Showing posts with label Ourdreams. Show all posts
Showing posts with label Ourdreams. Show all posts

Thursday, August 19, 2021

ஆகாயராஜன்” என்கிற கற்பமூலிகை

 ஆகாயராஜன்” என்கிற கற்பமூலிகை மற்ற பெயர் முடவாட்டு கிழங்கு(அ) ஆட்டுக்கால் கிழங்கு கடல் மட்டத்தில் இருந்து 3800 அடிக்கு மேல் உள்ள மலைமருந்தியால் பாறைகளில் விளையும் இவற்றிற்கு வேர்கள் கிடையாது பாறைகளில் உள்ள உலோக சத்துக்களலான செம்பு தங்கம் இரும்பு கால்சியம் குறிப்பாக பாறைகளில் உள்ள சிலிகாவை உறிஞ்சும் தன்னை இந்த முடவாட்டு கால் கிழங்கிற்கு உண்டு சிலிகா அயனி கற்பமருந்து என்பதை நாம் அறிவோம் இன்னும் பிற முக்கிய உலோக உப்புகளை உறிஞ்சி தன்னகத்தே கொண்டுள்ளது இவற்றில் இருந்து தங்கத்தை(அயனியை)பிரிக்க இயலும்…….

காலங்கிநாதர் ,போகர்,வள்ளலார் போன்ற ஞான சித்தர்கள் இதனை ஆகாயராஜன் எனவும்,முடவாட்டுகால் கிழங்கு என்றும் கூறியுள்ளார் முடம் நீக்கும் கிழங்கு மருவி முடவாட்டுக்கால் கிழங்கு ஆனது இவற்றை 48நாட்கள் தொடர்ந்து உண்டால் வாத,பித்த,கப சம்மந்தப்பட்ட 4448 நோய்களை நீக்கி உடம்பானது காயகல்பம் அடையும் என்பது மெய் ஞானிகளான சித்தர்களின் வாக்கு.

Friday, January 8, 2021

நோய்கள் #அண்டாமல் #இருக்க #வேண்டுமா#தேரையர் #சித்தர் #கூறும் #ரகசியம்

#நோய்கள் #அண்டாமல் #இருக்க #வேண்டுமா#தேரையர் #சித்தர் #கூறும் #ரகசியம்.
#சுந்தா் 
பதார்த்த குண சிந்தாமணி பாடல் 1502

திண்ண மிரண்டுள்ளே சிக்க அடக்காமல் 
பெண்ணின் பால் ஒன்றை பெருக்காமல் 
உண்ணுங்கால் நீர் கருக்கி மோர் பெருக்கி 
நெய்யுறுக்கி உண்பவர்தம் பேருரைக்கிற் போமே பிணி

பொருள்:

மலசலம் ஒழுங்காக போக்கி, விந்துவை அதிகம் விடாமல் தேக்கி, நீரைக் காய்ச்சி, மோரைப் பெருக்கி, நெய்யை உருக்கி உண்டால் அவர்களை எந்த நோயும் அணுகாது 

பதார்த்த குண சிந்தாமணி பாடல் 1503

பாலுண்போ மெண்ணெய்பெறின் வெந்நீரிற் குளிப்போம்
பகற்புணரோம் பகற்றுயிலோம்பயோ தரமுமூத்த
ஏலஞ்சேர் குழலியரோடிளவெயி லும்விரும்போம்
இரண்டளக்கோ மொன்றைவிடோமிட துகையிற் படுப்போம்
மூலஞ்சேர்கறி நுகரோமூத்த தயிருண்போம்
முதனாளிற் சமைத்தகறிய முதெனினு மருந்தோம்
ஞாலத்தான் வந்திடினும் பசித்தொழிய வுண்ணோம்
நமனார்க்கிங்கேது கவை நாமிருக்கு மிடத்தே.

