Sunday, November 10, 2024

புது வீடு கிரகபிரவேசத்தின் போது கோ பூஜை செய்வது மூடநம்பிக்கையா?

 


புது வீடு கிரகபிரவேசத்தின் போது கோ பூஜை செய்வது மூடநம்பிக்கையா?

நாம் புது வீடு கட்டி பால் காய்ச்சி குடிபுகும்நாள்…

பசுவையும் இளம் கன்றையும் வீட்டு வாசலில் உலக்கையை –போட்டு தாண்டி வீட்டிற்குள் அழைத்து வந்து பூஜை செய்து வழிபட்டு ஆசீர்வாதம் வாங்குவோம் இது ஏன் என்று தெரியுமா?

எல்லாரும் செய்யறாங்க.. நாங்களும் செய்தோம்….

ஆனால் பெரும்பாலானோர்க்கு…                                                  இதுக்கு விளக்கமும் தெரியாது காரணமும் தெரியாது..

அதனால்தான் திருட்டு திராவிட படிச்ச கூமுட்டை பகுத்தறிவு நடுநிலைகள் இதை எல்லாம் மூடநம்பிக்கை என்று கேலி செய்து பரிகசிக்கிறது..

செய்வதை ஏன் செய்கிறோம் என்று தெரிந்து செய்வோம்…

பசுவுக்கு துஷ்ட சக்திகள் அமானுஷ்ய சக்திகள் எதிர்மறை ஆற்றல் உள்ள இடத்தை அறியும் சக்தி உண்டு..

அதனால் அந்த பசுவை தன் கன்றுடன் வீட்டுக்குள் அழைத்து வருவார்கள். அந்த பசு கன்றுடன் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் வீட்டின் அனைத்து அறைகளையும் சுற்றிவந்து அமைதியாக இருந்துவிட்டால்…..

அந்த வீட்டில் எந்தவித துஷ்டசக்திகளும் எதிர்மறை ஆற்றலும் இல்லை. மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற இடம் என்று உணர்ந்துகொள்ளலாம். அப்படி இல்லாமல்…

அந்த வீட்டு வாசப்படியை தாண்டி வீட்டின் உள்ளே வராமல் முரண்டு பிடித்தாலோ பயந்து கத்தினாலோ அல்லது தன் கன்றை அழைத்து வராமல் திரும்பி சென்று விட்டாலோ…

அந்த வீட்டில் ஏதோ தவறாக உள்ளது துஷ்ட சக்திகள் எதிர்மறை ஆற்றல் இருக்கிறது என்றும். மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற இடம் இல்லை என்று உணர்ந்துகொள்ளலாம்.

அதற்காகதான் எளிமையான செலவில்லாத இந்த சடங்கு.

அன்று எல்லார் வீட்டிலும் பசுமாடு இருக்கும் சுலபமாக இந்த பழக்கத்தை கடைபிடித்தார்கள்.

இன்று நகரத்தில் பசுமாடு இல்லை வளர்க்க கூடாது.

அதனால்தான் நாம் வசிக்கும் வீடு எதிர்மறை ஆற்றல் உள்ளதா? துஷ்ட சக்தி உள்ளதா என்று அறியாமல்…

பகுத்தறிவு பேசி….

எதையும் பார்க்காமல் வீட்டுக்கு குடி வந்து எப்பொழுதும் குடும்பத்தில் ஏதாவது பிரச்சனையை சந்தித்துகொண்டு இருக்கிறோம். .

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல…

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் அனைத்தும் நம் நன்மைக்கே..

இங்கு எதுவும் மூடநம்பிக்கை கிடையாது.

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.                                 புரியாதவர் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


. தானத்தில் சிறந்தது “கன்னிகாதானம்”

 


. தானத்தில் சிறந்தது “கன்னிகாதானம்”

 

வயிற்றுப் பசியைப் போக்குகிற அன்னதானமே தானத்தில் சிறந்தது என்று சொல்வார்கள்.

 

நிதானமே சிறந்தது என்பவர்களும் உண்டு.

ஆனால், தானங்களிலேயே மிகப் பெரியதாக, மகா தானமாக சாஸ்திரம் குறிப்பிடுவது கன்னிகாதானத்தைதான்!

