Sunday, February 24, 2019

ஊர் பேர் கேட்டாலே கொன்று திங்கும் #ஆதிவாசிகள்! #சோழர்களின் பாதுகாவலர்களா ?

ஊர் பேர் கேட்டாலே கொன்று திங்கும் #ஆதிவாசிகள்! #சோழர்களின் பாதுகாவலர்களா ?



இவர்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறினால் ஒட்டுமொத்த நாடும் கதி கலங்கிவிடும். அப்படி யார் இவர்கள் ? சோழர்களுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு ?.
வெறும் ஐநூறுக்கும் குறைவான மக்கள் தொகை, உடலைத் துளைத்து வெளியேறும் வில் அம்புகள், குளந்தை போன்ற முக அமைப்பு இருந்தாலும், அவர்களின் விரிந்த கண்கள் எப்பேர்ப்பட்ட பகில்வானையும் தொடை நடுங்க வைத்து விடும். ஆம், இவர்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறினால் ஒட்டுமொத்த நாடும் கதி கலங்கிவிடும். அப்படி யார் இவர்கள் ? சோழர்களுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு ?.

உயிர் கொல்லித் தீவு
இந்தியாவில் உள்ள 7 யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேர். இப்பகுதியில் அங்கொன்றும், இங்கொன்றுமாக மொத்தம் 572 தீவுகள் உள்ளபோதும், அவற்றில் 36 தீவுகளில்தான் மக்கள் வசித்து வருகிறார்கள். அவற்றுள் ஒன்று தான் இந்த உயிர் கொல்லித் தீவும். இத்தீவின் உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது ?. ஊர் பேர் கேட்க கிட்ட நெருங்கினாலே உயிரைக் கொண்டு உணவாக உண்டு விடுவர் இங்கு வசிக்கும் ஆதிவாசிகள்.

குட்டித் தீவு
வங்காள விரிகுடாவில் இருக்கும் அந்தமான் தீவுகளில் ஏறத்தாழ 30 கிலோ மீட்டர் சுற்றளவில் ஓர் சிறிய தீவு உள்ளது. செயற்கையான மற்றும் நவீனத் தன்மை அற்ற இத்தீவின் பெரும்பகுதி காடுகளே. இத்தீவைச் சுற்றி உள்ள கடற்கரைப் பகுதியில் கூட வேற்றுப் பகுதி மக்கள் கால் வைக்க நினைத்தால் அவர்கள் மரணிக்கப்படுவது உறுதி.

அனுமதி இல்லை
இத்தீவைச் சுற்றியுள்ள சுமார் மூன்று மலை தூரத்திற்குக் கூட யாரும் செல்லக் கூடாது என சட்டம் இயற்றப்பட்டுள்ளது. காரணம், இப்பகுதியில் வசிக்கும் மக்களால் கொலை செய்யப்படுவதே. இவர்கள் வெளி மக்களை அவர்களின் தீவில் காலடி வைக்க அனுமதிப்பதில்லை. மீறி வந்தவர்கள் உடலின் மிச்சம் மீதியே வெளியேறும்.

ஜாரவா ஆதிவாசிகள்
ஜாரவா ஆதிவாசி மக்கள் இந்த நிலம் தங்களுக்கானது எனக் கருதுகிறார்கள். இவர்களுக்கு வெளியுலகில் உள்ள நவீன சட்டதிட்டங்கள் குறித்து ஏதும் தெரியாது. எந்த விதிகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் அவர்கள் கட்டுப்படுவது இல்லை. அந்தமானின் தெற்கு, மேற்கு, மத்திய பகுதிகளில் வசிப்பவர்கள். ஆக்ரோசமானவர்கள் என்பதால் இவர்களின் இடங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை. இவர்களின் எண்ணிக்கை சராசரியாக 471 அளவிலேயே உள்ளது.

ஆங்கிலேயர்களால் பாதிப்பு
கடந்த நூற்றாண்டுகளில் அந்தமான் நிலப்பரப்பை ஆக்ரமித்த ஆங்கிலேயர்கள் தங்களது தேவைக்காக இம்மக்களை அடிபனிய வைக்க முயன்றனர். ஆனால், எதற்கும் அஞ்சாத ஜாரவா இன மக்கள் கட்டுப்பாடின்றி செயல்பட்டதால் ஆங்கிலேயர்களால் வெகுவாக கொல்லப்பட்டனர்.