பொருள்:

பாலுணவை உண்ணுவோம்! எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது வெந்நீரில் குளிப்போம். பகலில் உடலுறவு கொள்வதையும், தூங்குவதையும் தவிர்ப்போம். கரும்பென இனிப்போராயினும் வயதில் மூத்த பெண்களோடும், வாசக் குழலினை உடைய பொது மகளிரோடும் உடல் உறவு கொள்ள மாட்டோம்; காலை இளம் வெயிலில் அலைய மாட்டோம். மலம், சிறுநீர் முதலியவற்றை அடக்கி வைத்திருக்க மாட்டோம்; படுக்கும்போது எப்போதும் இடது கைப்புறமாகவே ஒருக்களித்துப் படுப்போம். புளித்த தயிருணவை விரும்பி உண்போம். முதல் நாள் சமைத்த கறி உணவு, அமுதம் போன்றிருப்பினும், அதனை மறுநாள் உண்ணுதல் செய்ய மாட்டோம்; பசிக்காத போது உணவருந்தி, உலகமே பரிசாகக் கிடைப்பதெனினும் ஏற்க மாட்டோம்; பசித்த பொழுது மட்டும் உண்ணுவோம். இவ்வாறு நம் செயல்கள் இருக்குமெனின் காலன் நம்மை நெருங்கக் கலங்குவான்;

பதார்த்த குண சிந்தாமணி பாடல் 1504

உண்பதிருபொழுதொழிய மூன்று பொழுதுண்ணோம்
உறங்குவதிராவொழியப் பகலுறக்கஞ் செய்யோம்
பெண்கடமைத்திங்களுக்கோர் காலன்றி மருவோம்
பெருந்தாகமெடுத்திடினும் பெயர்ந்து நீரருந்தோம்
மண்பரவுகிழங்குகளிற் கருணையன்றிப் புசியோம்
வாழையிளம்பஞ்சொழியக் கனியருந்தல் செய்யோம்
நன்புபெறவுண்டபின் புகுறு நடையிங்கொள்ளோம்
நமனார்க்கிங்கேது கவைநாமிருக்கு மிடத்தே. 

பொருள்:

ஒரு நாளைக்கு இருமுறை மட்டுமே உண்போம். இரவில் மட்டுமே உறக்கம் கொள்வோம். மாதம் ஒருமுறை மட்டுமே மனைவியுடன் கூடுவோம். பெரும் தாகமெடுத்தாலும், உணவுக்கு நடுவில் நீர் அருந்த மாட்டோம். கருணைக்கிழங்கைத் தவிர வேறு கிழங்குகளை உண்ணமாட்டோம். பிஞ்சு வாழைக்காயை உண்போமன்றி முற்றியவற்றை உண்ணமாட்டோம். நல்ல உணவுக்குப் பின்பு சிறிது நடை நடப்போம். இவ்வாறு நம் செயல்கள் இருக்குமெனின் காலன் நம்மை நெருங்கக் கலங்குவான்.

பதார்த்த குண சிந்தாமணி பாடல் 1505

ஆறுதிங்கட்கொரு தடவை மனமருந் தயில்வோம்
அடர்நான்கு மதிக்கொருக்காற் பேதியுறை நுகர்வோந்
தேறுமதியொன்றரைக்கோர் தரநசியம் பெறுவோந்
திங்களரைக்கிரண்டு தரஞ்சவளவிருப்புறுவோம்
வீறுசதுர்நாட்கொருக்கானெய் முழுக்கை தவிரோம்
விழிகளுக்கஞ்சன மூன்று நாட்களுக்கொருக்காலிடுவோம்
நாறுகந்தம் புட்பமிவை நடுநிசியின் முகரோம்
நமனார்க்கிங்கேது கவை நாமிருக்கு மிடத்தே

பொருள்:

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வாந்தி மருந்தை உட்கொள்வோம், நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்தை உட்கொள்வோம், ஒன்றரை மாதத்திற்கு ஒருமுறை மூக்கிற்கு மருந்திட்டுச் சளி முதலிய நோய் வராமல் தடுப்போம், வாரம் ஒருமுறை முகச்சவரம் செய்து கொள்வோம்; நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்போம், மூன்று தினங்களுக்கு ஒருதடவை கண்களுக்கு மையிட்டுக் கொள்வோம், நறுமணப் பொருட்களையும், மணம் மிகுந்த மலர்களையும் நடுநிசியில் முகர மாட்டோம். இவற்றை எல்லாம் நாம் கடை பிடித்தால் எமன் நம்மை நெருங்க விரும்ப மாட்டான்; நீண்ட ஆயுளோடு வாழ்வோம்.

பதார்த்த குண சிந்தாமணி பாடல் 1506

பகத்தொழுக்குமாத சரசங் கரந்துடைப்பமிவைத்தூட்
படநெருங்கோந்தீபமைந்தர் மரநிழலில் வசியோஞ்
சுகப்புணர்ச்சியசன வசனத்தருணஞ் செய்யோந்
துஞ்சலுணவிருமலஞ்சையோக மழுக்காடை
வகுப்பெடுக்கிற் சிந்துகசமிவை மாலைவிடுப்போம்
வற்சலந்தெய்வம்பிதுர் சற்குருவைவிடமாட்டோம்
நகச்சலமுமுளைச்சலழுந் தெறிக்குமிடமணுகோம்
நமனார்க்கிங்கேது கவைநாமிருக்கு மிடத்தே

பொருள்: 

பெருக்கும் துடைப்பத்தால் எழும் புழுதி உடல் மேல் படுமாறு நெருங்கி இருக்கமாட்டோம். இரவில் தீபத்தின் நிழல், மனிதர் நிழல், மர நிழல் இவற்றில் நிற்க மாட்டோம். பசியுடனும், உண்ட உணவு ஜீரணிக்கும் போதும் போகம் செய்ய மாட்டோம். உறங்குதல், உணவு புசித்தல், மலஜலம் கழித்தல், போகத்தில் ஈடுபடல், தலை வாருதலால் மயிர் உதிர்தல், ஆளுக்கு துணி இவைகளை அந்தி நேரத்தில் நீக்குவோம். பசுவையும், தெய்வத்தையும், பித்ருக்களையும், குருவையும் அந்தியில் பூஜிப்போம். நகத்திலிருந்தும், சிகையிலிருந்தும் நீர் தெளிக்குமிடத்தில் நெருங்கோம். இவற்றை எல்லாம் நாம் கடை பிடித்தால் எந்த நோயும் நம்மை அணுகாது, எனவே நோயை முன்வைத்து நம்மிடத்தில் நெருங்க எமனுக்கு எந்த அவசியமம் இருக்காது என்கிறார் தேரையர் சித்தர்!

Friday, June 26, 2020

நாகரீகவளர்ச்சி ஆரோக்கியமானதா?

நாகரீகவளர்ச்சி ஆரோக்கியமானதா???

💥#அரிசி_சோறு சாப்பிட்டா #சர்க்கரை ஏறும்னு சொல்லி சப்பாத்தி சாப்பிட சொன்னாங்க.😳

💥அப்புறம் அரிசியும் கோதுமையும் ஒண்ணுதான் , பழம் காய்கறி நிறைய சாப்பிடுங்க ன்னு சொன்னாங்க.

சரின்னு காய்கறி சாப்பிட ஆரம்பிச்சா #பூச்சி_மருந்து தெளிக்கறாங்க #ஆர்கானிக் காய் சாப்பிடுங்கன்னு கூவினாங்க.😳

💥போய் பாத்தா ஆனை விலை ,குதிரை விலை.இருந்தாலும் ஆரோக்கியம் பெரிசுன்னு கேட்ட காச கொடுத்தோம்.😳

💥இப்ப என்னன்னா ஆர்கானிக் எல்லாம் டுபாக்கூர் ,வாடின, வதங்கிய காய் தான் #ஓர்கானிக்ன்னு ஏமாத்துறாங்கன்னு துப்பு சொல்றாங்க.😡

