Tuesday, March 29, 2016

Azhagankulam - Ramnad - Renewed exavation of sangam pandiyas and the Romansfrom circa 50 BEC to 500 circa CE

Azhagankulam (Marungurpattinam)
Renewed excavation in the T.N. village provides fresh evidence.
Renewed excavation from May at Azhagankulam village in Ramanathapuram district, Tamil Nadu, has thrown up fresh evidence that it was an important trading post between the Sangam Pandyas and the Romans from circa 50 BCE to circa 500 CE.

Archaeologists from the Tamil Nadu Department of Archaeology, who are taking part in the excavation, said Azhagankulam, Arikkamedu in Puducherry and Pattanam (Muziris) in Kerala formed a troika of trade centres between Rome and the Tamil country during the Tamil Sangam age.
Azhagankulam is about three km from the sea, near the area where the Vaigai river enters the sea.
The State Department of Archaeology had earlier excavated the site in 1986-87 and again for five seasons in the 1990s. Those excavations revealed the trade link between the ancient Tamil country and the Mediterranean region.
The excavation under way now at Azhagankulam has yielded broken Roman Amphora jars, Mediterranean pottery, embossed Roman potsherds, copper coins, Chinese Celadon ware, rouletted ware, potsherds with Tamil Brahmi letters, a potsherd with a swastika symbol and so on. Beads made of carnelian, quartz and glass were found.
Of the five trenches, four were laid in the Kottaimedu area. They yielded Roman amphorae (jars for storing wine), two copper coins, roofing tiles, black and red potsherds. A trench dug at Parithikaadu near the seashore yielded three corroded copper coins.
Archaeologist’s delight
Archaeologists emphasised that the Roman antiquities thrown up from the renewed excavation at Azhagankulam proved once again the trade contacts between the Pandya rulers and the Romans. Madurai was the capital of the Pandya country and Ramanathapuram came under the Madurai region. Roman gold coin hoards had been found at Utthamapuram, Nathampatti and Karivalamvandha Nallur.
“From circa 50 BCE, the Roman context occurs at Azhagankulam. The Pandyas had trade contacts with the Yavanas. The Romans bought pearls from the Pandya country. The contacts lasted till 500 CE,” said an archaeologist who had taken part in the earlier excavations at Azhagankulam.
Those excavations yielded three Roman coins. The legend on them showed that Roman emperors Valentine II (regnal years 383 CE to 395 CE) and Arcadius (regnal years 395 CE to 408 CE) issued them. Square copper Pandya coins were also found. The Mauryan context at Azhagankulam was revealed, with the occurrence of the northern black polished ware (elite tableware used by the wealthy) and punch-marked coins.
Azhagankulam, Arikkamedu and Korkai in the Tamiraparani basin on the east coast and Muziris on the west coast saw flourishing trade between the ancient Tamil country and the Romans, the archaeologist added.




