Saturday, December 7, 2024

நான்காவது விரலை மட்டும் ஏன் மோதிர விரல் எங்கிறோம்?


நான்காவது விரலை மட்டும் ஏன் மோதிர விரல் எங்கிறோம்?

உங்கள் பெருவிரல் (கட்டைவிரல்) பெற்றோர்களை குறிக்கும். ஆள்காட்டி விரல் உங்கள் சகோதரசகோதரிகளை குறிக்கும். நடுவிரல் உங்களை குறிக்கும். மோதிரவிரல் உங்கள் வாழ்க்கை துணையை குறிக்கும். சுண்டிவிரல் அதாவது கடைசிவிரல் உங்கள் பிள்ளைகளை குறிக்கும்.

இப்போது உங்களின் இரு உள்ளங்கைகளையும் நேருக்கு நேராக வைத்துக்கொள்ளுங்கள். நடுவிரலை மட்டும் மடித்து உள்ளங்கையில் ஒட்டி வைத்துக்கொள்ளுங்கள். மற்ற விரல்களை நீட்டி மற்ற விரல்களோடு ஒன்றோடு ஒன்று ஒட்டி வைத்துக்கொள்ளுங்கள்.

பெருவிரலை மட்டும் பிரித்துப்பாருங்கள் தனியாக விலக்கி அசைக்க முடியும். அதாவது உங்களின் பெற்றோர் எப்போதும் உங்களுடன் இருக்கமாட்டார்கள். பிரிவுக்கு உட்பட்டது.

பெருவிரலை மறுபடியும் ஒட்டி வைத்துக்கொண்டு ஆள்காட்டி விரலை விலக்கி பிரித்துப்பாருங்கள், முடியும் அதாவது உங்கள் சகோதரசகோதரிகள் எப்போதும் உங்களுடன் இருக்க மாட்டார்கள் பிரிவுக்கு உட்பட்டது.

அடுத்து சிறிய சுண்டி விரலை மட்டும் தனியாக பிரித்துப்பாருங்கள் முடியும். அதாவது உங்கள் பிள்ளைகள் எப்போதும் உங்களுடன் இருக்கமாட்டார்கள். பிரிவுக்கு உட்பட்டது.

கடைசியாக இப்போது உங்கள் மோதிரவிரலை மட்டும் தனியாக பிரித்து அசைத்துப்பாருங்கள் பிரிக்க முடியாது. சிரமப்படுவீர்கள்.

அதுபோல கணவன் மனைவி எப்போதும் பிரியாமல் ஒன்றாக இணைந்து சேர்ந்து வாழவேண்டும் என்பதற்காகவே திருமணத்தில் தம்பதிகளுக்கு மோதிரம் அணிவிக்கிறோம்.  

நம் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை.

நம் மரபு பழக்கவழக்கம் எல்லாமே காரண காரியத்தோடு நம் நன்மைக்காக அர்த்தத்தோடு உருவாக்கப்பட்டவையே.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி

 

Friday, December 6, 2024

இடி இடிக்கும்போது ஏன் அர்ஜுனா? அர்ஜுனா? என்று சொல்லவேண்டும்?

இடி இடிக்கும்போது ஏன் அர்ஜுனா? அர்ஜுனா? என்று சொல்லவேண்டும்?

மூட நம்பிக்கையா? ஆன்மீக தினிப்பா?

நம்ம ஊரில் இடி இடித்து மழை பெய்யும் போது நம் வீட்டு பெரியவர்கள் அர்ஜுனா அர்ஜுனா என்று சொல்வார்கள். நம்மையும் சொல்லச்சொல்வார்கள்.

உடனே நம்ம வீட்டு இளசுகள்..நீ அர்ஜுனான்னு சொன்ன உடனே அவன் வில்லையும் அம்பையும் எடுத்திட்டு வந்து இடி சததமே இல்லாம பன்னிடுவானாக்கும் என்று கேலி செய்வார்கள்.

இடிதாங்கி கண்டுபிடிச்சி எத்தனையோ ஆண்டுகள் ஆச்சி, அதை கட்டிடத்தின் மேல வைக்காம இன்னமும் அர்ஜுனான்னு புலம்பிட்டு இருக்கியேன்னு பகுத்தறிவுவாதிகள் இடியில் இருந்து தப்பும் அறிவியல் உபகரணம் பற்றி சொல்வார்கள்.

ஆனால் நம் முன்னோர் சொன்னதின் உண்மை காரணம் என்ன  தெரியுமா?