 

திருமணம் செய்துவைக்கும்போது, தந்தையானவர் தான் பெற்ற பெண்ணை மற்றொரு குடும்பத்தில் பிறந்த ஆண்மகனுக்கு தானமாக அளித்து அவனிடம் ஒப்படைக்கும் இந்த நிகழ்வையே கன்யாதானம் அல்லது கன்னிகாதானம் என்கிறார்கள்!

 

இந்த உலகில் பலவித தானங்கள் செய்யப்பட்டாலும் அவை எல்லாவற்றிலும் உயர்ந்தது இந்த கன்னிகாதானமே என்பதற்கு இந்த நிகழ்வின்போது சொல்லப்படுகிற சங்கல்பமும், மந்திரமுமே சாட்சி.

 

கன்யாதானம் செய்பவனுக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறையும், பின்னால் வருகிற பத்து தலைமுறையும், கன்யாதானம் செய்பவனது தலைமுறையையும் சேர்த்து ஆகமொத்தம் இருபத்தியோரு தலைமுறைகளையும் கரைசேர்க்கும்.

 

உன் வம்சவிருத்திக்காக எம் குலவிளக்கை உனக்கு தானமாக அளிக்கிறேன் என்று ஒரு தந்தை செய்யக்கூடிய கன்னிகாதானமே உலகில் அளிக்கப்படுகின்ற தானங்களில் மிகப்பெரியது என்று சாஸ்திரம் போற்றுகிறது.

 

ஆண்பிள்ளையைப் பெற்றால் அந்தப் பிள்ளை செய்கிற கர்மாவின் மூலம் அந்த ஒரு தலைமுறை மட்டுமே கரையேறும்.

ஆனால், பெண்பிள்ளையைப் பெற்று, அவளைக் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து, மற்றொருவனின் வம்சவிருத்திக்காக அவளை தானம் செய்து கொடுப்பதால், அவனது வம்சத்தில் 21 தலைமுறைகளும் கரையேறுகிறது என்றால் பெண்பிள்ளையைப் பெற்றவன் எப்பேர்ப்பட்ட புண்ணியம் செய்தவன் என சிலாகிக்கிறார்கள் சான்றோர்கள்!

 

ஆக, பெண்பிள்ளையைப் பெற்றவன், இருபத்தியோரு தலைமுறையைக் கரையேற்றும் வாய்ப்பைப் பெற்றவன் என சாஸ்திரம் சொல்கிறது...

பெண்ணை பெற்றவன் பாக்கியவான் புண்ணியவான் என்று சொல்வது இதனால்தான்..

என்றென்றும் அன்புடன்

சுந்தர்ஜி


Saturday, November 9, 2024

முதலிரவில் பால் பழம் கொடுப்பது எதற்காக?

முதலிரவில் பால் பழம் கொடுப்பது எதற்காக?

 

திருமணம் முடிந்த பின் ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா?

 

பெண்ணானவள் தான் பிறந்து வளர்ந்த குடும்பத்தை விட்டு புதிய சூழலில் வாழ வருவதால் எல்லாமே புதிதாக இருக்கும்.

 

கணவர் வீட்டார் கூறும் வார்த்தைகளில் தவறாக புரிதல் வரும் அதிலும் கேலி கிண்டல் ஏன் சில நேரம் அதட்டல் என ஏற்படலாம்.

அந்த நேரங்களில் பெண்ணே ஒருபசு மாடு எப்படி விஷத்தையே உண்டாலும் அது தரும் பாலில் துளிகூட விஷம் இராதோ, அது போல கணவன் வீட்டார் உனக்கு தீமையே செய்தாலும் விஷம் போன்ற வார்த்தைகளை கொட்டி விடாதே என குறிக்க பாலும்.

 

வாழைபழம் எப்படி விதையே இல்லாவிட்டாலும் மூலமரத்தை சார்ந்து கன்றை தருகிறதோ அது போல் கணவனை சார்ந்து வம்சவிருத்தியை நீ தரவேணும் என குறிக்க பழமும் தருவர்.

 

மணமகனுக்கு ஏன் தருகிறார்கள் என்றால்,

! மணமகனே பாலில் எப்படி தயிரும் நெய்யும் உள்ளதோ அதுபோல் இந்த பெண்ணிடமும் அறிவும் ஆற்றலும். உள்ளது பக்குவமாக உறையிட்டு பக்குவமாக கடைந்து வெண்ணையை நெய்யை எடுப்பாயாக.

பாலை கெட வைத்துவிடாதே என குறிக்க பாலும்.

 

வாழைமரத்தை எப்படி அதன் தாய் மரத்தில் இருந்து பக்குவமாக பிரித்து நடுவரோ அது போல்

"இந்த பெண்ணை உங்கள் குடும்ப தோட்டத்தில் நட்டுள்ளோம்"அதை பட்டுபோக விடாமல் அதை பக்குவமாக கவனித்து அதிலிருந்து உங்கள் சந்ததிகளை வாழையடி வாழையாக விருத்தி செய்து கொள்ளுங்கள் என உணர்த்தவே பழமும் கொடுக்கிறார்கள். திருமணத்தில். ...... 🙏

தமிழர் கலாச்சாரம் பண்பாடு பழக்கவழக்கம் வெறும் மூடநம்பிக்கை இல்லை.

என்றென்றும் அன்புடன்

சுந்தர்ஜி

 

 

 


 

Friday, November 8, 2024

பிள்ளை வரம் தருவாரா பிள்ளையார்?



பிள்ளை வரம் தருவாரா பிள்ளையார்?

அரசமரத்தடி பிள்ளையாரை சுற்றிவந்து அடி வயிற்றை தொட்டுப்பார்த்தாளாம் பெண். என்று சொல்வார்கள்..

உண்மையா? வெறும் மூடநம்பிக்கையா?

இதன் மூலம் முன்னோர்கள் நமக்கு சொல்லவரும் கருத்து என்ன?

அரசமர காற்றுக்கு கற்பபையை நன்கு செயல்படவைக்கும் திறனும் சிறு சிறு கோளாறுகளையும் நீர்கட்டி உட்பட சரி செய்யும் சக்தி உண்டு.

அதனால்தான் நம் பெரியவர்கள் திருமணம் ஆன புது பெண்களையும், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களையும்…

அரசமரத்தடி விநாயகரை தினமும் 101 முறை 48 நாட்களுக்கு வலம் வந்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கைகூடும் என்று கூறினார்கள்.

விஷயம் பிள்ளையாரிடம் இல்லை. அரசமரத்தில் இருக்கிறது.

சும்மா அரசமரத்தை சுற்றச் சொன்னால் கேட்கமாட்டார்கள் என்றும் மனதையும் ஒருநிலைப்படுத்த முடியாது என்பதால்…

ஒரு பிள்ளையாரை வைத்து அதன் பின்னால் அரசமரத்தையும் வைத்து மனதை ஒருநிலைப்படுத்தி சுற்றிவரச்சொன்னார்கள்.

நம் பெண்களுக்கு அரசமரத்தடி பிள்ளையாரை பிடித்த காரணம் இதுதான்.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

திருட்டு திராவிட பகுத்தறிவாளர்கள் சொன்ன அனைத்தும்தான் மூடநம்பிக்கை.

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


 

Tuesday, October 29, 2024

இந்துகள் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்...

 நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தபோது 

அவர் மகனின் பள்ளிக்கூடத்தில் "தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை குறைத்துக் கொள்ளுங்கள், 

அந்த பணத்திற்கு ஏழை குழந்தைகளுக்கு உதவுங்கள்: என சொன்னதாக குறிப்பிட்டார்.

  நம்மவர்களின் பள்ளிகளிலேயே!? இப்படி போதிக்கிறார்கள்! என்றால்...!? 

சுற்றுசூழல்மாசு எனும் பெயரில் என்னவெல்லாம் போதிப்பார்கள்? என யோசித்தேன் 

(இந்த விஷயத்தில் சத்குரூ ஜக்கி வாசுதேவ் அவர்களின் கருத்தை பெரிதும் பாராட்டலாம்).

"பள்ளிகூடத்தில்  சொன்னா என்ன சார், ஏற்கனவே போன வருஷ பட்டாசு இருக்கு வெடிக்கதான் போறோம்" என்றார்.

