Monday, October 10, 2016

Tamil Astrology

எந்த யோகத்தில் பிறந்தவர்கள் எந்த குணாதிசயம் படைத்தவர்களாக இருப்பாங்க .? முன்னோர்களின் கைதேர்ந்த கணிப்பு என்ன..?
விஷ்கம்பம் யோகம்: 
பிறரை வெற்றி கொள்ளக்கூடியவராகவும் செல்வங்களை அடையக்கூடியவரகவும் பசு முதலான கால்நடை செல்வம் மூலம் செல்வம் பெறுவார்கள்.
பிரீதி யோகம்:
பிற பெண்களின் வசப்பட்டவராக, அவர்கள் சொல்கிற படி கேட்டு நடப்பவராக இருப்பார்
.
ஆயுஷ்மான் யோகம்: நீண்ட ஆயுளையும் நோயற்ற உடலையும், பெற்றவராக வாழுவர்.
சௌபாக்கியம் யோகம்: 
இவருக்கு எப்போதும் மகிழ்சியான வாழ்க்கை அமையும். அதற்க்கு வேண்டிய வசதி வாய்ப்பு அமையும்.
சோபனம் யோகம்: 
காம வெறி மிகுந்தவராக இருப்பவராகவும், அதனால் பல தொல்லைகளை அனுபவிப்பவரகவும் இருப்பார்.
அதிகண்டம் யோகம்: 
கொடூரமான புத்தியுடையவராக, பிறரை துன்புறுத்தி தானும் துன்பத்துடன் வாழுவார்.
சுகர்மம் யோகம்:
உத்தமமான நடத்தை உள்ளவர். செல்வ வசதியுடன், நல்ல கர்மங்கள் செய்யும் குணத்துடன் இருப்பார்.
திருதி யோகம்:
பிறரின் பொருள்கள், பெண்களை அவருக்கு தெரியாமல் அபகரிக்கும் குணத்துடனும், இந்த புத்தியினால் பலருடைய வெறுப்புக்கு ஆளானவராக இருப்பார்.
சூலம் யோகம்: 
சிறு சிறு விசயங்களுக்கு கோபம், சதா சண்டை போட தயாரான குணமுடன், அதானால் வரும் விளைவுகளுடன் போரடுவார்.
கண்டம் யோகம்: 
தீய வழியில் மனம் செல்லும். அதிலே திருப்தி உண்டாகும். இதனால் பலவிதமான சிக்கல் ஏற்ப்படும்.
விருத்தி யோகம்: 
பேச்சிலே சாதுர்யம் மிக்கவராகவும், அதனால் பலவகையில் விருத்திகள் ஏற்ப்படும்.
துருவம் யோகம்: 
பெரும் செல்வ வளத்துடன் அமோகமாக வாழுவார்.
வியாகதம் யோகம்: 
கொடூரமான மனம் கொண்டவர். பேச்சிலும் செயலிலும் அது வெளிப்படும்.
அரிஷனம் யோகம்: 
புத்திசாலி தனம் மிக்கவராக, அதனால் பெரும் புகழ் அடைபவராக இருப்பார்.
வச்சிரம் யோகம்:
கம வெறி மிகுந்தவராகவும். தனவந்தரகவும் விளங்குவார். இரண்டு விதமான பெயர் பெருவார்.
சித்தி யோகம்: 
மகாபிரபுவாக வாழுவர். பலருக்கு ஆதரவாக உதவி செய்து, பலரின் நன்றிக்கு உரியவராக, வசதியாக வாழுவர்.
வியதீபாதம் யோகம்: 
எப்போதும் மோசமான கருத்துக்களை மட்டுமே வெளிப்படுத்தும் குணத்துடன் வாழுவார்.
வரியான் யோகம்: 
கெட்ட வழியிலே நடக்க துணிந்தவராக இருப்பார்கள். க்கமவளியிலே போவதும் அதன் விளைவுகளை அனுபவிப்பார்.
பரீகம் யோகம்: 
சண்டை போடும் குணம் அதிகம் இருக்கும். செல்வா சௌபாக்கியம் அதிகமாக சேரும்.
சிவம் யோகம்: 
சாஸ்த்திரம் அறிந்தவனாகவும், செல்வ செல்வாக்கினை பெற்றவானாக, சாந்த குணத்துடன் ஆட்சி செய்பவரிடம் மதிப்புள்ளவனாக இருப்பார்.
சித்தம் யோகம்: 
உத்தமமான போக்கினை உடையவராக, தெய்வீக ஈடுபாட்டுடன் இருப்பார்இருப்பார்கள்.
சாத்தியம் யோகம்: 
நல்லவழிகளை கண்டறிந்து தவறாமல் அந்த வழியில் நடக்கும் உத்தமன்.
சுபம் யோகம்: 
அழகும் செல்வமும் பெற்றவனாக, காம இச்சை மிகுந்தவனாகவும், கபம் நோய்கள் மிகுந்தவனாக இருப்பான்.
சுப்பிரம் யோகம்:
சாதுர்யமான பேச்சும், ஒழுக்கம் தவறாத நடத்தையும், கொண்டவனாக, மனோதிடம் இல்லாதவனாகவும், கோபம் மிகுந்தவனாகவும் இருப்பான்
பிரம்மம் யோகம்:
இரகசியமான செல்வங்களை கொள்பவனாக, தன்னுடைய முன்னேற்றமே முக்கியமானதாக கொள்ளும் குணத்துடன், நியாயமான முடிவுகளை எடுக்கும் குணமுடையோன்
அஜந்திரம் யோகம்: 
சகலத்தினைப் பற்றியும் தெரிந்தவனாக ஞானியினை போல இருப்பான். தனம், பரோபகார சிந்தனையுடன் இருப்பான்.
வைகிருதி யோகம்:
தந்திரம் மிகுந்தவனாகவும், பிறரை தூஷிப்பதே வேலையாக கொண்டு ஆனந்தம் அடைவான். வலிமையினால் செல்வாக்கு பெற்று தனம் அடைவான்.

யோகநிலைகளை படிக்கும் போதே உங்கள் மனக்கண் முன்னே உங்களுக்கு தெரிந்த பல கதாபாத்திரங்கள் வந்து சென்றிருக்கும் தானே.?.ஆக இயற்கையாக பிறந்த நேரத்திற்க்கு தகுந்தவாறு குணாதிசயம் நிச்சயம் மாறுபடுகிறது என்றே கூறலாம்..!

No comments:

Post a Comment