Wednesday, December 4, 2024

திருமண அழைப்பிதழ்களை தாம்பூல தட்டில் வைத்து கொடுப்பது ஏன்?

 


திருமண அழைப்பிதழ்களை தாம்பூல தட்டில் வைத்து கொடுப்பது ஏன்?

திருமண அழைப்பிதழ்கள் மட்டுமல்ல…

ஒருவர் மற்றவரிடம் அரிசி நெல் என்று எந்த பொருட்கள் கொடுப்பதாக இருந்தாலும் மூங்கிலில் அல்லது பனை நாரில் செய்த முறத்தில் (சுளவில்) வைத்துதான் கொடுப்பார்கள். பணமாயிருந்தால் தட்டில் வைத்துதான் கொடுப்பார்கள்.

காரணம் கொடுப்பவரும் வாங்குபவரும் பொருளாதாரத்தில் ஏற்றதாழ்வு இருந்தாலும் அந்த வேற்றுமை மனதில் கிடையாது என்பதை உணர்த்தவே.

வெறுமனே கையால் கொடுத்தால் கொடுப்பவர் கை மேலும் வாங்குபவர் கை கீழும் இருக்கும்.

இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் யார் மனதிலும் தோன்றகூடாது என்பதற்காகவே எப்பொருளை கொடுத்தாலும் தட்டில் வைத்து கொடுக்கச்சொன்னார்கள். அப்போது கொடுப்பவர் பெறுபவர் இருவரது கையும் சமமாக இருக்கும்.

இதே முறைதான் அழைப்பிதழ் கொடுக்கும்போதும் கடைபிடிக்கப்படுகிறது. மற்ற நேரத்தில் இதை கடைபிடிக்காவிட்டாலும் இன்றுவரை காரணம் தெரியாமலே திருமண அழைப்பிதழ் கொடுக்கும்போது மட்டும் இது தொடர்கிறது. 

அழைப்பிதழ் கொடுக்கும்போது கூடவே தாம்பூலத்தட்டையும் எடுத்துச்செல்லுங்கள்.

நம் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை.

நம் மரபு பழக்கவழக்கம் எல்லாமே காரண காரியத்தோடு நம் நன்மைக்காக உருவாக்கப்பட்டவையே.

தமிழன் திமிரானவன் 

சுந்தர்ஜி


கண் திருஷ்டி உண்மையா?

 

கண் திருஷ்டி உண்மையா?

உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் உருப்பு கண். நேர்மையானவர்கள்தான் கண்ணை நேருக்கு நேர் பார்த்து பேசுவர். பொய் பேசுபவர்கள் கண்ணை நேருக்கு நேர் பார்த்து பேச தயங்குவர்.

அன்பு, கருணை பாசம், காதல், ஆசை, வெறுப்பு, பொறாமை, கோபம் என்று அனைத்து உணர்ச்சிகளும் ஒருவரின் கண் வழியேதான் மற்றவர்களுக்கு வெளிப்படுத்தபடுகிறது, தெரியப்படுத்துகிறது.

இதில் மற்றவர்களை பெரிதும் பாதிப்பது பொறாமைதான்.

அதுதான் கண் திருஷ்டி. அதனால்தான் கல்லடி பட்டாலும் கல்லடி படக்கூடாது என்று சொன்னார்கள். 

அதை போக்கவே திருஷ்டி சுத்திப்போடுவதும். ..

 

வாசலில் ஆகாச கருடன் கிழங்கை தொங்கவிடுவதும், கரி. எலுமிச்சை, 3 காய்ந்த மிளகாயை கட்டி தொங்கவிடுவதும் அதை தடுப்பதற்காகத்தான்.

 

இது எதிர்மறை ஆரா, எதிர்மறை ஆற்றல், எதிர்மறை எண்ண அலைகளை ஈர்க்கும் தன்மை கொண்டது.

 

அதனால் திருஷ்டி விலகி நேர்மறை ஆரா, ஆற்றல், எண்ணங்கள் நம்மைச்சுற்றி பரவும்.

 

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை.

எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


Monday, December 2, 2024

மாதவிடாய் நேரத்தில் பெண்கள் ஏன் கோயிலுக்கு செல்லகூடாது?


 

மாதவிடாய் நேரத்தில் பெண்கள் ஏன் கோயிலுக்கு செல்லகூடாது?                  

தீட்டா? மூட நம்பிக்கையா?

இரண்டும் இல்லை. ஆரோக்கியத்துக்குதான்..

இறைவன் படைப்பில் மனிதனே சிறந்த படைப்பாகும். மனிதரில் பெண்கள் மட்டுமே இயற்கை உடற்கூறு மாற்றம் அதிகம் கொண்டவர்கள்.

ஒரு உயிரை உருவாக்கும் பெரும் பங்கு பெண்களையேச் சாரும். அதனால்தான் பெண்களை தெய்வத்துக்கு சமமானவர்கள் என்று சாஸ்திரம் போற்றுகிறது..

அந்த கால கருங்கல்லில் கட்டப்பட்ட கோயில்கள் மனிதனின் உடல் வெப்பநிலையை பொருத்தே அமைக்கப்பட்டது.

அதாவது மனிதனின் சராசரி வெப்பநிலை எவ்வளவோ அதே வெப்பநிலை கருங்கல்லால் கட்டப்பட்ட கோயில்களுக்கும் உண்டு.

மாதவிடாய் காலங்களில் பெண்களின் உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கும். அந்த நேரங்களில் கோயிலுக்கு பெண்கள் வந்தால் இன்னும் அதிக உடல் உஷ்ணம் அதிகரிக்கும். 

அதனால் அதிகப்படியான இரத்த போக்கு ஏற்பட்டு உடல் உபாதை அதிகரிக்கும்.

இதை கருத்தில் கொண்டே நம் முன்னோர்கள் பெண்கள் மாதவிடாய் காலங்களில் கோயிலுக்கு வரவேண்டாம் வரத்தேவை இல்லை என்று சொன்னார்கள்.

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு அடி வயிற்று வலி இருக்கும். உடம்பில் இருந்து கெட்ட இரத்தம் வெளியேறுவதால் உடல் அசதி சோர்வு அதிகமாக இருக்கும்.

அந்த நேரங்களில் அவர்களுக்கு பூரண ஓய்வும் தொந்திரவு செய்யாத தனிமையும் உளுந்த கஞ்சி / களி போன்ற சத்தான உணவும் தேவை.

இதை கருத்தில் கொண்டே நம் முன்னோர்கள் மாதவிடாய் நேரங்களில் பெண்கள் வெளியேவோ அல்லது கோயிலுக்கோ வரக்கூடாது என்று சொன்னார்கள்.

இதை நேரிடையாக சொன்னால் ஒருவரும் கடைபிடிக்கமாட்டார்கள். அதனால் தெய்வகுற்றம், தீட்டு, அசுத்தம் என்று ஆண்களுக்கு பயமுறுத்தி பெண்களுக்கு முழு ஓய்வு கொடுக்கச்சொன்னார்கள்.

ஆனால் என்ன காரணத்துக்கு சொன்னார்கள் என்பதை மறந்துவிட்டு அவர்கள் சொன்ன வார்த்தையை மட்டும் பிடித்துக்கொண்டு மூடநம்பிக்கை என்று மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு முழு ஓய்வு கொடுக்காத காரணத்தினால்தான் இன்று பெண்களுக்கு ஏற்படும் உடல், மனம் மற்றும் குடும்பத்தின் அனேக பிரச்சனைகளுக்கு மூலகாரணம்.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை.

எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடச்சொல்வதன் நோக்கம் என்ன?


சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடச்சொல்வதன் நோக்கம் என்ன?

சாப்பிடும்போது காலை மடக்கி அமர்ந்து சாப்பிடுவதுதான் உடலுக்கு நல்லது. ஆரோக்கியம்.

நாற்காலியில் காலை தொங்க போட்டோ அல்லது நின்றுகொண்டோ சாப்பிடும்போது இரத்த ஓட்டம் வயிற்றுக்கு அதிகம் செல்லாமல் காலுக்கே செல்லும்.

அதனால் ஜீரண தாமதம் ஏற்படும் அஜீரண கோளாறு வர வாய்ப்புண்டு.

அமர்ந்து காலைமடக்கி சாப்பிடும்போது இரத்த ஓட்டம் இடுப்புகீழ் தடைபட்டு வயிற்றுக்கு அதிகம் சென்று ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. அதனால் அஜீரண கோளாறு ஏற்பட வாய்ப்பில்லை.

அதனால்தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடச்சொன்னார்கள்.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி

 

Saturday, November 30, 2024

நம் தேசிய கொடியை ஏற்றும்போது அதில் பூக்கள் வைப்பதன் காரணம் என்ன?

 


நம் தேசிய கொடியை ஏற்றும்போது அதில் பூக்கள் வைப்பதன் காரணம் என்ன?

நம் தேசிய கொடி மேலே பட்டொளி வீசி பறப்பதற்கு முன் அதில் உள்ள மலர்கள் கீழே விழுவதை பார்த்து கை தட்டுகிறோம்.

