எங்கும் நிறைந்திருக்கும்
இறைவனை ஏன் கோயில் சென்று வணங்க வேண்டும்?
எங்கு காந்த அலை
அடர்த்தி, பூமியின் வடதென்துருவ காந்த புலன் அதிகமாக இருக்கிறதோ அங்குதான் கோயில் கட்டப்பட்டிருக்கும்.
முக்கியமாக மூலஸ்தான
கற்பகிரக சிலை இருக்கும் இடத்தில் காந்த புலன் அதிகமாக இருக்கும்.
சரியாக சொல்வதென்றால்
மூலஸ்தான சிலை கற்பகிரகம் அமைத்த பிறகே கோயில் கட்டப்படும்.
சிலைக்கு கீழே
தாமிர தகட்டில் வேத வரிகளை செதுக்கி புதைக்கப்படும். மேலிருந்து வரும் காந்த அலைகளை
கிரகித்து பலமடங்கு பெருக்கி வெளியிடவே.
கர்பகிரகம் மூன்று
பக்கமும் காற்று புகாவண்ணம் அடைக்கப்படும். காரணம் ஆற்றலை அதிகப்படுத்தவே.
ஆகம விதிப்படி
கோயில் நிர்மானிக்கப்பட்டு கர்பகிரக கோபுரங்களின் மேல் தங்கத்தாலும் தாமிரத்தாலும்
செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள கலசங்க:லின் கூர் முனை ஆகாயத்தில் உள்ள உயிர் சக்தி எனப்படும்
பிரபஞ்சத்தின் பிராண சக்தியை கிரகித்து கலசத்தின் நேர் கீழே உள்ள சிலைக்கு தொடர்ந்து
அனுப்பிக்கொண்டே இருக்கும்.
இந்த பிராண சக்தி
சிலையில் கீழ் இருக்கும் தாமிர தகடு பொன் வெள்ளியில் செய்யபட்ட யந்திரங்கள் சக்கரங்கள்
மூலம் கிரகித்து தான் அமையபெற்றிருக்கும் தன்மைக்கு ஏற்ப பலமடங்கு பெருக்கி வெளிப்படுத்தும்.
இதிலிருந்து வெளிப்படும்
சக்தியை (14000 போவிஸ்) நம் உடம்பில் உள்ள உயிர் அணுக்கள் தாங்க இயலாது. அதனால்தான்
பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள கடவுள் சிலை அந்த சக்தியை பிரித்து ஒன்பது முனைகள்
வழியாக வெளியேற செய்கிறது.
அப்படி கற்பகிரத்தின்
வாசல் வழியாக வெளியேறும் பிராண சக்தி எதிரில் நின்று இறைவனை வணங்கிக்கொண்டு இருக்கும்
நம் மீது படுகிறது.
தீப ஆராதனை காட்டப்படுவது
நம் கண்கள் மற்ற காட்சிகளை தவிர்த்து மனதை குவிந்து ஒருநிலைப்படுத்தவே.
தீபாராதனை காட்டும்போது
மிக அதிகமாக சக்தி வெளிப்படும். அதை நம் உடல் மீது உடன் கிரகிக்கவே ஆண்களை மேலாடை இல்லாமலும் பெண்களை அதிக தங்க வெள்ளி ஆபரணங்களுடன் கோயிலுக்கு
வரச்சொல்கிறார்கள். (தங்கம் வெள்ளிக்கு பிராணசக்தியை கிரகித்து உள்வாங்கும் தன்மை உண்டு)
மூலஸ்தானத்தில்
இருக்கும் விளக்கு வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தும். கோயிலில் ஒலிக்கப்படும் மணியோசை அங்கு
வருபவர்களின் நினைவுகளை அலைபாயவிடாமல் செய்யும். அதனால் மன அழுத்தம் குறையும்.
மணம் வீசும் மலர்கள்
ஒரு விதமான நல்ல சுகந்த மணத்தை கொடுத்து உடலையும் மனதையும் உற்சாகபடுத்தும்.
கடவுளின் சிலைகளை
அபிஷேகம் செய்த நீரில் சிவன் கோயிலில் வில்வ இலைகளையும், பெருமாள் கோயிலில் துளசி இலைகளையும்
போட்டு தாமிர பாத்திரத்தில் வைத்து தீர்த்தமாக தருவார்கள்.
இதனால் வயிற்று
வலி, குன்மம், சளி, இருமல், பல்சொத்தை, துர்நாற்றம், மற்றும் வைரஸ் கிருமி தொற்று நோய்
ஏற்படா வண்ணம் பாதுகாக்கும்.
கர்பகிரகத்தின்
வடக்கு அல்லது கிழக்கில் கடவுள் சிலைக்கு செய்யும் அபிஷேக நீர் செல்ல துவாரம் அமைக்கப்பட்டிருக்கும்.
அதில் வரும் நீரையும் கோயிலை வலம் வரும் நாம் எடுத்து கண்களிலும் சிரசிலும் ஒற்ரிக்கொள்கிறோம்.
அதில் உள்ள பிராணசக்தி நம் உடலிலும் பரவ செய்யவே இந்த ஏற்பாடு.
இந்த பிராண சக்தி
வெளிப்பட்டுகொண்டு இருப்பதால்தான் சிலையின் குறுக்கே செல்லக்கூடாது என்றும் சிலையை
விட்டு விலகி இருக்கும்பதியும் அபிஷேகம் செய்யும் போது கைகளை சிலைகளுக்கு மேல் உயர்த்தகூடாது
என்றும் ஒரு காலை கற்பகிரத்தின் வாயிலிலும் வெளியேயும் வைக்க கூடாது என்றும் சொல்லப்படுகிறது.
பிராணசக்தி நம்
உடம்பில் பட்டு உடல் சிலிர்ப்புடன் இருப்பதால்தான் உடனே கோயிலை விட்டு வெளியே வரகூடாது
என்றும் சிறிது நேரம் அந்த வளாகத்திலேயே அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு வரச்சொல்கிறார்கள்.
எங்கும் நிறைந்திருக்கும்
இறைவனை ஏன் கோயில் சென்று வணங்கச்சொன்னார்கள் என்று இப்போது புரிகிறதா?
நம் ஆரோக்கியத்துக்குதான்
கோயிலே தவிர மூட நம்பிக்கைகளுக்கு இல்லை.
தமிழர் பண்பாடு
கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான
மருத்துவமே…
புரிந்தவர் பயன்படுத்தி
பலனடைகிறார்கள்.
புரியாதவர்கள்
பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.
தமிழன் திமிரானவன்
சுந்தர்ஜி
No comments:
Post a Comment