இடி பலமாக இடிக்கும்போது சிலரது காது அடைத்து ங்கொய்ன்னு சத்தம் வரும். இதிலிருந்து  தப்ப அர்ஜுனா அர்ஜுனா என்றால் போதும் காது அடைக்காது.

“அர்” என்று சொல்லும்போது நாக்கு மடித்து மேல் தாடையை தொடும். “ஜூ” என்று சொல்லும் போது வாய் குவித்து காற்று வெளியேற தொடங்கும். “னா” என்று சொல்லும்போது வாய் முழுமையாக திறந்து காற்று வெளியே போகும். 

இப்படி காற்று வெளியேறுவதால் காது அடைக்காது. (இடி இடிக்கும்போது நீங்களும் முயற்சித்து பார்க்கலாம்.)  அதற்குதான் அர்ஜுனாவை நம்மவர்கள் துணைக்கு அழைத்தார்கள்.

அர்ஜுனன் பெயரை உச்சரிப்பது மனதுக்கு பலம் என்ற ஆன்மீக காரணத்துடன் அறிவியலை நம் முன்னோர்கள் எளிமையாக செலவில்லாமல் நம்மை கடைபிடிக்கவைத்து ஆரோக்கியம் காத்தார்கள்.

நாம் தான் காரணம் தெரியாமல் புரியாமல் தமிழர் பழக்கவழத்தை மூட நம்பிக்கை மூட பழக்கம் என்று கடைபிடிக்காமல் கைவிட்டுவிட்டோம்.

இப்ப புரியுதா அர்ஜுனா? அர்ஜுனா?

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை.

எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி

 


 

விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கச்சொன்னார்கள் ?


விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கச்சொன்னார்கள் ?

பக்தியா? மூடநம்பிக்கையா?

நம் முன்னோர்கள் சில செயல்களை நமக்கு தெரியாமலே புரியாமலே பழக்கமாக்கிவிட்டார்கள்.

அதில் இதுவும் ஒன்று

ஆடி மாதத்தில் பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள வண்டல் மணல்களை அடித்து சென்று இருக்கும்.

அதனால் ஆற்றில் நீர் பூமிக்கு கீழே இறங்காமல் நேராக சென்று கடலில் கலந்து வீணாகிவிடும், (அந்த காலத்தில் இப்போது இருப்பது போல தண்ணீர் தேக்க அணைகள் இல்லை).

ஆனால் களிமண் இருக்கும் இடத்தில் தண்ணீர் உறிஞ்சி பூமிக்கு கீழே சென்று நிலத்தடி நீர் பெருகும்.

அதுதான் வறட்சி காலங்களிலும் ஆற்றில் நீர் வராத இல்லாத காலங்களிலும் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் உதவும்.

அதனால் விநாயகர் சதுர்த்தியன்று ஒவ்வொரு வீட்டிலும் களிமண்ணால் விநாயர் சிலை செய்து வழிபட்டு ஆற்றில் கரைக்கச்சொன்னார்கள்.

அதை ஏன் மூன்று அல்லது ஐந்து நாட்கள் கழித்து ஆற்றில் கரைக்கவேண்டும்?

ஈரக்களிமண் ஆற்று நீரின் வேகத்தில் சீக்கிரம் கரைந்து சென்றுவிடும். சற்று காய்ந்த களிமண் கரையாமல் அப்படியே ஆற்றின் கீழ் சென்று படிந்துவிடும்.

இதனால் ஆற்றில் வரும் நீர் களிமண்ணால் உறிஞ்சப்பட்டு கீழே நிலத்தடி நீராக சென்று கொண்டே இருக்கும்.

இது அன்றைய ஆற்றங்கரை நாகரீகத்தின் தண்ணீர் ஆதாரத்திற்கு முக்கிய காரணம்.

இதையே வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் களிமண் கொண்டுபோய் ஆற்றில் போட்டுவிட்டு வாருங்கள் நல்லது என்று சொன்னால் எத்தனை பேர் கேட்பார்கள்.?

அதுமட்டுமில்லை அன்று எந்தவித தொழில்சாலைகளும் இல்லாத காலத்தில் ...

விவசாயிகளிடம் இருக்கும் பணம் மற்ற தொழில் செய்பவர்களுக்கு சுழற்சி ஆகவே ஒரு பண்டிகையாகவும் கொண்டாடச்சொன்னார்கள்.

இது தெரியாத மண்டூஸ்கள் இன்று விநாயகர் சிலைகளை பிளாஸ்டர் ஆப் பாரிசில் செய்து ஆற்றிலும் கடலிலும் போட்டு நீர்நிலைகளை பாழ்படுத்தி வருகிறார்கள்.