💥#உப்பையும்_சாம்பலையும் #வேப்பங்குச்சியையும் வச்சு பல் விளக்கினோம். 😏

💥இல்ல இல்ல அப்படி பல் விளக்கினா எனாமல் தேஞ்சி போயிடும் பல் கூச்சம் வரும்.அதனால #பேஸ்ட் தான் நல்லதுனு சொன்னாங்க. 😨

💥அதையும் நம்பி பேஸ்ட் யூஸ் பண்ணுனா அவங்க சொன்ன எல்லாமே இப்ப வந்துடுச்சி....!!

கேட்டா உங்க பேஸ்ட்டுல உப்பு இருக்கா? கரி இருக்கா? வேம்பு மற்றும் இலவங்க எண்ணெயின் ஆற்றல் இருக்கானு கேக்குறான்.😡

💥ஏனுங்க பல் கூச்சம் வர வைக்கிறதும் நீங்க தான். அதுக்கு பேஸ்ட் விக்கிறதும் நீங்கதான?😡

💥அதைவிட கொடுமை ஒண்ணு இருக்கு...

#நாட்டு_சக்கரையை/வெல்லத்தை/#கருப்பட்டியை விட #சீனி(அஸ்கா) தான் சுத்தமானது சுவையானதுனு சொன்னீங்க... 😳

💥இப்ப அதுல ஊர்ல இருக்குற எல்லா கெமிக்கலும் இருக்கு. இப்ப அந்த சீனி மாதிரி விஷம் எதுவும் இல்லைனு சொல்லுறீங்க. 😡

💥என்னடா இது அக்கப்போருன்னு வெறும் #பச்ச_தண்ணி குடிக்கலாம்னா , அது ஆபத்து ..R .O டெக்னாலஜி ல சுத்தம் பண்ணின தண்ணி குடிங்கன்னு சொன்னாங்க. ஒரு மெசினை வாங்கி மாட்டினோம் உடனே அதல சத்து இல்ல , எலும்பெல்லாம் உடைஞ்சு போகும்னு இன்னொரு குரூப் பயம் காட்டுது. 😳

💥மறுபடியும் பச்ச தண்ணிய அப்படியே குடிக்க சொல்றீங்க.😏

💥மனசு நொந்து போய் உட்காந்தா வந்தது இன்னொரு குரூப் வந்து

மாடில தோட்டம் போட்டு நாட்டு காய்கறி விதைகளை போடு, பொடக்காலியில செடி நடு, ஆபிஸ்(ஹைபிரிட்) விதைகள் வேண்டாம், மரபு மாற்றப்பட்ட விதைகள் வேண்டாம்...உனக்கு தேவையான காய்களை நீயே வளர்த்து சாப்பிடு,நாட்டு கோழிவளர்த்தா முட்டையும்சிக்கனும் கிடைக்கும... தண்ணிய கொதிக்க வச்சு செப்பு அண்டாவுல ஊத்தி குடி ,ஒரு நோயும் வராதுன்னு சொல்றாங்க.... 

💥அடப்பாவிகளா முப்பது வருசத்துக்கு முன்னாடி இப்படி தானடா நாங்கள் எல்லோரும் வாழ்ந்தோம்..!!!

💥#பட்டணத்துக்கு வா பவிஷா வாழலாம் ன்னு சொல்லி வர வச்சுட்டு , பொய்யான தகவல்களை சொல்லி இப்ப திருப்பி எங்க முன்னொர்கள் சொன்னது எல்லாம் சரி, அவங்க செஞ்சது எல்லாம் சரினு சொல்றீங்களேங்க?????

#வயலும்வரப்பும்...

Tuesday, March 17, 2020

கொரோனா வைரசும் தமிழன் மறந்த தமிழர் நோய்த்தடுப்பு_மரபுகளும்

கொரோனா வைரசும் தமிழன் மறந்த தமிழர் நோய்த்தடுப்பு_மரபுகளும்  

1. இரு கை கூப்பி #வணக்கம் சொல்லியது.