"சாங்கியதுக்காவது புதுசா பட்டாசு கொஞ்சம் வாங்குங்க சார்" என்றேன்.

"அது என்ன புதுசா வாங்கணும்னு இருக்கா ?" என்றவரிடம்,

 "ஆமாம் சார் இதெல்லாம் நம்ம முன்னோர்களின் 'பொருளாதார சுழற்சி நிர்வாகம்," என்றேன்.

 உலகத்துல வேற எங்கயும் இல்லாத அளவுக்கு நமது பாரத நாட்டில் பண்டிகைங்க ஜாஸ்தி.

 பண்டிகைங்க பொருளாதாரத்த தொடர்ந்து 'முன்னெடுத்து' செய்யும் ஒரு 'காரணி' ஆக இருக்கு. 

இதுல குறிப்பா பார்த்தீங்கன்னா தை மாசம் அறுவடை முடிஞ்ச பிறகு பொருளாதாரம் சிறப்பா இருக்கும். 

ஆனா ஆடி மாசத்துக்கு பிறகு பொருளாதாரத்துல தொய்வு இருக்கும். 

ஆடிபட்டத்துல நிலத்தை உழுது நாத்து நட்ட பிறகு, மக்கள் பெரிய அளவு விவசாய வேலை இல்லாம இருப்பாங்க. 

வேலை வாய்ப்பு குறைஞ்சிடும். அதனால தான் ஆடி மாசத்துல இருந்து தொடர்ந்து பண்டிகைங்க வரும். 

ஆடி அம்மாவாசை, ஆடி கிருத்திகை, ஆடி பெருக்கு 18 ல ஆரம்பிச்சு ஒவ்வொரு பண்டிகையும் ஒரு குறிப்பிட்ட துறையை முன்னெடுத்து செல்லும்.

நவ ராத்திரி வந்தா மண் சிலை செய்யறவங்களுக்கு கொலு பொம்மை செய்யற வேலை கிடைக்கும். 

பூ, பொறி கடலை, வாழை மரம், தானியங்கள் விக்கறவங்க பிழைப்பாங்க. 

விநாயகர் சதுர்த்தி வந்தா குயவர்கள் மண் சிலை செய்து பிழைப்பாங்க. 

கிருஷ்ண ஜெயந்தி வந்தா இடையர்கள் வெண்ணை விற்றும், வாணிகர்கள் 

சீடை செய்ய எண்ணெய் விற்றும் பிழைப்பாங்க. 

தீபாவளி கேக்கவே வேண்டாம் 

சீயக்காதூளில் இருந்து புது துணி வரை, வணிகர்கள், பட்டாசு தொழிலாளர்கள், இனிப்பு பலகாரம் விற்பவர்கள், 

நெசவாளர்கள் என ஒரு மிகப்பெரும் பொருளாதார சுழற்சி இருக்கின்றது.

 கார்த்திகை தீபத் திருநாளில் குயவர்கள், எண்ணெய் வணிகர்கள் பிழைப்பாங்க. 

பொங்கல் திருநாளில் அறுவடை முடிந்த கையோடு விவசாயிகளின் விவசாய பொருட்களுக்கு தேவை உருவாகிறது. 

கரும்புக்கு, வெல்லத்திற்கு, நெய்யிற்க்கு, கோல மாவிற்கு, பசு மாட்டின் கொம்பிற்கு வர்ணம் பூச இயற்கை வர்ணங்களுக்கு, பொங்கல் பானைகளுக்கு என பலதரப்பட்ட தேவை உருவாகிறது. 

பொருளாதார தொடர் சங்கிலிகளாக பண சுழற்சிக்காக

இப்படி பண்டிகைகள் பலதரப்பட்ட தொழில்களுக்கு ஒரு 'தேவையை'  உருவாக்குகின்றன. 

பண்டிகைகள் மட்டுமல்ல நாம் தினம்தோறும் செய்யும் சடங்குகள் கூட 

(தேங்காய் உடைப்பது, கற்பூரம் ஊதுபத்தி) பலதரப்பட்ட மக்களின் தொழிலுக்கு உதவியாக உள்ளது. 

 செலவழிக்கப்படும் பணம் தான் ஒரு தொடர் சங்கிலி  ஆக தேசத்தின் பொருளாதாரத்தையே தூக்கி நிறுத்துகிறது. 

பண்டிகைகள் இப்படி நம்மை செலவு செய்ய நிர்பந்திக்கின்றன. 

அந்த செலவுகளால் தேசத்தின் பல்வேறு துறைகளும் வளர்கிறது. 

நம்மிடம் இருந்து செல்லும் பணம் வேறு ஒரு வகையில் நம்மிடம் வந்து சேர்கிறது. 

அதனால தான் சாங்கியதுக்காகவாவது புது பட்டாசு வாங்குங்க , 

கார்த்திகைக்கு புது விளக்கு வாங்குங்க, 

பொங்கலுக்கு புது பானை வாங்குங்கனு 

நம்ம முன்னோர்கள் சொன்னாங்க. 

ஒரு கஞ்சனை விட நாட்டுக்கு எதிரி யாரும் இல்லை. 

(சிக்கனம் வேறு கஞ்சத்தனம் வேறு)

என்னங்க இவ்ளோ விஷயம் இருக்கா ? 

பிரமிப்பா இருக்கு என்றார் நண்பர்.

சார் நான் பொருளாதாரம் படிச்சதால 

நம் பண்டிகைங்க மகத்துவத்தை வெறும் பொருளாதாரத்துல தான் சொல்லியிருக்கேன் 

இன்னும் ஆரோக்கிய மேம்பாட்டில் சொல்லலாம்...!

சமூக ஒற்றுமை சமநிலை சம்பந்தமா சொல்லலாம்...! 

சுற்றுசூழல் , பொழுது போக்கு , மன இறுக்கத்தை போக்கும்ன்னு  கூட விவரிக்கலாம்...!

சொல்ல போனா இதை பற்றி ஒரு பெரிய புத்தகமே எழுதலாம்...!?

அவ்வளவு ஏன் சினிமா கூத்தாடிகள் உட்பட 

இந்து விரோத திருட்டு திராவிட விடியல் ஊப்பீஸ்கள் 

அரேபிய முகலாய அடிமைகள் வாரிசுகள், 

ஆப்ரகாமிய அடிமை கூட்டம் கூட 

நம்ம பண்டிகைகளை வைத்து தான் பிழைக்கறாங்க என்றேன்.

நம் முன்னோர்களை விட அறிவாளிகள் வேறு யாருமே இல்லை.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


Tuesday, August 20, 2024

மனிதனும் தமிழும் பிறந்த மறக்கடிக்கப்பட்ட கதை

 கி.மு.சுமார் 1,00,000 ஆண்டுகள் முதல் 5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு....

இந்தியாவின் தற்போதைய தென்கோடி கரை முதல்
ஆஸ்திரேலியாவின் வடக்கு கடல்பகுதியில் உள்ள…
அகஸ்திய மலை, ரிஷப மலைவரையும், மலேசியா, சிங்கபூர் சாலித்தீவின் மேற்கு கடல் பகுதியில் உள்ள புஷ்பிதக மலை, சூரியவான் மலை, வித்யுத மலை, குஞ்சர மலை முதல்....
ஆப்ரிக்காவின் கிழக்கு கடல் பகுதியில் உள்ள மகேந்திர மலை ,மலைய மலை குமரி மலை வரை
இணைந்திருந்த கோண்ட்வானா நிலப்பகுதியின் ஒரு பகுதியான லெமுரியா/ குமரிக்கண்டம் எனப்படும் நிலப்பரப்பே பழந்தமிழர்கள் வாழ்ந்த நாடாகும்.
12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகள் கொண்ட குமரி கண்டத்தை 14 மாநிலங்களாக பிரித்திருந்தனர். அங்கு தெங்கு நாடு, குறும்பனை நாடு, குன்ற நாடு, குணக்கரை நாடு, தென்மதுரை, கபாடபுரம், ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு ,ஏழுகுரும்பனை நாடு, பாண்டிய நாடு என இங்கு நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளது.
அகஸ்திய தீர்த்தம், வருண தீர்த்தம், குமரி தீர்த்தம் பஃறுளி என்ற ஆறுகள் ஓடியுள்ளது.
குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது .
தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.
அந்நாட்டில் வாழ்ந்தவர்கள்தான் பழந்தமிழர்கள்.
பழந்தமிழர்கள் கையாண்ட நாகரீகம் தமிழர் நாகரீகம், பேசிய மொழி தமிழ்.
அவர்களின் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் சான்றாக பினிசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் விளங்குகின்றன.
முச்சங்க வரலாறு, தொல்காப்பியம், சிலப்பதிகாரம், தேவநேய பாவணர் எழுதிய “முதல் தாய்மொழி” ஆகிய நூல்கள் வாயிலாக தமிழர்களின் பிறப்பிடமும், தமிழ் மொழியின் பிறப்பிடமும் லெமுரியா/ குமரி கண்டம்தான் என நாம் அறியலாம்.
உலகின் மிக மூத்த அரச குலங்களில் ஒன்று பாண்டிய அரச குலம். தமிழ்நாட்டை சங்க காலம் தொட்டே சேர, சோழ, பாண்டியர் எனும் மூவேந்தர்கள் ஆள, மூவரில் மூத்தோனாகப் பழையோனாகப் பாண்டியனே இருந்தான்.
அவனை புகழ்ந்து பாட நம் புலவர்கள் இயற்றிய நூலில் ஒன்று.
“செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே” (புறம் 9)
“தொடியோள் பௌவம்” என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் கொடுக்கும் விரிவான விளக்கத்தில்
“தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும்,
குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், , ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும், நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க.”
ராஜ ராஜ சோழனின் மெய்கீர்த்தி:
“திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்
தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக்
காந்தளூர்ச் சாலை கலமறுத் தருளி
வேங்கை நாடும் கங்க பாடியும்
நுளம்ப பாடியும் தடிகை பாடியும்
குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்
எண் திசை புகழ் தர ஈழமண்டலமும்
இரட்ட பாடி ஏழரை இலக்கமும்
முந்நீர் பழந்தீவு பன்னீரா யிரமும்
திண்திறல் வென்றித் தண்டாற் கொண்ட தன்
எழில்வளர் ஊழியுள் எல்லா யாண்டும் தொழுதகை விளங்கும் யாண்டே
செழியரைத் தேசுகொள் ஸ்ரீ கோவி ராஜ கேசரி வன்ம ரான ஸ்ரீ இராசராச தேவர்க்கு யாண்டு..”
முருகனின் இலக்கியப்பெயர் குமரவேல் பாண்டியன்- குமரனின் மனைவி குமரியாதலால் இஃது குமரிக்கண்டமென பெயர் பெற்றிருக்கலாம் (என் கருத்து மட்டுமே).
இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழந்தனர்.
இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது.
ஆம் இதுதான் ” நாவலன் தீவு ” என்று அழைக்கப்பட்ட ” குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கும் இது ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!.
இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம்தான் ” குமரிக்கண்டம் “.
குமரி கண்டத்தில் பண்டைய பாண்டிய மன்னர்கள் மூன்று தமிழ்ச் சங்கங்கள் வைத்து தமிழை வளர்த்தார்கள் என்றும் அவை 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாகவும் நக்கீரர் ” இறையனார் அகப்பொருள் ” என்ற நூலில் கூறியுள்ளார்.
பிளினி, தாலமி போன்ற மேலைநாட்டு அறிஞர்களும் சங்கம் பற்றி உரைக்கின்றனர். இலங்கை வரலாற்று நூல்களான மகாவம்சம், இராஜாவளி, இராஜரத்னாகிரி போன்ற நூல்களும் சங்கம் இருந்தமைக்குச் சான்று பகர்கின்றன.
கடல் கொண்ட தென்மதுரையில் பாண்டிய மன்னர்களால் நிறுவப் பெற்ற சங்கம் தான் முதற்சங்கமாகும்.
இச்சங்கத்தை நிறுவிய மன்னன் காய்சின வழுதி என்பவனாவான். காய்சின வழுதி முதலாகக் கடுங்கோன் என்ற பாண்டிய மன்னன் ஈறாக 89 அரசர்கள் 4440 ஆண்டுகள் இச்சங்கத்தை நடத்தியதாக இறையனார் களவியல் உரை கூறுகிறது.
இச்சங்கத்தில் அகத்தியர், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள்(சிவன்), குன்றெறிந்த முருகவேள், முரஞ்சியூர் முடிநாகராயர், நிதியின் கிழவன் போன்ற புலவர்கள் இருந்து தமிழ் ஆராய்ந்தனர். 4449 புலவர்கள் தமிழ் ஆராய்ந்து செய்யுள் பாடினர்.
அவர்களால் பரிபாடல், முதுநாரை, முதுகுருக்கு, களரியாவிரை பேரதிகாரம் போன்ற நூல்கள் பாடப்பட்டன. இதில் அனைத்துமே அழிந்து விட்டது .
தென்மதுரையைக் கடல் கொண்ட பிறகு கபாடபுரத்தில் தொடங்கப் பெற்ற இடைச்சங்கம் (இரண்டாம் சங்கம்) 3700 ஆண்டுக் காலம் நடைபெற்றது.
வெண்தேர்ச் செழியன் என்ற பாண்டிய மன்னனால் தொடங்கப் பெற்ற இச்சங்கம் முடத்திருமாறன் முடிய 59 மன்னர்களால் நடத்தப் பெற்றது.
இச்சங்கத்தில் அகத்தியர், தொல்காப்பியர், இருந்தையூர் கருங்கோழியார் வெள்ளூர்க் காப்பியனார் போன்ற3700 புலவர்கள் பாடினர்.
இவர்களால் பாடப்பெற்றவை அகத்தியம், தொல்காப்பியம் பூதபுராணம், மாபுராணம் கலி, குருகு, வெண்டாளி, வியாழ மாலை அகவல் கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை அகவல் போன்ற நூல் கள் இயற்றப்படன. இதில் தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.
இரண்டாம் சங்கம் இருந்த காலத்தில் ‘கபாடபுரம்’ என்ற தலைநகரம் முழுகிய பின்னரும் குமரி ஆறு இருந்ததென்பதை தொல்காப்பிய சிறப்புப் பாயிர வரி, “வட வேங்கடந் தென்குமரி” குறிப்பதாகக் கருதுகின்றனர்
கபாடபுரமும் கடலால் அழிந்த பிறகு தற்போது உள்ள மதுரையில் கடைச் சங்கம் எனப்படுகின்ற மூன்றாம் சங்கம் தொடங்கப் பெற்றது.
இரண்டாம் சங்கத்தை நடத்தி, கபாடபுரம் அழியும் போது அங்கிருந்து பிழைத்து வந்த முடத்திருமாறனால் இது, தொடங்கப் பெற்றது.
சிறுமேதாவியார், முடத்திருமாறன் முதலாக உக்கிரப்பெருவழுதி ஈறாக 49 அரசர்களால் நடத்தப் பெற்றது.
1850 ஆண்டுகள் இச்சங்கம் நடைபெற்றது. சேந்தம்பூதனார், அறிவுடை அரனார், பெருங்குன்றூர் கிழார், இளந்திரு மாறன், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார், மதுரை மருதன் இளநாகனார், கணக்காயர் மகனார் நக்கீரனார் போன்ற 449 புலவர்கள் மூன்றாவது கடைச்சங்கத்தில் இருந்தனர்
இதில் எழுதப்பட்ட நூல்கள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பரிபாடல் நாலடியார் போன்றவை ஆகும்.
இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !
இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் .
இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 1,00,000-5,00,000 வருட உலகின் முதல் இனம் நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.
எவ்வாறாயினும் தமிழரே மூத்த குடி என்பது அனைத்து ஆய்வாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாதமாகும்.
அதனை பேணிக்காப்பது இப்போதைய சூழலில் அவசியமான ஒன்று.
தேடல்கள் தொடரும்….
தமிழன் திமிரானவன்
சுந்தர்ஜி
https://www.facebook.com/OurDreams6/
1 நபர், கோவில் மற்றும் உரை படமாக இருக்கக்கூடும்
புள்ளிவிவரங்களையும் விளம்பரங்களையும் காட்டு
எல்லா உணர்ச்சிகளும்:
21