Friday, April 15, 2016

Vadamalakunda -2500 year old Age Megalithic Burial site found bargur

An early Iron Age megalithic burial site dated to black and red ware period was excavated here at Vadamalakunda along the forested area of Krishnagiri-Andhra Pradesh border.

The stone-built cist burials were hit upon by a two-member archaeology team from Chandrashekarendra Sarawathi Vishwa Maha Vidyalaya, Kancheepuram, here. The team had been working at the site for about a week.


The megalithic site with cist burials was found with human bones, black and red ware, dating it to over 2,500 years. The cists were found with iron objects of rudimentary forms including an axe, chisel, and conical shaped urns, bowls, plates, lids – all made of black and red ware. Each of the black and red ware bore graffiti.

A few stone slabs that were part of the parallelepipeds were also found at the site.

Ramakrishna Pisipaty, geo-archaeologist, Chandrashekarendra Sarawathi Vishwa Maha Vidyalaya, said cist burial was one form of megalithic burial and may hold full human remains or partial remains, signifying a secondary burial site as in this case.

“The Vadamalakunda spread over several acres with more than 200 burials is a disturbed site, with a few burials found today. It calls for further study on the Iron Age settlement here and socio-cultural aspects. The exact period may be discerned only post carbon-testing of the bones,” Mr. Ramakrishna Pisipaty told The Hindu .


பர்கூர் வனப்பகுதியில் 2,500 ஆண்டு பழமை பொருட்கள் கண்டெடுப்பு

கிருஷ்ணகிரி அடுத்த பர்கூர் வனப்பகுதியில், 2,500 ஆண்டு பழமையான, இரும்பு கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.கிருஷ்ணகிரி அடுத்த, பர்கூர் வரமலகுண்டா வனப்பகுதியில் உள்ள, 2,500 ஆண்டு பழமையான கற்திட்டைகளின் உள்ளே மற்றும் வெளியே, வரலாற்று காலத்திற்கு முந்தைய பாறை ஓவியங்கள் உள்ளது. இரும்பு காலத்து ஈம சின்னங்களான, வட்டப்புதை குழிகள், கற்திட்டைகள், குத்துக்கல் மற்றும் பாறை ஓவியங்கள் என அனைத்து வகைகளும் ஒரே இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 2,500 ஆண்டுகள் பழமையான தொல்லியல் பகுதியை, காஞ்சிபுரம் ஸ்ரீசந்திரசேகரேந்திர விஸ்வ வித்யாலயா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ராமகிருஷ்ண பிசிபதி தலைமையிலான தொல்லியல் ஆய்வுக்குழு, ஒரு வாரத்திற்கும் மேலாக, இந்திய அரசு தொல்பொருள் அளவீட்டுத்துறை மற்றும் தமிழக வனத்துறை அனுமதியுடன் அகழாய்வு மேற்கொண்டுள்ளது.ஆய்வின் போது, ஆய்வாளர்கள் ரமேஷ் மற்றும் காளீஸ்வரன் ஆகியோர், வரமலகுண்டா வனப்பகுதியில், தொடக்க நிலை இரும்புகால பொருட்களை கண்டுபிடித்தனர். அகழ் ஆய்வின் போது, இரும்பு முனைகள், இறந்த மனிதனின் எலும்பு, பல் முதலான எச்சங்கள் இடப்பட்ட ஏழு மண்பாண்டங்களை தோண்டி எடுத்தனர். கூம்பு வடிவ ஜாடியும், அது வைக்க பயன்பட்ட மண்தாங்கி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல், கெண்டி வைத்த பெரிய மூடியும், நான்கு மட்கல மூடிகளையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இந்த பொருட்கள் அனைத்தும், 2,500 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என, பேராசிரியர் ராமகிருஷ்ண பிசிபதி கூறினார். அகழ் ஆய்வில் கிடைத்த அரிய மட்பாண்டங்களில், கிராபிட்டி எனப்படும் கீறல் குறியீடுகள் உள்ளன. ஒரு ஈமச்சின்னத்தில் அல்லது ஒரு பகுதியில் குறிப்பிட்ட ஒரே மாதிரியான கீறல் குறியீடுகள் மட்டுமே கிடைத்துள்ளன.

ஆனால்,இங்கு எடுக்கப்பட்ட மண் பாண்டங்களில், ஒரே இடத்தில் பல்வேறு விதமான கீறல் குறியீடுகளும், ஸ்வஸ்திக் சின்னத்தின் எதிர்மறை குறியீடுகளும் கிடைத்துள்ளது. இந்த ஆய்வில் கிடைத்த தொல்பொருள்கள், வரமலகுண்டா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காட்சிக்கு வைக்கப்பட்டு, மாணவர்களுக்கு இரும்பு கால தமிழகம் பற்றி ஆய்வாளர்கள் விளக்கினர். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாறு ஆய்வு மைய ஆய்வாளர் சுகவன முருகன், வரலாற்று அகழாய்வை ஆராய்ந்து, கிருஷ்ணகிரி பகுதியின் பழங்கால வரலாற்றை வெளிகொண்டு வந்த, காஞ்சி பல்கலைக்கழகத்தின் பணியை பாராட்டினார்.

-Proud to be Tamilan

No comments:

Post a Comment