Friday, November 15, 2024

நாம் திருநீறு பூசுவது ஏன்?

 


நாம்திருநீறுபூசுவது ஏன்?                                                       அடையாளமா? ஆன்மீகமா? பக்தியா? மூடநம்பிக்கையா?

ஆரோக்கியம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?                   ஆனால் அதுதான் உண்மை…

திருநீறுக்கு திருமந்திரம் முதல் ஒளவையார் வரை நம் முன்னோர்கள் ஆயிரக்கணக்கான விளக்கம் சொல்லிவிட்டார்கள், சொல்லாதது…

அதிகாலையில் நாம் குளித்து முடித்த உடன் இறைவனை வேண்டி பசு சாணத்தில் பக்குவமாக பன்னீர் கலந்து செய்த திருநீறு நெற்றி நிறைய பூசுவது வழக்கம்.

நாம் குளித்து முடித்த பின்னர் தலையில் சரியாக துவட்டா விட்டாலோ அல்லது தலையில் நீர் இறங்கி விட்டாலோ…

தலை பாரமாக இருக்கும் சிலருக்கு அதன் மூலம் சளி கூட பிடிக்கும்…

தினமும் குளித்து முடித்த உடன் திருநீறு பூசுவதால் தலையில் இறங்கிய நீரை உறிஞ்சிவிடும்.

அதனால் தலைவலி தலைபாரம் சளி தொந்திரவுகள் நமக்கு வராது. இருந்தாலும் சரியாகிவிடும்.

மூன்று விரல்களை வைத்து நெற்றியின் இடது புறம் இருந்து வலது புறம் வரைக்கும் இழுத்து பூசும்போது…

நமது மூளைக்கு செல்லும் செயல்நரம்புகள் தூண்டப்பட்டு சுறுசுறுப்பையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.

சரி அதை ஏன் இறைவன் பெயரைச்சொல்லி செய்யவேண்டும்?

சஞ்சலப்படும் மனதை ஒருநிலைப்படுத்தி மன இறுக்கத்தை குறைக்கவும் ஆரோக்கியத்திற்காகவுமே திருநீறு பூசுகிறோம்.

தெய்வத்தின் பெயரைச்சொல்லி இலவசமாகவே நம் ஆரோக்கியம் காத்தார்கள் நம் முன்னோர்கள்.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


நம் வீட்டு பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பது அழகுக்கா?

 

நம் வீட்டு பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பது அழகுக்கா?

அதுமட்டுமில்லை…

நம் மூலாதார சக்தியின் பிறப்பிடம் நெற்றிக்கண். அதாவது நமது இரண்டு புருவத்தின் மத்தியில் உள்ள இடம்.

அது சூடு அடையாமல் இருக்கவும், நம் வீட்டு பெண்களை மற்றவர்கள் மயக்கி வசியம் செய்துவிடாமல் இருக்கவுமே..

நம் மூலாதார சக்தியை கஸ்தூரி மஞ்சள் குங்குமம் வைத்து மறைத்துவிடுகிறோம். (கஸ்தூரி மஞ்சள் குளிர்ச்சியை கொடுக்ககூடியது)

இது தெரியாமல் இப்போது எல்லாம் பெண்கள் பொட்டும் வைப்பதில்லை. அப்படியே வைத்தாலும் ஸ்டிக்கர் பொட்டு வைத்து ஒவ்வாமை ஏற்பட்டு அவதிப்படுகிறோம்.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமாக நம்மை காக்கவே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


விநாயகர் முன்னிலையில் தலையில் குட்டி போடுவதும் ஆசிரியர் மாணவனை தலையில் குட்டுவதும் ஏன்?

 


விநாயகர் முன்னிலையில் தலையில் குட்டி போடுவதும் ஆசிரியர் மாணவனை தலையில் குட்டுவதும் ஏன்?

ஆன்மீகமா? தண்டனையா? மூட நம்பிக்கையா?

மருத்துவமே என்றால் ஆச்சரியமா இருக்கா? ஆனால் அதுதான் உண்மை.

நாம் தலையில் குட்டிக்கொள்ளும் முன் நெற்றியின் மேல் இருபுறமும் TEMPLER LOBE.உள்ளது. இந்த இடத்தில்தான் நம் ஞாபக சக்தியை தூண்டும் நாடிகள்/ நரம்புகள் அமைந்துள்ளது.

இந்த இடத்தில் மெதுவாக குட்டிக்கொள்வதால் இந்த நாடிகள்/ நரம்புகள் தூண்டி விடப்படுகின்றன. இதனால் உடம்பில் சுறுசுறுப்பும் உள் எழுச்சியும் உண்டாகிறது. ஞாபக சக்தி மீட்கப்படுகிறது.

நெற்றிப்பொட்டில் நாம் குட்டிக்கொள்ளும்போது அங்கே உள்ளடங்கி இருக்கும் அமிர்த கலசம் லேசாக திறந்து அதில் உள்ள அமிர்தம் உடல் முழுவதும் பரவும் என்று யோகிகள் கூறுகிறார்கள்.

இதனை மனதில் கொண்டுதான் ஆசிரியர்கள் மாணவர்களை முன் நெற்றியில் குட்டி தண்டிப்பது போல் ஞாபக சக்தியை தூண்டிவிட்டு புத்திசாலியாக்கினார்கள்.

மற்றவர்கள் விநாயகர் முன்னிலையில் தலையில் குட்டி போட்டு ஞாபக சக்தியை பெருக்கி கொண்டார்கள்.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


தோப்புகரணம் போடுவது தண்டனையா? ஆன்மீகமா? மூட நம்பிக்கையா?

 


தோப்புகரணம் போடுவது தண்டனையா? ஆன்மீகமா? மூட நம்பிக்கையா?

தண்டனை என்றால் பிள்ளையாருக்கு முன் செய்யச்சொல்லமாட்டார்களே?

யோசித்தோமா? இல்லையே?

நமது சிறுமூளை, பெருமூளை செயல் நரம்புகள் காது மடல்களில்தான் வந்து முடிகின்றன.

நாம் இரு காது மடல்களையும் பிடித்துக்கொண்டு அமர்ந்து எழும்போது..

நம் இரு மூளையின் செயல் நரம்புகள் தூண்டபட்டு நமது மூளை நன்கு செயல்படத்தொடங்கும்.

ஆகவேதான் பள்ளியில் மக்கு மாணவர்களை தோப்புகரணம் போடவைத்து புத்திசாலியாக்கி வெற்றி பெற வைத்தார்கள்.

மற்றவர்களை இலவசமாக விநாயகர் முன் போடவைத்து சுறுசுறுப்பாக இருக்க வைத்தார்கள்.

அதை ஏன் விநாயகர் முன்னிலையில் போடனும்?

அப்பத்தான் நல்லா படிப்பு வரும் என்று சொல்லி போடச்சொல்வார்கள். காரணம் அதே சிந்தனையில் தோப்புகரணம் போடும்போது மனது ஒருநிலைப்பட்டு படிப்பில் கவனம் வரும் என்றுதான்.

இதை நமக்கு மூடநம்பிக்கை என்று கிறுத்துவ ஆங்கிலேயனும், திருட்டு திராவிடனும் சொல்லி ஏளனம் செய்து செய்யவிடாமல் மறக்கடித்துவிட்டு இதையே அவர்கள் கார்பரேட் மூலம் “ சூப்பர் பிரைன் யோகா ” என்று பல ஆயிரம் கோடிகள் வியாபர பொருளாக்கி சம்பாதிக்கிறார்கள்.

நான் சொல்வது பொய் என்று உணர்ந்தால் நீங்களே கூகுளில் சூப்பர் பிரைன் யோகா என்று தேடிப்பாருங்கள் உங்களுக்கு நாம் எப்படி ஏமாற்றபட்டு வந்திருக்கிறோம் என்ற உண்மை புரியும்.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


Thursday, November 14, 2024

தமிழின் வலிமை, புலமை, பெருமை, சிறப்பு…

 


தமிழின் வலிமை, புலமை, பெருமை, சிறப்பு…

தமிழ் என்ற மொழியின் வார்த்தைக்கு எல்லா மொழியிலும் தமிழ்தான். அது தமிழ் மொழியின் வலிமை

இங்கிலீஷ் என்ற மொழியின் வார்த்தைக்கே ஆங்கிலம் என்று பெயர் வைத்தவன் தமிழன். அது தமிழ் மொழியின் புலமை.

நேற்றுவரை உருவாக்கப்பட்ட வார்த்தைக்கும் அழகு தமிழில் பெயர் உண்டு அதற்கு அர்த்தமும் உண்டு. அது தமிழ் மொழியின் பெருமை.

ஹிந்தியை தாய் மொழியாக கொண்டவர்கள் தங்கள் பெயருடன் ஹிந்தி என்ற வார்த்தையை இணைத்துக்கொள்ள முன் வரவும் இல்லை, முடியவும் முடியாது.

ஆங்கிலம் முடியாது, கன்னடம் முடியாது, தெலுங்கு முடியாது, மலையாளம் முடியாது. எந்த மொழியின் பெயரையும் தன் பெயருடன் சேர்த்துகொள்ள மாட்டார்கள்.

ஏன் என்றால் மற்ற மொழிகள் எல்லாம் மொழியாக மட்டுமே வரையறுக்கப்பட்டது.

ஆனால் தமிழை தன் பெயருடன் சேர்த்து தமிழன்பன், தமிழ் செல்வன், தமிழரசி, தமிழரசன், தமிழ்வாணன், செந்தமிழ் செல்வி, என்று சொல்ல முடியும்.

தமிழர் மட்டுமே தமிழை வெறும் மொழியாக மட்டும் எண்ணாமல் உயிராக நேசிக்கிறான்..

அதனால்தான் நம் தமிழ் மொழி நெடுகாலம் கடந்தும் 40 ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்பும் அழியாமல் வளர்கிறது.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


 



பண்டிகைக்கும் வேப்பிலைக்கும் என்ன சம்பந்தம்?

 

பண்டிகைக்கும் வேப்பிலைக்கும் என்ன சம்பந்தம்?

ஓரு சம்பந்தமும் இல்லை.

நம் ஆரோக்கிய பாதுகாப்புக்குதான் வேப்பிலை பண்டிகையின் போது பயன்படுத்தப்படுகிறது.

வேப்பிலை ஒரு அனைத்துவகை கிருமி நாசினி என்பது நம் அனைவருக்கும் அறிந்ததுதான்.

முன்நாளில் கோயிலில் கொடி ஏற்றி பண்டிகை தொடங்கிவிட்டால்…

ஊர் முழுக்க வேப்பிலை தோரணம் கட்டி தொங்கவிடப்படும். அப்படியே ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் சொருகி வைக்கப்படும்.

காரணம் பண்டிகைக்கு மக்கள் ஒன்று கூடும் போது தொற்று வியாதிகள் பரவாமல் இருக்கவே.

கோயில் பண்டிகை கொடி ஏற்றிவிட்டால்…

உள்ளூர்காரர்கள் அசலூர் செல்லவோ… வெளியூர்காரர்கள் உள்ளூர் வரவோ அனுமதி இல்லை.

இந்த கட்டுப்பாடும் வெளி ஊரில் இருந்து தொற்றுகிருமியோ வியாதியோ உள்ளூர் மக்களிடம் பரவாமல் இருக்கவே.

ஒவ்வொரு பண்டிகை முடிவிலும் கட்டாயம் மஞ்சள் நீராட்டு உண்டு.

காரணம் தவறுதலாக நம்மிடம் ஏதாவது தொற்று கிருமியோ வைரஸ் கிருமியோ வந்துவிட்டாலும்..

மஞ்சள் நீராட்டில் அனைத்து கிருமிகளும் அழிக்கப்பட்டு நம் ஆரோக்கியம் காக்கப்படும். மஞ்சளும் ஒரு கிருமி நாசினி என்பது அறிந்ததுதானே..

பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் பண்டிகையில் வெறும் வேப்பிலையும் மஞ்சளும் கொண்டு…

தெய்வத்தின் பெயரைச்சொல்லி இலவசமாகவே நம் ஆரோக்கியம் காத்தார்கள் நம் முன்னோர்கள்.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


பெண்கள் மெட்டி அணிவது அடையாளத்திற்கா? பேஷனுக்கா? மூடநம்பிக்கையா?

 


பெண்கள் மெட்டி அணிவது அடையாளத்திற்கா? பேஷனுக்கா? மூடநம்பிக்கையா?

இது எதுவும் இல்லை.

இது அறிவியல் பூர்வமான பழக்கம்.

பெண்களின் கற்பபை நரம்புகள் காலின் இரண்டாவது விரலில் வந்துதான் முடிகிறது.

திருமணம் நடந்த உடன் பெண்கள் மெட்டி அணிந்து நடக்கும்போது..

கால்விரலில் உள்ள கற்பபை நரம்புகள் தூண்டப்பட்டு கற்பபை நன்கு செயல்படத்தொடங்கும். குழந்தை பிறப்பு துரிதமாகும்.

திருமணத்திற்கு முன்னரும் கணவர் இறந்த பின்பும் கற்பபைக்கு வேலை இல்லை. அதனால் அப்போது பெண்கள் மெட்டி அணிவதில்லை.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி