Saturday, January 30, 2016

10000 Years Old Stone Age Tamilans Traditional Game Pallankuzhi holes found in Pannamparai-Sathankulam-Tuticorin-Tamilnadu

Researcher Finds Stone Age Pallankuzhi

Pallanguzhi (a traditional
mancala game) holes dating back to the Stone Age were found at Pannamparai village in the district, claimed Thavasimuthu, an archaeologist. The holes were discovered during a ground study by Thavasimuthu and his students.

Pallanguzhi is a
traditional mancala game played in rural areas. It is normally played on boards and before boards emerged, people played the game by making holes in rocky areas. Thavasimuthu claimed that the holes represent a shorter version of Pallanguzhi, which is played even now.

He added that the holes represent several things, including the earliest human settlements, the impact that the game had on human lives and also the adjacent trade routes. He further said that the game was even used to settle disputes between kings and had avoided several wars as the winner of the game was considered the winner of the dispute.

After examining the holes, Thavasimuthu said, “The Pallanguzhi holes should be at least 10,000 years old.”

He added that the holes would normally be made with axes but in the case of holes found at Pannamparai village, the holes were made using stones.

He noted that by relating the age of the Pallanguzhi holes and the earliest possible human settlements, it could be discerned that men from Africa had first settled in the southern parts of Tamil Nadu.

He added that similar holes were earlier found in Pazhani hills and they date back 25,000 years.

Pallankuzhi is played on a rectangular board with 2 rows and 7 columns on either side. There are a total of 14 cups (kuzhi in Tamil language).s Seeds, shells, small stones are all commonly used as counters in the board game. As the game proceeds, each player distributes the shells over all the pits. The players may capture the shells, as permitted by the rules of the game. The rules of capture depend on the variant of the game played. The game ends when one of the players captures all the shells, and is declared as a winner.

12 counters are placed in each cup except the middle of each row into which only 2 counters are placed. The starting player lifts the counters from any of his holes and, going counter-clockwise, distributes one counter in each hole. If he reaches the end of his cups he goes on his opponent’s side of the board. When the player drops his last counter, he takes the counter. This is what we get from the encyclopaedias. But this game is in many parts of Africa and Indonesian islands. What is the origin? Who invented it? It is a mystery.

This game originated in Tamil. There are valid reasons to believe so 1.The game is played all over India 2. Wherever Tamilans went for trade /commerce this game spread to that parts of the world. 3. The words used in the game are of Tamil or Sanskrit origin.4.We have a reference to this game in the ancient Pallava copper plates which is in two parts: Tamil and Sanskrit. Read the details below:

Pallaang Kuzhi is the Tamil name and Mancala is the Hindi name for the game.

Game Description 

The board has 14 cups, each player controls seven cups. People used to play using tamarind seeds or Kauri shells. Three types of games are played using the 14 cup board, they are
Kattattam

6 seeds game and
12 seeds game


How to Play

Six seeds are placed in each cup. The player starting first picks up the seeds from any of her holes and, moving anti-clockwise, places one seed in each hole. If she reaches the end of her cups she goes on the other side of the board. When the player drops her last seed, she takes the seeds from the next cup and continues placing them in this way. If the last seed falls into a cup with an empty cup following it, the seeds in the cup following the empty cup, are captured by the player.

That player then continues play from the next cup containing seeds. If the last seed falls into a cup with two empty holes beyond, she captures no seeds and her turn is over. The next player continues play in the same way.

If, after having a seed dropped into it, if a cup contains four seeds, those seeds become the property of the player who dropped the seed. The round is over when no seeds remain.
Once the first round is over players take the seeds from their stores and fill as many of their holes as possible with 6 seeds each.

The winner will have a surplus of seeds which are kept in her store. The loser of the first round will be unable to fill all of her holes. These unfilled holes are marked as "rubbish holes."

In the next round play continues as before, but without the rubbish holes being included and the player who went first in the previous round going second.

