Tuesday, August 20, 2024

மனிதனும் தமிழும் பிறந்த மறக்கடிக்கப்பட்ட கதை

 கி.மு.சுமார் 1,00,000 ஆண்டுகள் முதல் 5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு....

இந்தியாவின் தற்போதைய தென்கோடி கரை முதல்
ஆஸ்திரேலியாவின் வடக்கு கடல்பகுதியில் உள்ள…
அகஸ்திய மலை, ரிஷப மலைவரையும், மலேசியா, சிங்கபூர் சாலித்தீவின் மேற்கு கடல் பகுதியில் உள்ள புஷ்பிதக மலை, சூரியவான் மலை, வித்யுத மலை, குஞ்சர மலை முதல்....
ஆப்ரிக்காவின் கிழக்கு கடல் பகுதியில் உள்ள மகேந்திர மலை ,மலைய மலை குமரி மலை வரை
இணைந்திருந்த கோண்ட்வானா நிலப்பகுதியின் ஒரு பகுதியான லெமுரியா/ குமரிக்கண்டம் எனப்படும் நிலப்பரப்பே பழந்தமிழர்கள் வாழ்ந்த நாடாகும்.
12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகள் கொண்ட குமரி கண்டத்தை 14 மாநிலங்களாக பிரித்திருந்தனர். அங்கு தெங்கு நாடு, குறும்பனை நாடு, குன்ற நாடு, குணக்கரை நாடு, தென்மதுரை, கபாடபுரம், ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு ,ஏழுகுரும்பனை நாடு, பாண்டிய நாடு என இங்கு நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளது.
அகஸ்திய தீர்த்தம், வருண தீர்த்தம், குமரி தீர்த்தம் பஃறுளி என்ற ஆறுகள் ஓடியுள்ளது.
குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது .
தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.
அந்நாட்டில் வாழ்ந்தவர்கள்தான் பழந்தமிழர்கள்.
பழந்தமிழர்கள் கையாண்ட நாகரீகம் தமிழர் நாகரீகம், பேசிய மொழி தமிழ்.
அவர்களின் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் சான்றாக பினிசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் விளங்குகின்றன.
முச்சங்க வரலாறு, தொல்காப்பியம், சிலப்பதிகாரம், தேவநேய பாவணர் எழுதிய “முதல் தாய்மொழி” ஆகிய நூல்கள் வாயிலாக தமிழர்களின் பிறப்பிடமும், தமிழ் மொழியின் பிறப்பிடமும் லெமுரியா/ குமரி கண்டம்தான் என நாம் அறியலாம்.
உலகின் மிக மூத்த அரச குலங்களில் ஒன்று பாண்டிய அரச குலம். தமிழ்நாட்டை சங்க காலம் தொட்டே சேர, சோழ, பாண்டியர் எனும் மூவேந்தர்கள் ஆள, மூவரில் மூத்தோனாகப் பழையோனாகப் பாண்டியனே இருந்தான்.
அவனை புகழ்ந்து பாட நம் புலவர்கள் இயற்றிய நூலில் ஒன்று.
“செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே” (புறம் 9)
“தொடியோள் பௌவம்” என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் கொடுக்கும் விரிவான விளக்கத்தில்
“தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும்,
குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், , ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும், நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க.”
ராஜ ராஜ சோழனின் மெய்கீர்த்தி:
“திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்
தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக்
காந்தளூர்ச் சாலை கலமறுத் தருளி
வேங்கை நாடும் கங்க பாடியும்
நுளம்ப பாடியும் தடிகை பாடியும்
குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்
எண் திசை புகழ் தர ஈழமண்டலமும்
இரட்ட பாடி ஏழரை இலக்கமும்
முந்நீர் பழந்தீவு பன்னீரா யிரமும்
திண்திறல் வென்றித் தண்டாற் கொண்ட தன்
எழில்வளர் ஊழியுள் எல்லா யாண்டும் தொழுதகை விளங்கும் யாண்டே
செழியரைத் தேசுகொள் ஸ்ரீ கோவி ராஜ கேசரி வன்ம ரான ஸ்ரீ இராசராச தேவர்க்கு யாண்டு..”
முருகனின் இலக்கியப்பெயர் குமரவேல் பாண்டியன்- குமரனின் மனைவி குமரியாதலால் இஃது குமரிக்கண்டமென பெயர் பெற்றிருக்கலாம் (என் கருத்து மட்டுமே).
இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழந்தனர்.
இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது.
ஆம் இதுதான் ” நாவலன் தீவு ” என்று அழைக்கப்பட்ட ” குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கும் இது ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!.
இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம்தான் ” குமரிக்கண்டம் “.
குமரி கண்டத்தில் பண்டைய பாண்டிய மன்னர்கள் மூன்று தமிழ்ச் சங்கங்கள் வைத்து தமிழை வளர்த்தார்கள் என்றும் அவை 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாகவும் நக்கீரர் ” இறையனார் அகப்பொருள் ” என்ற நூலில் கூறியுள்ளார்.
பிளினி, தாலமி போன்ற மேலைநாட்டு அறிஞர்களும் சங்கம் பற்றி உரைக்கின்றனர். இலங்கை வரலாற்று நூல்களான மகாவம்சம், இராஜாவளி, இராஜரத்னாகிரி போன்ற நூல்களும் சங்கம் இருந்தமைக்குச் சான்று பகர்கின்றன.
கடல் கொண்ட தென்மதுரையில் பாண்டிய மன்னர்களால் நிறுவப் பெற்ற சங்கம் தான் முதற்சங்கமாகும்.
இச்சங்கத்தை நிறுவிய மன்னன் காய்சின வழுதி என்பவனாவான். காய்சின வழுதி முதலாகக் கடுங்கோன் என்ற பாண்டிய மன்னன் ஈறாக 89 அரசர்கள் 4440 ஆண்டுகள் இச்சங்கத்தை நடத்தியதாக இறையனார் களவியல் உரை கூறுகிறது.
இச்சங்கத்தில் அகத்தியர், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள்(சிவன்), குன்றெறிந்த முருகவேள், முரஞ்சியூர் முடிநாகராயர், நிதியின் கிழவன் போன்ற புலவர்கள் இருந்து தமிழ் ஆராய்ந்தனர். 4449 புலவர்கள் தமிழ் ஆராய்ந்து செய்யுள் பாடினர்.
அவர்களால் பரிபாடல், முதுநாரை, முதுகுருக்கு, களரியாவிரை பேரதிகாரம் போன்ற நூல்கள் பாடப்பட்டன. இதில் அனைத்துமே அழிந்து விட்டது .
தென்மதுரையைக் கடல் கொண்ட பிறகு கபாடபுரத்தில் தொடங்கப் பெற்ற இடைச்சங்கம் (இரண்டாம் சங்கம்) 3700 ஆண்டுக் காலம் நடைபெற்றது.
வெண்தேர்ச் செழியன் என்ற பாண்டிய மன்னனால் தொடங்கப் பெற்ற இச்சங்கம் முடத்திருமாறன் முடிய 59 மன்னர்களால் நடத்தப் பெற்றது.
இச்சங்கத்தில் அகத்தியர், தொல்காப்பியர், இருந்தையூர் கருங்கோழியார் வெள்ளூர்க் காப்பியனார் போன்ற3700 புலவர்கள் பாடினர்.
இவர்களால் பாடப்பெற்றவை அகத்தியம், தொல்காப்பியம் பூதபுராணம், மாபுராணம் கலி, குருகு, வெண்டாளி, வியாழ மாலை அகவல் கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை அகவல் போன்ற நூல் கள் இயற்றப்படன. இதில் தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.
இரண்டாம் சங்கம் இருந்த காலத்தில் ‘கபாடபுரம்’ என்ற தலைநகரம் முழுகிய பின்னரும் குமரி ஆறு இருந்ததென்பதை தொல்காப்பிய சிறப்புப் பாயிர வரி, “வட வேங்கடந் தென்குமரி” குறிப்பதாகக் கருதுகின்றனர்
கபாடபுரமும் கடலால் அழிந்த பிறகு தற்போது உள்ள மதுரையில் கடைச் சங்கம் எனப்படுகின்ற மூன்றாம் சங்கம் தொடங்கப் பெற்றது.
இரண்டாம் சங்கத்தை நடத்தி, கபாடபுரம் அழியும் போது அங்கிருந்து பிழைத்து வந்த முடத்திருமாறனால் இது, தொடங்கப் பெற்றது.
சிறுமேதாவியார், முடத்திருமாறன் முதலாக உக்கிரப்பெருவழுதி ஈறாக 49 அரசர்களால் நடத்தப் பெற்றது.
1850 ஆண்டுகள் இச்சங்கம் நடைபெற்றது. சேந்தம்பூதனார், அறிவுடை அரனார், பெருங்குன்றூர் கிழார், இளந்திரு மாறன், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார், மதுரை மருதன் இளநாகனார், கணக்காயர் மகனார் நக்கீரனார் போன்ற 449 புலவர்கள் மூன்றாவது கடைச்சங்கத்தில் இருந்தனர்
இதில் எழுதப்பட்ட நூல்கள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பரிபாடல் நாலடியார் போன்றவை ஆகும்.
இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !
இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் .
இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 1,00,000-5,00,000 வருட உலகின் முதல் இனம் நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.
எவ்வாறாயினும் தமிழரே மூத்த குடி என்பது அனைத்து ஆய்வாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாதமாகும்.
அதனை பேணிக்காப்பது இப்போதைய சூழலில் அவசியமான ஒன்று.
தேடல்கள் தொடரும்….
தமிழன் திமிரானவன்
சுந்தர்ஜி
https://www.facebook.com/OurDreams6/
1 நபர், கோவில் மற்றும் உரை படமாக இருக்கக்கூடும்
புள்ளிவிவரங்களையும் விளம்பரங்களையும் காட்டு
எல்லா உணர்ச்சிகளும்:
21

No comments:

Post a Comment