Thursday, March 12, 2020

தேங்காயை உடைத்த பின்புதான் அதன் குடுமியை உரிப்பது எதற்காக..?

#தேங்காயை உடைத்த பின்புதான் அதன் குடுமியை உரிப்பது எதற்காக..?

#சில பழக்க வழக்கங்கள் ஏன் எதற்கு என்று தெரியாது ஆனால் கண்டிப்பாக கடைபிடித்துவருவோம். 

#இயற்கையோடு ஒத்து வாழ்ந்து அதனை மதித்து வாழ்வது நம் மக்களின் பெருமை. 

#இயற்கை எல்லா விதத்திலும் ஆச்சர்யத்தை மறைத்து வைத்துள்ளது. 

#ஓர் அறிவு ஜீவன்களான #தாவரங்கள் கூட தன் இனப்பெருக்கத்தை உறுதி செய்ய  சூழ்நிலையை உறுதி செய்து முளைவிட்டு செழிக்கும்படியான விதைகளை #உற்பத்தி செய்து பரப்புகிறது. 

#ஒவ்வொரு #விதையும் முற்றியபின் தன் #தாயிடம் இருந்து முடிந்தவரை தள்ளிச் சென்று வேறூன்றி தழைத்துச் சந்ததியைப் பெருக்கத் தேவையான அனைத்து தகவமைப்புகளையும் கொண்டுள்ளது

#விதைகள் ரோமங்களில் ஒட்டிக்கொள்வது, வெடித்துச் சிதறுவது, #காற்றில் பரப்பது, பறவைகளுக்கு உணவாவது. தண்ணீரில் மிதந்து செல்வது என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. 

#அந்த விதத்தில் #தென்னை நீர்நிலையைச் சார்ந்த தாவரம் என்பதால் முற்றிய தேங்காய் #நீரில் மிதந்து வெகுதூரம் செல்லத்தக்கது. குறைந்தபட்சம் தென்னைமட்டை தூரமாவது தாய் #மரத்தை விட்டு விலகிச் சென்று விழும்படியான அமைப்பைக் கொண்டது. 

#தென்னை நெற்று முளைவிட வேண்டும் என்றால் குறிப்பிட்ட அளவிலான ஈரப்பதம் அதன் கண் பகுதியில் தொடர்ந்து இருந்துவரவேண்டும்.  அதனை உறுதிப் படுத்தவே #நீர் உறிஞ்சி தக்கவைத்துக் கொள்ளும்படியான நார்  தென்னை நெற்றைச் சுற்றி உள்ளது. குறிப்பிட்ட காலம் ஈரப்பதம் இருந்தால்தான்  அதன் காம்புப் பகுதி கழன்று நீர் உட்புகுந்து ஈரப்பதம் காக்கப்பட்டு கண் திறந்து முளைவிடும். 

#ஒவ்வொரு விதையும் ஒரு உயிரைத் தன்னகத்தே கொண்டுள்ளது.  அதனைப் போற்றும் விதமாக, நாம் பயன்படுத்தும் தேங்காயினை தேங்காய் உடைக்கும் வரை அதன் கண்களை மூடியிருக்கும்  குடுமியை உரிக்காமல் வைத்து உடைத்த பின்பே  உரிக்கிறோம். 

#கடைசி நேரத்தில் கூட அதன் முளைக்கும் தன்மையை நாம் பறிப்பதில்லை. உடைக்காதவரை எப்போது வேண்டுமென்றாலும் மீண்டும் விதைத்து மரமாக்கலாம்..

No comments:

Post a Comment