Thursday, December 18, 2025

தினம் ஒரு ஆலயம் - அதிசயம் 18. தில்லை நடராஜர் திருக்கோயில் சிதம்பரம்

தினம் ஒரு ஆலயம் - அதிசயம்
18. தில்லை நடராஜர் திருக்கோயில் சிதம்பரம்
இத்தலத்தின் மூலவர் : திருமூலநாதர், (தூய தமிழில் : பொன்னம்பலநாதா்)
உற்சவர் : நடராசர் (வடமொழியில் : கனகசபைநாதா்)
அம்மன்/அம்மை : உமையாம்பிகை, (வட மொழியில் : சிவகாமசுந்தரி.
ஆகாச லிங்கம் (இறைவன் இல்லாத இடம்):
கர்ப்பகிரகத்தில் சிவலிங்கம் இல்லை, ஒரு திரைக்குப் பின்னால் இறைவன் இருப்பதாகக் கூறுவார்கள்.
அந்த திரையை விலக்கும்போது, அங்கு ஒன்றுமில்லை; அதுவே பிரம்மம், அதாவது ஆகாயம். இதுவே "சிதம்பர ரகசியம்" எனப்படுகிறது.
சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் என்றும் சிதம்பரம் தில்லை கூத்தன் கோயில் என்றும் சிதம்பரக் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
கோவிலின் புராதன உட்புறம் எப்போது கட்டப்பட்டது என்பதுபற்றி யாருக்குமே தெரியவில்லை. 3500 ஆண்டுகள் அல்லது அதற்கும் முற்பட்டதாக இருக்கலாம் என்று மக்களால் கருதப்படுகிறது.
சிதம்பரத்தில் ஈசன் உடன் கலந்து முத்தி பெற்ற பெருமை மாணிக்கவாசகருக்கும் நந்தனாருக்கும் மட்டுமே கிடைத்தது.
அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவேரி வடகரை சிவத்தலங்கள் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் ஒன்றாகும்.
இத்தலம் அனைத்துத் திருமுறைகளிலும் பாடப்பெற்ற தலம் எனும் பெருமையைக் கொண்டது.
பூலோக கைலாசம் என்றும் கைலாயம் என்றும் அறியப்பெறுகிறது.
ஊர்ப்பெயர் தில்லை; கோயிலின் பெயர் சிதம்பரம், இன்று ஊர்ப்பெயர் வழக்கில் மறைந்து, கோயிலின் பெயரே ஊர்ப் பெயராக வழங்கி வருகிறது.
தில்லை மரங்கள் அடர்ந்த காடாக இருந்தமையால் தில்லைவனம் என்று பெயர் பெற்றது.
இத்தலமானது பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான ஆகாயத் தலமாகும்.
இத்தலம் திருநீலகண்ட நாயனார் அவதாரத் தலம் எனவும் கூறப்படுகின்றது.
சிதம்பரம் திருமூலராலும் பதஞ்சலி மற்றும் வியாக்கியபாதர் எனும் முனிவர்களாலும் வணங்கப்பட்டுள்ளது.
இங்கு நடராஜர் ஆடும் சிற்றம்பலத்துக்கு மற்றொரு பெயரே பொன்னம்பலமாகும் இது கனகசபை என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த சபைக்கு, முதலாம் பராந்தகன் சோழ மன்னன் பொற்கூரை வேய்தான் என்றுத் திருவாலங்காட்டு செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.
அதனால் இந்தச் சபை பொன்னம்பலம் என அழைக்கப்படுகிறது; வடமொழியில் கனகசபை எனக் கூறப்படுகிறது.
சிதம்பர ரகசியம்
அறுகோணத்தில் உள்ள இச்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது ஒரு சிறிய வாயில், அங்குள்ள திரை அகற்றபட்டு தீபாராதனை காட்டபடும்.
அங்கு திருவுருவம் இல்லாது, தங்கத்தால் ஆன வில்வ தளமாலை ஒன்று தொங்கவிடபட்டிருக்கும்.
இதன் ரகசியம் இங்கு இறைவன் ஆகாய உருவில் (வெட்டவெளி-ஒன்றும் இல்லை) இருக்கின்றார் என்பதுதான்.
ஆகாயத்துக்கு ஆரம்பமும் ,முடிவும் கிடையாது ,அதை உணரத்தான் முடியும் என்பதை உணர்த்துவதேயாகும்.
சித்தர்கள் கண்டுபிடித்த மனித உடலின் தத்துவத்தின் படி இக்கோவில் கட்டப்பட்டுள்ளது.
சிதம்பர ம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற் புதமான கட்டிடகலை ரகசியங்கள் அதிசயங்கள் இவைகள்தான்.”
அதிசயம் 1: உலகின் மையப்பகுதி
இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World’s Magnetic Equator )
அதிசயம் 2: நேர் கோடு
2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறி க்கும் தில்லை நட ராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம்,
நிலத் தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது,
இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும்