2. #வாசல் முற்றத்தில்  நீரில் கால் கழுவி பிறகு வீடுநுழைந்தது.

3. #மாவிலை தோரணங்கள் கட்டியது.

4. #மஞ்சள் பூசி #குளித்தது தெளித்து விளையாடியது.

5. உணவில் மிளகு சுக்கு மஞ்சள் சேர்ந்தது.

6. #வாழை #இலையில் உணவு பரிமாறியது .

7. #வேப்பங்குச்சி #உப்பு கரி கொண்டு பல் துலக்கியது.

8. #வேப்பம் #இலையில் புகை போட்டது.

9. #மாட்டுச் சாணம் தெளித்து வாசல் பெருக்கியது.

10. வருடம் ஒரு முறை வீட்டிற்கு வெள்ளை அடித்தது.
     
11.#எலுமிச்சம் பழம் காய்ந்த மிளகாய் படிகாரம் உத்திரசங்கு இவைகளை தலை வாசலில் தொங்க விட்டது.

12. நெரிசல் மிக்க இடங்களில் இருந்து திரும்பியதும் உடைகளை கழற்றி வீட்டிற்கு வெளியே வைத்தது. பின்வாசல் வழியாக சென்று குளித்துவிட்டு வீட்டில் நுழைந்தது.

13. #வெற்றிலை பாக்கு போடுவதும்.

14. #கசாயம் ஊறல் குடிப்பதும்.

15. வெள்ளாவியில் உடை வெளுத்தது.

16.மரண வீட்டிற்கு சென்றுவந்தால் மஞ்சள் நீர் தெளித்து நீராடி வீட்டிற்குள் செல்லுதல்.

17.இறந்த பிரேதத்தை எரித்தது.

18. அம்மை வந்தால் வெப்பம்  பத்திரம் போடுதல்.

19. வீட்டு முற்றத்தில் துளசிச் செடியை நாட்டி வைத்தல்.

20. மாலை நேரம் வீட்டில் #சாம்பிராணி ஏற்றி புகை போட்டது. 

இவை அனைத்துமே கிருமியை தடுப்பதும் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதும் சுத்தமாக வாழ்வதுக்கு மட்டுமே தமிழனால் உருவாக்கப்பட்ட மரபு  என்பது புரியாமல் இன்று நடக்கும் பெரு அழிவில் பங்காளர்களாக இருக்கிறோம்

"நீ புதைத்ததை நீயே எடுத்துவிடு இல்லாவிட்டால் நீயே புதைக்கப்படுவாய்"

Thursday, March 12, 2020

தேங்காயை உடைத்த பின்புதான் அதன் குடுமியை உரிப்பது எதற்காக..?

#தேங்காயை உடைத்த பின்புதான் அதன் குடுமியை உரிப்பது எதற்காக..?

#சில பழக்க வழக்கங்கள் ஏன் எதற்கு என்று தெரியாது ஆனால் கண்டிப்பாக கடைபிடித்துவருவோம். 

#இயற்கையோடு ஒத்து வாழ்ந்து அதனை மதித்து வாழ்வது நம் மக்களின் பெருமை. 

#இயற்கை எல்லா விதத்திலும் ஆச்சர்யத்தை மறைத்து வைத்துள்ளது. 

#ஓர் அறிவு ஜீவன்களான #தாவரங்கள் கூட தன் இனப்பெருக்கத்தை உறுதி செய்ய  சூழ்நிலையை உறுதி செய்து முளைவிட்டு செழிக்கும்படியான விதைகளை #உற்பத்தி செய்து பரப்புகிறது. 

