Saturday, January 29, 2022

மனிதர்கள் மூன்று வகை.


மனிதர்கள் மூன்று வகை.


சுயமாக முன்னுக்கு வருவதை விடப் பிறரைக் காப்பி அடித்து முன்னுக்கு வருவது சுலபம். பலர் இந்தப் பாதையைத்தான் விரும்புகிறார்கள். நான் இதை வெறுக்கிறேன். வித்தியாசமாக விளங்குவதுடன் வேறுபட்டு அரசியல் தனித் தன்மை காட்டுவதும் அவசியம். அவர்கள் பெறுகின்ற வெற்றி அசைக்க முடியாதது. இதுதான் கெüரவம். 

தெருவோரத்தில் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து மசால் வடைக் கடை போட்டு ஒருவர் காசு சம்பாதித்தால் இன்னொரு தமிழனுக்கு (இந்தியனுக்கு) பொறுக்காது. உடனடியாக அதே மாதிரி மசால் வடைக் கடையை எதிரிலேயே தொடங்கப் பார்ப்பான். உளுந்துவடை என்று கூட ஐட்டத்தை மாற்றமாட்டான். எதிர்க்கடை மசால் வடையை ஜெராக்ஸ் எடுத்த மாதிரி வடை போட்டு அடுத்தவன் வியாபாரத்தில் மண் அள்ளிப்போடுவார்கள். இந்த ஈனப்புத்தி தேவையில்லை.

"பெரிதே உலகம்; பேணுநர் பலரே' என்ற சங்கத் தமிழன் சொல்லை விளங்கிக் கொண்டு ஒன்றையே சாராமல் புதிது புதிதாகப் பலப்பல செய்து பணம் சம்பாதிக்கப் பழகுவது அவசியம்.

மனிதர்கள் மூன்று வகை.

1. எல்லோரும் செய்வதையே தானும் செய்து செத்துப் போகிறவர்.

2. எவரும் செய்யாததைத் தான் செய்து வாழ்ந்து காட்டுகிறவர்கள்.

3. எவரும் செய்யமுடியாததைச் செய்து மரணத்தைக் கொல்கிறவர்கள்.

இதில் நாம் எந்த வகை என்று பிரித்துப் பார்க்க வேண்டும்.

ஊரோடு ஒத்துவாழ், உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்ற அறிவுரையைத் தவறுதலாக அர்த்தம் செய்து கொண்டு பிறரைக் காப்பியடித்து வாழும் வாழ்க்கையை நான் வெறுக்கிறேன். எல்லோரும் செய்யாததைச் செய்பவராக இருப்பவர்களை மதிக்கிறேன். எவரும் செய்யாததைச் செய்பவர்களைத் துதிக்கிறேன்.

வயலினை வெறும் பக்கவாத்தியமாக வைத்திருந்த இசை உலகில் வயலினுக்குப் பக்கவாத்தியமாக முரட்டு மேளத்தை வைத்துக் கொண்டு அமர்க்களப் படுத்தியவர்கலைமாமணி குன்னக்குடி வைத்தியநாதன். தங்கள் அபூர்வ சாதனையில் வலையப்பட்டி சுப்பிரமணியன் அவர்களும் குன்னக்குடியும் ஈட்டிய புகழும் செல்வமும் ஏராளம். வித்யாசத்திற்கு உலகம் கொடுத்த வெகுமதி அது.

"லேடீஸ் அண்ட் ஜென்டில்மென்' என்று அமெரிக்காவில் அத்தனை பேரும் அரைத்த மாவையே அரைத்த போது "பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்' என்று வித்யாசமாக விளித்ததால்தான் விவேகானந்தர் கவனிக்கப்பட்டார். மதிக்கப்பட்டார். பின் துதிக்கப்பட்டார்.

எங்கும் எப்போது தனித் தன்மையுடன் வித்யாசமாக இருங்கள். நீங்கள் கவனிக்கப் படுவீர்கள்.

வித்யாசம் வேறு; விபரீதம் வேறு. வேறுபாட்டை விளங்கிக் கொள்ள வில்லை என்றால் வித்யாசமான விபரீதங்கள் உங்களுக்கு விளையும். அதையும் விளக்கிச் சொல்லி விடுகிறேன்.

புது மணத் தம்பதிகள் தேனிலவுக்கு எங்கே போவது என்று பேச்சு வந்தது. ""இதுவரை தேனிலவுக்கு வித்யாசமா எந்த ஜோடியும் போகாத இடத்துக்கு என்னைக் கூட்டிப் போகவேண்டும்'' என்றாள் மனைவி. ""ஸ்கூட்டரில் ஏறு'' என்று மனைவியைக் கூட்டிக் கொண்டு சுடுகாட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்து நிறுத்தினான் கணவன். ""சீச்சீ...சுடுகாட்டு ஹனிமூனா?'' சீறினாள் மனைவி. கணவன் ""அ...இந்த இடத்தை என்ன அவ்வளவு மட்டமா நினைக்கிறே? இங்கே வர்றதுக்கு அவனவன் சாவுறான்'' என்று சுடுகாட்டின் மேன்மையைச் சொன்னான். இது வித்யாசம் அல்ல. விபரீதம்.

உலக நாடுகளில் விடுதலைப் போர் நடத்திய எல்லாத் தலைவர்களும் கத்தி, துப்பாகிக்கி, பீரங்கி, கப்பல், விமானம் என்பதை நம்பிப் போராடினார்கள். குஜராத்திலிருந்து புறப்பட்ட அந்த ஒற்றை மனிதன் எந்த ஆயுதமும் எடுக்காமல் போர்க் களத்தில் புகுந்தான். ""இந்த நாடு என்னுடையது. உன்னுடையது அல்ல...'' என்ற ஒற்றை உண்மையை பிரிட்டிஷார் முன் வைத்துப் போராடினான். அந்த சத்தியத்தின் முன் எல்லா ஆயுதங்களும் கூர் மழுங்கிப் போயின. யார் அவர்? மகாத்மா காந்தி.

நிராயுதபாணியாய் நின்று போராடும் ஒற்றை மனிதனின் போராட்டத்தை வலிமை வாய்ந்த ஆயுதங்கள் வைத்திருக்கும் பிரிட்டிஷ் சர்க்காரால் நசுக்க முடியவில்லையா?'' என்று எதிர்க்கட்சிகள் பாய்ந்த போது சர்ச்சில் சொன்ன பதில் ஆழமானது. ""அந்த மனிதன் கத்தியை எடுத்தால் நான் துப்பாக்கியை எடுப்பேன். துப்பாக்கியைத் தூக்கினால் நான் பீரங்கியால் நசுக்கியிருப்பேன். பீரங்கி எடுத்துப் போராடினால் நான் குண்டுமழை பொழிந்து அழித்திருப்பேன். அவர் சத்தியத்தை அல்லவா எடுத்துக் கொண்டு போராடுகிறார். சத்தியத்தை எதிர்க்கும் ஆயுதம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை நண்பருக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்'' என்றார் சர்ச்சில்.

வித்யாசமான ஆயுதத்தைக் கையில் எடுத்தார். காந்தி கவனிக்கப்பட்டார். உலகம் தொடங்கிய நாள் முதல் இன்றுவரை உலகத்தைப் பாதித்த 100 பேர் என்ற பட்டியல் எழுதினால் அதில் மகாத்மா காந்தியும் ஒருவர். உலக வரலாறு அவரை ஒருபோதும் ஒதுக்காது.
வித்யாசமாக விளங்குபவர்கள் கவனிக்கப்படுவார்கள். விபரீதமாக இருப்பவர்கள் விலக்கப்படுவார்கள்.

