Friday, November 15, 2024

தோப்புகரணம் போடுவது தண்டனையா? ஆன்மீகமா? மூட நம்பிக்கையா?

 


தோப்புகரணம் போடுவது தண்டனையா? ஆன்மீகமா? மூட நம்பிக்கையா?

தண்டனை என்றால் பிள்ளையாருக்கு முன் செய்யச்சொல்லமாட்டார்களே?

யோசித்தோமா? இல்லையே?

நமது சிறுமூளை, பெருமூளை செயல் நரம்புகள் காது மடல்களில்தான் வந்து முடிகின்றன.

நாம் இரு காது மடல்களையும் பிடித்துக்கொண்டு அமர்ந்து எழும்போது..

நம் இரு மூளையின் செயல் நரம்புகள் தூண்டபட்டு நமது மூளை நன்கு செயல்படத்தொடங்கும்.

ஆகவேதான் பள்ளியில் மக்கு மாணவர்களை தோப்புகரணம் போடவைத்து புத்திசாலியாக்கி வெற்றி பெற வைத்தார்கள்.

மற்றவர்களை இலவசமாக விநாயகர் முன் போடவைத்து சுறுசுறுப்பாக இருக்க வைத்தார்கள்.

அதை ஏன் விநாயகர் முன்னிலையில் போடனும்?

அப்பத்தான் நல்லா படிப்பு வரும் என்று சொல்லி போடச்சொல்வார்கள். காரணம் அதே சிந்தனையில் தோப்புகரணம் போடும்போது மனது ஒருநிலைப்பட்டு படிப்பில் கவனம் வரும் என்றுதான்.

இதை நமக்கு மூடநம்பிக்கை என்று கிறுத்துவ ஆங்கிலேயனும், திருட்டு திராவிடனும் சொல்லி ஏளனம் செய்து செய்யவிடாமல் மறக்கடித்துவிட்டு இதையே அவர்கள் கார்பரேட் மூலம் “ சூப்பர் பிரைன் யோகா ” என்று பல ஆயிரம் கோடிகள் வியாபர பொருளாக்கி சம்பாதிக்கிறார்கள்.

நான் சொல்வது பொய் என்று உணர்ந்தால் நீங்களே கூகுளில் சூப்பர் பிரைன் யோகா என்று தேடிப்பாருங்கள் உங்களுக்கு நாம் எப்படி ஏமாற்றபட்டு வந்திருக்கிறோம் என்ற உண்மை புரியும்.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


No comments:

Post a Comment