#ஒவ்வொரு #விதையும் முற்றியபின் தன் #தாயிடம் இருந்து முடிந்தவரை தள்ளிச் சென்று வேறூன்றி தழைத்துச் சந்ததியைப் பெருக்கத் தேவையான அனைத்து தகவமைப்புகளையும் கொண்டுள்ளது

#விதைகள் ரோமங்களில் ஒட்டிக்கொள்வது, வெடித்துச் சிதறுவது, #காற்றில் பரப்பது, பறவைகளுக்கு உணவாவது. தண்ணீரில் மிதந்து செல்வது என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. 

#அந்த விதத்தில் #தென்னை நீர்நிலையைச் சார்ந்த தாவரம் என்பதால் முற்றிய தேங்காய் #நீரில் மிதந்து வெகுதூரம் செல்லத்தக்கது. குறைந்தபட்சம் தென்னைமட்டை தூரமாவது தாய் #மரத்தை விட்டு விலகிச் சென்று விழும்படியான அமைப்பைக் கொண்டது. 

#தென்னை நெற்று முளைவிட வேண்டும் என்றால் குறிப்பிட்ட அளவிலான ஈரப்பதம் அதன் கண் பகுதியில் தொடர்ந்து இருந்துவரவேண்டும்.  அதனை உறுதிப் படுத்தவே #நீர் உறிஞ்சி தக்கவைத்துக் கொள்ளும்படியான நார்  தென்னை நெற்றைச் சுற்றி உள்ளது. குறிப்பிட்ட காலம் ஈரப்பதம் இருந்தால்தான்  அதன் காம்புப் பகுதி கழன்று நீர் உட்புகுந்து ஈரப்பதம் காக்கப்பட்டு கண் திறந்து முளைவிடும். 

#ஒவ்வொரு விதையும் ஒரு உயிரைத் தன்னகத்தே கொண்டுள்ளது.  அதனைப் போற்றும் விதமாக, நாம் பயன்படுத்தும் தேங்காயினை தேங்காய் உடைக்கும் வரை அதன் கண்களை மூடியிருக்கும்  குடுமியை உரிக்காமல் வைத்து உடைத்த பின்பே  உரிக்கிறோம். 

#கடைசி நேரத்தில் கூட அதன் முளைக்கும் தன்மையை நாம் பறிப்பதில்லை. உடைக்காதவரை எப்போது வேண்டுமென்றாலும் மீண்டும் விதைத்து மரமாக்கலாம்..

Saturday, March 7, 2020

இது என்ன கொடுமை? இப்படிக் கூட செய்வார்களா?


#குங்கிலியக்கலய_நாயனார்

இது என்ன கொடுமை? இப்படிக் கூட செய்வார்களா??

தெருவில் எல்லோரும் இதைப்பற்றி பெருமையாகப் பேசிக் கொள்கிறார்களே ஒருவருக்கு கூட உறுத்தவில்லையா...

நடந்து சென்றால் 10 மணி நேரத்தில் #திருக்கடையூரில் இருந்து திருப்பனந்தாள் சென்றுவிடலாம் . ஓடிவிடலாம் ஓட ஓட எப்படியும் 6 மணி நேரத்தில் அடைந்து விடலாம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அங்கிருக்க வேண்டும். மனது பதைபதைத்தது குங்கிலயக்கலயருக்கு.

தாடகை என்ற #பெண்ணின் பக்தியைப் பெரிதாகக் கருதிய இறைவன் அவளுக்காக சாய்ந்த நிலையில் இன்று வரை விளங்குகிறார். மன்னருக்கு இது தெரியாதா இல்லை இதை மற்றவர்கள் தான் சொல்லவில்லையா. சாய்ந்து உள்ள #லிங்கத்தை நிமிர்த்த யானைகள் குதிரைகள் கட்டி இழுக்கிறாராமே ...

#ஐயோ, எம்பெருமானே நான் கேள்விப்பட்டது வெறும் பொய்யாகத்தான் இருக்க வேண்டும். ஆட்சி அதிகாரம் இருந்தால் நினைத்ததை செய்யலாமா? குங்கிலயரின் மனது நிலைகொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தாலும் கால்கள் ஓடிக்கொண்டே இருந்தது.

