Friday, January 2, 2026

தினம் ஒரு ஆலயம் - அதிசயம் 28. நாகேஸ்வரன் கோயில், கீழ்கோட்டம் கும்பகோணம்

தினம் ஒரு ஆலயம் - அதிசயம்

          28. நாகேஸ்வரன் கோயில்கீழ்கோட்டம் கும்பகோணம்

இறைவன் நாகநாதர் என்றும்இறைவிபெரியநாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர்.

இக்கோயிலின் கட்டு முதலாம் ஆதித்த சோழனால் (பொ..891-907) தொடங்கப்பட்டு முதலாம் பராந்தக சோழன் (பொ..907-950) ஆட்சியில் முடிக்கப்பட்டது


இந்தக் கோயில் குடந்தை கீழ்கோட்டம் என்றும் குறிப்பிடப்படுகிறது (குடந்தை என்பது கும்பகோணத்தின் பழைய பெயர்கோட்டம் என்பது கோட்டை போன்ற உயரமான சுவர்களைக் கொண்ட அமைப்பைக் குறிக்கிறதுஎனவே இது குடந்தை / கும்பகோணத்தின் கீழ்க் கோட்டை).

நாகராஜாக்கள் வழிபட்ட தலமாதலின் ‘திருநாகேச்சுரம்’ எனப் பெயர் பெற்றது.

நாகராஜன் ஒரு சிவராத்திரியில் நான்கு யாமங்களில் முதல் யாமத்தில் வில்வவனமான குடந்தைக் கீழ்க்கோட்டத்திலும் இரண்டாம் யாமத்தில் சண்பக வனமான இத்திருநாகேச்சரத்திலும்மூன்றாவதில் வன்னி வனமான திருப்பாம்பரத்திலும்நான்காம் யாமத்தில் புன்னைவனமான நாகைக்காரோணத்திலும் வழிபட்டுப் பேறு பெற்றான்இந்த நான்கு தலங்களும் நாகராசன் பெயராலேயே வழங்கப்படுதல் கண்கூடு.

ஆதிசேஷன்தக்ஷன்கார்க்கோடகன் (மூவரும் நாகராஜாக்கள்), கௌதமர்நந்திநளன்பராசரர்பகீரதன்முதலியோர் வழிபட்டு பேறு பெற்றனர்.

 

சூரியன் இங்கே வழிபட்டுப் பேறுபெற்றார்.

 

விநாயகர் வழிபட்டுக் கணங்களுக்கு அதிபதியானார்.

 

கௌதமர் வழிபாடு செய்து அகலிகையை அடைந்தார்.

 

நளன் இங்கே வணங்கிஇழந்த தன் மனைவியைப் பெற்றான்.

 

பராசர முனிவர் வழிபட்டு பாவம் நீங்கினார்.

 

பாண்டவர்கள் வழிபட்டு இழந்த தம் செல்வத்தை மீண்டும் பெற்றதோடு இப்பெருமானுக்குக் கார்த்திகை மாத விழாவினையும் நடத்தினர்.

 

வசிட்ட முனிவர் வழிபட்டு நலம் பெற்றார்.

 

ஒரு குருவியின் கட்டளைப்படி இந்திரன் இங்கே வழிபட்டு மேன்மையுற்றான்.

 பிரமனும்பகீரதனும் வழிபட்டுப் புனிதமடைந்தனர்.

 

சித்திர சேனன் எனும் மன்னன் வைகாசியில் விழா நடத்திவழிபட்டு நற்புத்திரனை அடைந்தான்.

 

ஒரு சிவயோகி கோயிலிலுள்ள புற்பூண்டுகளைப் போக்கிப் புனிதரானார்.

 

சௌனக முனிவர் காம மயக்கத்திற்குக் கழுவாய் இங்கே பெற்றார்.

 

சேக்கிழார் திருப்பணி செய்த பெருமையுடையது

அதிசயம் 1: சிவலிங்கத்துக்கு சூரியனின் நமஸ்காரம்

சித்திரை மாதத்தில் வரும் 11, 12, 13 தேதிகளில் சூரியனின் ஒளிஇத்தல லிங்கத்தின் மீது படும் விதத்தில் சோழர்கள் அமைத்துள்ளனர்.

அதிசயம் 2: ஒரே கல்ல்லி தேர் சக்கரமா? ராசி சக்கரமா?

இங்குள்ள நடராஜ மடம்பேரம்பலம்குதிரை இழுக்கும் தேர் வடிவில் கட்டப்பட்டுள்ளது.

தேரின் ஒவ்வொரு சக்கரத்திலும் 12 கரங்கள் உள்ளன,

ஒவ்வொன்றும் ஒரு ராசியைக் குறிக்கும்.  

கொனார்க் சூரிய கோயிலில் உள்ள சக்கரம் பலகற்களை கொண்டு சிற்பம் வடித்து சேர்த்தது.

ஆனால் இங்கு உள்ள ராசி சக்கரம் ஒரே கல்லால் ஆனது தமிழனின் கட்டிடகலை திறமையை பறைசாற்றுவதாகவே உள்ளது. (மறைக்கப்பட்ட தமிழனின் சாதனை)

அதிசயம் 3: கல்லில் நடனம்  தாளம் புல்லாங்குழல் வாசிப்பு

சிவகாமி வடிவில் அம்பாள்நடராஜப் பெருமானின் பிரபஞ்ச நடனத்திற்கு தாளம் போடுவதும்விஷ்ணு புல்லாங்குழல் வாசிப்பதும் காட்சியளிக்கிறது.

சிற்பங்கள் சிதம்பரத்தில் செய்தது போல் நடனத்தில் போட்டி போடுவது போல் நிஜமாகவே காட்சியளிக்கிறது!

1200 ஆண்டுகளுக்கு முன்னர் எந்தவித தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் கல்லுக்கு உயிர் கொடுத்த

கல்லிலே கலைவண்ணம் கண்ட பெயர் தெரியாத தமிழர் சிற்பியின் அபார கைத்திறன் மெய்சிலிர்க்கவைக்கும் .

தமிழன் கட்டிடகலையின் அதிசயத்தையும் அறிவையும் மதி நுட்பத்தையும் திறமையையும்.

நாளை வேறொரு கோயில் அதிசயத்துடன் சந்திக்கும்வரை சிந்தித்திருப்போம்.

          ஓம் நமசிவாய                 

சுந்தர்ஜி

தமிழன் திமிரானவன்