தினம் ஒரு ஆலயம் - அதிசயம்
16. அர்த்தநாரீஸ்வரர் திருகோயில் திருசெங்கோடு
திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் மூலவர் அர்த்தநாரீஸ்வரர், தாயார் பாகம்பிரியாள்.
பிருங்கி முனிவர் சிவனை மட்டுமே வலம் வர, பார்வதி கோபமடைந்து, அவரைத் தண்டித்ததால், சிவபெருமான் அவளுக்கு இடப்பக்கத்தை அளித்து அர்த்தநாரீஸ்வரராகக் காட்சியளித்த தலம் இது.
இறைவன் வெள்ளை பாஷாணத்தால் ஆன சுயம்பு மூர்த்தி. உளி படாதது விடங்கம் - அடியில் சதுரபீடம்.
அர்த்தநாரீஸ்வரர் மூலவர் - நின்ற திருமேனி. (இலிங்க வடிவமில்லை) பாதி புடவை - பாதி வேஷ்டி அலங்காரம்; இந்த கோலத்திலேயே (மூலவர்) காட்சி தருகிறார். முழு வடிவமும் வெள்ளைப் பாஷாணத்தால் ஆனது.
அர்த்தநாரீஸ்வரர் உற்சவத் திருமேனி மிக அற்புதமாகவுள்ளது.
ஆண்பக்கத்தில் (வலம்) கையில் தண்டாயுதம், பெண்பக்கத்தில் (இடம்) கை இடுப்பில் வைத்த அமைப்பு: மார்பில் பெண் பக்கத்தில் கொங்கை, திருவடிகளில் ஒன்றில் சிலம்பு , மற்றொன்றில் கழல், கண்களில் கூட ஆண், பெண் பாக வேறுபாடு ஒரு மயிரிழையில் அகலமாகவும் குறுகலாகவும் அமைந்த அழகுத் திருமேனி.
கேதாரகௌரி, மரகத லிங்கத்தைப் பூசித்து, இறைவனின் பாகத்தைப் பெற்றதாக வரலாறு சொல்லப்படுகிறது
அர்த்தநாரீஸ்வரர் திருவடியில் கீழ் குளிர்ந்த நீர் சுரக்கின்றது.
இது தேவ தீர்த்தம் எனப்படுகின்றது. இத்தீர்த்தம் நாடொறும் வரும் அன்பர்கட்கு வழங்கப்படுவதைப்போல, அமாவாசை நாள்களில் 3, 4 அண்டாக்களில் சேகரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது.
மூலவர் முன்னால் அந்த மரகத லிங்கமும்,
வேறு எங்கும் காணமுடியாத முக்கால் உடைய முனிவர் பிருங்கி மஹாரிஷியின் திருவுருவமானது அம்மையப்பனின் வலது பாதத்தின் அருகில் காணப்படுகிறது.
இத்தலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.
இத்தலம் அமைந்துள்ள மலையானது ஒரு புறம் பார்க்கும் பொழுது ஆணாக தோற்றமளிக்கிறது. வேறு இடத்தில் பெண் போல தோற்றம் அளிக்கிறது.
இத்தலத்தின் தீர்த்தம்- தேவதீர்த்தம் தலமரமாக இலுப்பை மரம் உள்ளது.
விறன்மிண்ட நாயனார் அவதாரத் தலம்.
திருஞானசம்பந்தரால் தேவாரம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
மலை சிவந்தநிறமாக இருப்பதால் செங்கோடு என்று பெயர் பெற்றது. தெய்வத்திருமலை, நாகமலை, உரசகிரி எனப் பல பெயர்களும் உள்ளது.
மலையேற உள்ள படிகளில் 60 ஆம் படி மிகச் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இங்கு நின்று சத்தியம் செய்தால் அது நீதி மன்றத்திலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நிலை இருந்ததாம்.
மேலமாட வீதியிலிருந்து பார்த்தால் இம்மலை பார்ப்பதற்கு நாகம் போன்றிருப்பதால் நாகாசலம் நாககிரி என்றும் பெயர் உண்டு.
இத்தலத்தில் முதலாம் இராசராசன், சுந்தரபாண்டியத் தேவர், மைசூர்கிருஷ்ணராஜ உடையார் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன.(ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது)
அதிசயம் 1: தொங்கும் கல் கிளிகள் கல் தேங்காய்
விமானத்தில் (மேற்கூறையில்) தாமரை பூவை சுற்றி எட்டு கிளிகள் எட்டு திக்கும் தலைகீழாக தாமரையின் மகரந்ததை சுவைப்பது கிளிகளுக்கு காவலாக 4 பாம்புகள் வெளியே எல்லாம் ஒரே கல்லினால்….
கண்கொள்ளா காட்சியாக அமைக்கப்பட்டுள்ளது.
இதன் நடுவே அமைந்துள்ள கல்லினால் ஆன தேங்காயை சுற்றினால் அது சுற்றும் வகையில் மிகவும் அழகிய கலைநுட்பத்துடனும், மிகுந்த அறிவுதிறனுடனும் அமைக்கப்பட்டுள்ளது.
அதிசயம் 2: துவாரபாலகர்கள் சிலையில் மாலைக்கும் மார்புக்கு இடையில் சிறு இடைவெளி
முருகன் சன்னதிக்கு செல்லும் வாயிலில் வேலவனை பாதுகாக்கும் இரு துவாரபாலகர்கள் சிலைகளை உற்று நோக்கினால் அதில் உள்ள கற்சிலை மணிகள் கண்கொள்ளா காட்சியாகும்.
அவர் அணிந்திருக்கும் மாலைக்கும் அவர் மார்பிற்கும் இடையில் ஒரு ஊசி நுழையும் அளவு இடம் இருக்கும்.
அதிசயம் 3: (கல்)சிலந்தியை கவ்வும் (கல்)தேள்
குறவர் நடனகலையும், சிலந்தியை தேள் கவ்வுவது போல் அமைந்துள்ள சிலை வடிவத்தையும் கலைக்கண்ணோட்டத்தோடு நோக்கின் அதன் பெருமையை அறியலாம்..
அதிசயம் 4: ஒற்றை கல்தூண்கள்
கோவிலின் வெளிப்பிரகாரத்தில் குதிரை மற்றும் யாளி மீது உள்ள வீரர்களைத் தாங்கிய சுமார்
30 ஒற்றைக் கற்று}ண்கள் சிற்ப வேலைப்பாடுமிக்கவை.
1500 ஆண்டுகளுக்கு முன்னர் எந்தவித தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் கல்லுக்கு உயிர் கொடுத்த
கல்லிலே கலைவண்ணம் கண்ட பெயர் தெரியாத தமிழர் சிற்பியின் அபார கைத்திறன் மெய்சிலிர்க்கவைக்கும் .
தமிழன் கட்டிடகலையின் அதிசயத்தையும் அறிவையும் மதி நுட்பத்தையும் திறமையையும்.
நாளை வேறொரு கோயில் அதிசயத்துடன் சந்திக்கும்வரை சிந்தித்திருப்போம்.
ஓம் நமசிவாய…
சுந்தர்ஜி
தமிழன் திமிரானவன்

No comments:
Post a Comment