இந்த துல்லி யம் அன்றை க்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல், புவியியல் மற் றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.
அதிசயம் 3: மனித உடல் அடிப்படை
மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக் கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உட லில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
அதிசயம் 4: சுவாசம்
பொற்கூரையில் 21,600 தங்க தகடுகள் வேயப்பட்டுள்ளது. இது ஒரு நாளில் மனிதன் விடும் ஸ்வாசத்தின் எண்ணிக்கையை குறிக்கும் வகையில் இருக்கிறது.
அதிசயம் 5: நாடிகள்
பொற்கூரையில் வேயப்பட்ட தங்க தகட்டில் 72,000 தங்க ஆணிகள் பயன்படுத் தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இரு க்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.
அதிசயம் 6: பொன்னம்பலம்
“பொன்னம்பலம்” சற்று இடது புற மாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.
இந்த இடத்தை அடை ய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை “பஞ்சாட்சர படி” என்று அழைக்கப் படுகின்றது, அதாவது “சி,வா,ய,ந,ம” என்ற ஐந்து எழுத் தே அது.
அதிசயம் 7: ஆகமங்கள் 28, கலைகள் 64
பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங் களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன,
இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது,
இதன் குறுக்கி ல் செல்லும் பல பலகைகள் (CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.
அதிசயம் 8: கனகசபை
“கனகசபை” பிற கோயில் களில் இருப்பதை போன்று நேரான வழி யாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின் றது . இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக் கின்றது,
அதிசயம் 9: மனித உடலின் 9 துவாரம்
பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான மனித துவாரத்தை குறிக்கின்றது.
அர்த்த மண்ட பத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திர ங்களையும்,
அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கி ன்றது.
அதிசயம் 10: காஸ்மிக் நடனம்
சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் “cosmic dance” என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது.
CERN அராய்ச்சிக் கூடத்தில் நடராஜர் சிலை
அணுவைப் பிளந்து மேற்கொள்ளும் ஆராய்ச்சி உலகிலேயே அங்குதான் நடைபெறுகின்றது. அந்த பரிசோதனைச் சாலையின் வாயிலில் நடராஜரின் சிலைவடிவம் வைக்கப்பட்டிருந்தது.
ஏனெனில் அணுக்கூறுகளின் இயக்கங்களை ஒத்திருக்கும் மனித கலாச்சார விஷயத்தில் நடராஜரின் நடன வடிவமே அதற்குப் பொருந்தியுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் கோயில் அதிசயங்கள் இன்னமும் ஏராளமாக உள்ளன..
ஆயிரம் கால் மண்டபம், 1000 ஆண்டுகளுக்கு முன்னரே திட்டமிட்டு கட்டப்பட்ட மழைநீர்வடிகால் சுரங்க பாதை இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
பதிவு நீண்டுவிடும் என்பதால் சுறுக்கி கொடுத்திருக்கிறேன்.
மற்றவற்றை நேரில் கண்டு நம் தமிழ் முன்னோர்களின் அறிவுத்திறன் கட்டிடகலை திறன் வானசாஸ்திரம் எல்லாவற்றையும் அதிசயுங்கள்.
1000 ஆண்டுகளுக்கு முன்னர் எந்தவித தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் கல்லுக்கு உயிர் கொடுத்த
கல்லிலே கலைவண்ணம் கண்ட பெயர் தெரியாத தமிழர் சிற்பியின் அபார கைத்திறன் மெய்சிலிர்க்கவைக்கும் .
தமிழன் கட்டிடகலையின் அதிசயத்தையும் அறிவையும் மதி நுட்பத்தையும் திறமையையும்.
நாளை வேறொரு கோயில் அதிசயத்துடன் சந்திக்கும்வரை சிந்தித்திருப்போம்.
ஓம் நமசிவாய…
சுந்தர்ஜி
தமிழன் திமிரானவன்


 

No comments:

Post a Comment