Saturday, November 23, 2024

ஒரு பெண் திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும்போது குத்துவிளக்கு ஏற்றச்சொல்வது ஏன்?


 

ஒரு பெண் திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும்போது குத்துவிளக்கு ஏற்றச்சொல்வது ஏன்?

ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய ஐந்து நற்குணங்கள் இந்த குத்துவிளக்கில் உள்ள ஐந்து முகங்களை ஏற்றுவதன் மூலம் உறுதி அளிப்பதாக அர்த்தம்.

குத்து விளக்கிற்கும் பெண்ணிற்கும் என்ன சம்பந்தம் என்றுதானே யோசிக்கிறீர்கள்.

குத்துவிளக்கின் தாமரை போன்ற பீடம் – பிரம்மாவையும்..

குத்துவிளக்கின் நடு தண்டு – விஷ்ணுவையும்…

நெய் எரியும் அகல் – பார்வதியையும் (முப்பெரும் தேவியரையும்)…

எரியும் நூல் திரி – தியாகத்தையும்…

தீப சுடர் – சிவனையும் குறிக்கிறது…

குத்துவிளக்கில் உள்ள ஐந்து முகங்களும் பெண்ணுக்கு வேண்டிய அன்பு, அறிவு, உறுதி, நிதானம், பொறுமை போன்ற ஐந்து குணங்களை குறிப்பதாகும்.

அதனால்தான் ஒரு பெண் திருமணமாகி முதல் முறையாக தனது கணவன் வீட்டிற்கு அதாவது புகுந்த வீட்டிற்கு வந்த உடன்..

முதல் வேலையாக அப்பெண்ணை குத்து விளக்கு ஏற்றச்சொல்லி அந்த குத்து விளக்கில் ஏற்றப்பட்ட தீபசுடர் மூலமாக வீடு முழுக்க ஒளி பரவச்செய்கின்றனர்.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி

 

No comments:

Post a Comment