Friday, November 15, 2024

நம் வீட்டு பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பது அழகுக்கா?

 

நம் வீட்டு பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பது அழகுக்கா?

அதுமட்டுமில்லை…

நம் மூலாதார சக்தியின் பிறப்பிடம் நெற்றிக்கண். அதாவது நமது இரண்டு புருவத்தின் மத்தியில் உள்ள இடம்.

அது சூடு அடையாமல் இருக்கவும், நம் வீட்டு பெண்களை மற்றவர்கள் மயக்கி வசியம் செய்துவிடாமல் இருக்கவுமே..

நம் மூலாதார சக்தியை கஸ்தூரி மஞ்சள் குங்குமம் வைத்து மறைத்துவிடுகிறோம். (கஸ்தூரி மஞ்சள் குளிர்ச்சியை கொடுக்ககூடியது)

இது தெரியாமல் இப்போது எல்லாம் பெண்கள் பொட்டும் வைப்பதில்லை. அப்படியே வைத்தாலும் ஸ்டிக்கர் பொட்டு வைத்து ஒவ்வாமை ஏற்பட்டு அவதிப்படுகிறோம்.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமாக நம்மை காக்கவே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


No comments:

Post a Comment