Tuesday, March 22, 2016

2000 years old Tamil Traditional Stilt Walking & Dance

2000 year old Ancient Stilt Dance in TamilNadu
Marakkal (Stilt) Dance

When demons sent poisonous creatures like snakes and scorpions against Goddess Kottravai (Durga) she danced with stints (Stick dance). This is known as Marakkal literally “wooden legs”. - Silappadhikaram (Ancient Tamil Literature)
.....
Stilt Walkers, Dancers, Drummers, Ground Masquerades and Acrobatic shows with influences from the West African nations of Guinea, Senegal, Mali, Ghana, Ivory Coast, Nigeria, The Gambia, Liberia, Sierra Leone, and more.
Walking on Stilts (China)
Above The Ground: Stilt-Walking School in Trinidad
Stilt-Walkers

மரக்காலாட்டம் () கொக்கலிக்கட்டையாட்டம் () பொய்க்கால் குதிரையாட்டம் () மரக்கால் கூத்து (ஆடல்)
மரக்காலாட்டம் என்பது உறுதியானதும், பாதங்களில் பொருந்துவதுமான அமைப்பிலுள்ள, மரத்தாலான காலைப் பாதங்களில் கட்டிக்கொண்டு, ஆடும் ஆட்டமாகும். தமிழகத்தில் இது கரகாட்டத்தின், துணை ஆட்டமாகவும், இடை நிகழ்ச்சி ஆட்டமாகவும், பொழுதுபோக்காக மட்டுமே நிகழ்த்தப்படுகிறது. இதற்கு நையாண்டி மேளமே, பின்னணி இசைக்கருவியாக ள்ளது. இவ்வாட்டம் புவியீர்ப்புத்தனத்தை உணர்ந்து, நின்று ஆடப்படும் ஆட்டமாகும்.
மரக்கால் ஆடல்
கொற்றவையை/துர்க்கையை வெல்ல அவுணர்கள் தேள் ,பாம்பு முதலிய விஷப் பிராணிகளை அனுப்பினர். அப்போது மரக் கால்கள் கொண்டு நடனமாடி கொற்றவை (துர்க்கை) வெற்றி பெறுவதைக் காட்டும் நடனம் இது...
சிலப்பதிகாரத்தில் நாட்டுப்புறக் கூறுகள்
மரக்கால் ஆடல்:-
கொற்றவை மரக்கால் கொண்டு ஆடிய ஆடல்
இதன் உறுப்புகள் ஆறு ஆகும். அசுரர்கள் தேள், பாம்பு, பூரான், நட்டுவக்காலி போன்ற உருவெடுத்து நெளிவதைக் கண்டதும் மாயோன் அல்லது துர்க்கை மரக்கால் அணிந்து அவைகளை நசுக்கிக் கொல்லும்போது ஆடிய ஆட்டம் மரக்கால் ஆடல் ஆகும். இதனைச் சிலப்பதிகாரம்,
"காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅன்
மாயவன் ஆடிய மரக்கால் ஆடலும்" (சிலம்பு 6:58-59)
என்றும்,
"மாயம் செய்வானவுணர் வீழநங்கை
மரக்கால் மேல் வாள மலை
ஆடும் போலும்" (சிலம்பு-வேட்டுவ வரி)
எனக் கூறுகின்றது.

இதன் மூலம் வெளிப்படும் சுவைகள் வெகுளியும் வீரமும் ஆகும். இம்மரக்கால் ஆட்டம் பொய்க்கால் குதிரையை நினைவூட்டுகிறது.
-Proud to be an Tamilan

No comments:

Post a Comment