"Dhayam" Game were found in
Me-so-American Civilization. - Patolli
“Patolli” the oldest game
in mesoamerica played by the Mexica people
The Tamils and all the
tribes of Meso-America, from Mexico to Panama, played the same board game
Mayan Language
Language is one of the
major keys to determining the movement and migration of races. Two-thirds of
all the aboriginal regional names of Mexico are either variations of the name
of Lanka or Tamil names of West Indian regions. This is a major key to the
understanding of their ancient Sri Lankan origins which, with southern Tamil
India, extended much further south, now since sunk hundreds of thousands of
years ago.When speaking of their origins, the Mayans (like the Hopis) had
several names for their land: Shilanka(Xilanca) - an ancient name of Ceylon
(Zeilan-Ka) Shikalanka (Xicalanca) - Ceylon. In Tamil, Shikalam.
A Mayan culture hero was
Ishbalanka (Xbalanca) meaning in Tamil, "Shiva of Lanka" who was
supposed to have made the footprint on top of Adam's Peak in Sri Lanka;
modernly, in line with the prevailing Buddhist culture, it is known as
(Gautama) ‘Buddha’s footprint.’
Palenque, the ancient
capital of Guatamala, Palenke (Palenque) derives from the Tamil Pal-Lanka,
meaning "Protectorate of Lanka." Guatemala (the main habitat of the
Mayans) may derive from Gautemala, meaning "A Subsidiary Land of Gautama
Buddha."
Ceren was a name of Ceylon,
some Mayan ruins in El Salvador are called Ceren. Mayon was one of the names of
Ceylon's cult religions, still existing among a few aboriginals living on the
island.
Mayan Origins in Ancient
Southern India
If the Mayans have much in
common with the Egyptians, then they must share a common origin. The Egyptians
come from Southern India
தாயம் எனப்படுவது பண்டைய காலத்திலிருந்து இன்று வரை இந்தியாவில் பரவலாக ஆடப்படும் ஒரு விளையாட்டாகும். இவ்விளையாட்டை இரண்டு முதல் நான்கு பேர் வரை தரையிலோ மேடை மீது வைத்தோ விளையாடலாம்.
வரலாறு
தாய விளையாட்டு மிகப் பழையதான விளையாட்டாதலால் முதலில் யார் கண்டுபிடித்தார்கள் என்னும் விவரம் தெரியாது. இருப்பினும் இந்தியா வரலாற்றில் குறிப்புகள் காணப்படுகின்றன. சூதாட்டம், சொக்கட்டான், சோழி விளையாட்டு போன்றவை தமிழ் குறிப்பெயர்களாகும்.
மாபாரதத்தில் பாண்டவ மன்னர்கள் நாட்டையும், பாஞ்சலியையும் பணையமாக்கிய சகுனியின் வஞ்சக விளையாட்டகவும்,
நளவெண்பாவில் நளன் கலியின் மூலம் புட்கரனால் தோற்கடிக்கப்பட்டு நாட்டை இழந்ததாகவும் குறிப்புகள் உள்ளன.
மேலும் அண்மைய ஆராய்ச்சிகளின் மூலம் மெக்ஸிகோவில் வாழ்ந்த மாயன்கள் இவ்விளையட்டை விளையாண்ட குகைச்சித்திரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.
தாயக் கட்டை
பொதுவாக தாயக் கட்டைகள் மரத்திலோ அல்லது வெண்கலம் போன்ற உலோகத்திலோ செய்யப்பட்டிருக்கும். மேலும் தாயக் கட்டைகள் நான்கு முகங்களைக் கொண்டிருக்கும். சில வகை தாயக் கட்டைகள் ஆறு முகங்களைக் கூடக் கொண்டிருக்கும். சில பகுதிகளில் குறிப்பாக
7x7 தாயக்கட்ட விளையாட்டில் புளியங்கொட்டைகளை உருட்டி விளையாடுவர். நான்கு முத்துக்களை ஒரு பக்கம் வெண்ணிறமாகும்படி பாறையில் தேய்த்து விடுவர். அவற்றில் ஒரு முத்தில் மட்டும் மறுபுறம் அரைகுறையாகத் தேய்க்கப்பட்டிருக்கும். பின்பு இவற்றை ஒரு தேங்காய்ச் சிரட்டையில் போட்டு உருட்டிவிடுவர். ஒன்று அல்லது இரண்டு முத்துக்கள் மட்டும் வெண்புறம் காட்டி விழுந்தால் விளையாடுபவர் அத்தனை இலக்கங்கள் நகர்த்த வேண்டும். மூன்று முத்துக்கள் வெண்புறம் காட்டி நான்காவது கருநிறம் காட்டினால் மூன்று இலக்கங்களும் நான்காவது அரைகுறை வெண்ணிறம் கொண்டிருந்தால் நான்கு இலக்கங்களும் நகர்த்தலாம். எல்லா முத்துக்களும் வெண்ணிறம் காட்டினால் ஆறு இலக்கங்களும் கருநிறம் காட்டினால் எட்டு இலக்கங்களும் கிடைக்கும். மீண்டும் ஒருமுறை உருட்டும் வாய்ப்பும் கிடைக்கும்.
