Monday, June 20, 2016

sandi prampanan Temple -Indonasia - Built by Tamilan

பிரம்பானான் கோயில் (இந்தோனேசியம்: சண்டி பிரம்பானான் () சண்டி ராரா ஜொங்ராங் (Candi Prambanan or Candi Rara Jonggrang) என்பது ஒன்பதாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட, இந்தோனேசிய யாவாப் பகுதியில் அமைந்துள்ள இந்து ஆலயம் ஆகும்

உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக, இக்கோயில் வளாகம், யுனெஸ்கோவால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 47 மீ (154 அடி) உயரமான இக்கோயிலின் மைய விமானம், தென்கிழக்காசியாவின் மிகபபெரிய இந்துக்கோயில்களில் ஒன்றாக இருப்பதுடன், ஆண்டாண்டாய், பல்லாயிரம் உல்லாசப்பயணிகளைக் கவரும் இடமாகவும் இது திகழ்ந்து வருகின்றது.

முதலில் சிவனுக்காகவே கட்டப்பட்ட இவ்வாலயம், ஆரம்பத்தில் "சிவக்கிரகம்" என்றே அழைக்கப்பட்டிருக்கின்றது என்பதை இக்கோயிலிலுள்ள பொ.பி 856ஆம் ஆண்டு "சிவக்கிரகக் கல்வெட்டு" கூறுகின்றது. பிற்காலத்தில், இதன் இருபுறமும் திருமால், பிரமன் ஆகியோருக்கு ஆலயம் எழுப்பப்பட்டு, தற்போதுவரை, மும்மூர்த்திகள் கோயிலாகவே இனங்காணப்பட்டு வருகின்றது.

No comments:

Post a Comment