During the chola period, Perumukkal was
known as "Perumukkilaana Gangai Konda Nalloor" (Tamil: பெருமுக்கிலான கங்கை கொண்ட நல்லூர்)
Perumukkal is located 12
kilometres east of Tindivanam.
Perumukkal village has 6000
years old heritage. The historical importance of the village is the presence of
4000 B.C.E. Petroglyph, 7th century Mukthialeeswarar Temple, ruined
Kamatchiamman temple and a Dargah.
Petroglyph
On the top of the hill,
petroglyphs are found in a cave namely, Sita Cave. Local people believe Sita
lived in this cave. This is the only petroglyph found in Tamil Nadu and also it
is one among the four in India. These petroglyphs are similar to the Egyptian
Hieroglyphics letters and hence it is dated to 4000 B.C. But some researchers
dated to megalithic.
Mukthialeeswarar Temple
This temple is located atop
of the perumukkal hillock. which had originally been built in brick, was
converted into a stone temple during the period of Vikrama Chola (1118-35 CE).
The deity of the temple is known as Tiruvanmikai Eswaramudayar as well as
Perumukkal Udayar in Tamil (பெருமுக்கல் உடையார்)
and Mukthiyaleeswarar in Sanskrit.The donations made by the Chola, Pandya,
Sambuvaraya, Vijayanagara rulers have been recorded in more than 60
inscriptions found on the temple walls and vatteluthu inscription dating back
to 7th century C.E.
பெருமுக்கல் (பெருமுக்கிலான கங்கை கொண்ட நல்லூர்)
வரலாற்று காலத்திற்கு முந்தைய பாறைக் கீறல்கள் (கற்பாறைச் செதுக்குவேலை)
பெருமுக்கல் என்பது தமிழ்நாடு, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஓர் சிற்றூர் ஆகும். திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இங்குள்ள குன்று வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். இயற்கை வளமும் அழகியல் சூழலும் நிறைந்த இவ்வூரின் முக்கிய தொழில் விவசாயம்.
தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் பேருந்துச் சாலையில் இக்குன்று அமைந்துள்ளது. புதுவையிலிருந்து கிளியனூர் வழியாகவும் இவ்விடத்திற்குச் செல்லலாம்.
பாறைக் கீறல் எழுத்துகள்
இங்குள்ள பாறைக்குகையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பான பாறைக் கீறல் எழுத்துகள் காணப்பெறுகின்றன. அவை உருவங்களாக இல்லாமல் குறியீடுகளாக அமைந்துள்ளன. இவற்றை ஆசிவக சமயத்தின் குறியீடுகள் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். பறவையின் நகத்தினைக் கொண்டு ஒரு இளக்கமான பொருளில் கீறல் ஏற்படுத்தினால் எவ்வாறு அந்த வடு அமையுமோ அதனை ஒத்த வடிவம் கொண்ட குறியீடு இது. ஏர்க்கலப்பை கொண்டு நிலத்தில் உழும் போது ஏற்படும் சால் உழவின் வடிவையும் ஒத்தது. இருபுறப் பட்டைகளிலும் வழவழப்பும் ஆழ்ந்த கூர்முனைப் பள்ளம் கீறல் தெளிவாகவும் அமைந்திருக்கும். ஆசீவகத் துறவு நிலைப் புகும் மாணவர்கள் உயிர்நூல் அறியும் முகத்தான் குறிஞ்சி, முல்லை, மருதம் எனும் மூவகை நிலங்களிலும் பயணிக்கும்போது அவர்தம் ஆய்வுக்காக எவ்விடம் செம்மையான நடுவமாக அமையுமோ, அங்குள்ள கற்பாறைகளில் இவ்வடிவம் செதுக்கப்பட்டது. சிற்சில இடங்களில் புள்நகக் கீற்று இரண்டு அல்லது மூன்றாகவும், முக்கோணம் சேர்த்தும் வரையப்படுவதுண்டு. இத்தகைய கற்பாறைகளிலிருந்து சேய்மைத்தான உயிரியக்கங்களையும் ஆயும் ஏந்து இருந்ததாலே இவ்விடங்கள் இக்குறியீட்டால் அடையாளப்படுத்தப்பட்டன.
சோழர் காலக் கோயில்கள்
பெருமுக்கலில் குன்றின்மீது ஒரு கோயிலும் அடிவாரத்தில் மற்றொரு கோயிலும் உள்ளது. குன்றின்மீது உள்ள கோயில் “முதலில் செங்கல்கோயிலாக இருந்து, விக்கிரம சோழன் காலத்தில் (கி.பி.
1118-35) கற்கோயிலாக மாற்றப்பட்டது. இக்கோயிலின் இறைவன் பெயர் தமிழில் திருவான்மிகை ஈஸ்வரமுடையார் என்றும், பெருமுக்கல் உடையார் என்றும், வடமொழியில்
"முக்கயாசலேஸ்வரர்' என்றும் வழங்கப்படுகிறது. பாறைகளில்
60-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் சோழ, பாண்டிய, சம்புவரைய, விசயநகரமன்னர்கள், கோயிலுக்கு வழங்கிய நன்கொடைகளைக் குறிக்கின்றன என அடையாளம் காட்டப்பட்டுள்ளது.
சோழர் காலத்தில் மிக சிறப்பான ஊர். இந்த ஊர்
6000 வருடம் பழமையானது, இந்த ஓவியம் வரையப்பட்டு 6000 ஆம் ஆண்டுகள் ஆகிறது.
அங்கு இருக்கும் கோவில் முதிலேஸ்வரர் கோவில் 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
No comments:
Post a Comment