நான்முக தாயக் கட்டை
நான்முக தாயக் கட்டையின் மூன்று பக்கங்களில்
(1), (2) மற்றும் (3) புள்ளிகள் இருக்கும். ஒரு பக்கத்தில் புள்ளி ஏதும் இருக்காது (0). இரு நான்முக தாயக் கட்டைகளை உருட்டினால் 1, 2, 3, 4, 5, 6, 12 (0,0) ஆகிய எண்கள் விழும்.
1, 5, 6, 12 எண்களை சிறப்பாகக் கருதி மறுமுறை தாயக் கட்டையை உருட்டுவது வழக்கம். இவ்வெண்கள் அடுத்தடுத்து மாறி மாறி விழுந்து கொண்டிருந்தால் அதை விருத்தம் என அழைப்பதுண்டு.
அறுமுக தாயக் கட்டை
அறுமுக தாயக் கட்டையின் எல்லாப் பக்கங்களிலும் புள்ளிகள் 1,
2, 3, 4, 5, 6 என பொறிக்கப்பட்டிருக்கும். இரு அறுமுக தாயக் கட்டைகளை உருட்டினால் 2,
3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ஆகிய எண்கள் விழும்.
.....
1949இல் கோர்டன் எக்ஹோல்ம்
(Gorden Ekholm) மற்றும் சமன் லால் (Chaman Lal) ஆகிய இரண்டு அற்ஞர்கள் இந்திய கலாச்சாரத்தை மாயன், அஸ்டெக், இன்கா மற்றும் வட அமெரிக்க கலாச்சாரத்தோடு ஒப்பிட்டு பல ஆய்வுகளைத் தொடங்கினர். அவர்களின் ஆய்வில் இந்த அனைத்து நாகரீகத்தினருடைய கால கணக்கீடு, வழிபாட்டுக் கடவுள்கள் மற்றும் வாழ்வியல் முறைகள் இந்திய நாகரீகத்தோடு தொடர்புடையதாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய கலாச்சாரம் அமெரிக்காவில் பரவியிருந்தமைக்கு பல சான்றுகள் கிடைத்தது (தாமரை மலர்களில் கடவுள், பாம்பு வடிவில் கடவுள், பாதி மீன் உறுவில் கடவுள் என பல ஓவியங்களும், சிற்பங்களும் இதில் அடங்கும்). மேலும் தென்னிந்தியாவில் பச்சிஸி (தாயம்) எனும் விளையாட்டு மெக்ஸிகோவில் பட்டோலி என்ற பெயரிலும் பர்சேசி என்ற பெயரிலும் பண்டைய காலத்திலேயே இருந்தது.
மெக்ஸிகன் ஆர்க்கியாலஜி என்னும் புத்தகத்தை எழுதிய ராமோன் மெனா என்னும் அறிஞர், நஹுஅல், சாபொடெகா மற்றும் மாயன் கலாச்சார மொழிகள் இந்தியாவில் இருந்து உருவானது என்று தம்முடைய மொழி ஆய்வின் முடிவில் குறிப்பிட்டுள்ளார்.
தாயம் பண்டைத்தமிழர்களின் ஒரு விளையாட்டு. தோன்றியதும் நம்மிடமிருந்துதான்.
அப்படியென்றால் இந்த விளையாட்டு மாயன் மக்களுக்கு எப்படித் தெரியும்?
மைக்கல் வூட்ஸ்
(Michael Woods)
“The Story of India” என்ற தலைப்பில் வெளிவந்த இந்திய வரலாற்றைப் பற்றிய ஆய்வுப் படத்தில் மைக்கல் வூட்ஸ் (Michael
Woods) என்னும் அறிஞர் தென்னிந்தியாவை “வாழும் நாகரீகம்” என்று இன்றளவும் இந்திய நாகரீகம் பேனிக் காக்கப்படுவதைக் குறிப்பிடுகிறார்.
வில் டுராண்ட்
(Will Durant).
“Our Oriental Heritage” என்ற தலைப்பில் உருவானது. அதில் அவர் உலகின் மிகத் தொண்மையான நாகரீகமாய் இந்தியாவைக் குறிப்பிடுகிறார். இதற்கான பல எடுத்துக்காட்டுகளையும் முன் வைக்கிறார். மேலும் கி.மு 9ஆம் நூற்றாண்டிலேயே இந்தியர்கள் உலகின் பல்வேறு இடங்களுக்கான கடல் வழியை அறிந்திருந்தார்கள். அதன் மூலமாக மெசப்பட்டோமிய, எகிப்த்து, அரேபியா போன்ற நாடுகளில் தங்களுடைய நாகரீகத்தை அப்போதே நிறுவினார்கள் என்றும் சான்றுகளோடு நிரூபனம் செய்கிறார்.
-Proud to be an Tamilan
No comments:
Post a Comment