Tuesday, October 25, 2016

மாவாட்டுவது ஒரு யோகாசனம் என்பது தெரியுமா?

தொப்பையை குறைக்கும் சக்கி சலனாசனா !!


தெரிந்தோ தெரியாமலோ அந்த காலப் பெண்கள் வீட்டு வேலை செய்தத்தில் ஒவ்வொரு அர்த்தம் நிறைந்தது. அமராமல் குனிந்து கோலம் போடுவதால் கர்ப்பப்பை பலப்படும் என்பது எத்தனை பேர் அறிந்து வைத்துள்ளோம். அதேபோல் அம்மி அரைப்பதால் கைகள் பலப்படும். சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பு ஏறாது. அது போல் மாவாட்டுவது போன்று சிறந்த பயிற்சி பெண்களுக்கு தேவை. தசை இறுகும். தொப்பையை குறைக்கும். மாதவிடாயை சீர் செய்யும். இப்படி ஒவ்வொரு ேலையும் பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தை தந்தது. அதனாலேயே எந்த வித உபாதைகளும் இல்லாமல் இருந்தனர். ஆனால் இன்று எல்லாவற்றிற்கும் இயந்திரங்கள் வந்துவிட்டது. நோய்களும் பெருகிவிட்டது.
சக்கி சலனாசனா :
உங்கள் முதுகையும் அடிவயிறையும் பலப்படுத்த ஒரு ஆசனம் உள்ளது. அடிவயிற்றில் இருக்கும் கொழுப்பை கரைக்கும். சக்கி சலனாசனா. சக்கி என்றால் அரைப்பது. சலன என்றால் இயக்குவது. ஒரு சுழற்சியில் வட்ட வடிவமாக அரைப்பது போன்று செய்யபடுவதால் இந்த பெயர் பெற்றுள்ளது.
செய்முறை : முதலில் தரையில் கால் நீட்டி அமருங்கள். நீண்ட ஒரு மூச்சை இழுத்து விட்டபின் கால்களை வி வடிவத்தில் வைக்கவும். இப்போது இரு கைகளையும் இணைத்து நேராக வைத்துக் கொள்ளுங்கள். கூன் போடாமல் நிமிர்ந்து இருக்க வேண்டும்.
செய்முறை :
பின்னர் உடலை, இடுப்பு வரை வட்ட வடிவத்தில் சுழற்றுங்கள். இடமிருந்து வலமாக ஆட்டுங்கள். முன் செல்லும்போது மூச்சை இழுக்க வேண்டும். அப்படியே பின் வரும்போது மூச்சை விட வேண்டும்.
செய்முறை :
இவ்வாறு 10 சுற்று சுற்றுங்கள். மாவு அரைப்பது போல். கையை இணைத்தபடியே சுற்ற வேண்டும். இப்போது அதே போன்று வலமிருந்து இடமாக சுற்றுங்கள்.
பலன்கள் :
நரம்பு பிரச்சனைகளை தடுக்கும். முதுகு, இடுப்பு, அடிவயிறு ஆகியவற்றை பலப்படுத்தும். அடிவயிறு தொப்பையை கரைக்கும். மாதவிலக்கை சீர் செய்யும்.
குறிப்பு : கர்ப்பிணிகள் இந்த ஆசனத்தை தவிர்க்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களும், தண்டுவட பாதிப்பு இருப்பவர்களும் இந்த யோகாவை செய்ய வேண்டாம்.


No comments:

Post a Comment