அழகன்குளம் (மருங்கூர்பட்டினம்)
ரோமானிய நாட்டுடன் கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கிய அழகன்குளம் அகழாய்வில் உறுதி செய்யப்பட்டது
மருங்கூர்பட்டினம் எனும் அழகன்குளம் ரோமானிய நாட்டுடன் சங்க கால கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கிஉள்ளது என்பது அகழாய்வு மூலம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மருங்கூர்பட்டினம்
தமிழகத்தின் தொன்மை சிறப்பு வாய்ந்த துறைமுக பட்டினங்களில் ராமநாதபுரத்துக்கு கிழக்கே சுமார் 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அழகன்குளமும் ஒன்றாகும். வைகை ஆறு வங்கக்கடலில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ள இந்த ஊர் பண்டைக்காலத்தில் துறைமுக பட்டினமாக விளங்கிஉள்ளது. இங்குள்ள துறைமுகத்தில் இருந்து தமிழ்நாட்டு பொருட்கள் மேற்கு மற்றும் கிழக்கிந்திய நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த ஊருக்கு மேற்கே அமைந்துள்ள கோட்டைமேடு என்ற பகுதி சுமார் 20 ஏக்கர் பரப்பில் அமைந்துஉள்ளது. இங்கு தமிழ்நாடு தொல்லியல் துறை பல பருவங்களில் அகழாய்வு மேற்கொண்டுள்ளது.
சங்க காலத்தில் இந்தபகுதியில் மருங்கூர்பட்டினம் என்ற துறைமுக நகரம் இருந்துள்ளது. அந்த ஊர் அமைந்துள்ள இடத்தில் தான் இன்றைய அழகன்குளம் இருப்பது குறிப்பிடத்தக்கது. சங்க இலக்கியங்களான அகநானூறு, நற்றிணை, மதுரைக்காஞ்சி ஆகிய இலக்கியங்கள் வாயிலாக மருங்கூர்பட்டினத்தை பற்றி நாம் அறிந்து கொள்ளலாம். மருங்கூரின் மேற்கே ஊணூர் என்னும் ஊர் இருந்துள்ளது. அந்த ஊர் மதில் அரண் உடையதாக இருந்தததாக கூறப்படுகிறது. மருங்கூரும், ஊணூரும் சேர்ந்து நெல்லூர், அல்லது சாலியூர் என்ற பெயர் பெற்றிருந்ததை மதுரைக்காஞ்சி மூலம் அறியப்பட்டுஉள்ளது. கப்பல்கள் இந்த துறைமுகத்தில் நின்ற காட்சியானது வெள்ளத்தை முற்றுகையிடும் மலைபோல் காட்சியளித்தது என்று மதுரைக்காஞ்சியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதேபோல தாலமி என்னும் கிரேக்க அறிஞர் கூறும் சாலூர் என்பது இந்த சாலியூரையே குறிக்கும். பிற்காலத்தில் நெல்லூர் என்ற சிறப்பு மங்கி பெரியபட்டணம் எனும் பெயர் பெற்றது. சீனர்கள் பெரியபட்டணத்தைதா பட்டணம்என்று அழைத்துள்ளனர். ‘தாஎன்றால் சீன மொழியில் பெரிய என்று பொருளாகும்.
சங்குத்தொழில்
அழகன்குளத்தில் 2 கட்டமாக கடந்த 1986 மற்றும் 1990-ம் ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினால் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நூற்றுக்கணக்கான ரவுலட்டேடு என்று அழைக்கப்படும் ரோமானிய பானை ஓடுகள் கிடைக்கப்பெற்றன. மேலும் ரோமானிய மது குடுவைகளின் பானை ஓடுகளும், வரி இடப்பட்ட தனி வகை ரோமானிய பானை ஓடுகளும், தட்டை ஓடுகளும், பாசிமணிகளும் கிடைத்துள்ளன. சங்க காலத்தில் தமிழகமெங்கும் வழக்கத்தில் இருந்த கருப்பு சிவப்பு பானை ஓடுகளும் இந்த அகழ்வாய்வில் கிடைத்துள்ளது. சில பானை ஓடுகளில் சங்க கால தமிழ் எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்தபட்டினம் வெண் சங்குகளை அறுத்து வளையல் செய்யும் ஒரு மிகப்பெரிய தொழில் பட்டினமாக திகழ்ந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. இதற்கு ஆதாரமாக அறுக்கப்பட்ட சங்கு துண்டுகள் இங்கு மிகுந்த அளவில் கிடைத்துள்ளன.
மேலும் இந்த அகழாய்வில் 3 ரோமானிய செப்பு காசுகள் கிடைத்துள்ளன. இவற்றில் முன்புறத்தில் ரோமானிய பேரரசரின் தலைப்பகுதியும், பின்புறத்தில் வெற்றத்தேவனின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் விளிம்பில் கிரேக்க எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. அந்த எழுத்துக்களில் இருந்து ஒரு காசு கி.பி.375-ல் ஆண்ட இரண்டாம் வேலன்டைன் என்ற பேரரசனால் வெளியிடப்பட்டுள்ளது என்பதை அறியமுடிகிறது. இந்த அகழாய்வில் வட இந்தியாவில் மவுரிய பேரரசன் அசோகர் காலத்தில் வழக்கத்தில் இருந்த மிகவும் வழவழப்பான மை போன்ற கருமை நிறம் வாய்ந்த பானை ஓடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரோமானிய தொடர்பு
அழகன்குளத்தில் 2-ம் பருவ அகழாய்வு நடத்தியதில் ரோமானிய நாட்டோடு தொடர்பு இருந்தமைக்கான தடயங்கள் மேலும் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்தபருவத்திலும் 3 செப்புக்காசுகள், பண்டைய தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் மற்றும் ஹரப்பா நாகரீகத்தில் வழக்கத்தில் இருந்த குறியீடு என்று கருதப்படும் உருவம் பொறித்த தொல்பொருள் ஒன்றும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு செப்புக்காசு ரோமானிய அரசன் ஆர்க்காடியசினால் வெளியிடப்பட்டதாக காணப்படுகிறது. இந்த மன்னன் காலம் கி.பி.395 முதல் 408 முடிய ஆகும். மற்றொரு காசின் முன்புறத்தில் மரச்சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் எவ்வித குறியீடும் காணப்படவில்லை. 3-வது காசு மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது.
பண்டைய தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட பனை ஓடுகளில் ஒன்றில்சிரிதஎன்றும், மற்றொன்றில்கும்மா அளஎன்றும் எழுதப்பெற்றிருப்பது அவைகளை வைத்திருப்போர்களின் பெயர்களை குறிக்கிறது என்று கருதமுடிகிறது. இந்த அகழாய்வில் மிகவும் குறிப்பிடத்தக்கது ரவுலட்டேடு இன பானை ஓட்டின் விளிம்பு பகுதியினை கொண்டு செய்யப்பட்ட ஒரு தொல்பொருளாகும். இந்த பொருளில் பொறிக்கப்பட்டுள்ள குறியீடு ஹரப்பா நாகரீக குறியீட்டைப்போல உள்ளதாகவும், அச்சுக்குத்தப்பெற்ற காசுகளில் காணப்படும் குறியீட்டை போன்றும் காணப்படுகிறது. செவ்வக வடிவத்தில் நான்கு பட்டைகளை கொண்ட இந்த தொல்பொருள் சுமார் 10 செ.மீ. நீளமுடையது. இதில் காணப்படும் குறியீட்டினை கொண்டு இதனை முத்திரை, அல்லது எடைக்கல், அல்லது பகடைக்காய் என்று எடுத்துக்கொள்ளலாம்.
கடல் வாணிபம்

தமிழ்நாடு அரசின் நிதி மூலம் 2015ம் ஆண்டு தொல்பொருள் துறை ஆணையர் கார்த்திகேயன் ஆலோசனைப்படி தொல்லியல் துணை கண்காணிப்பாளர் வசந்தி வழிகாட்டுதலின் பேரில் அகழாய்வு இயக்குனர் பாஸ்கர், பொறுப்பாளர்கள் சக்திவேல், பிரபாகரன் ஆகியோர் அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆய்வில் கல்பாசி மணிகள், அதன் மூலப்பொருட்கள், காசுகள், கூரை ஓடுகள், தரை ஓடுகள், கட்டுமானத்திற்கு பயன்படுத்திய செங்கல், ரோம நாட்டு மண்பாண்டங்களான அரிட்டைன், ரவுலட்டேடு, ஆம்பொரா போன்ற உயர்ரக மண்பாண்டங்கள் மற்றும் இந்திய மண்பாண்டங்களான கருப்பு சிவப்பு பானை ஓடுகள், சிவப்பு பானை ஓடுகள், ரோமானிய நாட்டு உருவம் பொறித்த பானை ஓடு, தமிழ் பிராமி எழுத்து பொறித்த பானை ஓடுகள் போன்றவை கிடைத்துள்ளன. மேலும் இந்த ஆய்வின் மூலம் அழகன்குளத்தில் சங்க கால கடல் வாணிபம் இருந்துள்ளதற்கான ஆதாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரோமானிய நாட்டுடன் கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கிய அழகன்குளம் அகழாய்வில் உறுதி செய்யப்பட்டது
-Proud to be an Tamilan

No comments:

Post a Comment