பத்தாயிரம் ரூபாய் பட்டுப் புடவையுடன் பல பேர் பவனி வரும் திருமண வீட்டில் பளிச்சென்று கைத்தறிப் புடவையைக் கஞ்சி போட்டு கட்டிக் கொண்டு ஒற்றை ரோஜாவைத் தலையில் வைத்திருக்கும் பெண்ணாக இருங்கள். சகோதரிகளே.... நீங்கள் கண்டிப்பாகக் கவனிக்கப்படுவீர்கள்.

வித்தியாசமாக இருங்கள். வெற்றி நிச்சயம்!வணக்கம்
#சுந்தா்
#அருணகிாி

புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு என்ன?

புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு என்ன? 

புத்தியில்லாத பெண் கணவனை அடிமைப்படுத்தி கடைசி வரைக்கும் அடிமையுடனே வாழ்கிறாள். புத்தியுள்ளவள் அவனை ராஜாவாக்கி ராணியாக வாழுகிறாள்.

புத்தியில்லாதவள் எதற்கெடுத்தாலும் அழுது, நாடகம் நடத்தி, ட்ரிகர் பண்ணி, செத்து போயிடுவேனு மிரட்டி ப்ளாக் மெயில் பண்ணி அவனை கோழையாக்கி கோழையுடன் வாழுவாள். புத்தியுள்ள பெண் அவனுக்கு சுதந்திரம் அளி த்து, தன்னிடம் இருக்கும் தைரியத்தையும் மகிழ்ச்சியையும் அவனுடன் பங்கிட்டு தைரியசாலி கணவனுடன் தைரியமாக வாழுவாள்.

புத்தியில்லாதவள் என் வீட்டில் நான் அப்படி வாழ்ந்தேன் இப்படி வாழ்ந்தேன் என்று முடிந்து போனதை கணக்கிட்டு கையில் இருப்பதை ஏற்றுக் கொள்ள மறுத்து வாழ்கிறாள். புத்தியுள்ள பெண் எதைக் கையில் கொடுத்தாலும் அதை அழகாக்க முயற்சிக்கிறாள். இடிந்து போன வீட்டை இவள் கட்டுகிறாள். நன்றாக இருக்கும் வீட்டையும் அவள் சிதைத்துவிடுகிறாள்.

புத்தியுள்ள பெண் வருமானத்திற்குள் செலவு செய்து மீதம் எடுக்கிறாள். புத்தியில்லாதவள் ஆடம்பரத்திற்கு வாழ்க்கையை அடகு வைத்து கண்ணீர் சிந்துவாள்.

புத்தியுள்ள பெண் நிதானமாகவே செயல்படுவாள். கண்ணாடி குவளையை கையில் ஏந்தி நின்றாலும் உடைத்து விட மாட்டாள். புத்தியில்லாதவள் பொன் குடத்தையும் உடைத்து விடுவாள். நிதானம் இவர்களின் அடையாளம்.

புத்தியுள்ள பெண் பகைவரை சம்பாதிக்க விரும்ப மாட்டாள். 

புத்தியில்லாதவளுக்கோ அண்டை வீட்டுக் காரரும் எதிராளிகளே.
புத்தியுள்ள பெண் வீட்டாருக்கு ஆகாரம் அளிக்கிறாள், வேலைக்காரர்களுக்கு படி அளக்கிறாள். புத்தியில்லாத பெண் வேலைக்காரியாகவே வாழ்ந்து முடித்து விடுவாள்.

புத்தியுள்ள பெண் தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் அழகாக்கி அழகான குடும்பத்தை சமூகத்தில் முன் நிறுத்துகிறாள். புத்தியில்லாதவளுக்கு சுத்தம், தூய்மை அழகு பற்றிய அக்கறை இருப்பதில்லை.

புத்தியுள்ள பெண் தனக்கானதை எடுத்துக் கொள்கிறாள். புத்தியில்லாதவள் என் கனவிற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள் என ஆதங்கப்படுகிறாள்.

புத்தியுள்ள பெண் திருமணம் என்னும் ஒரு நாள் கூத்திற்காக வேலையை இராஜினாமா செய்வதில்லை. புத்தியில்லாதவள் திருமணம் நிச்சயிக்கப்பட்ட காரணத்திற்காகவே வேலையை விட்டு விட்டு ஆறு மாதம் கழித்து வேலை தேடி அழைகிறாள்.

புத்தியுள்ள பெண் உருவாக்குகிறாள். புத்தியில்லாதவள் அழித்து போடுகிறாள்.

புத்தியுள்ள பெண் தன் மக்களை கொண்டாடுகிறாள். புத்தியில்லாதவள் நீ எல்லாம் எங்கே உருப்பட போற? என்று தன் மக்களை சபித்துக் கொண்டே இருப்பாள்.

புத்தியுள்ள பெண் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் குடும்பத்தினரின் தவறுகளை சுட்டி காட்ட மாட்டாள். புத்தியில்லாதவள் அனைவரின் முன்னிலையிலும் குழந்தையை திட்டுவார், அசிங்கப்படுத்துவார்.

புத்தியுள்ள பெண் குடும்பத்தினரை சரி செய்வாள். புத்தியில்லாதவள் குடும்பம் தான் சமூகம் என்ற அறிவில்லாமல் இருப்பாள்.

புத்தியுள்ள பெண் குடும்பத்தினருக்கும் உடன் இருப்பவர்களுக்கும் தைரியத்தையும், நம்பிக்கையையும் அளிப்பாள். புத்தியில்லாத பெண்ணுடன் இருப்பவர்களுக்கு இருட்டு கூட பயம் தான்.

புத்தியுள்ள பெண் சேகரிப்பாள், பாதுகாப்பாள், பத்திரப்படுத்துவாள். புத்தியில்லாதவள் தொலைப்பாள், உடைப்பாள் தூக்கி எறிவாள்.
சுறுசுறுப்பு புத்தியுள்ள பெண்ணின் மற்றொரு அடையாளம். புத்தியில்லாத பெண்ணின் வீட்டின் அடையாளம் சிலந்தி கூடுகளே.

புத்தியுள்ள பெண் இந்த வாழ்க்கை மிகச்சிறந்த வாழ்க்கை என நம்புகிறாள். புத்தியில்லாதவள் பிறருடன் ஒப்பிட்டு பார்க்கிறாள்.

புத்தியுள்ள பெண் உட்கார்ந்து வரவு செலவு கணக்கை கணக்கிடுகிறாள். புத்தியில்லாதவள் கணக்கிட்டு பார்க்கவும் சோம்பேறித்தனப்படுகிறாள்.

புத்தியுள்ள பெண் எல்லாருடனும் ஒரு சிறிய இடைவெளியை கடைபிடிக்கிறாள் தன்னை பாதுகாக்கிறாள். புத்தியில்லாதவள் எல்லாரையும் தன் முதல் வட்டத்திற்குள் வந்து செல்ல அனுமதிக்கிறாள்.

புத்தியுள்ள பெண் "நோ" சொல்ல தைரியம் கொண்டிருக்கிறாள். புத்தியில்லாத பெண் தன்னை கெட்டவளாக நினைத்துவிடுவார்களோ என்று அச்சம் கொள்கிறாள்.

புத்தியில்லாதவள் குற்றப்படுத்திக் கொண்டே இருப்பாள். புத்தியுள்ளவளின் கண்களுக்கு தவறு செய்தல் மனித இயல்பு என்பது தெரியும்.

