Saturday, March 21, 2020

அகோரிகள்

#அகோரிகள்

#சமஸ்கிருதத்தில் அகோரி என்றால் 'பயமில்லாத' என்று அர்த்தம்.

உடலில் ஆடைகள் இல்லாமல், நீண்ட முடியுடன். முகத்திலும மார்ப்பிலும் முடிகள் இல்லாமல் இருப்பவர்கள் அகோரிகள். 

தலை பகுதிகள் தவிர பிற இடங்களில் இவர்களுக்கு முடிகள் இருக்காது. 

அகோரிகளுக்கு #வருத்தம், துக்கம் என்பதே கிடையாது. 

#நன்மை, #தீமை என்பதும் கிடையாது எனவேதான் அவர்கள் தாகம் எடுத்தால் தங்கள் சிறுநீரை கூட குடிப்பார்கள்.

எந்த ஒரு சமைத்த உணவையும் விரும்பிச் சாப்பிடுபவது போலவே மிக மோசமாக அழுக்கிபோன எந்த ஒரு உயிரியின் சதைய ையும் சாப்பிடுவார்கள்.

தங்களுக்கு ஒருவரை பிடித்து விட்டால் அவர்களுக்கு தங்களிடம் உள்ள அனைத்தையும் வழங்கி விடுவார்களாம் அகோரிகள்.

பசுமாட்டு மாமிசத்தைத் தவிர அவர்கள் எதைவேண்டுமானாலும் உணவாக எடுத்துக் கொள்வார்கள். பிணம் முதல் மனித கழிவுகள் வரை அவர்கள் உண்பார்கள் அவர்களுக்கு விருப்பு வெறுப்பு தெரியாது.

இவர்கள் உலகை வெறுத்து தனியாக வாழ்பவர்கள் கிடையாது. சிறு சிறு குழுக்களாகவும் தலைமை யோகியின் பின்னால் இவர்கள் இருப்பார்கள். 

தங்களை விளம்பரப் படுத்திகொள்ளவோ, தங்களுக்கு இருக்கும் அமானுஷ ஆற்றலை வெளிக்காண்பிக்கவோ மாட்டார்கள் .

உடல் முழுவதும் சாம்பல் அல்லது மண்கொண்டு பூசியிருப்பார்கள். 

ருத்திராட்சம், சங்கு மற்றும் ஆயுதம் இவற்றில் ஏதாவது ஒன்று கைகளில் வைத்திருப்பார்கள்.

அகோரிகள் குழுக்களாக இருக்கும் சூழலில் யார் தலைமை யோகி அல்லது குரு என கண்டறிவது சிரமம். 

அனைவரும் ஒன்று போல ஒரே மாதிரி  இருப்பார்கள். 

ஆண் மற்றும் பெண் அகோரிகள் இருவரும் இருப்பர்கள். நிர்வாணமாக இருந்தாலும் பெண்யோகிகளை கண்டறிவது கடினம். 

இவர்களின் தலைமுடி வயதானாலும் வெள்ளை ஆகாது. 

உடல் பயில்வானை போல இல்லாமல், சீரான நிலையில் இருக்கும். 

ரிஷிகேசம் அல்லது இமாலய மலையின் வனங்களில் இருப்பார்கள்.

பன்னிரு வருடத்திற்கு ஒரு முறை கும்பமேளாவிற்கு வந்து கூடுவார்கள். 

இமாலயவனத்திலிருந்து நடந்தே அலாகாபாத் எனும் இடத்திற்கு வருவார்கள், மீண்டும் நடந்தே சென்றுவிடுவார்கள். 

வாகனத்தை பயன்படுத்த மாட்டார்கள். வாகனத்தில் சென்றால் குறைந்த பட்சம் பன்னிரெண்டு மணி நேர பயணம். 

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் பொழுது கட்டுகோப்பாக வரிசையில் செல்வார்கள். 

வரிசையின் முன்னாலும் ,பின்னாலும் இருக்கும் அகோரிகள் பாதுகாப்பு அரணாக இருப்பார்கள். 

நீண்ட முடியும், மண் அல்லது சுடுகாட்டு சாம்பலை பூசி இருந்தாலும் அவர்கள் மேல் எந்த விதமான வாசனையும் இருக்காது. நறுமணமும் இருக்காது, நாற்றமும் இருக்கது. 

முக்கியமாக இவர்கள் பிறருடன் பேசுவது குறைவு. தங்களுக்குள் பேசிக்கொள்ளவே மாட்டார்கள். 

குழுவாக வட்டவடிவில் உற்கார்ந்து கொண்டு ஒரு மூலிகையை புகைப்பார்கள். 

இம்மூலிகை கஞ்சா என பிறர் எண்ணுகிறார்கள். 

கும்பளாவில் கஞ்சா எல்லாஇடத்திலும் கிடைக்கும், சிலர் இலவசமாக பிறருக்கு வழங்குவார்கள். 

ஆனால் இவர்களிடம் யாரும் கொடுக்க மாட்டார்கள், இவர்களும் வாங்க மாட்டார்கள். 

