Sunday, December 14, 2025

தினம் ஒரு ஆலயம் - அதிசயம் 14. மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோயில் தர்மபுரி

தினம் ஒரு ஆலயம் - அதிசயம் 
14. மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோயில் தர்மபுரி
தகட்டூர் நுளம்பர் மன்னர் கி.பி. எட்டாம் நூற்றாண்டுகளில் அதாவது 1200 ஆண்டுகளுக்கு முன்னர் இக்கோயிலை கட்டியுள்ளனர். 
இக்கோயில் இறைவனை பழங்கல்வெட்டுகள் சாணாயிரமுடையார் எனக் குறிப்பிடுகன்றன.
இங்குள்ள இறைவன் மல்லிகார்ஜூனேஸ்வரர் என்றும், இறைவி காமாட்சி அம்மன் என்றும் வழிபடப்படுகிறார்கள்
இந்த சிவலிங்கத்தின் ஆவுடையார், சதுர பீடமாக அமைந்திருக்கிறது. 
சிவலிங்கம் 36 தத்துவங்களை உள்ளடக்கிய வகையில் பட்டைகளைக் கொண்டு வடிக்கப்பட்டுள்ளது
துர்வாசர், காசியபர், அகத்தியர், பரத்வாஜர், கவுசிகர் ஆகிய 5 முனிவர்களாலும், 
இந்திரன், வருணன், எமன், நிருதி, அக்னி, வாயு, குபேரன் மற்றும் அஷ்டதிக் பாலகர்கள், பஞ்ச பாண்டவர்கள், 
ஐராவதம் என்னும் வெள்ளை யானை, யோக நரசிம்மர், ராமர், ஹயக்ரீவர், கிருஷ்ணர் அர்ஜுனன் அவதாரங்களாலும் வழிபாடு செய்யப்பட்ட தலம் இதுவாகும்..
சிறுவனின் விருப்பத்திற்காக, சிவபெருமானே வேதியர் உருவில் வந்து, அவிர்பாகத்தை வாங்கிய சிறப்புமிக்க கோவில் இது.
இந்தக் கோவிலில் எமதர்மனுக்கு சிறப்பு வழிபாடு உண்டு
இத்தல முருகப்பெருமானும் வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தருகிறார். 
இவர் சபரிமலை ஐயப்பனைப் போல, குந்தணமிட்ட நிலையில் மயில் மீது அமர்ந்தபடி காட்சி தருகிறார்.
அதிசயம் 1: அந்தரத்தில் தொங்கும் கல்தூண்கள்:
மூலவர் கருவறையின் முன்பாக மகர மண்டபத்தில் இரண்டு தூண்கள் காணப்படுகின்றன. இந்த தூணின் அடியில் ஒரு காகிதத்தை விட்டால், அது எந்த தடங்கலும் இன்றி மறு பக்கம் வந்துவிடும். 
அதாவது, அந்த தூண் தரையைத் தொடாமல் தொங்குவது போல அமைக்கப்பட்டிருக்கிறது.
இதனால் இவை ‘தொங்கும் தூண்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.
அதிசயம் 2: வெவ்வேறு கோணங்களில் அமைந்த அஷ்டதிக் பாலகர்கள் சிற்பம்
ஆலய விதானத்தில் வட்ட வடிவிலான அமைப்பில் அஷ்டதிக் பாலகர்களின் உருவங்கள் அழகுடன் வடிக்கப்பட்டுள்ளன. 
இவற்றின் நடுவே ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி அருள்புரிகிறார்.
அஷ்டதிக் பாலகர்களின் உருவங்கள், வெவ்வேறு கோணங்களில் திரும்பிய வண்ணம் அமைந்துள்ளன. 
இத்தகைய வடிவமைப்பு மற்ற ஆலயங்களில் காண முடியாத ஒன்றாகும்.
அதிசயம் 4: ஓளியும் நிழலும்
கோவில்கள் அடிப்பாகம் ஒளியும், நிழலும் விழுமாறு மேடு பள்ளமாக அமைக்கப்பட்டிருப்பது  தனித்துவமான கட்டிடக்கலை சிறப்பு.
1200 ஆண்டுகளுக்கு முன்னர் எந்தவித தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் 
கல்லுக்கு உயிர் கொடுத்த கல்லிலே கலைவண்ணம் கண்ட பெயர் தெரியாத தமிழர் சிற்பியின் அபார கைத்திறன் மெய்சிலிர்க்கவைக்கும் .
தமிழன் கட்டிடகலையின் அதிசயத்தையும் அறிவையும் மதி நுட்பத்தையும் திறமையையும். 
நாளை வேறொரு கோயில் அதிசயத்துடன் சந்திக்கும்வரை சிந்தித்திருப்போம்.
ஓம் நமசிவாய…
சுந்தர்ஜி
தமிழன் திமிரானவன்


 


 

No comments:

Post a Comment