என்ன பேசுராங்க ?
இந்த தீவில் வசிக்கும் மக்களின் பேச்சு, மொழி அருகில் உள்ள தீவு மக்களுக்கே புரிவதில்லை என்கின்றனர். ஆப்பிரிக்காவில் காணப்படும் ஆதிவாசிகள் போல தோற்றம் கொண்ட இவர்களின் உண்மையான தோற்றம் தான் எது ?. எங்கிருந்து வந்தார்கள் ? இவர்களின் அன்றாட வேலை தான் என்ன என யாருக்குமே தெரியாது.
கற்கால மனிதர்கள்
இந்த கற்கால மனிதர்கள் தீவில் வேட்டையாடி மட்டுமே உயிர் வாழ்ந்து வருகின்றனர். ஏதேனும் உதவி செய்யலாம் என நெருங்கிச் சென்றால் பின் உங்களது குடும்பத்திற்கு நிதிவுதவி அளிக்க வேண்டி வரும். அத்தகைய குணம் கொண்டவர்கள் தான் இவர்கள்.
நேர்த்தியான கட்டமைப்பாளர்கள்
வெளிப் பகுதிகளில் இருந்து எந்த உதவியையும், பொருளையும் எதிர்பார்க்காத இம்மக்கள் தங்களது தேவையை பூர்த்தி செய்வதிலும் தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளனர். இதற்கு உதாரணம் இவர்கள் செய்யும் வில், அம்பு, படகுகளே. தங்களது நேர்த்தியான கைவண்ணம் மூலம் உருவாக்கும் வில் பல மீட்டர் தூரத்தில் இருக்கும் இலக்கையும் எளிதில் துளைத்து வெளியேறும் அளவிற்கு கடிணமானதாக உள்ளது.

கூகுலில் இத்தீவு
இத்தீவை நெருக்கமாக படபெடுக்க வேண்டும் என்றால் பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்து மட்டுமே எடுக்க முடியும். அல்லது, கூகுல் மேப் உதவியுடன் தான் இத்தீவின் அழகையும், கடற்கரை அழகையும் ரசிக்க முடியும். கூகுலில் இதன் பெயர் வடக்கு வென்டினல் என குறிப்பிட்டிருக்கும். ஒரு சில வருடங்களுக்கு முன்பு இத்தீவின் மணல் திட்டில் மாட்டிக் கொண்ட கப்பலை இன்றும் கூகுல் மேப் வழியாக பார்க்க முடியும். கப்பளில் இருந்தவர்கள் பல போராட்டங்களுக்குப் பிறகு எலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டது தனிக் கதை

Thursday, February 21, 2019

சிந்து சமவெளியில் - ஜல்லிக்கட்டு

சிந்து சமவெளியில் - ஜல்லிக்கட்டு



தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதப்படும் "ஜல்லிக்கட்டு" சுமார் 4000 வருடங்களுக்கு முன்பிலிருந்தே விளையாடப்பட்டு வருகின்றது என்பதற்கான சான்று, (அதாவது கி.மு.2000 !!!).உலகின் தொன்மையான நாகரீகங்களில் ஒன்றான " சிந்து சமவெளி " நாகரீகம் இருந்த இடமான "மொஹஞ்சதாரோ" பகுதியில் இந்த முத்திரை கிடைக்கப்பெற்றுள்ளது,

இது குறித்து சிந்து சமவெளி மற்றும் பிராமி கல்வெட்டு ஆய்வாளர் திரு." ஐராவதம் மகாதேவன் " கூறும் போது "இந்த முத்திரையை சற்று கூர்ந்து கவனித்து பார்த்தால்,இன்றைக்கு ஜல்லிக்கட்டில் மாடு பிடி வீரர்கள் காளையை பிடிக்கும் களம் போன்று தத்ரூபமாக உள்ளது !.இந்த படத்தில் இருப்பது ஒருவரே பல கோணங்களில் தூக்கி அடிப்பது போலவும் அல்லது பலர் காளையால் தூக்கி அடிக்கப்பட்டு நாலாபுறமும் சிதறுவதைப் போலவும் இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் தெளிவாக "காளை " தான் வெற்றிபெற்றுள்ளது என்பதை உணரமுடிகின்றது.இந்த கல்லில் வடிக்கப்பட்ட முத்திரை தற்போது " தில்லி அருங்காட்சியத்தில்" பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது , இது கி.மு.2000 வருடங்கள் பழமையானதாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

இந்த முத்திரையை இன்னும் சற்று கூர்ந்து பார்த்தால் வளைந்திருக்கும் அந்த காளை கொம்புகள், காளையின் முதுகிற்கு நடுவே வரை வந்திருப்பதன் மூலமாக அது எவ்வளவு ஆக்ரோஷத்துடனும், வேகத்துடனும் களத்தில் வீரர்களை பந்தாடுகிறது என்பதை உணரமுடிகின்றது, அதன் கழுத்தை கவனித்தால் இடது புறம் சற்று சாய்வாக உள்ளது, இதற்கு காரணம் தன்னை பக்கவாட்டில் பிடிக்க வரும் அந்த வீரனை தூக்கி எறிந்து விட்டு மீண்டும் அது கழுத்தை சரியான பழைய நிலைக்கு கொண்டு வருவதையே உணர்த்துகிறது.