#செம்பொன்னார் #கோவில் மணியோசை மற்ற நேரங்களில் நின்று கேட்கத் தோன்றும். இன்றோ அதையும் தாண்டி #ஓட்டம். வேள்விக்குடியே வேடிக்கை பார்த்தது. ஏதோ உச்சி வெயிலில் பைத்தியம் ஒடுகிறது என்று. இலக்கு தெரிந்தபடியால் வழி விசாரிக்கக் கூட அவசியம் இல்லை அதற்கு நேரமும் இல்லை.

இதோ திருப்பனந்தாள் எல்லையிலேயே கூட்டம் கூடி #வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டது. கேட்டது பொய்யில்லை. இந்த சம்பவம் நடந்துகொண்டு தான் இருக்கிறது. குங்கிலியர் மூச்சிரைக்க கோவில் வாசல் வந்து சேர்ந்தார். ஏற்கனவே #யானை #குதிரை எல்லாம் களைத்திருக்க சற்று கூட நிமிர்ந்து கொடுக்காமல் இருந்தபடியே இருந்தான் இறைவன். கைகளைப் பிசைந்தபடி மன்னர் கன்னிமூலை கணநாயகன் சந்நிதி முன் அமர்ந்துள்ளார்.

யாரைக் கேட்க நியாயம்? நியாயம் வழங்கும் மன்னவன் செய்யும் செயலா இது. நோக்கம் உயர்ந்ததாக இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்திய விதம் தவறு. போகட்டும்... இப்போது இது எதுவும் முக்கியமில்லை ... கடந்தது கடந்ததாகட்டும். இனி இந்த தவறு நடக்கக்கூடாது.

வேகமாக யானையைப் பிணைத்திருந்த பெருஞ்சங்கிலியை அவிழ்த்து தன்னுடைய கழுத்தில் கட்டிக்கொண்டார். கண்களில் இருந்து நீர் பெருகியது. இறைவா என் அருமை சிவமே அன்பினாலன்றி வெறும் கயிறால் வளைக்கமுடியுமா உன்னை அன்று அந்தப் பெண்மணியின் உயர்ந்த பக்திக்காக தாழ்ந்த உன் சிரம் நிமிரட்டும் இந்த மன்னனின் மனம் மாறட்டும் மக்களும் உன்னை ஒரு கல்லாகக் காணாமல் கருணைவடிவாய்க் காணட்டும். இது உனக்கு விருப்பமில்லாவிடில் எனது கழுத்து அறுபடட்டும் என மனம் விண்ணப்பித்தது. கூப்பிய கைகளும் மூடிய கண்களுமாக சங்கிலியை இழுக்க இதோ முற்றிலும் வளைந்திருந்த லிங்கம் மெதுவாக தலையை நிமிர்த்தியது.

யானைகள் குதிரைகளால் கட்டி இழுத்து முடியாததை சாதாரண மனிதனின் அன்பு சாதித்தது. கொற்றவன் குறுகினான். ஊர் குதூகலித்தது. அந்த இறையன்பர் எதுவும் நடவாதது போல திருக்கடையூர் திரும்பினார்

அவரது மெய்யன்பினை உலகம் உணர்ந்தது. இறைவன் மகிழ்ந்தார். தன்னைக் காட்டிலும் தன் அடியவர்கள் புகழப்படுவதை இறை விரும்புகிறது. 
வாழ்க குங்கிலியக்கலயர்

அன்று நடந்து முடிந்ததை இன்றும் மறவாமல் இருக்க விரலளவில் மொத்தத்தையும் கொண்டு நிறுத்தியிருக்கிறார்கள். சிற்பத்தைக் கண்டதும் நம் நெஞ்சு பதைக்கிறது. எவ்வளவு ஆழ்ந்த அன்பு. 

இடம்: தாராசுரம் ஐராவதேஸ்வரர் திருக்கோவில்

Sunday, January 26, 2020

Ourdreams


                                                          Our dreams