Adalur - On a dolmen hunt
OFF BEAT Gowtham M. is an
exciting combo of archaeologist, anthropologist and adventurer. He tells SOMA
BASU he loves to wander among ruins to reconnect with history
His friends have nicknamed
him Indiana Jones. His parents think he is crazy. But his uncle thinks he is
doing right by following his heart. MBA graduate Gowtham M defies stereotypical
expectations and puzzles over remnants of ancient history.
Such has been his passion
as a ‘paranormal hunter’ that even as a child he would sneak out of the house
in darkness to simply star gaze. His ancestral house and estate in Adalur,
Dindigul District, provided him the right setting as he enjoyed sleeping out in
the open counting the stars. “Though I was barely in my teens, I never felt scared
because that something-waiting-to-happen feeling always beckoned me,” says the
21-year-old.
It was during one of his
stays at the estate that he spotted at some distance ordinary little stones
forming part of an extraordinary alignment. It immediately attracted him and he
started reading literature on megalithic sites.
On a mission
“The more I read about such
sites in India,” says Gowtham, “I realised the register is inadequate and
incomplete.” This was enough to send him off on a search for lost dolmens just
a few kilometres away in the hills below his village. “I was on a ‘re-discover’
mission, as these tombs and stones have been known to the villagers nearby for
generations.”
Gowtham walked on a forest
path to see and learn more about the site and its magnificent structures and
the people who built them. On that first visit he stayed the entire day, amazed
by the remarkable sight. “I was able to reach one dolmen but could see a few
more scattered around within a compound bordered by a stone wall.”
The enchanting image of the
sun setting over the dolmen remains in his mind and he has returned to the site
innumerable times, mostly alone and sometimes with like-minded friends who love
to trek and are interested in history.
Says Gowtham, “From
whatever I have studied I realise an appropriate description of the current
state of dolmens is very essential. They need to be described exactly in terms
of length, height and orientation. Their exact position needs to be marked.”
Gowtham has also approached
several local historians, retired archaeologists and local experts.
“There is a general
impression that all megalithic monuments have been discovered and described.
Most people have stopped taking interest in the pre-history of their commune.
Look at this spot, neither is it known nor is there any care, attention or
respect for the earliest burial places.” Gowtham wants to scout the area but is
aware that there are many rules regulating excavation. Worried that such
precious sites may disappear without a record, he has started locating the
dolmens in the Adalur region. Many are inaccessible in the woods, he says.
But still he regularly
visits them, takes photographs and provides a basic description before sending
the information to experts. An amateur enthusiast, Gowtham believes the
megalithic site at Adalur is a powerful place and dreams of starting a science
expedition club to get more people to such sites and make them aware of
history. “In the wild and overgrown hills here, traces of our megalithic
culture still remain, indicating human presence in the landscape centuries ago.
It will be unfortunate if it is not taken note of,” he pleads. “Carbon dating
of such sites in Tamil Nadu is a must.”
Gowtham rues the fact that,
while dolmens in other countries are well protected, in India they remain in a
state of neglect. He is obsessed with the idea of finding more but feels he
lacks proper guidance and a mentor. “My interest in dolmens will not wane,” he
says, “but I do not know whom to approach for further knowledge and guidance
and what we could do to save these structures.”
Dolmens are like stone
tables in appearance and are also known as portal graves as their entrance
leads to underground burial chambers. Dolmens are known to exist all over the
world from Japan and India to Europe, Russia and North Africa. While some of
the most important and famous Dolmens are found in Ireland, the world’s largest
colony of dolmens is in Korea numbering 35,000. In India, the presence of
dolmens is recorded in Kerala and Maharashtra
புதைந்து கிடக்கும் தமிழர் வரலாறு
உலகின் மனித குலத்தில்முன் தோன்றிய மூத்த பெருங்குடி மக்கள் தமிழர்கள் தான்” என்று வரலாறு கூறுகிறது. பூமிக்கு அடியில் புதைந்து கிடக்கும் தமிழர் வரலாறு அவ்வப்போது வெளிப்பட்டு அக்கூற்றை மெய்ப்பிக்கிறது.