During the game if a player has enough seeds to fill any of her rubbish holes, they are again used during play. The game is over when a player is unable to fill any cups with six seeds at the end of a round

Tamilan

பன்னம்பாறையில் பத்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழன் விளையாடிய பழமையான பல்லாங்குழி கண்டுபிடிப்பு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சாத்தான்குளம் திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ளது பன்னம்பாறை சிற்றூர்.தொன்மையான குலதெய்வ வழிபாட்டு மரபுகளுடன் ஊரைச்சுற்றிலும் கோயில்களுடனும் அமைந்துள்ளது. இவ்வூரின் நிலவியல் அமைப்பு பல இலட்சம் ஆண்டுள் பழமையான பாறைகளால் சூழப்பெற்றதாகும். குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல், பாலை என்று ஐந்து வகை நிலங்களின் அடிப்படையில் தாங்கள் குடியிருந்த இடங்களுக்குப் பெயர்களை இட்டு மகிழ்ந்தனர் தமிழர்கள்.அவ்வகையில் பன்னம்பாறை என்ற பெயர் குறித்து இங்குள்ள மக்கள் கூறுவதாவது,முற்காலத்தில் பனைகள் நிறைந்திருந்தபடியால் பனைப்பாறையே பன்னம்பாறை என்று திரிபு ஆனது என்றும்,பன்னம் என்றால் சுண்ணாம்பு., சுண்ணாம்பு பாறைகளைக் கொண்டபடியால் பன்னம்பாறை என்று அழைக்கப்படுகிறது என்றும் கூறுகின்றனர்.

தொல்காப்பியம் நூலிற்கு

’’வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி…..’’

என பதினைந்து அடிகளில் பாயிரம் எனப்படும் முன்னுரை எழுதியதோடு தொல்காப்பியம் நூல் திருவிற்பாண்டியன் அவையில் அரங்கேற்றப்பட்டது என்ற செய்தியையும் பதிவு செய்த பனம்பாரனார் என்ற சங்ககாலப் புலவரும் தொல்காப்பியம் என்ற முதல் தமிழ் இலக்கண நூலைத் தமிழுலகிற்குத் தந்த தொல்காப்பியரும் சமகாலத்தைச் சேர்ந்தவர்கள்;இருவரும் ஒருபள்ளி மாணவர்கள். மேலும் இவருக்குப் பிற்காலத்தில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் எட்டுத்தொகை நூலில் குறுந்தொகை 52 ஆம் பாடலான

‘’ஆர்களிரு மிதித்த நீர்த்திகழ் சிலம்பிற்……’’

எனத்தொடங்கும் பாடலைப் பாடிய புலவரின் பெயரும் பனம்பாரனார் ஆகும். முற்காலத்தில் சங்ககாலப் புலவர்களின் பெயர்கள் அவர்கள் பிறந்த ஊரின் பெயரில் அழைக்கப்பட்டன எனவே பனம்பாரனார் பிறந்தது இவ்வூராகலாம் என்ற கருத்தும் ஆய்வும் தமிழறிஞர்களிடம் உள்ளது.

இயற்கையோடு இயைந்த குறிஞ்சி நிலத்தின் பாறை மற்றும் விவசாயத்திற்கான மருத நிலத்தின் தன்மையைக் கொண்டுள்ளது இம்மண்.அழகிய நீரோடைகள், குளங்களைக் கொண்டுள்ளது.

இவ்வூரின் வடக்கில் காணப்படும் பழுப்பேறிய அடுக்குப்பாறைகள், சரளைக்கற்கள்,சுமார் ஐந்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நிலவிய பெருமழைக்காலத்தில் தோன்றியதாகும். மணல் என்பது உடைந்த பாறைத் துண்டுகளையும், இயற்கைக் கனிமங்களையும் கொண்டிருக்கும். செம்மண்பாறை,சுண்ணாம்புப்பாறை,அடுத்து லேசானபாறை காணப்பட்டால் அவ்விடத்தில் நீர்வளம் மிகுந்திருக்கும் என்பது தமிழனின் அறிவியல் கண்டுபிடிப்பு ஆகும். முற்காலத்தில் கடுமையான பாறைப்பகுதியில் குடியேற்றங்கள் அவ்விதத்திலே நிகழ்ந்துள்ளன.

இந்த தொன்மையான பாறையும் அதனைச் சார்ந்த பகுதியும் பல்லாங்குழி ஒடை என்று அழைக்கப்படும் இதற்கு பாண்டிப்பிள்ளைஓடை என்ற மற்றொரு பெயரும் உள்ளது. பல்லாங்குழி விளையாடுவதை பாண்டி விளையாடுதல் என்று தென்பகுதி மக்கள் கூறுகின்றனர்.ஒரு இடத்தில் பல்லாங்குழி விளையாடுவதற்கான குழிகள் செதுக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் விளையாடி முடிப்பதற்கு ஏதுவாக குறைந்த எண்ணிக்கையிலே குழிகள் அமைக்கப்பட்டுள்ளன கீழ்புறத்தில் உள்ளதில் ஒன்றில் இருபுறமும் இரண்டிரண்டு குழிகளும் அவற்றிற்கு வால்குழிகள் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ளன.

