Thursday, August 18, 2016

4000 years old pots founded near Dindigul - Tamil Nadu - Indai

திண்டுக்கல் அருகே அகழ்வாராய்ச்சி : 4,000 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டெடுப்பு.



பழனி அருகே ஒட்டன்சத்திரத்தில் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புதிய கற்காலத் தமிழர்களின் சாம்பல் மேடுகள் மற்றும் வாழ்வியல் தடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறும்போது, “திண்டுக்கல் மாவட்டம் கோனூர் மற்றும் குட்டத்துப்பட்டி ஆகிய இடங்களுக்கு நடுவே ஒரு சாம்பல் மேடு (ஆஷ்மவுண்ட்) உள்ளதாக, அப்பகுதியைச் சேர்ந்த தாமஸ் மற்றும் தாமோதரன் ஆகியோர் தகவல் தெரிவித்தனர்.
ிண்டுக்கல்லில் இருந்து தென்மேற்காக 12 கி.மீட்டர் தூரத்தில் உள்ள இந்த இடத்தில் உள்ள பெரிய அளவிலான சாம்பல் மேட்டில் ஏராளமான கற்காலத் தமிழர்களின் வாழ்வியல் தடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. உடைந்த பானை ஓடுகள், மண்குப்பிகள், ஆட்டுக்கல், அம்மிக்கல், வட்டச்சில்லுகள், உணவுப்பாத்திரங்கள், தேய்ப்புக்கல், உரல்கள் ஆகியன கிடைத்துள்ளது. இவை இரண்டாம் சங்க காலத்தைச் சேர்ந்தவை.
ஒரு வட்டச்சில்லில்தேஎன்ற தமிழ் பிரம்மி எழுத்துள்ளது. ஒரு தாழியின் கழுத்துப்பகுதியில் கண்ணுக்குத் தெரியும் அளவிலான குறியீடும் உள்ளது. இவை மூன்றாம் சங்க காலத்தின் இறுதிப்பகுதியாகும். இந்த சாம்பல் மேட்டில் கிடைத்துள்ள பொருட்களை கொண்டு இரண்டாம் சங்ககாலத்தின் இறுதி தொடங்கி மூன்றாம் சங்க காலம் இறுதி வரையிலான இரண்டாயிருத்து 200 ஆண்டுகள் இப்பகுதி வாழ்விடமாக இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
தொல்லியல் ஆய்வில் சாம்பல் மேடுகள் புரியாத புதிராக இருந்து வருகிறது. வடமாநில ஆய்வாளர்கள் இந்த சாம்பல் மேடுகளை புராணகாலத்துடன் தொடர்புபடுத்தி வைதீக யாகங்களின் விளைவாக உண்டானவை என்றும், அசுரர்களின் இழிவுச் சிதைவுகளாக இருக்கலாம் என்றும் கருதி வருகிறார்கள். தற்காலிக அறிவியலுக்கு பொருந்தாத இந்த முடிவுகளை ஆங்கிலேய தொல்லியல் ஆய்வாளர் இராபர்ட் புரூஸ்பூட் என்பவர் இது புதிர்தான், ஆனால் புதிய கற்காலத்தில் தோன்றியவை என வரையறுத்தார்.

அவர் காலத்தில் சாம்பல் மேட்டுப்பகுதியில் கிடைத்தவற்றை சி14 (கார்பன் முறை) முறையில் கணித்து புதிய கற்காலம் என்றே வரையறுக்கப்பட்டது. இவ்வகையான சாம்பல் மேடுகள் கரூர் மாவட்டம் டி.கூடலூரிலும், தென்னிந்தியாவின் இரண்டு பகுதிகளிலும் (குப்பக்கல், லிங்கனப்பள்ளி) ஆகிய இடங்களிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதே போன்ற சாம்பல் மேடுகள் ஆப்பிரிக்காவில் உள்ளதை தொல்லியல் ஆய்வாளர் சர்.ஹென்ரி ஸ்டேன்லியன் கண்டுபிடித்துள்ளார். ஆகவே, தொல் தமிழகத்திற்கும் ஆப்பிரிக்க பழங்குடி மக்களுக்கும் இடையிலே மர்மமான ஏதோ சில நாகரீக தொடர்புகள் இந்த சாம்பல் மேட்டில் புதைந்திருக்கலாம் என்று உறுதியாக நம்பலாம்என்றார்.

No comments:

Post a Comment