Saturday, December 13, 2025

தினம் ஒரு ஆலயம் - அதிசயம் 13. கைலாசநாதர் திருக்கோயில் காஞ்சிபுரம்

தினம் ஒரு ஆலயம் - அதிசயம்

13. கைலாசநாதர் திருக்கோயில் காஞ்சிபுரம்

தொண்டை நாட்டைச் சேர்நத திருநின்ற ஊரில் ஏழை அந்தணர்  பூசலார் மனதில் கட்டிய கோயிலுக்கு நிஜத்தில் வடிவம்  கொடுத்த மன்னன்
 
காஞ்சி கைலாசநாதர் கோயில் இராஜசிம்ம வர்ம பல்லவன் என்ற இரண்டாம் நரசிம்ம வர்ம மன்னனால் கி.பி.700-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.
 
கடற்கரை கலைக்கோயிலும் (அர்சுனன் தபசு) இவரால் கட்டப்பட்டதே.

இங்குள்ள கல்வெட்டுகளில், இக்கோயிலின் பெயர் “இராஜசிம்ம பல்லவேசுவரம்” என்றும், “இராஜசிம்மேசுவரம்” என்றும் குறிப்பிடப்படுகிறது.
 
கருவறையில் மூலவர் பதினாறு பட்டைகளுடன் லிங்கத்திருமேனியாக உள்ளார் 

தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பழங்கால கட்டிட கலை அதிசயம் என்பதால் இது தொல்லியல் துறை பராமறிப்பில் உள்ளதால் பரபரப்பின்றி விளம்பரம் ஆர்பாட்டம் இன்றி அதிசயத்தை தன்னுள் வைத்து அமைதியாக இருக்கிறது.

அதிசயம் 1: மணல் கல்
பல்லவர் காலத்திய கட்டடக் கலைதிறனுக்கு இக்கோயில் ஒர் உதாரணம் ஆகும்.  
SAND STONE என்று சொல்லப்படும் மண் கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ள திருக்கோவில் ஆகும்.
 
அதிசயம் 2: புனர்ஜனனி
கருவறையைச் சுற்றி அமைந்துள்ள குறுகிய திருச்சுற்று புனர்ஜனனி என்றழைக்கப்படுகிறது. 
அதன் உள் மற்றும் வெளி வாயில்கள் குறுகலாக இருந்து தரையில் படுத்தபடியே ஊர்ந்து சென்று மீளும்போது புனர்ஜென்மம் எடுத்த நினைவு மேலோங்கி நிற்கும்.

அதிசயம் 3: கருவறையைச் சுற்றிலும் 58 சிறு கோயில்கள் உள்ளன. வேறு எங்கும் கருவறையை சுற்றி இத்தனை சன்னதி கோயில்கள் கிடையாது.
சிவனின் சம்கார (அழிக்கும்) மற்றும் அனுக்கிரக (அருளும்) மூர்த்திகளின் சிற்பங்கள் இங்கு சிறப்பம்சமாகும்.

அதிசயம் 4: இராஜராஜ சோழனே வியந்த கோயில்
இராஜராஜ சோழன் இந்த கோயிலை பார்த்தே இதை மாதிரியாக வைத்தே தஞ்சை பெரிய கோயிலை கட்டினான்.

அதனால் இந்த கைலாசநாதர் கோயில் போலவேதான் தஞ்சை பெரிய கோயில் பெரிதாக இருக்கும்.

1300 ஆண்டுகளுக்கு முன்னர் எந்தவித தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் கல்லுக்கு உயிர் கொடுத்த கல்லிலே  கலைவண்ணம் கண்ட பெயர் தெரியாத தமிழர் சிற்பியின் அபார கைத்திறன் மெய்சிலிர்க்கவைக்கும் 
தமிழன் கட்டிடகலையின் அதிசயத்தையும் அறிவையும் மதி நுட்பத்தையும் திறமையையும். 
நாளை வேறொரு கோயில் அதிசயத்துடன் சந்திக்கும்வரை சிந்தித்திருப்போம்.

ஓம் நமசிவாய…
சுந்தர்ஜி
தமிழன் திமிரானவன்

 

No comments:

Post a Comment