Monday, November 9, 2015

அனைவருக்கும் இனிய தீப திருநாள் வாழ்த்துக்கள்

கங்கா ஸ்நானம் ஆச்சா?
அப்படின்னா என்னான்னு கேட்கறீங்களா?
எப்பொழுதும் பகலில்தான் எல்லோரும் தலைக்கு எண்ணை தேய்ச்சி குளிக்கனும். ஏன்னா எண்ணை தேய்த்து குளிப்பது உடலுக்கு குளிர்ச்சி. இரவில் குளிச்சால் சிலருக்கு சளி பிடிக்கும். அதானால்தான் பகலில் எண்ணை தேய்ச்சி குளிக்கச்சொல்லி இருக்காங்க நம்ம பெரியவர்கள்.
ஆனால் வருட்த்தில் ஒரு நாள் தீபாவளி அன்று மட்டும் இரவில் (அதிகாலை) எண்ணை தேய்ச்சி குளிக்கலாம் ஏன்னா அன்று எல்லா நீர் நிலைகளிலும் கங்கா தேவி வாசம் செய்வதாக ஐதீகம். அது உடலுக்கும் மனதுக்கும் நல்லது. இன்று குளித்தால் சளி பிடிக்காது. இது ஆன்மீக காரணம்.
சிவனின் ஜாடாமுடியிலிருந்து உற்பத்தியாவதாக புராணங்கள் சொல்கிறது.
மற்ற நதிகள் நீர்கள் இருக்க ஏன் கங்கை நீர் மட்டும் உலகில் புனிதமாக கருதப்படுகிறது?
காரணம் அதில் மற்ற நீரில் உள்ள ஆக்ஸிஜனைவிட அதிகம் உள்ளது.
மற்ற நீர்களை நீங்கள் பாத்திரத்தில் பிடித்து வைத்தால் சில நாட்களில் அதில் உள்ள ஆக்ஸிஜன் குறைந்து நீர் கெட்டு புழு பூச்சிகள் வந்துவிடும். ஆனால் கங்கை நீர் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அப்படியே சுத்தமாக ஆக்ஸிஜனுடன் இருக்கும்.
காரணம் கங்கை நீர் தன்னைதானே சுத்திகரிக்கும் தனமையுடையது.
இது பல ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. வற்றாத ஜீவ நதி எவ்வளவு அசுத்த்த்தை அதில் கலந்தாலும் தன்னைத்தானே சுத்திகரித்துக்கொள்ளும் தன்மை கங்கைக்கு மட்டுமே உண்டு.
அதனால் எல்லா நீரையும்விட கங்கைக்கு முக்கியத்துவம்.
இப்ப புரிந்த்தா நாம் ஏன் கங்கா ஸ்நானம் செய்யனும் என்று?
இப்ப சொல்லுங்க கங்கா ஸ்நானம் ஆச்சா?
நம் அறகட்டளைக்காக முகம் தெரியாமல் உழைக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் 
இனிய தீப திருநாள் வாழ்த்துக்கள்.
சூர்யா சமூகநல அறகட்டளை
முகநூல் நம் எண்ணங்கள் குழு

No comments:

Post a Comment