ஆனால் அதற்கு ஒரு சோக சம்பவம் அடங்கி இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?

இந்த கொடி மேலே பட்டொளி வீசி பறக்க அதாவது நமக்கு சுதந்திரம் கிடைக்க எண்ணற்ற தாய்மார்கள் தங்கள் கூந்தலில் இருந்த மலர்கள் கீழே விழுந்திருக்கிறது. அதாவது தங்கள் கணவர்களை இழந்துதான் இந்த சுதந்திரம் நமக்கு கிடைத்திருக்கிறது.

அதைத்தான் கொடியில் உள்ள மலர்கள் கீழே விழுந்து நமக்கு உணர்த்துகிறது.

இனி ஒவ்வொரு முறை கொடி ஏற்றத்தின்போதும் இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

அன்று அந்த நல்ல உள்ளங்கள் தங்கள் கணவர்களை சுதந்திர போராட்டத்திற்கு அனுப்பாமல் இருந்திருந்தால்…

இன்றும் நாம் எங்காவது செக்கிழுத்துக்கொண்டோ அல்லது அன்னியருக்கு சேவகம் பார்த்துக்கொண்டு அடிமை வாழ்க்கைதான் வாழ்ந்துகொண்டு இருந்திருப்போம்.

நம் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை.

நம் மரபு பழக்கவழக்கம் எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்கப்பட்டவை.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


பெண்களை ஏன் கால்மேல் கால் போட்டு அமரக்கூடாது என்று சொல்கிறார்கள்?

பெண்களை ஏன் கால்மேல் கால் போட்டு அமரக்கூடாது என்று சொல்கிறார்கள்?

இதை பெண் அடிமைத்தனம் அல்லது ஆணாதிக்கம் என்று இன்றைய நவநாகரீக பெண்கள் சொல்கிறார்கள். சொல்லிவிட்டு போகட்டும்.

ஆனால் நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல.

பெண்கள்கால்மேல் கால் போட்டு அமர்வதை அகங்காரம் ஒழுங்கீனம் திமிர் என்று மேலோட்டமாக சொல்லிவைத்தாலும் அதன் உட்பொருள் அதுவல்ல.

பெண்கள் கால்மேல் கால்போட்டு அமரும்போது அவர்கள் அடிவையிறு அழுந்தும்போது கர்பபைக்கு அழுத்தம் ஏற்பட்டு நாளைடைவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதை தடுக்கவே அவ்வாறு சொன்னார்கள். இது அவர்களின் நன்மைக்கே..

புரியுதா எம் குலபெண்களே?

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


 

Friday, November 29, 2024

பாம்பிற்கு முட்டை, பால் வைப்பதன் காரணம் என்ன? பக்தியா? மூடநம்பிக்கையா?

 

பாம்பிற்கு முட்டை, பால் வைப்பதன் காரணம் என்ன?                           பக்தியா? மூடநம்பிக்கையா?

உண்மையில் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது. பிறகு ஏன் புத்துக்குள் முட்டையையும் பாலையும் வைக்கிறார்கள்?

மக்கள் தொகை குறைவாக இருந்த முன் காலத்தில் மக்கள் வசிப்பிடத்தில் முக்கிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள்.

காரணம் அடர்ந்த காடுகள் மனித நடமாட்டம் குறைவு பாம்புகள் அதிகம். ஒரு உயிரினத்தை அவசிய உணவு தேவைக்காக தவிர கொல்லும் உரிமை கிடையாது.

அதனால் அதை கொல்லாமல் இனபெருக்கத்தை கட்டுப்படுத்த நினைத்தார்கள்.

பாம்புகள் இனபெருக்கம் செய்வது வித்தியாசமானது. பெண் பாம்பு தன் உடலில் இருந்து ஒருவித வாசனை திரவத்தை அனுப்பும். அதனை நுகர்ந்து ஆண் பாம்பு இணை சேர பெண் பாம்பை தேடி வரும்.

பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தி ஆண் பாம்பை திசை திருப்பும் வேலையைத்தான் முட்டை மற்றும் பாலில் இருந்து வரும் வாசனை செய்தது. அதனால் பாம்பால் இன பெருக்கம் செய்ய இயலாது.

இதன் உண்மை காரணம் சொன்னால் யாரும் செய்யமாட்டார்கள். அதனால் தெய்வத்தின் பெயரைச்சொல்லி கடைபிடிக்கவைத்து மக்கள் வசிப்பிடங்களில் பாம்பை கட்டுப்படுத்தினார்கள்.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை.

பழந்தமிழர் மரபு பழக்கவழக்கம் எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்கப்பட்டவை.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி