பாம்பிற்கு முட்டை,
பால் வைப்பதன் காரணம் என்ன? பக்தியா? மூடநம்பிக்கையா?
உண்மையில் முட்டையையும்
பாலையும் பாம்பு குடிக்காது. பிறகு ஏன் புத்துக்குள் முட்டையையும் பாலையும் வைக்கிறார்கள்?
மக்கள் தொகை குறைவாக
இருந்த முன் காலத்தில் மக்கள் வசிப்பிடத்தில் முக்கிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள்.
காரணம் அடர்ந்த
காடுகள் மனித நடமாட்டம் குறைவு பாம்புகள் அதிகம். ஒரு உயிரினத்தை அவசிய உணவு தேவைக்காக
தவிர கொல்லும் உரிமை கிடையாது.
அதனால் அதை கொல்லாமல்
இனபெருக்கத்தை கட்டுப்படுத்த நினைத்தார்கள்.
பாம்புகள் இனபெருக்கம்
செய்வது வித்தியாசமானது. பெண் பாம்பு தன் உடலில் இருந்து ஒருவித வாசனை திரவத்தை அனுப்பும்.
அதனை நுகர்ந்து ஆண் பாம்பு இணை சேர பெண் பாம்பை தேடி வரும்.
பெண் பாம்பில்
இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தி ஆண் பாம்பை திசை திருப்பும் வேலையைத்தான் முட்டை
மற்றும் பாலில் இருந்து வரும் வாசனை செய்தது. அதனால் பாம்பால் இன பெருக்கம் செய்ய இயலாது.
இதன் உண்மை காரணம்
சொன்னால் யாரும் செய்யமாட்டார்கள். அதனால் தெய்வத்தின் பெயரைச்சொல்லி கடைபிடிக்கவைத்து
மக்கள் வசிப்பிடங்களில் பாம்பை கட்டுப்படுத்தினார்கள்.
தமிழர் பண்பாடு
கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை.
பழந்தமிழர் மரபு
பழக்கவழக்கம் எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்கப்பட்டவை.
தமிழன் திமிரானவன்
சுந்தர்ஜி
No comments:
Post a Comment