என்னத்த சொல்ல?

நம் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை.

நம் மரபு பழக்கவழக்கம் எல்லாமே காரண காரியத்தோடு நம் நன்மைக்காக உருவாக்கப்பட்டவையே.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி

 

Wednesday, December 4, 2024

திருமண அழைப்பிதழ்களை தாம்பூல தட்டில் வைத்து கொடுப்பது ஏன்?

 


திருமண அழைப்பிதழ்களை தாம்பூல தட்டில் வைத்து கொடுப்பது ஏன்?

திருமண அழைப்பிதழ்கள் மட்டுமல்ல…

ஒருவர் மற்றவரிடம் அரிசி நெல் என்று எந்த பொருட்கள் கொடுப்பதாக இருந்தாலும் மூங்கிலில் அல்லது பனை நாரில் செய்த முறத்தில் (சுளவில்) வைத்துதான் கொடுப்பார்கள். பணமாயிருந்தால் தட்டில் வைத்துதான் கொடுப்பார்கள்.

காரணம் கொடுப்பவரும் வாங்குபவரும் பொருளாதாரத்தில் ஏற்றதாழ்வு இருந்தாலும் அந்த வேற்றுமை மனதில் கிடையாது என்பதை உணர்த்தவே.

வெறுமனே கையால் கொடுத்தால் கொடுப்பவர் கை மேலும் வாங்குபவர் கை கீழும் இருக்கும்.

இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் யார் மனதிலும் தோன்றகூடாது என்பதற்காகவே எப்பொருளை கொடுத்தாலும் தட்டில் வைத்து கொடுக்கச்சொன்னார்கள். அப்போது கொடுப்பவர் பெறுபவர் இருவரது கையும் சமமாக இருக்கும்.

இதே முறைதான் அழைப்பிதழ் கொடுக்கும்போதும் கடைபிடிக்கப்படுகிறது. மற்ற நேரத்தில் இதை கடைபிடிக்காவிட்டாலும் இன்றுவரை காரணம் தெரியாமலே திருமண அழைப்பிதழ் கொடுக்கும்போது மட்டும் இது தொடர்கிறது. 

அழைப்பிதழ் கொடுக்கும்போது கூடவே தாம்பூலத்தட்டையும் எடுத்துச்செல்லுங்கள்.

நம் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை.

நம் மரபு பழக்கவழக்கம் எல்லாமே காரண காரியத்தோடு நம் நன்மைக்காக உருவாக்கப்பட்டவையே.

தமிழன் திமிரானவன் 

சுந்தர்ஜி


கண் திருஷ்டி உண்மையா?

 

கண் திருஷ்டி உண்மையா?

உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் உருப்பு கண். நேர்மையானவர்கள்தான் கண்ணை நேருக்கு நேர் பார்த்து பேசுவர். பொய் பேசுபவர்கள் கண்ணை நேருக்கு நேர் பார்த்து பேச தயங்குவர்.

அன்பு, கருணை பாசம், காதல், ஆசை, வெறுப்பு, பொறாமை, கோபம் என்று அனைத்து உணர்ச்சிகளும் ஒருவரின் கண் வழியேதான் மற்றவர்களுக்கு வெளிப்படுத்தபடுகிறது, தெரியப்படுத்துகிறது.

இதில் மற்றவர்களை பெரிதும் பாதிப்பது பொறாமைதான்.

அதுதான் கண் திருஷ்டி. அதனால்தான் கல்லடி பட்டாலும் கல்லடி படக்கூடாது என்று சொன்னார்கள். 

அதை போக்கவே திருஷ்டி சுத்திப்போடுவதும். ..

 

வாசலில் ஆகாச கருடன் கிழங்கை தொங்கவிடுவதும், கரி. எலுமிச்சை, 3 காய்ந்த மிளகாயை கட்டி தொங்கவிடுவதும் அதை தடுப்பதற்காகத்தான்.

 

இது எதிர்மறை ஆரா, எதிர்மறை ஆற்றல், எதிர்மறை எண்ண அலைகளை ஈர்க்கும் தன்மை கொண்டது.

 

அதனால் திருஷ்டி விலகி நேர்மறை ஆரா, ஆற்றல், எண்ணங்கள் நம்மைச்சுற்றி பரவும்.

 

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை.

எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


Monday, December 2, 2024

மாதவிடாய் நேரத்தில் பெண்கள் ஏன் கோயிலுக்கு செல்லகூடாது?