புத்தியில்லாதவள் என்றோ செய்த தவறை இன்றும் நினைவில் வைத்து காயப்படுத்துவாள். மனதை காயப்படுத்துவதில் இவளுக்கு ஒரு மகிழ்ச்சி. புத்தியுள்ள பெண் எப்பொழுதுமே பாராட்டுபவளாக தான் இருப்பாள்.

புத்தியுள்ளவள் தவறை கடிந்து கொள்வாள். புத்தியில்லாதவள் தவறுக்கு ஒத்துழைப்பு தருவாள்.
புத்தியுள்ள பெண் எதையும் இரட்டிப்பு ஆக்குவாள். புத்தியில்லாதவள் எதை செய்தாலும் நஷ்டம் தான் முடிவு.

புத்தியுள்ள பெண் குழந்தைகளையும் கனப்படுத்துவாள், உயர்வாக எண்ணுவாள். புத்தியில்லாதவளுக்கோ 80 வயது பெரியவர்களின் அருமை தெரிவதில்லை. அவர்களின் முதுமையை கொண்டாடாமல் உதாசினப்படுத்துவாள்.

புத்தியுள்ள பெண் மீதம் எடுக்க சமைப்பாள். புத்தியில்லாதவளோ மூன்றுக்கு பதில் ஏழு பேர் வந்து விட்டால் செய்வதறியாது திகைப்பாள்.

புத்தியுள்ள பெண் பத்திரப்படுத்துவாள். புத்தியில்லாதவள் எப்பொழுதும் அதை எங்கே வைத்தோம் இதை எங்கே வைத்தோம் என தேடிக் கொண்டே இருப்பாள். தேடுவதிலே பாதி நேரத்தை விரயம் செய்வாள்.

புத்தியுள்ள பெண் மனிதர்களின் மேன்மையை உணர்ந்தவள். புத்தியில்லாதவள் குடும்பத்தினரையும் அண்ட விடுவதில்லை…

புத்தியுள்ளவளின் முகம் எந்த சூழ்நிலையிலும் புன்னகைக்கும். புத்தியில்லாதவளின் முகத்தில் எப்பொழுதும் ஒரு எரிச்சல் இருக்க தான் செய்கிறது

Thursday, January 27, 2022

யானையிடம் ஏன் ஆசீர்வாதம் வாங்குகிறோம்

 யானையிடம் ஏன் ஆசீர்வாதம் வாங்குகிறோம்? 

அதன் பின் உள்ள ஆன்மிக காரணங்கள்.


உணவிற்காக நடந்து கொண்டே இருக்கும் யானைகள் போடக்கூடிய எச்சத்தில் பல விதைகள் முளைத்து மீண்டும் மரமாக்கும் வல்லமையுடன் கூடியதாக இருக்கிறது.

இரண்டு நாசித் துவாரங்கள் வழியாக சுவாசிக்கக்கூடிய தன்மை யானைகளுக்கு மட்டுமே உண்டு.

யானை நம் தலையில் தொட்டு ஆசி வழங்கும் போது நாம் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

காட்டை உருவாக்குவதில் மிகப்பெரிய பங்கு யானைகளுக்கு உண்டு. ஆம் ஒவ்வொரு நாளும் தன் உணவைத் தேடி பல கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்யக்கூடிய யானைகள், வழியில் கிடைக்கும் உண்ணத்தக்க மரம், செடி, கொடி, காய், பழங்கள் என அனைத்தையும் உண்கின்றன.


உணவிற்காக நடந்து கொண்டே இருக்கும் யானைகள் போடக்கூடிய எச்சத்தில் பல விதைகள் முளைத்து மீண்டும் மரமாக்கும் வல்லமையுடன் கூடியதாக இருக்கிறது. அதனால் யானைகள் பயணம் செய்யக்கூடிய தூரம் வரை சில நாட்களில் அதன் எச்சத்திலிருந்து பல புதிய மரம், செடி, கொடிகள் என பல தாவரங்களை உருவாகின்றன. இது காடுகளை உருவாக்க முக்கிய காரணமாக அமைகின்றன.


எல்லா கடவுளும் ஃபிட்டா இருக்கறப்போ ஏன் விநாயகர் மட்டும் தொந்தியோட இருக்கார்? அதோட ரகசியம் தெரியுமா?


தினமும் மூலிகை தாவரங்களை உண்ணக்கூடிய பெரிய மிருகங்களில் மிகவும் பலனைத் தரக்கூடிய விலங்கு யானை. இது காட்டு விலங்காக இருந்தாலும் அதை பழக்கப்படுத்தினால் மனிதனுடன் மிகவும் நெருங்கிப் பழகக்கூடியது. மேலும் மிகவும் தெய்வீக அம்சங்கள் நிறைந்தது.


யானைகள் ஏன் தெய்வீகமாக பார்க்கப்படுகிறது?

பல அதிசயத்தக்க விஷயங்கள் அடங்கியுள்ள யானை ஒரே நேரத்தில் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாக சுவாசிக்கக்கூடிய தன்மை யானைகளுக்கு மட்டுமே உண்டு.


32 வடிவங்களில் அருளும் விநாயகரும் அதன் சிறப்பம்சம் பற்றி உங்களுக்கு தெரியுமா?


மனிதர்கள் கூட 24 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு நாசித்துவாரத்திலிருந்து, மற்றொரு நாசித் துவாரத்திற்குச் சுவாசம் மாறிக் கொண்டே இருக்கும்.


சுவாசத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய அல்லது முறைப்படுத்தக்கூடிய ஆன்மிக பயிற்சிக்கு சரகலை என்று பெயர்.


எந்த பொருளில் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?


இந்த ஆன்மிக சுவாசப் பயிற்சியை முன்னேற்றக்கூடிய விஷயங்களுள் ஒன்று தான் பிராணாயாமம், வாசியோகம் போன்ற யோகாசன பயிற்சிகளாகும்.


யோகாசனத்தில் மிகவும் பயிற்சி பெற்றவர்கள், அதிலும் வாசியோகம், பிராணாயாமத்தில் அதிக பயிற்சி எடுத்து, குறிப்பிட்ட மேல் நிலையை அடைந்தவர்கள் மட்டுமே ஒரே நேரத்தில் அல்லது எப்போதும் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாகவும் சுவாசிக்கும் ஆற்றலைப் பெற்றுவிடுகின்றனர். இதற்கு சுழுமுனை வாசி யோகம் என்று பெயர்.


யானை முகம் இன்றி மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர் கோயில் சிறப்புகள்!

OurDreams


அப்படிப்பட்ட சுழுமுனை வாசி யோகம் உள்ள யானைகள் அதன் தும்பிக்கையை நம் தலையில் தொட்டு ஆசி வழங்கும் போது நாம் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.


இப்படிப்பட்ட தெய்வீகத்தைப் பொருந்திய யானைகளிடம் ஆசி பெறுவதால் நமக்கும் தெய்வீக அருள் கிடைக்கும்

Thursday, December 9, 2021

ஒரு பெண் ஒரு மகானிடம்

ஒரு பெண் ஒரு மகானிடம்... "என் கணவருக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வருகிறது, என்னை அவர் புரிந்துகொள்ளவதில்லை, தினந்தோறும் எங்களுக்குள் பிரச்சினையாகவே பொழுது விடிகிறது, என் திருமண வாழ்க்கை நிம்மதி பெற எனக்கு ஏதாவது யோசனை சொல்லுங்கள்!" என்றாள்... ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு மகான் சொல்கிறார்...

"ஊருக்கு வெளியே இருக்கும் காட்டில் ஏதாவது ஒரு விலங்கிற்கு 30நாள் உணவு கொடு... 30 நாட்களுக்கு பிறகு என்னை வந்து பார் உன் பிரச்சினைக்கான வழியை சொல்கிறேன்!" என்றார்... குழப்பத்தில் இருந்தவள், "தன் கணவருக்கும் தனக்கும் சண்டையில்லாத நிம்மதியான வாழ்க்கை கிடைத்தால் போது!" என்ற எண்ணத்தில் தைரியத்துடன்... 

மகான் சொல்லியது போல... அடர்ந்த காட்டிற்குள் சென்று தான் கொண்டு வந்த மாமிசத்தை ஒரு இலையில் வைத்துவிட்டு தூரத்தில் ஒரு மரத்திற்கு பின்னால் ஒழிந்து கொண்டாள்... மாமிசத்தின் வாடை காடெங்கும் வீச வெகுநாட்களாக அங்கு இறை கிடைக்காத ஒரு புலிக்கு அந்த உணவு கிடைத்தது... இப்படியே தினமும் மாமிசம் வைப்பது அந்த நேரத்தில் சரியாக புலி வருவது... என நாட்கள் பல ஓடியது... 20நாட்களுக்கு பிறகு அப்பெண் மாமிசம் வைக்கும் அதே இடத்தில் புலி படுத்திருந்தது... 
இப்பெண்ணை கண்டு புலி ஏதும் செய்யவில்லை... பணிவுடன் அப்பெண்ணிடம் பணிந்து போனது... மாமிசத்தை வைத்துவிட்டு அவள் விருட்டென ஓடியேவிட்டாள்... 30வது நாளில் புலியிடமே தைரியமாக சென்று மாமிசம் வைத்தாள், உணவு உண்ட புலி அப்பெண்ணின் மடியிலேயே பாசமாக படுத்துக்கொண்டது...  31வது நாளில் அப்பெண்ணின் பின்னாலே அந்த புலி ஊருக்குள் வந்துவிட்டது புலியை கண்டு மக்கள் தெறித்து ஓட அப்பெண்ணிற்கோ பயமில்லை அந்த புலி  பூனை போல அவள் காலை சுற்றி சுற்றி வந்தது, இது என்ன சோதனை என்று முழி பிதிங்கியவள்... நேராக மகானை சந்திக்க வந்தாள், புலியுடன் வந்த பெண்ணை பார்த்தவர்கள் ஆங்காங்கே தெறித்து ஓடீவிட்டனர்...

"பார்த்தீர்களா குரு! பிரச்சினையை தீர்க்க நான் உங்களிடம் வந்தேன். இப்போது மேலும் ஒரு புதிய பிரச்சினையை எனக்கு உருவாக்கிவிட்டீர்கள், இந்த புலி பூனையாகவே மாறிவிட்டது என் காலை சுற்றி சுற்றி வருகிறது!" என்றாள்... மென்மையாக சிரித்த அந்த மகான்... 

"ஒரு உயிரை கொன்று உண்ணும் இந்த கொடிய விலங்கையே உன் அன்பினால் பூனையாக மாற்றிவிட்டாய், உன் கணவர் இந்த புலியை விடவா கொடிய குணம் கொண்டவர்!" என்றார். 

மகானின் சொல்லில் உண்மை அறிந்தவள், அன்புதான் எல்லாவற்றையும் எல்லோரையும் மாற்றிவிடும் என்பதை உணர்ந்தாள். 

நேசியுங்கள்_நேசிக்கப்டுவீர்கள்.

Saturday, September 4, 2021

வாழ்வில் ஒரு முறையாவது தரிசித்து விடுங்கள்

வாழ்வில் ஒரு முறையாவது தரிசித்து விடுங்கள்!

ஆவுடையார் கோயில்  -  ஆத்மநாதசுவாமி கோயில்

திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில் (Avudaiyarkoil) இந்திய மாநிலமான தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவுடையார் கோயில் வட்டத்திலுள்ள, தேவார பாடல் பெற்ற கோயில் ஆகும்.

மூலஸ்தானத்தில், சுவாமி - அம்பாள் சிலைகள் இருப்பது தான் வழக்கம்; ஆனால், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகிலுள்ள ஆவுடையார்கோவிலில் சிவலிங்கத்துக்கு பதிலாக குவளையும்,
அம்பாளுக்கு பதிலாக பாதமும் மட்டுமே உள்ளது.

பொதுவாக, சிவாலய மூலஸ்தானங்களில், ஆவுடையார் மீது லிங்கம் இருக்கும்; ஆனால், இங்கு, வெறும் ஆவுடையார் மட்டுமே உள்ளது.
லிங்கம் இருக்க வேண்டிய இடத்தில் குவளை சாத்தப்பட்டுள்ளது.
குவளை உடலாகவும், உள்ளிருக்கும் உருவமற்ற பகுதி ஆத்மாவாகவும் கருதப்படுவதால், சுவாமிக்கு, ' என பெயர் வந்தது.

கோவில்களில் தீபாராதனை தட்டைத் தொட்டு, பக்தர்கள் கண்ணில் ஒற்றிக் கொள்வர். ஆனால், இங்கு, சுவாமிக்கு தீபாராதனை செய்த தட்டை வெளியில் கொண்டு வருவதில்லை. ஆவுடையாருக்கு பின்புறம் வெள்ளை, சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் மூன்று தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளன. வெள்ளை நிறம் சூரியனாகவும், சிவப்பு - அக்னியாவும், பச்சை நிறம், சந்திரனாகவும் கருதப்படுகின்றன.

சுவாமிக்கு சிலை இல்லை என்பதால், அவரது மூன்று கண்களை குறிக்கும் விதமாக இந்த தீபங்களை ஏற்றுகின்றனர். இவற்றை வணங்கினாலே தீபாராதனை தட்டை வணங்கியதற்கு சமம் என்பதால், அதை வெளியில் கொண்டு வருவதில்லை.

அதேபோன்று, பொதுவாக, சிவன் கோவில்கள் கிழக்கு நோக்கியும், சில
மேற்கு பார்த்தவாறும் இருக்கும். ஆனால், ஆவுடையார் கோவில் தெற்கு நோக்கி உள்ளது.

சிவன், குருவாக இருந்து, தெற்கு நோக்கி அமர்ந்து உபதேசிக்கும்
நிலையை, தட்சிணாமூர்த்தி என்பர்.

'(தட்சிணம்)' என்றால் தெற்கு; சிவன்,

மாணிக்கவாசகருக்கு குருவாக உபதேசம் செய்த தலம் என்பதால், தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

சூரிய, சந்திர கிரகணங்களின் போது கோவில்களில் நடை சாத்தப்படுவது வழக்கம்.
ஆனால், இங்கு கிரகணநாளில், ஆறு கால பூஜை நடைபெறுகிறது. ஆதியந்தம் இல்லாத உருவமற்ற சிவனுக்கு, எக்காரணத்தாலும் பூஜை தடைபடக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்கின்றனர்.

அம்பாளின் பெயர் யோகாம்பாள்; இவளுக்கும் உருவம் இல்லை.
சிவனை மீறி, தட்சனின் யாகத்திற்கு சென்றதற்கு மன்னிப்பு பெறுவதற்காக, இத்தலத்தில் யார் கண்ணுக்கும் தெரியாமல், உருவத்தை மறைத்து தவம் செய்தாள். எனவே, அம்பாளுக்கும் விக்ரகம் இல்லை.
அவள் தவம் செய்த போது பதிந்த பாதத்திற்கு மட்டுமே பூஜை நடைபெறுகிறது. பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இப்பாதத்தை கண்ணாடியில் பிரதிபலிக்க செய்துள்ளனர்.

இவளது சன்னிதி அடைத்தே இருக்கும் என்பதால், சன்னிதி முன் உள்ள ஜன்னல் துவாரம் வழியாகத்தான் பாதத்தை தரிசிக்க முடியும்.

ஆத்மநாதர் முன் உள்ள படைக்கல்லில், புழுங்கல் அரிசியில் சமைத்த
சூடான சாதத்தை ஆவி பறக்க கொட்டுவர்.

அப்போது சன்னிதி கதவுகள் சாத்தப்பட்டு, சிறிதுநேரம் கழித்து திறக்கப்படும்.

சுவாமி உருவமற்றவர் என்பதால், உருவமில்லாத ஆவியுடன் நைவேத்யம் படைக்கப்படுகிறது.

இது தவிர பாகற்காய் மற்றும் கீரையும் நைவேத்தியமாக படைக்கப்படும்.

வித்தியாசமான நடை முறைகள் கொண்ட இக்கோவிலை, வாழ்வில் ஒரு முறையாவது தரிசித்து விடுங்கள்!

1100 ஆண்டுகளுக்கு முந்திய கோயில்!

ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே எழுப்பப்பட்ட இந்தக் கவிபாடும் கலைக் கூடத்தின் சிறப்புகளை ஒன்றிரண்டு வரிகளிலே
சொல்லி அடக்கி விட முடியாது.

அடங்காமை என்று கூறுவார்களே அந்த அடங்காமை இந்த ஆவுடையார்கோயிலுக்கு மிகவும் பொருந்தும். புதிதாகக் கோயில்கள் கட்டுகிற ஸ்தபதியார்கள் கூட ஆவுடையார்கோயில் சிற்ப அடங்கலுக்குப் புறம்பாக என்று தங்களது ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு எழுதுவதிலிருந்தே
இந்தக் கோயிலின் கலைத்திறன் வேறு எந்தக் கோயிலிலும் அடங்காது என்பது தெளிவாகும்.

மாணிக்கவாசகர் சோதியிலே கலந்துள்ளார்

இதே போல இக்கோயிலின் சிறப்புக்களைக் கூறத்தலைப்பட்டால்
அது ஏட்டில் அடங்காது.

இந்தக் கோயிலிலே மற்ற சிவாலயங்களில் இருப்பது போல கொடிமரம் இல்லை. பலி பீடமும் இல்லை. நந்தியும் இல்லை. சுவாமிக்கு உருவமும் இல்லை.

இன்னும் சொல்லப்போனால் இங்கு வருகின்ற பக்தர்களுக்கு மற்ற கோயில்களைப் போல தீப ஆராதனையினைத் தொட்டு வணங்க அனுமதிப்பதும் இல்லை. மாணிக்கவாசகர் சோதியிலே கலந்துள்ளார் என்பதாலேயே தீபம் தருவதில்லை.

கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமகனார் பாடிவைத்தது

கடல் கிழக்கு தெற்கு கரைபெரு வெள்ளாறு
குடதிசையில் கோட்டைக் கரையாம் - வடதிசையில்
ஏனாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம்
சோனாட்டிற் கெல்லையெனச் சொல்

என்றும்

வெள்ளாறதுவடக்காம் மேற்குப் பெருவெளியாய்
தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் - உள்ளார
ஆண்ட கடல் கிழக்காம் ஐப்பத் தறுகாதம்
பாண்டிநாட் டெல்லைப் பதி

என்றும்

கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமகனார் பாடிவைத்தார்
தெற்கு கரை பெரு வெள்ளாறு வெள்ளாறு வடக்காம் என்று வருகின்ற
சோழ நாட்டின் தெற்கு எல்லையாகவும் பாண்டிய நாட்டின் வடக்கு எல்லையாகவும் இருந்து சிறப்புப் பெற்ற அந்த வெள்ளாறு இன்றளவும் குன்றாச் சிறப்போடு விளங்குகிறது.

அதற்குக் காரணம் கவிச்சக்கரவர்த்தி கம்பனால் பாண்டிய நாட்டின் எல்லையென கூறப்பட்டுள்ள வெள்ளாற்றின் தென்கரையிலே பாண்டிய நாட்டு மன்னனாகிய அரிமர்த்தன பாண்டியரின் அமைச்சராக இருந்த மாணிக்கவாசகரால் எழுப்பப் பெற்ற திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில் இன்றளவும் வாழ்வாங்கு வாழ்ந்து வளரும் தமிழ்கலைக்குக் கட்டியம் கூறுவது போல அமைந்திருப்பதே ஆகும்.

இங்குள்ள தேர் தமிழகத்திலுள்ள பெரிய தேர்கள் சிலவற்றில் ஒன்றாகும். திருநெல்வேலி,  திருவாரூர், ஆவுடையார்கோயில் ஆகிய ஊர்களில்
உள்ள தேர்கள்தான் தமிழகத்தில் உள்ள கோயில்களின் தேர்களில்
மிகவும் பெரிய தேர்களாகும்.

இந்த தேர்ச் சக்கரத்தின் குறுக்களவு மட்டும் 90 அங்குலம் ஆகும்.
சக்கரத்தின் அகலம் 36 அங்குலமாகும்.

50 முதல் 500 பேர் வரை கூடினால் எந்தத் தேரையும் இழுத்து விடலாம். ஆனால் இந்த ஆவுடையார்கோயில் தேரை இழுக்க சுமார் 5000 பேர் கூடினால்தான் இழுக்க முடியுமாம். இதிலும் அதன் அடங்காத் தன்மை வெளிப்படுகிறது.

50 ஆண்டுகள் ஆகியும் இந்த ஆவுடையார்கோயில் தேர் அப்படியே
நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கல்லோ - மரமோ - காண்போர் வியப்பர்

இந்த ஆவுடையார்கோயிலுக்குள் என்னென்ன அதியற்புத வினைத்திறன் கொண்ட கற்சிலைகள் இருக்கின்றனவோ அவை அனைத்துமே மரத்திலும் செய்து இந்தத் தேரில் எட்டுத் திசையும் பொருத்தி இருப்பதைக் கண்ணுறும் போது இந்தச் சிலைகள் கல்லோ மரமோ என வியக்கத் தோன்றும்.

வடக்கயிறு:-

இந்தத் தேரை இழுப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட வடக்கயிற்றை நமது இரு கைகளாலும் இணைத்துப் பிடித்தால்கூட ஒரு கையின் விரல் இன்னொரு கையின் விரலைத் தொடாது. இரு கைகளால் பிடிக்கும் போது வடக்கயிறு நமது கைக்குள் அடங்காது. இதிலும் அதன் அடங்காத்தன்மை பளிச்செனத் தெரியும்.

உருவம் இல்லை - அருவம்தான்:-

தமிழகத்திலுள்ள ஆலயங்கள் எல்லாவற்றிலுமே உருவ வழிபாடுதான் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த ஆத்மநாதர் ஆலயத்தில்
மட்டுந்தான் அருவ வழிபாடு நடைபெற்று வருகிறது. மூலஸ்தானத்தில்
எந்த விதச் சிலையும் கிடையாது.

அப்படிப் பார்த்தாலும் இது மற்ற கோவில்களில் அடங்காத கோயில்
என்பது சொல்லாமலே விளங்கும்.

பூதம் கட்டிய கோயில்:-

ஆவுடையார் கோயிலை பூதம்தான் கட்டிற்று என்று இவ்வட்டார மக்களின் நம்பிக்கை. பெரிய பாறைகளைக் கொண்டு வந்து தூண்கள் அமைத்தும் சிலைகள் வடித்தும் கொடுங்கைக் கூரைகள் இணைத்தும் மதில் சுவர்கள் கோபுரங்கள் எழுப்பியும் வைக்கப்பட்டுள்ளது.

கொடுங்கை:-

கோயிலின் தாழ்வாரத்திலுள்ள கொடுங்கைகள்  கல்லை தேக்கு மரச்சட்டம் போல் இழைத்து அதில்  (கம்பிகளை இணைத்துச் சேர்த்து அதிலே குமிழ் ஆணிப்பட்டை ஆணிகள் அறைந்திருப்பது போல) எல்லாமே கல்லில் செய்து அதன் மீது மெல்லிய ஓடு வேய்ந்திருப்பது போல செய்திருப்பது சிற்பக்கலை வியக்கத் தக்க ஒப்பற்ற திறனாகும்.

ஒரு கல்லுக்கும் மறு கல்லுக்கும் எப்படி எந்த இடத்தில் இணை சேர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு அமைக்கப்பட்டுள்ள இந்தத் தாழ்வாரம் எனப்படும் கொடுங்கைக்கூரை
ஆனது மொத்தம் பதிமூன்றரை அடி நீளமும் ஐந்தடி அகலமும்
இரண்டரையடி கனமும் உள்ளதாகும்.

இந்த இரண்டரையடி கனத்தை இப்படி தாழ்வாரக் கூரையாக்கி
செதுக்கிச் செதுக்கி ஒரு அங்குல கன்னமுள்ள மேலோடு அளவிற்குச் சன்னமாக்கப்பட்டிருக்கிறது.

திருவலஞ்சுழி பலகணி, திருவீழிமழலை வௌவால்நத்தி மண்டபம், ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் கொடுங்கை போன்ற கட்டிடப்பணி தவிர்த்து பிற வகையிலான கட்டட அமைப்புகளை கட்டித்தருவதாக கட்டிடக்கலைஞர்கள் உறுதி கூறுவதாகக் கூறுவதுண்டு. இதன்மூலமாக கட்டிடக்கலை நுட்பத்தை உணர முடியும். திருவலஞ்சுழி பலகணி (சன்னல்) மிகவும் நேர்த்தியாகவும் நுட்பமானதாகவும் அமைக்கப்பட்டிருக்கும். திருவீழிமிழலை வௌவால்நத்தி மண்டபத்தில் வௌவால்களால் தொங்க முடியாது. ஆவுடையார்கோயில் கொடுங்கை மிகவும் மெல்லியதாக இருக்கும்.

ஒரே கல்லிலான கற்சங்கிலி:-

கல் வளையங்களாலான சங்கிலி
இதே மண்டபத்தில் 10-15 வளையங்கள் கொண்ட ஒரே கல்லிலான
கற்சங்கிலி செதுக்கப்பட்டு உயரத்தில் பொறுத்தித் தொங்க விடப்பட்டுள்ளது.

படைகல்:-

இங்கே மூலஸ்தானத்தில் அமுது மண்டபத்திலே படைகல் என்கிற ஒரு திட்டுக்கல் இருக்கிறது. இந்தத் திட்டுக்கல் 3 அடி உயரம் 7 அடி நீளம் 6 அடி அகலம் கொண்ட ஒரே பாறைக்கல்லாகும். இந்தத் திட்டுக்கல்லில்தான்
6 கால பூசைகளுக்கும் உரிய அமுதினை வடித்துப் படைத்து ஆற வைக்கிறார்கள்.

புழுங்கல் அரிசி நெய்வேத்தியம்:-

எல்லா ஆலயங்களிலும் பூசை நடைபெறும்போது பச்சை அரிசியிலே
அமுது படைத்து நெய்வேத்தியம் செய்வார்கள்.
ஆனால் இந்த ஆவுடையார் கோயிலிலே 6 காலத்திற்குமே புழுங்கல் அரிசியால்தான் அமுது படைக்கப்படுகிறது. அதோடு பாகற்காய் கறியும் கீரையும் சேர்த்துப் படைக்கப் படுவது இங்கு மட்டும்தான்.

அணையா நெருப்பு:-

கால பூசைக்கும் தொடர்ந்து அமுது படைத்துக் கொண்டிருப்பதனால் ஆயிரக்கணக்கான வருடங்களாக இங்கு உள்ள அமுது படைக்கும்
அடுப்பின் நெருப்பு அணைந்ததேயில்லை.

பாண்டியர் - சோழர் - நாயக்க மன்னர்கள் கட்டியது!

இந்தக் கோயிலில் ஆனந்தசபை தேவசபை கனகசபை சிற்சபை நடனசபை பஞ்சாட்சரம் போன்ற மண்டப அமைப்புகள் உள்ளன.

இக்கோயிலினுள் கருவறைப் பகுதியை மட்டும் மாணிக்கவாசகர் கட்டியதாகவும் அதைத் தொடர்ந்து விக்ரம சோழபாண்டியர் (பார்த்திபன்
கனவு என்கிற சரித்திர நாவலில் சொல்லப்படுகிற அதே விக்ரமாதித்ய
சோழன் தான்) மற்றும் சோழ மன்னர்கள் தஞ்சையை ஆண்ட நாயக்கர் மன்னர்கள் மகாராஷ்டிர மன்னர்கள் இராமனாதபுரம் சேதுபதி மன்னர் சிவகங்கை மன்னர் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் பாலைவன ஜமீன்தார் ஆகியோரால் ஆறு மண்டபங்கள் இணைத்துக் கோவிலாக கட்டப்பட்டுளது.

உருவமற்ற அருவக் கோயில்:-

தமிழகத்திலே மற்றதொரு உருவமற்ற அருவக் கோயிலான தில்லையம்பல சிதம்பர நடராசர் ஆலயத்திலே பொன்னோடு வேயப்பட்ட விமானம் உள்ளது.

அதேபோல இங்கு செப்போடு வேயப்பட்ட விமானம் இருக்கிறது. இந்த செப்போடு விமானத்தின் இணைப்பையும் வடிவையும் நாளெல்லாம் பார்த்து ரசிக்கலாம். இந்த விமானத்திலுள்ள மரங்கள் எல்லாமே தேவதாரு மரத்தால் ஆனவையாகும்.

தேவதாரு மரம்:-

மரங்களில் உறுதி வாய்ந்தது தேக்கு மரம் என்பதும் தேக்கு மரங்கள் நூற்றாண்டுக் கணக்கில் கெட்டுப் போகாமல் தாங்கும் சக்தி படைத்தது
என்பது நமக்குத் தெரியும். ஆனால் இக்கோயிலில் பயன்படுத்தியுள்ள தேவதாரு மரங்களோ ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தாங்கும் சக்தி பெற்றதாகும். இந்த தேவதாரு மரங்கள் இந்தியாவில் இல்லை என்றும் பர்மாவில் உள்ளது என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் சிவபெருமான் வாசஸ்தலமான கைலாயத்தில் தேவதாரு மரம் இருப்பதாக புராணங்கள் வாயிலாக நாம் அறிய முடிகிறது.

அந்தத் தேவதாரு மரத்தின் மீது இந்தச் செப்போடு வேயப்பட்ட விமானம் உள்ளது. இந்த தேவதாரு மரத்தின் பலகைச் சட்டத்தை இன்று பார்த்தாலும் நேற்று அறுத்து இன்று வழவழப்பேற்றி பலகையாக்கி இணைக்கப்பட்டது போல எண்ணெய் செறிந்துள்ள பளபளப்பைக் காணலாம்.

இது 5 ஆயிரம் ஆண்டுகள் தாங்கும் சக்தியை படைத்தது என்றும் கூறப்படுகிறது.

வற்றாத திருக்குளம்:-

இங்கு திருத்தமம் பொய்கை எனப்படும் வற்றாத திருக்குளமும் மூல விருட்சமான குருந்த மரமும் 96 அடி உயரம் 51 அடி அகலம் உடைய ராஜகோபுரம் ஆகியவையும் உள்ளன. இந்தக் கோவிலுக்குள் கருவறைக்கு
மிக அருகில் 2 கிணறுகள் உள்ளன இதில் 5 அடி ஆழத்தில் இன்றும்
தண்ணீர் ஊறுவது அதிசயத்திலும் அதிசயம்.

கவிபாடும் கற்சிலைகள்:-

உயிர்த்துடிப்பு ஒன்றைத் தவிர மற்ற எல்லா அம்சங்களும் இங்குள்ள சிலைகளில் உள்ளன என்று கூறியுள்ளார்கள். அந்த அளவிற்கு ஈடு இணையற்ற கவிபாடும் கற்சிலைகள் இங்கே ஒவ்வொரு தூண்களிலும் நிறைந்து விளங்குகின்றன.

அங்குலம் உயரம் உள்ள ஆயிரங்கால் மண்டபம் முதல் 12 அடி உயரம் உள்ள அகோர வீரபத்திரர் ரணவீரபத்திரர் சிலை வரை சிற்பக்கலை தேனடை போல செறிந்து கிடக்கிறது.

இங்குள்ள எல்லா உருவச்சிலைகளிலேயும் காலில் உள்ள நரம்பு கூட வெளியே தெரிகின்றன. சிலைகளின் தலைமுடி கூட சன்னமாக அளந்து நீவி விடப்பட்டுள்ளன.

நவநாகரீக நகைகள்:-

தற்காலிக நவநாகரீக நகைகள் கல்லூரி மாணவிகளும் உயர்தர குடும்பப் பெண்களும் அணிகின்ற நவீன அணிகலன்கள் தங்க நகைகள் சங்கிலிகள் போன்ற எந்த ரக நகையானாலும் அவையனைத்தும் 1000 ஆண்டுகளுக்கு முன்னமேயே இங்குள்ள சிலைகளிலே வழங்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம்.

நரியைப் பரியாக்கியது இத் தல #புராணத்தின் பெருமையாகும்.

இந்த ஆவுடையார் கோயிலிலே தாவும்பரி என்று ஒரு குதிரை கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. அந்தக் குதிரை மீது சிவபெருமான் அமர்ந்து வருவது போல செய்யப்பட்டுள்ளது. குதிரையின் அமைப்பு ஒவ்வொன்றாய்ப்
பார்த்தால் உயிர்க்குதிரையோ என்று தோன்றும்.

குதிரைகளிலே சிறந்ததும் அழகு வாய்ந்ததும் பஞ்ச கல்யாணிக் குதிரையாகும்.

#பஞ்சகல்யாணி என்றால் அந்தக் குதிரையின் நான்கு கால்களிலும் அதன் கனுக்காலிலும் வெள்ளை நிறம் இருக்கும்.

நெற்றியிலும் பொட்டு வைத்தாற்போல வெள்ளை நிறம் இருக்கும்.
இவ்வாறு ஐந்து இடத்தில் வெள்ளை நிறம் இருக்கும் குதிரை பஞ்ச
#கல்யாணி குதிரையாகும்.

சிவபெருமான் தாங்கி நிற்கின்ற இங்குள்ள குதிரைச் சிலையிலும் மேற்சொன்ன ஐந்து இடங்களிலும் வெள்ளை நிறம் இருக்கின்றன. அது மட்டுமல்ல அந்தக் குதிரையின் பற்களும் வெண்மையான கற்களால் செதுக்கப்பட்டுள்ளது.

#வேடுவச்சி எனப்படும் #மலைக்குறத்தி

இந்தக் கோயிலுக்குள் வேடுவச்சி எனப்படும் #மலைக்குறத்தியின் சிலை ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஓலையினால் செய்யப்பட்டது போன்ற ஒரு கூடையினை இடுப்பில் வைத்து கையில் இடுக்கிக் கொண்டு குறி சொல்ல வருகின்ற #குறத்தி போல அமைந்துள்ளது அச் சிலை.

இந்தச் சிலையை இந்தக் #கோயிலின் செக் போஸ்ட் என்று சொன்னால் கூட பொருந்தும்.

இந்தச் சிலையை யார் பார்த்தாலும் பார்த்தவர்கள் அந்த இடத்தை விட்டு எளிதில் அகல மாட்டார்கள். தன்னிலை மறந்து அந்தச் சிலையையே சுற்றி வருவார்கள். தோள் கண்டார் தோளே கண்டார் என்று கம்பர் கூறியதைப் போல இந்த சிலை அழகில் மயங்கியவர்கள் ஆடைகண்டார் ஆடையே கண்டார் கூடை கண்டார் கூடையே கண்டார் என்று அச்சிலையின்
ஒவ்வொரு அங்குலத்தையும் ரசிப்பதிலேயே மனம் பறிகொடுப்பார்.

1000 ஆண்டுகளுக்கு முந்திய #ஓலைச்சுவடி

இந்த ஆவுடையார்கோயில் #ஆத்மநாதர் ஆலயத்தில் 1000 ஆண்டுகளுக்கு முந்திய #திருவாசகம் மற்றும் திருக்கோவையார் ஓலைச்சுவடிகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

நாமும் வாழ்க்கையில் ஒரு முறை கண்டிப்பாக இந்த அதிசய $ஆலயத்தை #தரிசித்தது வரலாமே!!!!!
#அருணகிாி
#சுந்தா்ஜீ

Thursday, September 2, 2021

தியானம் எப்போது செய்ய வேண்டும்


தியானம் எப்போது செய்ய வேண்டும் ?

#அதிகாலை Best. மாலை 6 மணிக்கு.

பொதுவாக எல்லோரும் சொல்வது.

ஆனால் #தியானம் என்பது வாழ்வோடு இணைத்து விட வேண்டும்.

விழிப்புணர்வு என்று #ஓஷோ சொல்வார்.

எந்த செயல் செய்தாலும் விழிப்புணர்வோடு, செய்யும் காரியமே கண்ணாக, #உயிர் #மூச்சாக, முழு கவனத்தோடு செய்தீர்களேயானால் அதுவும் தியானம்தான்.

மன அலையை Mental frequencyயை 
குறைக்கும் எந்த #மனப்பயிற்சியும்,செயலும் 
கூட தியானத்தின் #Categoryதான்

One thing at one will என்பார் அருட்தந்தை.

காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே... 
இதுவும் தியானத்தின் #Core pointதான்.

காலை சிறிது நேரம் மாலை சிறிது நேரம் தியானம் செய்வதால்,அதில் கிடைத்த மன அமைதியை ,நாள் முழுவதும் கொண்டு செல்ல உதவுவது, செய்யும் செயலில் involvement, பின் செயல்களே தியானமாக மாறிவிடும்.

எப்படி நாள் முழுவதும் சுவாசம் தேவையோ, அது போல தியானத்தையே வாழ்க்கையாக முறைபடுத்தி கொண்டவர்கள் பாக்கியவான்கள்.

எப்படி?

#கார் அல்லது #Twowheeler ஓட்டுகிறோம். 
முழு கவனமும் அங்கே.

தொழிலில் அல்லது அலுவலகத்தில் 
மனதை சிதறவிடாமல் முழு கவனமும்அங்கே.

பெண்கள் சமையல். முழு கவனமும் அங்கே.

குளிக்கிறோம்... முழு கவனம் அங்கே.

உணவு உண்கிறோம். சுவைத்து முழு கவனமும் அங்கே.

பேசும் போது சொற்களில் முழு கவனம்.

ஒரு செயலில் கவனத்தை ஒருமுகப்படுத்தினாலே, தியானம் என்ற பூஞ்சோலைக்குள் நுழைந்து விட்டோம்.

தியானம் என்பது பெரிய கம்பசூத்திரம்அல்ல.

அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்தினாலே தியானம்தான். Simple.

இந்த விழிப்புணர்வோடு இன்று முதல் உங்கள் செயல்களை மாற்றுங்கள். நாள் முழுவதும் தியானமேதான், புத்துணர்ச்சி, வாழ்க்கையே மாறிவிடும்.

ஸ்ரீரமண மகரிஷி சொல்வார்....

தற்கவனம் அவசியம்.

கண்கள் மூடியிருப்பதோ அல்லது திறந்திருப்பதோ முக்கியமன்று.

கவனிப்பவனை கவனித்தாலே போதும் "

கண்களை திறப்பதும் மூடுவதும் 
உங்கள் விருப்பம்."

இன்று முதல் குறிப்பிட்ட நேரத்தில் தியானம் செய்வதோடு, அதில் கிடைத்த மன அமைதியை முதலீடு செய்து, 

நாள் முழுவதும் விழிப்புணர்வோடு, செய்யும் செயல்களையும் தியானமாக, விழிப்புணர்வாக மாற்றி  #தியானிப்போம்.

Friday, August 20, 2021

சிறுவயதிலேயே பெண் குழந்தைகள் பூப்பெய்த இவையெல்லாம் காரணம்

 -சிறுவயதிலேயே பெண் குழந்தைகள் பூப்பெய்த இவையெல்லாம் காரணம் அலெர்ட்

`ஒரு பெண் குழந்தை
பூப்பெய்துவதற்கான சராசரி வயது 12.4 ஆக இருந்தது. அது தற்போது 11.9 ஆகக் குறைந்துள்ளது. சராசரியாக 5 அல்லது 6 மாதங்கள் குறைந்துள்ளன. உலகமயமாக்கலுக்குப் பிறகு அதிகரித்துள்ள துரித உணவு கலாசாரம், ரசாயனங்களின் பயன்பாடு, விளைநிலங்களில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள், பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு இவை அனைத்தும் பெண் குழந்தை முன்னதாகவே பூப்பெய்துவதற்கான காரணங்கள். மற்றொரு முக்கியக் காரணி, குறைவான உடல் உழைப்பு.
முன்னர், குழந்தைகள் பள்ளிவிட்டு வந்ததும் வெளியில் சென்று வியர்க்க, விறுவிறுக்க விளையாடுவார்கள். ஆனால் இன்று வெளியில் விளையாடுவதே குறைந்துவிட்டது. பள்ளி முடிந்ததும் டியூஷன், நடன வகுப்பு, பாட்டு வகுப்பு என்ற பல பொறுப்புகள் அவர்கள் மேல் சுமத்தப்படுகின்றன. அதனால் குழந்தைகள் விளையாட்டு என்பதையே மறந்துவிட்டனர். மற்றொருபுறம் செல்போன், ப்ளே ஸ்டேஷன் என கேட்ஜெட்களுக்கு அடிமையாகி, உடல் உழைப்பைச் செலவழித்து விளையாடுவதைக் குழந்தைகள் புறக்கணிக்கின்றனர். இதன் மூலம் உடல் பருமன் ஏற்பட்டு, சிறிய வயதிலேயே பருவமடைந்துவிடுகின்றனர்.
துரித உணவுகள், ரசாயனங்கள் ஆகியவற்றின் மூலம் பூப்பெய்தலுக்குக் காரணமான ஹார்மோன்கள் குறிப்பிட்ட வயதுக்கு முன்னதாகவே தூண்டப்படுகிறது. இதனால் குழந்தைகள் சிறிய வயதிலேயே பூப்பெய்துகின்றனர். பெண்கள் தாமதமாக திருமணம் செய்து கொள்வதாலும், குழந்தைப் பெற்றுக்கொள்வதாலும் அவர்களுக்குப் பிறக்கும் பெண் குழந்தைகளும் ஆரோக்கியமான வளர்ச்சி இல்லாமல் முன்னதாகவே பூப்பெய்துவதற்கு வாய்ப்புள்ளது.வாழ்க்கை முறை மாற்றத்தால் முன்னதாகவே பூப்பெய்தல் மட்டுமன்றி, மாதவிடாய் சுழற்சி நிறைவடைவதும் (மெனோபாஸ்) முன்னதாகவே நடைபெறுகிறது. முன்பெல்லாம் சராசரியாக பெண்களுக்கு 52 வயதில் மெனோபாஸ் ஏற்பட்டது. தற்போது 40, 45 வயதிலேயே மெனோபாஸ் ஏற்பட்டுவிடுகிறது.
பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை, பூப்பெய்துவதற்கு முன்னால் உயரம் அதிகரிக்கும். மார்பகங்கள் வளர்ச்சியடைந்து, அக்குள், இனப்பெருக்க உறுப்பு ஆகியவற்றில் முடி வளரத் தொடங்கும். அதன் பின்னர் பூப்பெய்துவார்கள். இதுதான் படிநிலை. ஆனால், ஹார்மோன்கள் தூண்டப்படுவதால் சில குழந்தைகள் வளருவதற்கு முன்னதாகவே அடுத்தடுத்த நிலைகளை எட்டிவிடுவர்.
முன்னதாகவே பூப்பெய்தும் குழந்தைகளுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி அல்லது மாதவிடாயின்போது அதிக அளவில் ரத்தம் வெளியேறுதல், ரத்தசோகை போன்ற பிரச்னைகள் ஏற்படும். இந்த நிலை தொடர்ந்தால் அந்தப் பெண் வளர்ந்து கருத்தரிப்பதில் சிக்கல்கள் ஏற்படும். ஆண் குழந்தைகளிலும் முன்னதாகவே பருவமடையும் பிரச்னை இருக்கிறது. ஆனால், ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகளையே இந்தப் பிரச்னை அதிகம் பாதிக்கிறது. பெண் குழந்தைகளுக்குப் பருவம் அடைவதற்கு முன்னதாக உடலில் மாற்றங்கள் ஏற்படும். ஆண் குழந்தைகளுக்குப் பருவமடைந்த பின்னர் குரல் மாற்றம், மீசை முளைத்தல், இனப்பெருக்க உறுப்பில் முடி வளர்தல் ஆகிய மாற்றங்கள் நிகழும். முன்னதாக பருவமடையும் ஆண் குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்பட வாய்ப்புள்ளது. துரித உணவுகள், பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நொறுக்குத் தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றைத் தவிர்த்து விட்டு பூச்சிக்கொல்லி மருந்துகள் கலக்காத காய்கறிகள், பழங்கள், பழச்சாறு அடங்கிய உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம், உடல் உழைப்பை அதிகரிப்பதன் மூலமும் இயற்கையாகவே இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாணமுடியும்.பெண் குழந்தைக்கு 7,8 வயதிலேயே மார்பகங்கள் வளர்ச்சியடைவது போன்று பெற்றோர் உணர்ந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அங்கு ஹார்மோன் தெரபி என்ற சிகிச்சையின் மூலம் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்"
பெண் குழந்தைகள் முன்னதாகவே பூப்படைவதும், ஆரோக்கிய வாழ்க்கை முறையின் மூலம் அதைத் தடுப்பதும் பெற்றோரின் கைகளில் தான் இருக்கிறது.