Monday, December 15, 2025

தினம் ஒரு ஆலயம் - அதிசயம் 15. தாணுமாலயன் திருக்கோயில் சுசீந்திரம் கன்னியாகுமரி




தினம் ஒரு ஆலயம் - அதிசயம்
15. தாணுமாலயன் திருக்கோயில் சுசீந்திரம் கன்னியாகுமரி
தாணுமாலயன் கோயில். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ள இக்கோயில் தாணுமாலயன் கோயில் என அழைக்கப்படுகிறது.
தாணுமாலயன் கோயில் கட்டியது யார் என்று உறுதியாகக் கூற முடியவில்லை,
ஆனால் 8ம் நூற்றாண்டு வீரநாராயணனின் கல்வெட்டுகள் பழமையான கட்டுமானப் பணிகளைக் குறிக்கின்றன.
அதை வைத்து பார்க்கும்போது கிட்டதட்ட 1200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது என்று அனுமானிக்க முடிகிறது.
அத்திரி முனிவரும், அனுசுயாவும் இங்குள்ள தல விருட்சமான கொன்றை மரத்தினடியில் நின்று வேண்ட
மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்தனர்.
இதைக் குறிக்கும் விதமாக மும்மூர்த்திகளும் ஒரு முகமாய் தாணுமாலயன் என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளனர்.
சிவன் (தாணு), விஷ்ணு (மால்), பிரம்மா (அயன்) ஆகிய முப்பெருங்கடவுள்களும் சேர்ந்துள்ள இத்தல மூர்த்தி தாணுமாலயன் என அழைக்கப்படுகிறார்.
தாணுமாலயன் கோயில் அமைந்துள்ள இடம் சுசீந்திரம் என அழைக்கப்படுகிறது.
இன்று சுசீந்திரம் என்று அழைக்கப்படும் பகுதியே முன்னொரு காலத்தில் ஞானாரண்யம் என்று அழைக்கப்பட்டது.
அகலிகையால் ஏற்பட்ட தேவேந்திரனுடைய சாபம் நீங்க தேவேந்திரன் இத்தலத்துக்கு வந்து மும்மூர்த்திகளை ஒரே சமயத்தில் வழிபட்டு விமோசனம் பெற்ற தலம் இது.
சுசீ என்றால் தூய்மை என்று பொருள். இந்திரன் இங்கு தூய்மை பெற்றதால் சுசீந்திரம் என அழைக்கப்படலாயிற்று.
இந்திரன் வழிபட்ட ஈசன் : தாணுமாலய சுவாமியின் கருவறையில் அர்த்தஜாம பூஜைகளை, அர்ச்சகர்கள் யாரும் செய்வ தில்லை.
அதிசயம் 1:
சிற்பத்தின் ஒரு காதிலிருந்து மறு காது வரை மிக நுண்ணிய துளை அமைந்திருக்கும் அதிசயம்!
முருகன் சன்னதி மண்டபத்தில் உள்ள தூணில் அமைந்துள்ள தர்மராஜா சிற்பம், அதி அற்புதமான அழகுடனும், நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுடனும், ஆச்சரியமும் பிரமிப்பும் அடைய வைக்கும் நம் முன்னோர்களின் விஞ்ஞான தொழில்நுட்பத் திறனையும் விளக்குவதாக அமைகின்றது.
இச்சிற்பத்தில் நம்மை வியக்க வைக்கும் அம்சம் என்னவென்றால், ஒரு 0.5 மி.மீ. விட்டமுள்ள சிறிய குச்சியை ஒரு காதின் வழியே நுழைத்தால் அது மறு காது வழியாக வெளியே வருகின்றது.
இவ்வளவு மிகச் சிறிய துளையை, சிலையின் முக அகலத்திற்கு ( சுமார் ஒரு அடி) எந்த உபகரணத்தை கொண்டு அமைத்தார்கள் என்பது இன்றுவரை விடை கிடைக்காத கேள்வியாக உள்ளது.
அதிசயம் 2: சந்திரகாந்த கல்:
வசந்த மண்டபம், தெற்கு வெளிப்பிரகாரத்தைத் தொட்டு இருப்பது. இங்கு மேற்கூரையில் நவக்கிரகச் சிற்பங்கள் உள்ளன. இம்மண்டபம் 1835-ல் கட்டப்பட்டது.
இம்மண்டபத்தின் நடுவில் உள்ள சந்திரகாந்தக்கல்லில் செப்பு பஞ்சலோக படிமங்களை வைத்து குளிரூட்டப்படும் நிகழ்வு முந்தைய காலத்தில் நடந்தது.
அதிசயம் 3: பெண்சிலை விநாயகர்
பெண் விநாயகர்: கோயிலில் பெண் உருவில் அமைந்த விநாயகர் சிலை ஒன்று உள்ளது. இது மிகவும் அரிதான சிற்பங்களில் ஒன்றாகும்.
எங்கும் காணமுடியாத கணேசினி என்ற பெண்ணுருவில் அமைந்த பிள்ளையார். இது கண்ணுக்கோர் சிறந்த கலைவிருந்தாகும்.
அதிசயம் 4: சங்கீத தூண்கள் (அமுத இசை தூண்கள்):
.சுசீந்திரம் கோயிலில் குணசேகரமண்டபம் என்று முன்னால் அழைக்கப்பட்டு தற்போது அலங்கார மண்டபம் என்று அழைக்கப்படும் இடத்தில் தான் இசைத் தூண்கள் அமைந்துள்ளன.
மண்டபத்தின் வடக்குப் பகுதியில் 2 தொகுதித் தூண்களும் தெற்குப் பகுதியில் 2தொகுதித் தூண்களும் அமைந்துள்ளன .
வடக்குப் பகுதியிலிருக்கும் தொகுதித் தூணில் 24சிறிய தூண்கள் இருக்கும்.தெற்குப் பகுதியிலிருக்கும் தொகுதியில் 33சிறியதூண்கள் இருக்கும். இந்தத் தொகுதித் தூண்கள் அனைத்தும் ஒரே கல்லில் குடையப்பட்டவை என்ப து சிறப்பு.
அதோடு இதன் உருவாக்கத்தில் இசைக்கலைஞர்களின் பங்கும்உண்டு. ஏழுஸ்வரங்களின் அடிப்படையில் இந்த இசைத்தூண்கள் உருவாக்கப்பட்டிருக்கும்.
அதிசயம் 5: ஆயிரம் கால் மண்டபம்
1035 நுணுக்கமாக செதுக்கப்பட்ட தூண்களைக் கொண்ட நடன மண்டபமும் உள்ளது. இம்மண்டபத்து தூண்களில் ஒரே மாதிரியாக வடிவமைக்கப்பட்டுள்ள பாவை விளக்கு சிற்பங்கள் உள்ளன.
இப்பாவை விளக்கு சிற்பங்களில் தான் அந்த காலங்களில்,இரவு நேரங்களில் விளக்குகள் ஏற்ற பயன்படுத்தப்பட்டது.
அதிசயம் 6: சித்திர சபை 500க்கும் மேற்பட்ட சிலைகள்
வடக்கு பிரகாரமூலையில் இருப்பது சித்திர சபை. எட்டுதூண்கள் கொண்டது. எட்டிலும் அருமையான சிற்பங்கள் உள்ளன.
இம்மண்டபம் ஆரம்பத்தில் மரப்பணியால் ஆனது. 1835-ல் கல்லால் கட்டப்பட்டது.
செண்பகராமன் மண்டபம் இக்கோயிலுக்குப் பெருமை சேர்ப்பது. இது கைமுக்கு மண்டபம் எனப்படும். 33 மீ நீளம் 26மீ அகலம் உடையது.
36 தூண்கள் கொண்ட இம்மண்டபத்தில் 500-க்கு மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. இந்த மண்டப வேலை 1478-ல் முடிந்தது.
1200 ஆண்டுகளுக்கு முன்னர் எந்தவித தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் கல்லுக்கு உயிர் கொடுத்த
கல்லிலே கலைவண்ணம் கண்ட பெயர் தெரியாத தமிழர் சிற்பியின் அபார கைத்திறன் மெய்சிலிர்க்கவைக்கும் .
தமிழன் கட்டிடகலையின் அதிசயத்தையும் அறிவையும் மதி நுட்பத்தையும் திறமையையும்.
நாளை வேறொரு கோயில் அதிசயத்துடன் சந்திக்கும்வரை சிந்தித்திருப்போம்.
ஓம் நமசிவாய…
சுந்தர்ஜி
தமிழன் திமிரானவன்
புள்ளிவிவரங்களையும் விளம்பரங்களையும் காண்க
எல்லா உணர்ச்சிகளும்:
2

 

No comments:

Post a Comment