பக்திக்கும் மரியாதைக்கும்
உரிய கோயிலில் ஏன் தாம்பத்திய இரகசிய சிலைகள் வைக்க வேண்டும்?
அவ்வளவு முட்டாளா
நம் முன்னோர்கள்? இல்லை கேவலமானவர்களா?
நம் முன்னோர் தமிழர்
அறிவு உலகத்தில் எவருக்கும் இல்லை. அதை புரியாதவன் தெரியாதவன் உளரிக்கொட்டுவதெ வன்மம்.
அந்த காலத்தில்
மணமானவர்களுக்கு தாம்பத்தியத்தை பற்றி சொல்லிக்கொடுக்க எந்தவிதமான வழிமுறைகளும் கிடையாது.
பெற்றோர்களும்
பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க தயங்கினார்கள். சகோதர சகோதரிகள் நண்பர்களுக்கும் வாய்ப்பில்லா
தெரியாத சூழ்நிலைதான் அன்று இருந்தது.
ஒரு சமூகம் கட்டமைப்புடன்
தொடர்ந்து இருக்க குடும்ப அமைப்பு சிறப்புடன் இருந்தால் மட்டுமே நீண்ட காலம் தொடரும்.
குடும்ப கட்டமைப்பு
சிறப்புடன் இருக்க அடிப்படை தேவை இந்த தாம்பத்தியம்.
அதனால்தான் அதை
அனைவரும் வந்து செல்லும் கோயில் மேல் கோபுரத்தில் சிலைகளாக வடித்து வைத்தார்கள்.
கணவன் மனைவிக்குள்
தாம்பத்தியத்தில் எதுவும் தப்பில்லை என்பதை பெண்கள் உணர்ந்து அச்சப்பட தேவையில்லை என்பதை
தெரிவிக்கவே அவ்வாறான சிலைகள் கோபுரத்தின் உச்சியில் செய்து வைத்தார்கள்.
ஒரு நீண்ட கட்டுரை,
பதிவு, வீடியோ சொல்வதை ஒரே ஒரு சிலை சொல்லிவிடும். அதனால்தான் பலவித தாம்பத்திய இரகசிய
சிலைகள் அவ்வாறு அமைத்தார்கள்.
நம் வீட்டில் திருமணம்
முடிந்த உடன் கண்டிப்பாக தம்பதிகளை சில பல கோயில் சென்று வரனும் என்றும் மேலே கோபுரத்தை
பார்த்து வரவும் என்று தாம்பத்திய இரகசியத்தை கற்றுக்கொள்வதற்கே அவ்வாறு மறைமுகமாக
சொன்னார்கள்.
அதனால்தான் சிறுவர்
சிறுமியரை கோயில் கோபுரம் மேலே அன்னாந்து பார்க்கச்சொல்லமாட்டார்கள். பார்த்தாலும்
கண்டிப்பார்கள். அந்த வயதில் விளக்கம் சொல்லவும் முடியாது, சொன்னாலும் புரியாதில்லையா?
அந்த காலத்தில்
மருத்துவமனைகளும் கல்வி கற்கும் பாடசாலையும் கோயில் வளாகத்தில்தான் செயல்பட்டது என்பதை
மறக்கவேண்டாம்.
அது வெறும் கோயில்
மட்டுமல்ல.
மனிதர்களின் வாழ்வாதாரத்திற்கே
அடிப்படையும் எல்லாமும் கோயில்தான்.
உலக பொதுமறை என்று
சொல்லக்கூடிய 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட திருக்குறளில் கூட அதனால்தான் இன்பத்துபால்
என்று தாம்பத்திய இரகசியம் பற்றி அதன் முக்கித்துவம் கருதியே அறிவுறுத்தப்பட்டது.
தமிழர் பண்பாடு
கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான
மருத்துவமே…
புரிந்தவர் பயன்படுத்தி
பலனடைகிறார்கள்.
புரியாதவர்கள்
பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.
தமிழன் திமிரானவன்
சுந்தர்ஜி
No comments:
Post a Comment