 

மாதவிடாய் நேரத்தில் பெண்கள் ஏன் கோயிலுக்கு செல்லகூடாது?                  

தீட்டா? மூட நம்பிக்கையா?

இரண்டும் இல்லை. ஆரோக்கியத்துக்குதான்..

இறைவன் படைப்பில் மனிதனே சிறந்த படைப்பாகும். மனிதரில் பெண்கள் மட்டுமே இயற்கை உடற்கூறு மாற்றம் அதிகம் கொண்டவர்கள்.

ஒரு உயிரை உருவாக்கும் பெரும் பங்கு பெண்களையேச் சாரும். அதனால்தான் பெண்களை தெய்வத்துக்கு சமமானவர்கள் என்று சாஸ்திரம் போற்றுகிறது..

அந்த கால கருங்கல்லில் கட்டப்பட்ட கோயில்கள் மனிதனின் உடல் வெப்பநிலையை பொருத்தே அமைக்கப்பட்டது.

அதாவது மனிதனின் சராசரி வெப்பநிலை எவ்வளவோ அதே வெப்பநிலை கருங்கல்லால் கட்டப்பட்ட கோயில்களுக்கும் உண்டு.

மாதவிடாய் காலங்களில் பெண்களின் உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கும். அந்த நேரங்களில் கோயிலுக்கு பெண்கள் வந்தால் இன்னும் அதிக உடல் உஷ்ணம் அதிகரிக்கும். 

அதனால் அதிகப்படியான இரத்த போக்கு ஏற்பட்டு உடல் உபாதை அதிகரிக்கும்.

இதை கருத்தில் கொண்டே நம் முன்னோர்கள் பெண்கள் மாதவிடாய் காலங்களில் கோயிலுக்கு வரவேண்டாம் வரத்தேவை இல்லை என்று சொன்னார்கள்.

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு அடி வயிற்று வலி இருக்கும். உடம்பில் இருந்து கெட்ட இரத்தம் வெளியேறுவதால் உடல் அசதி சோர்வு அதிகமாக இருக்கும்.

அந்த நேரங்களில் அவர்களுக்கு பூரண ஓய்வும் தொந்திரவு செய்யாத தனிமையும் உளுந்த கஞ்சி / களி போன்ற சத்தான உணவும் தேவை.

இதை கருத்தில் கொண்டே நம் முன்னோர்கள் மாதவிடாய் நேரங்களில் பெண்கள் வெளியேவோ அல்லது கோயிலுக்கோ வரக்கூடாது என்று சொன்னார்கள்.

இதை நேரிடையாக சொன்னால் ஒருவரும் கடைபிடிக்கமாட்டார்கள். அதனால் தெய்வகுற்றம், தீட்டு, அசுத்தம் என்று ஆண்களுக்கு பயமுறுத்தி பெண்களுக்கு முழு ஓய்வு கொடுக்கச்சொன்னார்கள்.

ஆனால் என்ன காரணத்துக்கு சொன்னார்கள் என்பதை மறந்துவிட்டு அவர்கள் சொன்ன வார்த்தையை மட்டும் பிடித்துக்கொண்டு மூடநம்பிக்கை என்று மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு முழு ஓய்வு கொடுக்காத காரணத்தினால்தான் இன்று பெண்களுக்கு ஏற்படும் உடல், மனம் மற்றும் குடும்பத்தின் அனேக பிரச்சனைகளுக்கு மூலகாரணம்.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை.

எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடச்சொல்வதன் நோக்கம் என்ன?


சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடச்சொல்வதன் நோக்கம் என்ன?

சாப்பிடும்போது காலை மடக்கி அமர்ந்து சாப்பிடுவதுதான் உடலுக்கு நல்லது. ஆரோக்கியம்.

நாற்காலியில் காலை தொங்க போட்டோ அல்லது நின்றுகொண்டோ சாப்பிடும்போது இரத்த ஓட்டம் வயிற்றுக்கு அதிகம் செல்லாமல் காலுக்கே செல்லும்.

அதனால் ஜீரண தாமதம் ஏற்படும் அஜீரண கோளாறு வர வாய்ப்புண்டு.

அமர்ந்து காலைமடக்கி சாப்பிடும்போது இரத்த ஓட்டம் இடுப்புகீழ் தடைபட்டு வயிற்றுக்கு அதிகம் சென்று ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. அதனால் அஜீரண கோளாறு ஏற்பட வாய்ப்பில்லை.

அதனால்தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடச்சொன்னார்கள்.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி