Thursday, June 16, 2016

Pappa Raval . . .

பப்பா ராவல் வரலாறு திரைப்படம் ஆகுமா?

ஒரு மிகப்பெரிய சினிமா பிரபலம். இயக்குனர் ராஜ்மௌலி அவர்களுக்கு மிக நெருக்கமான ஒரு நண்பரை நேற்று மாலை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன். அவரின் பெயரை குறிப்பிட்டால் அதனால் அவரின் பிரைவசி பறிபோகும் என்பதால். நான் அவரின் பெயரை இங்கு குறிப்பிட விரும்பவில்லை.
என்னோடு அரை மணிநேரம் அவர் பேசினார்.
அந்த நண்பர் பப்பா ராவல் அவர்கள் பற்றி அடியேன் செய்த பதிவை குறித்து பாராட்டினார். மேலும் பப்பா ராவல் அவர்கள் பற்றிய பல தகவல்களை சேகரித்து ஒரு புத்தகமாக ஏன்? போட கூடாது என்று அவர் என்னிடம் சொன்னார். அந்த நண்பர் போன்றே பலர் என்னிடம் அவ்வாறு இதுவரை சொல்லியுள்ளார்கள். அனேகமாக அடுத்த வருட புத்தக கண்காட்சியில் எனது புத்தகம் ஏதேனும் ஒன்று வெளியிடப்படும். அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறேன்.
அதே சமயம். முகல், பிரான்ஸ், டச்சு காரர்கள், ஆங்கிலேயர்கள் என பல வெளிநாட்டவர்கள் இந்த பாரத மண்ணை அடிமைபடுத்தி ஆண்ட வரலாறை தான். பாட புத்தகத்தில். மாணவ, மாணவிகள் படித்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால்.
Algeria, Andorra, Armenia, Azerbaijan,Bahrain, Cyprus, Egypt, Georgia, Iran, Iraq, Israel, Jordan, Kazakhstan, Kuwait, Kyrgyzstan, Lebanon, Libya, Morocco, Oman, Portugal, Qatar, Saudi Arabia, Spain,Syria,Tajikistan,Tunisia, Turkey, Turkmenistan, United Arab Emirates, Uzbekistan, Western Sahara, Yemen.
இதை தவிர்த்து ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்த் போன்ற நாடுகளின் பல பகுதிகளை கூட கைப்பற்றிய உலகின் மூன்று பெரிய சாம்ராஜ்யங்களில் இரண்டாவது பெரிய சாம்ராஜ்யமான உமையாத் க்லாப்யாத் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி. Muhammad Bin Quasm இந்தியாவின் மீது ஒரு லக்ஷம் வீரர்களோடு படை எடுத்து வந்த பொழுது. மாமன்னர் பப்பா ராவல் அவர்கள் வெறும் 40 ஆயிரம் வீரர்களை வைத்து. மிக வலுவான உமையாத் கிலாப்யாத் சாம்ராஜ்யத்தை தோற்கடித்தாரே. அதை பற்றி நமது நாட்டு மாணவ, மாணவிகள் படிப்பதில்லை. ஸ்டேட் போர்ட், மெட்ரிக், CBSC, ICSE என்று எதிலுமே இது போன்ற நமது வீர வரலாறு சொல்லிதரப்படுவதில்லை.
இந்தியர்கள் அடிபட்ட, அடிமைப்பட்ட வரலாறுகளை மட்டுமே சிறு வயதில் இருந்து சொல்லி, சொல்லி அடிமை, கோழை மனப்பான்மையோடு இந்தியர்களை வளர்க்கும் கேடுகெட்ட வேலையை தான் Indian Education System செய்து கொண்டு இருக்கின்றது.
உலகின் பல நாடுகளை அடிமைபடுத்தி ஆண்ட. சூரியனே அஸ்தமிக்காத நாடு என்று பெயர் பெற்ற இங்கலாந் கூட ஒரு கால கட்டத்தில் ஜூலியஸ் சீசர் முதல் செங்கிஸ்கான் வரை பலரால் அடிமைபடுத்த பட்டு இருக்கிறது. ஆனால்? இங்கலாந்தில் உள்ள மக்களிடம் கேட்டு பாருங்கள். நீங்கள் அடிமைப்பட்ட வரலாறு உங்களுக்கு பள்ளி பாடங்களிலே கற்று தரப்படுகிறதா. இல்லை நீங்கள் அடிமைபடுத்தி ஆண்ட வரலாறு பாட புத்தகங்களில் கற்று தரப்படுகிறதா என்று. அவ்வாறு நீங்கள் கேள்வி கேட்டால். பெரும்பாலான இங்கலாந் மக்களிடம் இருந்து அதற்கு வரும் பதில். பிரிட்டிஷ் சாம்ராஜ்யமும் ஒரு காலத்தில் அடிமைபடுத்த பட்டதா? எங்களுக்கு தெரியாதே.
அந்த சினிமா பிரபலத்திடம் நான் சொன்ன ஒரு முக்கியமான விஷயம். இந்திய கல்விமுறையை சீர் செய்யும் அதிகாரம் உங்களுக்கோ, எனக்கோ இல்லை. ஆனால் அதே சமயம். ராஜ, ராஜ சோழன், வீர பாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன். ராக வேந்திரர் போன்ற மகான்கள் என பலரை பற்றி. அன்று சினிமா மூலம் அணைத்து மக்களும் தெரிந்து கொண்டார்கள்.
இயக்குனர் ராஜ்மௌலி இயக்கிய பாகுபலி வரலாறு காணாத ஒரு வெற்றியை பெற்று இருக்கிறது. உண்மையில் பாகுபலி என்கிற பெயரில் ஒரு மன்னர் சரித்திரத்தில் வாழ்ந்து இருந்தாலும். அவரின் நிஜ வாழ்க்கை வரலாறை சினிமாவாக எடுத்து இருந்தால். அது இந்த அளவு வெற்றி பெற்று இருக்காது. நிஜ பாகுபலியின் வாழ்க்கை சுவாரஸ்யம் இல்லாத ஒன்று. முதலில் பாகுபலியின் உண்மையான வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க போகிறேன் என்று ராஜ் மௌலி அவர்கள் சொல்லவும் இல்லை.
ஆனால் மாமன்னர் பப்பா ராவல் அவர்களின் உண்மையான வாழ்க்கை வரலாறை ராஜ் மௌலி போன்ற ஒரு இயக்குனர், ஷங்கர் போன்ற ஒரு இயக்குனர் திரைப்படமாக எடுத்தால். அதன் மூலம் பப்பா ராவலின் வீரம் மிகுந்த வாழ்க்கை வரலாறு இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களுக்கும் சென்று அடையும்.
பாகுபலி திரைப்படத்தில் பிரபாஸ். பிருமாண்டமான சிவலிங்கத்தை தூக்கும் காட்சிக்கு திரை அரங்கில் ரசிகர்களிடம் இருந்து எவ்ளோ அப்ளாஸ் கிடைத்தது.
பப்பா ராவல் 264 கிலோ எடை உள்ள யானை தந்தங்களால் ஆன கத்தியை யுத்தங்களின் பொழுது பயன்படுத்தி இருக்கிறார். அந்த கத்தி இன்றும் ராஜஸ்தானில் உள்ள சித்தோகர் அரண்மனையில் இருக்கிறது. சற்றே கற்பனை செய்து பாருங்கள். நாளை பப்பா ராவலின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வந்து. 264 கிலோ எடை உள்ள கத்தியை பப்பா ராவல் ஒற்றை கையில் தூக்கி சுழற்றுவதை போன்ற காட்சியை நாம் பிக் ஸ்க்ரீனில் பார்க்கும் பொழுது. அது எவ்ளவு? பிருமாண்டமாக, பிரம்மிப்பாக இருக்கும்.
இயக்குனர் ராஜ் மௌலிக்கே பப்பா ராவல் பற்றி அனேகமாக தெரிந்து இருக்கும். அதே சமயம் பப்பா ராவலின் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் ராஜ்மௌலி திரைப்படமாக எடுத்தால். அது பாகுபலியை விட மிகப்பெரிய வெற்றி பெரும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்பதை நீங்கள் அவரிடம் தெரிய படுத்துங்கள் என்று சொன்னேன். அந்த பிரபலமும். இது சம்பந்தமாக நான் உடனடியாக அவரிடம் பேசுகிறேன் என்று சொன்னார்.
பப்பா ராவல் வரலாறு திரைப்படம் ஆகுமா?
இதற்கான பதிலை காலம் தான் சொல்லும்.

ஊதுகிற சங்கை ஊதி விட்டேன். விடியும் பொழுது விடியட்டும்.

No comments:

Post a Comment