மேற்புறத்தில் உள்ள குழி இருபுறமும் ஆறுகுழிகளுடன் தலைப்பகுதியில் இரு குழிகளுடன் உள்ளது.இவ் ஆறு குழியும் குறிப்பிட்ட தூரத்தை ஆறு மடங்கு சுட்டிக்காட்டுவதாக உள்ளது.பெருவழிப்பாதை இது என்பதற்கு இது சான்றாகும். இப்பாறையைச் சுற்றிலும் நீரோடை ஓடுகின்றது. பார்வதி தேவி குளித்த இடமாக ஓடை கருதப்படுகிறது. சிவனுடைய சூலாயுதத்தால் பாறையில் குத்தித் துளையிட்டு நீருற்றினை ஏற்படுத்திய தீர்த்தக்குழி உள்ளது.ஒரு அடி நீளமும், அரை அடி அகலமும், பத்து அடி ஆழம் அளவிலும் உள்ளது.

இவற்றில் உள்ள தீர்த்தநீர் சுவையாக இருக்கும் என்கின்றனர். கடுமையான கோடை காலத்திலும் இந்த நீறூற்றில் நீர் வற்றாமலிருக்கும் என்று அப்பகுதியில் உள்ள மக்கள் கூறுகின்றனர்.இந்த நீரூற்றினைச் சுற்றிலும் சிதைந்த நிலையில் கற்கால மனிதர்களின் ஓவியச்செதுக்கல்கள் கோட்டுருவங்களாக புலப்படுகின்றன.பிராமி எழுத்துக்களா அல்லது உருவக்குறியீடுகளா என்பது மேலாய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த நீரூற்றிற்கு இடதுபுறம் சிவனும் பார்வதியும் தேரிலேறி சென்ற ரதத்தின் தடம் உள்ளது.அடுக்குப் பாறையின் அடுக்கு சேருமிடம் இணையாக ரதத்தின் தடம் போல உள்ளது.இதுவே ரதத்தின் தடம் என மக்களால் கருதப்படுகின்றது.

கள ஆய்வினை மேற்கொண்ட கல்வெட்டு ஆராய்ச்சியாளர், ஆறுமுகனேரியைச் சேர்ந்த முனைவர் த.த.தவசிமுத்து கூறியதாவது,

பல்லாங்குழியானது செம்மையான உளிகளால் செதுக்கப்படவில்லை மாறாக கல்லால் ஆன ஆயுதத்தால் செதுக்கியும்,கடைந்தும் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இரும்பின் பயனறியாத கற்கால மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் பல்லாங்குழி செதுக்கப்பட்டுள்ளது.

தொல்லியல் ஆராய்ச்சியாளர்களால்,திண்டுக்கல் பழனி அருகே சுமார் 2500 இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து சமவெளி நாகரிக ஓவியக் குறியீடுகள் மற்றும் பாறையில் செதுக்கப்பட்ட பல்லாங்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அப் பல்லாங்குழிகளின் அருகே அமைந்திருந்த பெருவழிப்பாதை ஒன்று மதுரை, பழனி வழியாகக் கேரளா சென்று கடல் வழி வாணிபத்திற்காக கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது பன்னம்பாறையில் திறந்த வெளியான பாறைப்பகுதியில் காணப்படும் இப்பாறைக்குறியீடுகள் தொன்மைச் சிறப்பு வாய்ந்ததாகும். இப்பகுதி வழியாக கேரளா,திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் செல்லக்கூடிய பெருவழிப்பாதையும் இருந்திருக்க வேண்டும்.

