Wednesday, November 27, 2024

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த குடி தமிழ்குடி?

 

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த குடி தமிழ்குடி?

 

“பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என் வியப்பாம்                                   வையகம் போர்த்த வயங்கொலிநீர் கையகலக்                                        கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு                                         முற்றோன்றி மூத்தகுடி”.

புரப்பொருள் வெண்பாமாலை சூத்திர விளக்கப்பாடல் 35                        எழுதியவர் ஐயனாரிதனார்.

பொருள்:

பூமி தோன்றியபின் நீர் விலகி நிலம் தெரிந்தபோது முதலில் தெரிந்தது மலைகள்தான். (குறிஞ்சி நிலம்)

அத்தகைய மலைகளில் தங்கள் ஆயுதங்களாக கற்களையே (கையகல கல்) பயன்படுத்தினர்.

அதன்பிறகு மலைமழை நீர் அடித்து வந்து பாறைகள் தூளாகி அது மணலாகி வண்டல்மண் நிலங்கள் (மருத நிலம்)  தோன்றும் முன்னரே உலோகத்தால் ஆன வாளோடு (இரும்பை கண்டுபிடித்து) விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பாக வலம் வந்தவர்கள்தான் மூத்தகுடி தமிழர்கள்.  

அதாவது விவசாயநிலம் உருவாகும் முன்னரே முல்லை நிலத்திலேயே உலோகத்தை கண்டுபிடித்து கருவிகள் ஆயுதம் (வாள்) செய்து பயன்படுத்தி விலங்குகளிடம் இருந்து பாதுகாத்து அறிவாளியாக வாழ்ந்துவந்த உலகின் முதல் சமூகம் (குடி) தமிழர்தான் என்று சொல்கிறார்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


No comments:

Post a Comment