Thursday, August 19, 2021

முகத்தல்அளவைகள்

முகத்தல்அளவைகள் :

ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லிட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லிட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லிட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லிட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லிட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லிட்டர்.
ஒரு குப்பி = எழுநூற்றுமில்லி லிட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.
முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு ஆழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.
◆ நிறுத்தல் அளவைகள்
மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பனவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.
ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பனவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.
◆ கால அளவுகள்
இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாழிகை.
இரண்டரை நாழிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாழிகை = ஒரு நாள்.
ஏழரை நாழிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
இரண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
இரண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
இரண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.
வயலும்வரப்போடு பயணியுங்கள் பழந்தமிழர்களின் விடயங்களை அறிந்துகொள்ள..!!!!!
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

ஆகாயராஜன்” என்கிற கற்பமூலிகை

 ஆகாயராஜன்” என்கிற கற்பமூலிகை மற்ற பெயர் முடவாட்டு கிழங்கு(அ) ஆட்டுக்கால் கிழங்கு கடல் மட்டத்தில் இருந்து 3800 அடிக்கு மேல் உள்ள மலைமருந்தியால் பாறைகளில் விளையும் இவற்றிற்கு வேர்கள் கிடையாது பாறைகளில் உள்ள உலோக சத்துக்களலான செம்பு தங்கம் இரும்பு கால்சியம் குறிப்பாக பாறைகளில் உள்ள சிலிகாவை உறிஞ்சும் தன்னை இந்த முடவாட்டு கால் கிழங்கிற்கு உண்டு சிலிகா அயனி கற்பமருந்து என்பதை நாம் அறிவோம் இன்னும் பிற முக்கிய உலோக உப்புகளை உறிஞ்சி தன்னகத்தே கொண்டுள்ளது இவற்றில் இருந்து தங்கத்தை(அயனியை)பிரிக்க இயலும்…….

காலங்கிநாதர் ,போகர்,வள்ளலார் போன்ற ஞான சித்தர்கள் இதனை ஆகாயராஜன் எனவும்,முடவாட்டுகால் கிழங்கு என்றும் கூறியுள்ளார் முடம் நீக்கும் கிழங்கு மருவி முடவாட்டுக்கால் கிழங்கு ஆனது இவற்றை 48நாட்கள் தொடர்ந்து உண்டால் வாத,பித்த,கப சம்மந்தப்பட்ட 4448 நோய்களை நீக்கி உடம்பானது காயகல்பம் அடையும் என்பது மெய் ஞானிகளான சித்தர்களின் வாக்கு.

Thursday, May 27, 2021

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை பக்தர்களுக்கு ஒரு வாய்ப்பு தந்துள்ளது.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை பக்தர்களுக்கு ஒரு வாய்ப்பு தந்துள்ளது.


உங்களது ஊரில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை கோவில் சம்பந்தமாக ஏதேனும் யோசனைகள் / புகார்கள் தெரிவிக்க கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிடலாம்.


பக்தர்கள் கண்டிப்பாக இந்த சேவையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள் மாற்றம் வரும் என்று நம்பிக்கையோடு பதிவிடுங்கள்.


பொறுத்திருந்து பார்ப்போம்...


என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோள். அனைத்து இந்து சமய அறநிலைத்துறை கோவில்கள்/ தனியார் கோவில்கள் மற்றும் ஆதினம் / மடாதிபதிகள் நிர்வகிக்கும் உள்ள கோவில்களில் சிறப்பு கட்டணம் அல்லது நன்கொடை என்ற பெயரில் கோவிலில் உள்ள கடவுள்களை தரிசிக்க பணம் வசூல் பண்ண கூடாது என்ற கோரிக்கையை அனைவரும் முன்வைக்கவேண்டும்.


https://hrce.tn.gov.in/department/grievances.php

Friday, January 8, 2021

நோய்கள் #அண்டாமல் #இருக்க #வேண்டுமா#தேரையர் #சித்தர் #கூறும் #ரகசியம்

#நோய்கள் #அண்டாமல் #இருக்க #வேண்டுமா#தேரையர் #சித்தர் #கூறும் #ரகசியம்.
#சுந்தா் 
பதார்த்த குண சிந்தாமணி பாடல் 1502

திண்ண மிரண்டுள்ளே சிக்க அடக்காமல் 
பெண்ணின் பால் ஒன்றை பெருக்காமல் 
உண்ணுங்கால் நீர் கருக்கி மோர் பெருக்கி 
நெய்யுறுக்கி உண்பவர்தம் பேருரைக்கிற் போமே பிணி

பொருள்:

மலசலம் ஒழுங்காக போக்கி, விந்துவை அதிகம் விடாமல் தேக்கி, நீரைக் காய்ச்சி, மோரைப் பெருக்கி, நெய்யை உருக்கி உண்டால் அவர்களை எந்த நோயும் அணுகாது 

பதார்த்த குண சிந்தாமணி பாடல் 1503

பாலுண்போ மெண்ணெய்பெறின் வெந்நீரிற் குளிப்போம்
பகற்புணரோம் பகற்றுயிலோம்பயோ தரமுமூத்த
ஏலஞ்சேர் குழலியரோடிளவெயி லும்விரும்போம்
இரண்டளக்கோ மொன்றைவிடோமிட துகையிற் படுப்போம்
மூலஞ்சேர்கறி நுகரோமூத்த தயிருண்போம்
முதனாளிற் சமைத்தகறிய முதெனினு மருந்தோம்
ஞாலத்தான் வந்திடினும் பசித்தொழிய வுண்ணோம்
நமனார்க்கிங்கேது கவை நாமிருக்கு மிடத்தே.

பொருள்:

பாலுணவை உண்ணுவோம்! எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது வெந்நீரில் குளிப்போம். பகலில் உடலுறவு கொள்வதையும், தூங்குவதையும் தவிர்ப்போம். கரும்பென இனிப்போராயினும் வயதில் மூத்த பெண்களோடும், வாசக் குழலினை உடைய பொது மகளிரோடும் உடல் உறவு கொள்ள மாட்டோம்; காலை இளம் வெயிலில் அலைய மாட்டோம். மலம், சிறுநீர் முதலியவற்றை அடக்கி வைத்திருக்க மாட்டோம்; படுக்கும்போது எப்போதும் இடது கைப்புறமாகவே ஒருக்களித்துப் படுப்போம். புளித்த தயிருணவை விரும்பி உண்போம். முதல் நாள் சமைத்த கறி உணவு, அமுதம் போன்றிருப்பினும், அதனை மறுநாள் உண்ணுதல் செய்ய மாட்டோம்; பசிக்காத போது உணவருந்தி, உலகமே பரிசாகக் கிடைப்பதெனினும் ஏற்க மாட்டோம்; பசித்த பொழுது மட்டும் உண்ணுவோம். இவ்வாறு நம் செயல்கள் இருக்குமெனின் காலன் நம்மை நெருங்கக் கலங்குவான்;

பதார்த்த குண சிந்தாமணி பாடல் 1504

உண்பதிருபொழுதொழிய மூன்று பொழுதுண்ணோம்
உறங்குவதிராவொழியப் பகலுறக்கஞ் செய்யோம்
பெண்கடமைத்திங்களுக்கோர் காலன்றி மருவோம்
பெருந்தாகமெடுத்திடினும் பெயர்ந்து நீரருந்தோம்
மண்பரவுகிழங்குகளிற் கருணையன்றிப் புசியோம்
வாழையிளம்பஞ்சொழியக் கனியருந்தல் செய்யோம்
நன்புபெறவுண்டபின் புகுறு நடையிங்கொள்ளோம்
நமனார்க்கிங்கேது கவைநாமிருக்கு மிடத்தே. 

பொருள்:

ஒரு நாளைக்கு இருமுறை மட்டுமே உண்போம். இரவில் மட்டுமே உறக்கம் கொள்வோம். மாதம் ஒருமுறை மட்டுமே மனைவியுடன் கூடுவோம். பெரும் தாகமெடுத்தாலும், உணவுக்கு நடுவில் நீர் அருந்த மாட்டோம். கருணைக்கிழங்கைத் தவிர வேறு கிழங்குகளை உண்ணமாட்டோம். பிஞ்சு வாழைக்காயை உண்போமன்றி முற்றியவற்றை உண்ணமாட்டோம். நல்ல உணவுக்குப் பின்பு சிறிது நடை நடப்போம். இவ்வாறு நம் செயல்கள் இருக்குமெனின் காலன் நம்மை நெருங்கக் கலங்குவான்.

பதார்த்த குண சிந்தாமணி பாடல் 1505

ஆறுதிங்கட்கொரு தடவை மனமருந் தயில்வோம்
அடர்நான்கு மதிக்கொருக்காற் பேதியுறை நுகர்வோந்
தேறுமதியொன்றரைக்கோர் தரநசியம் பெறுவோந்
திங்களரைக்கிரண்டு தரஞ்சவளவிருப்புறுவோம்
வீறுசதுர்நாட்கொருக்கானெய் முழுக்கை தவிரோம்
விழிகளுக்கஞ்சன மூன்று நாட்களுக்கொருக்காலிடுவோம்
நாறுகந்தம் புட்பமிவை நடுநிசியின் முகரோம்
நமனார்க்கிங்கேது கவை நாமிருக்கு மிடத்தே

பொருள்:

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வாந்தி மருந்தை உட்கொள்வோம், நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்தை உட்கொள்வோம், ஒன்றரை மாதத்திற்கு ஒருமுறை மூக்கிற்கு மருந்திட்டுச் சளி முதலிய நோய் வராமல் தடுப்போம், வாரம் ஒருமுறை முகச்சவரம் செய்து கொள்வோம்; நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்போம், மூன்று தினங்களுக்கு ஒருதடவை கண்களுக்கு மையிட்டுக் கொள்வோம், நறுமணப் பொருட்களையும், மணம் மிகுந்த மலர்களையும் நடுநிசியில் முகர மாட்டோம். இவற்றை எல்லாம் நாம் கடை பிடித்தால் எமன் நம்மை நெருங்க விரும்ப மாட்டான்; நீண்ட ஆயுளோடு வாழ்வோம்.

பதார்த்த குண சிந்தாமணி பாடல் 1506

பகத்தொழுக்குமாத சரசங் கரந்துடைப்பமிவைத்தூட்
படநெருங்கோந்தீபமைந்தர் மரநிழலில் வசியோஞ்
சுகப்புணர்ச்சியசன வசனத்தருணஞ் செய்யோந்
துஞ்சலுணவிருமலஞ்சையோக மழுக்காடை
வகுப்பெடுக்கிற் சிந்துகசமிவை மாலைவிடுப்போம்
வற்சலந்தெய்வம்பிதுர் சற்குருவைவிடமாட்டோம்
நகச்சலமுமுளைச்சலழுந் தெறிக்குமிடமணுகோம்
நமனார்க்கிங்கேது கவைநாமிருக்கு மிடத்தே

பொருள்: 

பெருக்கும் துடைப்பத்தால் எழும் புழுதி உடல் மேல் படுமாறு நெருங்கி இருக்கமாட்டோம். இரவில் தீபத்தின் நிழல், மனிதர் நிழல், மர நிழல் இவற்றில் நிற்க மாட்டோம். பசியுடனும், உண்ட உணவு ஜீரணிக்கும் போதும் போகம் செய்ய மாட்டோம். உறங்குதல், உணவு புசித்தல், மலஜலம் கழித்தல், போகத்தில் ஈடுபடல், தலை வாருதலால் மயிர் உதிர்தல், ஆளுக்கு துணி இவைகளை அந்தி நேரத்தில் நீக்குவோம். பசுவையும், தெய்வத்தையும், பித்ருக்களையும், குருவையும் அந்தியில் பூஜிப்போம். நகத்திலிருந்தும், சிகையிலிருந்தும் நீர் தெளிக்குமிடத்தில் நெருங்கோம். இவற்றை எல்லாம் நாம் கடை பிடித்தால் எந்த நோயும் நம்மை அணுகாது, எனவே நோயை முன்வைத்து நம்மிடத்தில் நெருங்க எமனுக்கு எந்த அவசியமம் இருக்காது என்கிறார் தேரையர் சித்தர்!

Wednesday, December 30, 2020

பசுவுக்கு நாம் அகத்திக் கீரை தருவதால் , முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்

பசுவுக்கு நாம் அகத்திக் கீரை தருவதால் , முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். கொலை , களவு செய்வதால் உண்டாகும் பிரம்ம ஹத்தி தோஷங்கள் விலகிவிடும். நீண்ட நாட்களாக திதி , கர்மா செய்யாமல் இருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்கு தருவதால் நீங்கும். பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும்.
🐂பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைக்கும்.படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
🐂பசுவை பூஜித்தால் பிரம்மா , வி்ஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜித்த புண்ணியம் உண்டாகும்.
🐂 பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும் ( கோக்ராஸம் ), பசுவின் கழுத்து பகுதியில் சொரிந்து கொடுத்தாலும் ( கோகண்டுயனம் ) கொடிய பாவங்கள் விலகும்.
🐂பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் ( லக்னம் ) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான காலமாகும்.
🐂பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது 8 வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால் பட்ட தூசியைதான் மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள்.
🐂" மா " என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்கலத்தை தருகிறது.
🐂பசு வசிக்கும் இடத்தில் , அதன் அருகில் அமர்ந்து சொல்லும் மந்திர ஜபமோ , தர்ம காரியங்களோ 100 மடங்கு பலனைத் தரும்.
🐂மனிதன் கண்களுக்கு புலப்படாத ம்ரத்யு , எமன் , எமதூதர்கள் பசுவின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள்.
🐂ஒருவர் இறந்த பின் பூலோகத்திற்கு அழைத்து செல்லப்படும் ஜீவன் அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியை ( மலம் , சலம் , சளி , சுடு நீர் ஓடும் நதி ) கடக்க இயலாமல் தவிக்கிறது. பசு தானம் செய்பவர்களுக்கு இத்துன்பம் இல்லை. அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்றி அதன் வாலைப் பிடித்துக்கொண்டு வைதரணிய நதியை கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.
🐂உலகத்தில் விஞ்ஞானத்தால் எத்தனை பாதிப்பு நிகழ்ந்தாலும் , பசுக்கள் வசிக்கும் இடத்தி்ல் மட்டும் எவ்வித பாதிப்பும் இருக்காது.
🐂கோமாதாவை காப்போம் , நேசிப்போம் , பூஜிப்போம்...Arunagiri M,Sundarji,Suryatrust,Tamilan,

 

Monday, December 21, 2020

மனித ஆயுளை அறுக்கும் ஆறு வாள்கள்!

#மனித #ஆயுளை #அறுக்கும் ஆறு வாள்கள்! 

*ஒரு முறை திருதராஷ்டிரன், தன் சகோதரர் விதுரரிடம், ‘‘மனிதனுக்கு ஆயுள் நூறு வருடம் என்பர். எனினும் இதுவரை நூறு வருடங்களைக் கடந்த மனிதர்கள் எவரும் இல்லை என்றே தோன்றுகிறது. இதற்குக் காரணம் என்ன?’’ என்று கேட்டார்.*

*விதுரர் பதில் சொன்னார்: ‘‘அரசே மனித ஆயுளை அறுக்கும் #வாள்கள் ஆறு.* 

*முதலாவது கர்வம். மனிதர்களில் பலர், ‘இந்த உலகில் நானே கெட்டிக்காரன். மற்றவரெல்லாம் முட்டாள்!’ என்று நினைக்கிறார்கள். ஒருவனுக்கு கர்வம் ஏற்பட்டால் கடவுள் சும்மா இருக்க மாட்டார். ஆகவே, கர்வம் இல்லாமல் இருக்க, தனது குற்றம் குறைகளைப் பார்க்க வேண்டும். பிறரிடம் நற்குணங்களையே பார்க்க வேண்டும்*.

*இரண்டாவது வாள்- அதிகம் பேசுவது. தனக்குப் பேச விஷயங்கள் இல்லாதபோதும், வீண் பேச்சு பேசுபவன், வீண் வம்பை விலைக்கு வாங்குகிறான்.*

*மூன்றாவது வாள்- தியாக உணர்வு இன்மை. அதீத ஆசையே மனிதனின் தியாக உணர்வைத் தடுக்கிறது. இதை உணர்ந்தால், தியாக உணர்வு தானே வரும்.*

*நான்காவது வாள்- கோபம். கோபத்தை வெல்பவனே உண்மையான யோகி. கோபம் வந்து விட்டால், தர்மம் எது? அதர்மம் எது என்பது தெரியாமல் போகிறது. விவேகம் இழந்து பாவங்களைச் செய்ய நேரிடுகிறது.*

*ஐந்தாவது வாள்- சுயநலம். சுயநலமே எல்லா தீமைகளுக்கும் காரணம். சுயநலம் கொண்டவன் தனது காரியத்துக்காக பாவம் செய்யத் தயங்குவதில்லை.*

*ஆறாவது வாள்- துரோகம். இந்த உலகில் நல்ல நண்பர்கள் கிடைப்பதே அரிது. அப்படிப் பட்டவர்களுக்குத் துரோகம் செய்வது தவறு.*

*இந்த ஆறு விஷயங்களிலிருந்தும் ஒருவன் விலகி வாழ்ந்தால் நிச்சயமாக அவன் நூற்றாண்டை நிறைவு செய்வான்.’’
#Sundarji

Sunday, December 6, 2020

Tamilan


குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது.

பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது.

புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு துளைக்காது.

பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூச்சிகள் உட்காராது.

முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். மரம் செழிப்பாக வளரும்.

பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை தோண்டுங்கள்.

பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.

அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள்.

மீன்களைப்போல அடிக்கடி நீரில் நீந்துங்கள். நீங்கள் பூமியில் நடக்கும்போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள்.

அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும்.

நிறைய அமைதியாக இருங்கள், கொஞ்சம் பேசுங்கள். உங்கள் இதயத்தில் மௌனம் குடிகொள்ளும். உங்கள் ஆன்மா எப்போதும் அமைதியாக இருக்கும்.

விவசாயத்திற்கு முன்னுரிமை
கொடுங்கள் . நாடு நாசமாகாது .
#Sundarji