மேலும், வரலாற்று காலத்திற்கு முந்தைய பழமையான தொல்லியல் சிறப்பு வாய்ந்த பழுப்புநிறச் செம்மண் குறைந்த அளவிலும் பழுப்பேறிய பாறைகளுடன் தொடர்ச்சியாக பன்னம்பாறையைச் சுற்றிலும் நாசரேத், மெஞ்ஞானபுரம் , மானாடு, குதிரைமொழி, சாயர்புரம், தெற்கே திசையன்விளை செம்மண் பரப்புடன் தொடர்புச் சங்கிலியாக இணையதளம் வாயிலாக வான்வழிக்காட்சியில் பார்த்தால் காணப்படுவது வியப்பாகும். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் வரலாற்றுக்கும் முற்பட்டக் காலத்தைச் சேர்ந்த பழைமையான கற்கால மனிதர்கள் வழ்ந்ததற்கான தடயங்கள் பெரிதும் கிடைத்துள்ளன.இப்பகுதியிலும் கற்கால மனிதன் பயன்படுத்திய குவாட்ஸ் ஆயுதங்கள் கிடைப்பதற்கான எச்சங்கள் காணப்படுகின்றன.

பல்லாங்குழி விளையாட்டு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா,ஆந்திரா, பஞ்சாப், ஒடிசா, மற்றும் ஆப்பிரிக்க நாடுகளான் கென்யா, ஜிம்பாவே, தான்சானியா, சிரியா, ஆப்பிரிக்கா, மேற்குஆசியா, இலங்கை, மலேசியா, போர்னியோ, வியட்நாம், சுமத்ரா, தென்,அமெரிக்கா, வட அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் உள்ளது .

தொல்லியல்,நாட்டுப்புறவியல் சிறப்பு வாய்ந்த இப்பகுதி மேலும் ஆய்விற்கு உட்படுத்தப்படுமானால் மேலும் அரிய தொன்மையானச் செய்திகள் கிடைக்கும் என்றார் முனைவர் த.த.தவசிமுத்து


பல்லாங்குழி. இது மிகத் தொன்மையான தமிழர் விளையாட்டு. இவ்விளையாட்டு பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. பல்லாங்குழி பற்றிய குறிப்புகள் நம் சங்கத் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன.

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் தமிழரின் தொன்மையான, தமிழ் மண்ணின் மரபு மாறாத விளையாட்டுக்கள் பற்றி பெருமைபடக் கூறியிருக்கிறார். பல்லாங்குழி ஆட்டம் இருபாலரும் ஆடக்கூடிய, எந்த நேரத்திலும் ஆடக்கூடிய விளையாட்டாகும்.

பல்லாங்குழி 14 குழிகளைக் கொண்டு விளையாடப்படுவது. எனவே இது பதினான்கு குழி, பரல் ஆடும் குழி, பண்ணாங்குழி என்றும் வழங்கப்படுகிறது. இன்றும் நம் முன்னோர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இவ்விளையாட்டை விளையாடும் சிறார்களும் உள்ளனர்.

பொதுவாக கிராமப்புறங்களில் பெண்கள் பூப்படைந்ததும் விளையாடப்படும் விளையாட்டாகவும், திருமணங்களில் சடங்கிற்காக விளையாடப்படும் விளையாட்டாகவும் பல்லாங்குழி இருக்கிறது. இப்போது மரம், இரும்பு, வெண்கலத்தாலான பல்லாங்குழிகளைப் பயன்படுத்துகிறோம்.

ஆனால் இவற்றையெல்லாம் தமிழன் கண்டுபிடிப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மண்ணிலும் பாறைகளிலும் 14 குழிகளைக் குடைந்து இவ்விளையாட்டை விளையாடியிருப்பதற்கான தொல்பொரு சான்றுகளும் கல்வெட்டு ஆதாரங்களும் இருக்கின்றன.

மகிழ்வோடு மனப்புத்துணர்வும் அளிக்கும் இவ்விளையாட்டு உலகெங்கிலும் இப்போது சிற்சில மாறுதல்களுடன் விளையாடப்பட்டு வருகிறது. அமெரிக்க விளையாட்டுப் பொருள் கிடைக்கும் கடைகளான டார்கெட், டாய்ஸ் ரூஸ் போன்றவற்றில் "மங்கலா" என்ற பெயரில் மரத்தாலான பல்லாங்குழி விற்கப்படுகிறது என்பது , தமிழனின் ஆக்கப்பூர்வ விளையாட்டுகளை உலகே தேடிக் கற்கிறது என்பதற்கு ஓர் நற்சான்று.

இரு வரிசைகளில் ஏழு குழிகள் இருக்கும். இரு வரிசையிலும் சேர்த்து பதினான்கு குழிகள் இருப்பதால் பதினான்கு குழி விளையாட்டு என்பதை பன்னாங்குழி என அழைத்தனர். பின்னர் பல்லாங்குழி என மருவியிருக்க வேண்டும்.

பல்லாங்குழி என்பது பதினான்கு குழி, பரல்+ஆடும்+குழி = பரலாடும் குழி, பண்ணாங்குழி, பள்ளாங்குழி என்றும் பாண்டி விளையாட்டு என்றும் வழங்கப் படுகிறது.

பெயர்க்காரணம் :

பல்லாங்குழியென்பது பண்ணாங்குழி, பன்னாங்குழி, பள்ளாங்குழி, பதினாங்குழி, பரலாடும் குழி, பாண்டி எனப் பல்வேறு பெயர்களால் வழங்கப்படுகின்றது. பல அழகிய குழிகளை வைத்துக் கொண்டு இந்த ஆட்டம் ஆட பெறுவதால் (பல+ஆம்+குழி=பல்லாங்குழி) என்று அழைக்கப்பட்டிருக்கலாம். கிராமத்தில் நெல்க்குத்துவதற்காக தோண்டப்படுகின்ற சிறுபள்ளத்தை பண்ணை என்று கூறுவதுண்டு. அதைப் போலவே சின்ன பள்ளம் தோண்டி கற்களையிட்டு ஆடுவதால் 'பண்ணாங்குழி' எனப்படுகின்றது. 

பள்ளம்+குழி எனப்பிரித்தால் பூமியில் பள்ளம் தோண்டி குழியாக்கி கற்களை இட்டு விளையாடப்படுவதால் 'பள்ளாங்குழி' என வழங்கப்பட்டிருக்கலாம். பதினான்கு குழிகள் இருப்பதால் பதினாங்குழி எனப் பட்டிருக்கலாம். மேலும் 'முத்து' என்பதற்கு 'பரல்' என்றும் பொருள் உன்டென்பதால் பரலாடும் குழி என்று மாறியிருக்க்கலாம். இவ்விளையாட்டிற்கு பாண்டியாட்டம் என்ற பெயரும் உண்டு.

சிறுவரும் சிறுமியரும் பால் வேறுபாடின்றிக் கலந்தும், பையன்களும் பெதும்பையரும் பால் வேறுபாட்டாற் பிரிந்தும், ஆடும் ஆட்டுத் தொகுதி இருபாற் பகுதியாம்.
(1) பகலாட்டு

1. பண்ணாங்குழி

I. பொதுவகை

ஆட்டின் பெயர் : நெற்குத்தும் பண்ணைபோல் வட்டமான பள்ளம் அல்லது குழிதோண்டி, அதிற் கற்களையிட்டு ஆடும் ஆட்டு பண்ணாங்குழி எனப்படும். பண்ணையென்பது பள்ளம். பண்ணை பறித்தல் குழிதோண்டுதல்.

பண்ணாங்குழி என்னும் பெயர், அவ்வவ் விடத்தைப் பொறுத்துப் பன்னாங்குழி, பல்லாங்குழி, பள்ளாங்குழி என வெவ்வேறு வடிவில் வழங்கும். பெரும்பாலும் பதினான்கு குழிவைத்து இவ் விளையாட்டு ஆடப்பெறுவதால், பதினான்கு குழி என்பது முறையே பதினாங்குழி பன்னாங்குழி எனத் திரிந்ததாகச் சிலர் கொள்வர். ஆயின், பதினாங்குழி என எங்கேனும் வழங்காமையானும், பன்னான்கு என்பது இலக்கிய வழக்காதலானும், பண்ணாங்குழி, பள்ளாங்குழி என்னும் வடிவங்களே பெருவழக்காய் வழங்குதலானும், பதினான்கிற்குக் குறைந்தும் கூடியும் குழிகள் வைத்துக் கொள்ளப்படுதலானும், பள்ளாங்குழி என்பதற்குப் பள்ளமான குழி என்றே பொதுமக்களாற் பொருள் கொள்ளப்படுதலானும், பண்ணாங்குழி அல்லது பள்ளாங்குழி என்பதே திருந்திய வடிவமாம்.

Bottom of Form

 தமிழன் திமிரானவன்

No comments:

Post a Comment