தாங்கள் இருக்கும் வனத்திலிருந்து சில மூலிகைகளை கொண்டு வருவார்கள். 

வட்டமாக உட்கார்ந்திருக்கும் இவர்கள் வட்டத்தின் மையத்தில் அந்த மூலிகையை வைத்து ப்ரார்த்தனை செய்த பின் புகைப்பார்கள். 

மூலிகை குழாயில் வைத்து ஒரு முறை மட்டுமே உள்ளே இழுப்பார்கள். பிறகு அடுத்தவருக்கு கொடுப்பார்கள். இப்படியாக வட்டம் முழுவதும் புகைகுழாய் வட்டமடிக்கும்.

ரிஷிகேசத்திலும், கும்ப மேளாவிலும் எத்தனை டிகிரி செண்டிகிரேட் குளிராக இருந்தாலும் நிர்வாணமாக உட்கார்ந்து தியானம் செய்வார்கள். 

அவர்கள் வாழ்க்கை முறை மிகவும் விசித்திரமாகவும், சாதாரண இயல்பு வாழ்க்கையை வாழ்பவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருப்பதால் யாரும் வராத சுடுகாட்டை தங்கள் வாழ்விடமாக அவர்கள் தேர்வு செய்கின்றனர்.

சுடுகாட்டில் சிதையின் மீது அமர்ந்து சாதனா செய்வது அவர்களது இந்த மனோ பலத்திற்கு மிகப்பெரிய காரணமாம்.

அவர்கள் ஒருவிஷயத்தை குறி வைத்து விட்டால் அதனை முடிக்காமல் விடமாட்டார்கள். அதேபோல் கோபாவேசம் வந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யத் துணிந்தவர்கள். 

ஆனாலும் தங்கள் இருதயம் அமைதியின் இருப்பிடம் என்றே அவர்கள் கூறிக்கொள்கிறார்கள். 

கறுபு பாடையில் மண்டை ஓட்டை மாலையாக அணிந்து கொள்ளும் இவர்கள் இதயம் அமைதியானது என்பதைக் கேட்க சற்று வினோதமாகவே இருக்கும்.

சிவபெருமானையும், காளி தேவியையும் வணங்குவார்கள் அகோரிகள். 

காளி தேவி அல்லது தாரா என்பவர் 10 மகாவித்யாக்களில் (அறிவை கொடுக்கும் கடவுள்கள்) ஒருவராகும். இக்கடவுள் இயற்கைக்கு மாறாக அதீத சக்திகள் கொண்டுள்ள அகோரிகளை மட்டுமே ஆசீர்வதிப்பார்கள். 

துமாவதி, பகளமுகி மற்றும் பைரவி வடிவில் இருக்கும் இக்கடவுளை இவர்கள் வணங்குகிறார்கள். 

மஹாகல், பைரவா மற்றும் வீரபத்ரா போன்ற மிகவும் கடுஞ்சினத்துடன் கூடிய வடிவத்தில் இருக்கும் சிவபெருமானையும் வணங்குவார்கள். 

அகோரிகளின் காப்பாளர் கடவுளாக விளங்குவது ஹிங்க்லஜ் மாதா

இமாலய மலை பகுதிகளில் (யமுனோத்தரி, கங்கோத்தரி மற்றும் நேப்பாளம்) இவர்களின் முக்கிய இடமாக இருக்கிறது. 

கும்பமேளா தவிர பிற காலங்களில் இவர்கள் குழுவாக வெளியே வலம் வருவதில்லை. 

குழுவிலிருந்து தனியே சில பணிகளுக்காக செல்லும் அகோரிகள் தங்கும் இடம் மயானம். 

எந்த ஊருக்கு சென்றாலும் இவர்கள் மயானத்தில் இருப்பதை விரும்புவார்கள்.

அகோரிகளுக்கு தங்கள் உடலின் சக்தி நிலை மிகவும் முக்கியமானது. 

இங்கே உடல் சக்தி என்ற யோக சக்தியின் உயர் நிலையை எக்காரணத்திலும் இழக்க அவர்கள் தயாரக இருக்க மாட்டார்கள். 

இயற்கையிலிருந்து எப்படி சக்தியை பெறுவது எனபது இவர்களுக்கு அத்துப்படி. மயானம், ஆறு மற்றும் வனங்களில் தங்கள் உடல்சக்தியை மேம்படுத்துவார்கள். 

தங்கள் யோக சக்தியை பிறருக்கு அநாவசியமாக காட்ட மாட்டார்கள். 

சமூகத்தில் தர்மம் தடுமாறும் பொழுது சூட்சமமாக செயல்பட்டு தர்மத்தை நிலைநிறுத்துவார்கள்.

தங்கள் குழுக்களில் பிறரை சுலபமாக சேர்க்க மாட்டார்கள். 

அகோரிகளின் ராணுவ அமைப்பின் தலைவர் பதவியை ஏற்கும் முறை விசித்திரமானது. 

புதிய தலைவரை வணங்கிவிட்டு, பழைய தலைவர் தன்னை மாய்த்துக்கொள்ளுவார்.

No comments:

Post a Comment