சங்க கால ஈமக்காடுகள் குறித்த ஒலிச்சித்திரம் ஒன்றைத் தயாரித்து வரும் மதுரை அகில இந்திய வானொலி நிலையம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கல்பதுக்கைகள் (ஈமக்கல்லறை) குறித்த ஆய்வில் இறங்கியது. இம்முயற்சிக்கு உறுதுணையாக, தானம் அறக்கட்டளை மேம்பாட்டிற்கான சுற்றுலா அணியின் திட்டத்தலைவர் பாரதி, வரலாற்றுப் பேராசிரியர் வெங்கட்ராமன், தொல்லியல் அறிஞர்வேதாசலம், சித்தர்கள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வரும் கௌதம சித்தார்த், தொல்லியல் ஆர்வலர் இரா.சிவக்குமார் ஆகியோர் இணைந்துள்ளனர்.
மதுரைக்கு அருகே மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டஈமக்கல்லறைகள் இந்த ஆய்வுக்குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெருங்கற்காலத்தைச் சேர்ந்த இக்கல்லறைகள் அனைத்தும் நமது முன்னோர்களின் “நீத்தார் வழிபாட்டு” முறையை உலகிற்குப் பறைசாற்றுகின்றன. சங்ககாலத்
திற்கு முற்பட்ட இனக்குழுக் காலத்தில் வாழ்ந்த மக்களின் நம்பிக்கையை இக்கல்லறைகள் வெளிக்காட்டுகின்றன. உலகம் முழுவதும் காணப்படும் கல்பதுக்கைகள் மற்றும் கல்திட்டைகளின் வடிவம் இங்கு நிறைந்துள்ளன. மதுரை வானொலி நிலைய நிகழ்ச்சி நிர்வாகியும், கல்பதுக்கைகள் தொடர்பான ஆய்வாளருமான இராஜராமன், “சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ள நெடுநிலை நடுகல், குத்துக்கல் நடுகல், கற்குவை போன்ற சில வடிவங்களும் இவ்விடத்தில் நிறைந்து காணப்படுகின்றன ’’
என்கிறார்.
தேனி மாவட்டம் வருச நாட்டிற்கு அருகிலுள்ள வேம்பூலி, கொடைக்கானல் மலைப் பகுதியிலுள்ள தாண்டிக்குடி, ஆடலூர், பண்ணைக்காடு ஆகியபகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு பல்வேறு புதிய செய்திகளை இக்குழு வெளிக் கொணர்ந்துள்ளது. அந்த ஆய்வின் தொடர்ச்சியாக மதுரைக்கு அருகில் அமைந்துள்ள நரசிங்கம்பட்டி பெருமாள் மலையின் அடிவாரத்தில் அடர்ந்த முட்புதர்களைக் கொண்டுள்ள இந்தஈமக்காட்டில் எங்கு திரும்பினாலும் கற்களாகவும் கற்குவியலாகவுமே தென்படுகின்றன.
மரம், மலை, ஆறுகளை வழிபடுவதற்கு முன்பாக பண்டைய மாந்தர்கள் இறந்துவிட்ட தங்களின் முன்னோர்களை வழிபட்டனர். உடல்களை எரித்த பின்பு மீதமிருக்கும் எலும்புகளையும், இறந்தோர் பயன்படுத்திய பொருட்களையும் ஓரிடத்தில் அவர்களின் நினைவாகப் புதைத்தனர். அவ்விடத்தை அடையாளம் கொள்வதற்காக செதுக்கிய பாறைகளைக் கொண்டு கல்லறைகளை ஏற்படுத்தினர். அவையே கல்திட்டைகள், கல்பதுக்கைகள் என்று அழைக்கப்பட்டன. இறந்து போன நமது முன்னோர்களை வணங்குகின்ற மரபு இன்றளவும் தொடர்ந்து நீடித்து வருகிறது. தை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் இறந்து போன முன்னோர்களை நினைத்து ஆறுகளில் குளித்து வருவது இந்த நம்பிக்கையின் தொடர்ச்சி எனக் கொள்ளலாம்.
