேலை செய்யும். வயிறும் சுத்தமாகும் ஆரோக்கியம் கிடைக்கும்.

அதுக்கு ஏன் கடவுள் பெயரைச் சொல்லவேண்டும்?

எல்லா மனிதர்களுக்கும் பிரச்சனை இல்லாத நிம்மதியான வாழ்க்கை என்றும் இருப்பதில்லை.

அப்போது ஏற்படும் மன சஞ்சலத்தை போக்கவும் மனதை ஒருநிலைப்படுத்தி அமைதிபடுத்தவும் ஊக்கபடுத்தவும் உடல் ஆரோக்கியம் காக்கவும் கடவுள் பெயரைச்சொல்லி ஆற்றுபடுத்தினார்கள்.

எங்க கிளம்பிட்டீங்க? விரதம் இருக்கவா? அப்ப சரி…

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி