Sinnandimadai: 2,500-yr-old dolmen
found near Pollachi
Shows Burial Was Preferred
In South India
A 2,500-year-old slab cist
or dolmen was found at an excavation site near Pollachi recently .
Archaeologists said the finding gives an insight into the burial rituals
practised by Deccan people in the Megalithic Age. The slab cist also confirms
some burial rituals mentioned in ancient Tamil literature, they say .
Earlier this week, a team
of epigraphy students from PSG College of Arts and Science and their professor
S Ravi excavated a red rectangular slab cist stone, believed to contain iron,
from the Sinnandimadai excavation site. The area, which is eight kilometres
from Pollachi, had shot to fame when locals and archaeologists discovered an
ancient urn used to store remains of the dead. “From then on we have been
excavating this site with the permission of the Archaeological Survey of
India,“ said professor Ravi.
Archaeologists believe that
the stone is proof that burial was a more preferred manner to dispose of the
dead than cremation. “Our earliest literature and recent discoveries are
further proof that during the Iron Age or `Sangam Age' we preferred burying our
dead, while in north India the system of cremating the dead was more
preferred,“ said Ravi. “In fact, over the years we have learnt that the Tota
people, who lived in and around the area we call Pollachi now, followed rituals
similar to those of Egyptians.“
Archaeologists are also
focusing on discovering more of these rectangular tomb structures. “It was
after the Megalithic Age that the system of urns to store the remains of the
dead came into being,“ said Ravi. One such urn discovered from the exploration
site was donated by the local farmers and still stands in the PSG Arts and
Science College museum.
சின்னாண்டிமடை:-
சங்க காலத்து கல்திட்டை எனப்படும் கல்லறை வரலாற்றுச் சின்னங்கள் கண்டுபிடிப்பு
உடுமலை அருகே கல்வெட்டியல் படிப்பு மாணவர்களின் மேற்பரப்பு ஆய்வில், சங்க கால மக்களின் வாழ்வியலை உறுதிப்படுத்தும் பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டன.
உடுமலை சோமவாரப்பட்டி, கொங்கல்நகரம், கோட்டமங்கலம் ஆகிய பகுதிகளில், பல்வேறு வரலாற்று சின்னங்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகின்றன. பொள்ளாச்சியிலிருந்து தாராபுரம் செல்லும் வஞ்சிப்பெருவழியில், இத்தகைய கிராமங்கள் அமைந்துள்ளன.
சமீபத்தில், கோவை பி.எஸ்.ஜி., கல்வெட்டியல் பட்டய படிப்பு பொறுப்பாசிரியர் ரவி தலைமையில், மாணவர்கள், மேற்பரப்பாய்வு களப்பணி மேற்கொண்டனர்.
சோமவாரப்பட்டி கண்டியம்மன் கோவில்: இக்கோவில் முன்புறமுள்ள குளத்தில், சங்க கால மக்களுடைய பல்வேறு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. அகலமான வாயுடன் கூடிய சுடுமண் மண்பாண்டங்கள் இரண்டும், பச்சை நிற கல்மணிகள், உடைந்த சங்கு வளையலின் ஒரு பகுதியும், வட்ட சுடுமண் சில்லும், சாணை பிடிக்கப்பட்டு தேய்ந்த கல்லின் எச்சம், சிதிலமடைந்த எடைக்கல், கருப்பு மற்றும் சிவப்பு மண்பாண்ட வண்ணப்பூச்சு மற்றும் வளைகோடுடைய உடைந்த ஓடுகளும் சேகரிக்கப்பட்டன.
இவையனைத்தும், சங்க கால மக்கள் பயன்படுத்திய தொல்லியல் எச்சங்கள் என வரலாற்று ஆய்வாளர்களால், உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சோமவாரப்பட்டி கிராமம் இடைக்காலத்தில், சிறப்பு மிக்கதாக இருந்துள்ளதுடன், மன்னரின் பெயரில், அமரபுஜங்கநல்லுார் என அழைக்கப்பட்டுள்ளது. இத்தகவல் அருகிலுள்ள சிவன் கோவில் கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது.
கோட்டமங்கலம்: கோட்டமங்கலம் கிராமத்திலுள்ள, இரண்டு கல்திட்டைகளில் மேலாய்வு இக்குழுவினரால் நடத்தப்பட்டது. பெரும்பாலான கல்திட்டைகளில், ஒரு இடுதுளை மட்டுமே இருக்கும். கோட்டமங்கலம் கல்திட்டைகளில், இரண்டு, மூன்று இடுதுளைகள் கிழக்கு நோக்கி உள்ளது.
கூட்டு உழைப்பினால்,
20 கி.மீ., தள்ளியுள்ள மலைப்பகுதியிலிருந்து பெரிய கற்களை கொண்டு வந்து, கல்திட்டை எனப்படும் கல்லறைகளை உருவாக்கியுள்ளனர். இதன் காலம், கி.மு.,
1,500 என கொள்ளலாம். ஒரே செவ்வக வடிவ பலகை கற்களை உருவாக்குவதிலும், பலகை கற்கள் கீழே விழுந்து விடாமல் இருக்க ஸ்வஸ்தி வடிவம் மற்றும் தாங்கு கற்களை அமைத்துள்ளது அப்போதே தொழில்நுட்பத்தில், சிறப்பு பெற்றிருந்தனர் என தெரியவருகிறது.
மலையாண்டிப்பட்டணம்: இதே போல், சீலக்காம்பட்டி மலையாண்டிபட்டணம் கிராமத்தில், சின்னாண்டிமடை மற்றும் மேற்கு தோட்டம் எனப்படும் இடத்தில், எண்ணற்ற கல்பதுக்கைகள் கண்டறியப்பட்டன. வக்கீல் பரமசிவம் என்பவரது தோட்டத்திலும் இத்தகைய பதுக்கைகள் உள்ளன. இவை
2,500 ஆண்டுகள் பழமையுடையதாகும். அண்மையில் இப்பகுதியில், முதுமக்கள் தாழி கண்டறியப்பட்டது. தொடர் ஆய்வுகள் மூலம் இப்பகுதி பழங்கால மக்களின் சமூக பண்பாட்டு செய்திகள் பற்றிய முடிவுகள் வெளியிடப்படும் என ஆய்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
-Proud to be an Tamilan
No comments:
Post a Comment