‘‘கோவில்களை அமைப்பது மற்றும் வழிபடுவதற்கான ஆகமமுறைகள் அனைத்தும் பண்டைய முன்னோர் வழிபாட்டு முறையிலிருந்து தோன்றியிருக்க வேண்டும். தற்போதைய கடவுள் வழிபாட்டிற்கான அத்தனை கூறுகளும் பண்டைய முன்னோர் வழிபாட்டு முறையில் புதைந்திருக்கிறது.” என்கிறார் இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள வரலாற்றுப் பேராசிரியர்இரா.வெங்கட்ராமன்.
இறந்து போன நம் முன்னோர்களின் ஆன்மா இருப்பவர்களை வழி நடத்துகிறது என்ற நம்பிக்கையின் தொடர்ச்சி தான் மூத்தோர் வழிபாடு. நுண் கற்காலத்தில் இறந்தவர்களைப் புதைத்து விட்டுக் கற்களைக் கொண்டு சிறிய மேடு ஒன்றை உருவாக்கினர். இது கற்குவை என்றழைக்கப்பட்டது. பெருங்கற்காலத்தில் மலைப்பகுதியில்வாழ்ந்த மக்கள் பாறைகளிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட கற்களைக் கொண்டு கல்திட்டைகளை அமைத்தனர். சமவெளியில் வாழ்ந்த மக்கள் தரைக்குக் கீழேகுழி தோண்டி அதற்குள் கற்பலகைகளை இடது, வலது பக்கங்களில் செருகி தரையிலும் பதித்தனர். பிறகு மேலே தொப்பிக்கல் அல்லது மூடுகல் என்றழைக்கப்படுகின்ற கல்லைக் கொண்டு அவ்வறையை மூடினர்.
இக்கல்லறைக்கு அருகிலேயே சிறியதாக ஓர் அறையை அமைத்து அதற்குள் இறந்தவர் பயன்படுத்திய பொருட்களைப் புதைத்தனர். இறந்தவர்களிடம் தாங்கள் விடுக்கும் வேண்டுகோள் கேட்கும் வகையில் அறையின் கிழக்குப் புறமாக “பானை ஓட்டை” ஒன்றினையும் அமைத்தனர்.
ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பிரிட்டன்,கொரியா, ஸ்பெயின், போர்ச்சுக்கல், இத்தாலிமற்றும் அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில்எல்லாம் ஆங்காங்கே பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன இவற்றின் காலம்கி.மு.4 ஆயிரத்திலிருந்து கி.மு.3 ஆயிரம் வரைஎனத் தொல்லியலாளர்களால் வரையறை செய்யப்பட்டுள்ளது. இக்காலக்கட்டத்தை பெருங்கற்காலப் பண்பாடு என்று தமிழிலும் “மெகாலித்திக்பீரியட்” என்று ஆங்கிலத்திலும் அழைக்கின்றனர். ஏறக்குறைய இதே காலக்கட்டங்களில்உருவாக்கப்பட்ட கல்பதுக்கைகள், கேரளம்,தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறுமாநிலங்களில் காணப்படுகின்றன. ஈமச்சின்னங்கள் குறித்த கட்டமைப்பு உலகம் முழுவதும் ஒரே மாதிரியாகப் பின்பற்றப்பட்டுள்ளது வியப்புக்குரியதாக உள்ளது என்று தொல்லியல்அறிஞர் வேதாசலம் கூறுகிறார்.
ஒரிடத்திலிருந்து புலம் பெயர்ந்த மக்கள் கூட்டம் பிரிந்து பிரிந்து ஆங்காங்கே வாழத் தொடங்கிய போது தாங்கள் பின்பற்றிய பழக்க வழக்கங்களை அப்படியே கடைப்பிடிக்கத் தொடங்கியிருக்கக்கூடும் என்பது ஒரு சாரார் கூற்று. மற்றொரு சாரார், கல்பதுக்கைகளை ஒரே வடிவமைப்புடன் செய்யக்கூடிய கற்கலைஞர்கள் ஒரிடத்திலிருந்து பிரிந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றிருக்கக் கூடும் என்றும், அவர்களால் தான் உலகம் முழுவதும் ஒரே மாதிரியான அமைப்பு தற்போது காணக்கிடைக்கிறது என்றும் கருதுகின்றனர்.
கல்பதுக்கைகளும் அன்றைய கால மனிதர்களால் பின்பற்றப்பட்ட சடங்குகளும் நம்பிக்கைகளும் இன்றைய வழக்கத்தின் தொடக்க நிலையாக அடையாளப்படுத்த முடிகிறது. பல்வேறு சமயங்களில் பின்பற்றப்படுகிற மூத்தோர் வழிபாடு இதனை உறுதி செய்கிறது. மேலும் முன்னோர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் திதி என்ற பெயரிலும், திவசம் என்ற பெயரிலும் பித்ருக்களை வணங்கி வருவது பண்பாட்டு வடிவத்தின் எச்சம். இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்களால் வழிபடப் பெற்ற பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் இன்றைக்குச் சிதைக்கப்பட்டு அவல நிலைக்கு உள்ளாகி வருகின்றன.
“யுனெஸ்கோவின் மரபுப் பெருமைக்குரிய இடங்களாக இவற்றை அறிவிக்கச் செய்ய நாங்கள் எடுத்துள்ள முயற்சிக்கு தமிழக அரசும், இந்திய நடுவணரசும் துணை நிற்குமானால் நமது தொன்மையைப் பாதுகாக்க முடியும். இம்முயற்சிக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் ’’
என்கிறார் இராஜாராமன்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததொன்மையான மரபினராகிய சங்கத் தமிழர்களின் வாழ்வியல் கூறுகளும் தொன்மங்களும் கல்பதுக்கைகளாக இன்றும் திகழ்கின்றன. சங்க காலத்திற்கு முன்னர் தமிழர்கள் மேற்கொண்ட வாழ்க்கை முறைகள் மரபு நிலையில் காட்சியளிக்கின்றன. நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இடங்களைக் கூட அரிய காலப் பெட்டகமாகக் கருதி மேலை நாடுகள் போற்றிப் பாதுகாத்து வருகின்றன. ஆனால் நான்காயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தொன்மைக்குரிய தமிழரின் வரலாற்றுச் சின்னங்கள் இடிக்கப்பட்டு வீட்டுமனைகளாக மாறி வருவது காலத்தின் கொடுமை. புதைகாட்டில் மறைந்திருக்கும் தமிழருடைய நாகரிகத்தின் அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டும்.
எந்த அடையாளத்தை வைத்து தமிழ்க்குடி தான் மூத்த குடி என்று சொல்ல முடியும்? இது போன்ற தொல்லியல் சின்னங்களைப் பாதுகாப்பதால் மட்டுமே அது சாத்தியப்படும் என்பது இந்த ஆய்வாளர்களின் வாதம்.
இது சம்பந்தமாக, மதுரை அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சி நிர்வாகியும் கல்பதுக்கைகள் தொடர்பான ஆய்வாளருமான திரு.இராஜாராமன் அவர்களிடம் உரையாடினோம்.
ப.சு.கா : ஒலிச்சித்திரத்தின் வாயிலாகத் தொல்லியல் செய்திகளை வெளிக்கொண்டு வருவதின் நோக்கம் என்ன?
‘‘இது ஆவணத்திற்கான நிகழ்ச்சி. ஒவ்வொரு வருடமும் அகில இந்திய வானொலி நிலையத்திலிருந்து
Program Software Fund ஒதுக்குகிறார்கள். இதன் அடிப்படையில் சிறப்பு நிகழ்ச்சியாக 8வகையான தலைப்பை உறுதி செய்து அதில் மிக முக்கியமான தலைப்பாக மனிதருடைய பண்பாடு மற்றும் வரலாறு குறித்த பதிவுகளை ஆவணப்படுத்துகிறோம். அதன் அடிப்படையில் தான் இந்தப் பதிவுகளை ஆவணமாகத் தயாரித்து வருகிறோம்
-Proud to be an Tamilan
Thanks for post about "Adalur"
ReplyDelete