Monday, April 4, 2016

Uthirakosanamangai-Ramanathapuram-2300 Years Old Town

Artefacts point to existence of trade centre
   The district heritage club’s collection of artefacts from two villages near Uthirakosamangai has thrown up possible evidence that a trade centre existed in the villages about 1,500 years ago and the Sangam Pandyas had traded with Romans and Chinese.


   Paediatrician K. Rajamohan  and school teacher V. Rajaguru, who led a team of heritage club members in field exploration at Kanathidal near Keezhasandai and Vella Maruchikatti between Uthirakosamangai and the coastal Thirupullani, said that the artefacts were collected from a two-km radius in the villages where a trade centre should have existed during the Sangam period.
   Displaying the artefacts, they told reporters here on Saturday that the two villages were located about 15 km from Theriruveli, where an important trading post between the Romans and Sangam Pandyas existed from circa 50 BCE to circa 500 CE and formed part of the trade corridor to Madurai.
   They have collected Roman Rouletted sherds, Chinese porcelain sherd, black and red ware, red ware, iron axe, iron ore, iron slags, potsherds with graffiti marks, spindle whorls, hop scotches, terracotta lamp, deer horns, rubbing stones, conches and corals from the two villages.
   Stating that the collection has thrown up strong evidence for the existence of the trade posting, they urged the Archaeological Survey of India (ASI) to take a full-fledged excavation and bring to fore the historic importance of the two villages.
   The findings of Roman rouletted sherds and Chinese porcelain clearly indicated that the people of the villages had traded with Romans and Chinese, Dr. Rajamohan said. The Chinese had trade links with Tamils during 300 BC to 100 AD and the Chinese during 1000 AD and 1200 AD, he said.
   The two villages should have existed about 1,500 years ago, he said adding the spindle whorls found in these villages were similar to those found in Azhagankulam and Theriruveli.
The deer horns, conches and corals could have been exported to other countries, he added.
   Commenting on the collection, eminent archaeologist V. Vedachalam said that the ASI could take up an extensive survey and explore the possibility for an excavation.


   உத்தரகோசமங்கை அருகே 2000 ஆண்டுகளுக்கு முந்தைய நகரம்: அகழாய்வு செய்யக் கோரிக்கை
   ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகே 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான சங்ககால நகரத்தை தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்யக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
   உத்தரகோசமங்கையில் இருந்து திருப்புல்லாணி செல்லும் வழியில் கீழச்சீத்தை கானத்திடல் என்ற பகுதியில் குட்டை தோண்டிய இடத் தில், ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மைய நிறுவனர்கள் வே.ராஜகுரு, டாக்டர் .ராஜமோகன், தொல்லியல் மற் றும் வரலாற்று பாதுகாப்பு மைய மாணவர்கள் முத்துக்குமார், ராபிட் ராஜ்குமார், விஜயகுமார், அழகேஸ்வரன், முரளிதரன், சக்திமுருகன், ரமேஷ்கண்ணன், முனியசாமி ஆகியோர் கள மேற்பரப்பாய்வு செய்தனர்.
   அப்போது, ரோமானிய ரௌ லெட்டட் ஓடுகள், சீன போர்சலின் ஓடுகள், கருப்பு சிவப்பு பானை ஓடுகள், சிறு இரும்புக்கோடரி, குறியீடு உள்ள பானை ஓடுகள், நெசவுத்தொழிலுக்குப் பயன்படுத் தப்படும் தக்களி, பாண்டி ஆட்டத் துக்குரிய சில்லுகள், சுடுமண் விளக்கு, மான் கொம்புகள், தேய்ப்புக் கற்கள், சங்குகள், பவளப்பாறைகள் ஆகியவற்றை கண்டுபிடித்தனர்.
   இதுகுறித்து வே.ராஜகுரு, .ராஜமோகன் ஆகியோர் ராம நாதபுரத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
   தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களில் மிகப் பழ மையானவர்கள் பாண்டியர்களே. பாண்டிய மன்னர்களின் ஆட்சிப் பகுதிகளில் ஒன்றாக ராமநாதபுரம் மாவட்டம் விளங்கியது. இந்த மாவட்டத்தில் அழகன்குளம், தேரிருவேலி ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகள் மூலம் இந்நகரங்கள் 2,500 ஆண்டுகளுக் கும் மேல் பழமையானவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
   அழகன்குளம் கி.மு. 500 முதல் கி.பி.1200 வரை வெளிநாடுகளுடன் வாணிபம் செய்து பிரபலமாக இருந்த துறைமுக நகரம் ஆகும். தேரிருவேலி வரலாற்றுக் காலமான கி.மு.300 முதல் கி.பி.300 வரை மக்கள் வாழ்ந்த ஊர் ஆகும்.
   கீழச்சீத்தை கானத்திடலில் கள மேற்பரப்பாய்வு செய்தபோது ரோமானிய ரௌலெட்டட் ஓடு கள், சீன போர்சலின் ஓடுகள் ஆகியவை கிடைத்துள்ளன. இதன் மூலம் இப்பகுதியில் இருந்து ரோமானியர், சீனர்களுடன் வணிகம் செய்திருப்பது உறுதியாகிறது.
   இங்கு நெசவுத் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் தக்களி, சிறிய அளவிலான இரும்புக்கோடரி, இரும்புத்தாதுக்கள், இரும்புக் கழிவுகள் கிடைத்துள்ளதால் இரும்பு உருக்கும் தொழில் இங்கு நடைபெற்று இருந்திருக்கும்.
   சங்குகள், பவளப்பாறைகள், மான் கொம்புகள் கிடைத்ததன் மூலம் இவற்றை இவ்வூரில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருப்பார்கள் என அறிய முடிகிறது. தமிழகத்தில் இருந்து மான் கொம்புகள் ஏற்றுமதி செய்யப்பட்டதை சங்கப்பாடல்கள் மூலம் அறியலாம்.
   கருப்பு சிவப்பு பானை ஓடுகள், சிவப்பு பானை ஓடுகள், பழுப்பு நிற பானை ஓடுகள் சிலவற்றில் குறியீடுகள் காணப்படுகின்றன. திரிசூலம், ஏணி குறியீடுகள் உள்ள ஓடுகள் கிடைத்துள்ளன. இது போன்ற குறியீடுகளில் இருந்தே தமிழ் பிராமி எழுத்துக்கள் தோன்றி யுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
   இங்கு கண்டெடுத்த பழம் பொருட்களைக் கொண்டு 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க காலத்தைச் சேர்ந்த நகரம் இருந் துள்ளதை அறிய முடிகிறது. மேலும் இது சங்க காலத்தில் பாண்டியர் களின் தலைநகரான மதுரைக்கு செல்லும் வணிகப்பாதையாக இருந்திருக்கலாம்.
   எனவே இப்பகுதியில் தொல் லியல் துறையினர் முழு அளவில் அகழாய்வு செய்து இவ்வூர் பற்றிய வரலாற்றுச் சிறப்பை அனைவரும் அறியச் செய்ய வேண்டும்.

   ராமநாதபுரம் அருகே தொல்பொருள்கள் கண்டெடுப்பு: தொல்லியல் துறை அகழாய்வு செய்ய ஆர்வலர்கள்கோரிக்கை

ராமநாதபுரம் அகழ்வாய்வில் இரண்டு ஊர்கள் கண்டுபிடிப்பு?


   இராமநாதபுரம் அருகே கீழச்சீத்தை என்ற ஊரில் பெருங்கற்கால மற்றும் சங்ககால மக்கள் குடியிருப்பு கண்டுபிடிப்பு.
-Proud to be an Tamilan

No comments:

Post a Comment