இதன் வண்ணப்படம் No. M 312 " The Corpus of Indus Seals and Inscriptions, Volume 1" என்ற புத்தகத்தில் உள்ளது.இந்த முத்திரையில் எந்த குறிப்புகளும் இல்லை.இந்த காளை அடக்கம் குறித்து மகாபாரதத்திலும் " கிருஷ்ணர் " கம்சனின் இடத்தில் ஆக்ரோஷமான காளையை அடக்குவதற்கான குறிப்புகள் உள்ளன.இந்தியாவை தவிர " ஸ்பெயின்", " போர்சுகல்" போன்ற நாடுகளிலும் இந்த காளை விளையாட்டு இன்றும் உள்ளது.

Tuesday, October 17, 2017

Wish You Happy Diwalli 2017

வந்துட்டேன்னு சொல்லு . . .
திரும்ப வந்துட்டேன்னு போய் சொல்லு . . .

Monday, February 13, 2017

கரிகாலனின் இமய படையெடுப்பு !

சீறிபாய்ந்து வந்த காவிரியை தடுத்து கரிகாலன் அணை கட்டிய வரலாறு நாம் அனைவரும் அறிந்திருப்போம்.. ஆனால் அதற்கு முன்பு இமயம் வரை படையெடுத்து சென்று இமய மலையில் புலி சின்னத்தை பொறித்த வரலாறு பற்றி பலரும் அறிந்திருக்கமாட்டோம். இதோ கல்லணை கட்டியவனின் கம்பீர வரலாறு....


தென்னகத்தில் பெற்ற வெற்றிகளால் மன்னன் கரிகாலன் திருப்தியடையவில்லை.கரிகாலனின் போர்த் தாகம் தணியாத நிலையில் அவனுடைய போர்ப் பார்வை, போரிடுவதற்கான எதிரிகளைக்த் தேடி வட திசை நோக்கிப் பாய்ந்தது. எனவே, தன் வாள் மற்றும் வெண் கொற்றக் குடையுடன் மயிர்க் கண் முரசம் எனும் ஒருவகைப் போர் முரசத்தை(ஒரு புலியை கொன்ற எருதின் தோலால் செய்யப்பட்ட முரசம்) தன் படையினர் ஒலிக்க, தன் வலிமைமிக்க தோள்களுக்கு எதிரிகள் கிடைப்பார்கள் என்ற எண்ணத்தில் நல்ல நாள் ஒன்றில் வட திசை நோக்கிப் புறப்பட்டான். (ஆதாரம்-சிலப்பதிகாரம் 5:90-94). 

பெரும்படையுடன் சென்ற கரிகாலன் செல்லும் வழியில் தன்னை எதிர்த்து நின்ற அரசர் அனைவரையும் வென்று, இறுதியில் இமயமலை சாரலைச் சென்றடைந்தான். இமையமலையை கடந்து வடக்கே செல்ல நினைத்த கரிகாலன், குறுக்கே அமைந்திருந்த பாதை பயணத்துக்கு ஏற்றதாக இல்லை என்பதை உணர்ந்து, பொன் போன்ற இமயமலையின் ஒரு பாகத்தை இடித்திவிட்டு புதுப்பாதை ஒன்று அமைத்தான். பின் பழைய பாதையை மூடி விட்டான்.

"
பொன்மலை புலி வென்று ஓங்கப்
புதுமளையிடுத்துப் 
பொற்றும் அந்நெறி வழியேயாக 
அயல் வழி அடைத்த சோழன்"
-
பெரியபுராணம் 55

மேலே குறிப்பிட்ட சான்றை மேற்கோள் காட்டிய குடவாயில் பாலசுப்ரமணியம், புலி சின்னம் பொறிக்கப்பட்ட இடத்தை பற்றி மேலும் சில விவரங்களை குறிப்பிடுகிறார்.

சிக்கிம் மாநிலத்திலிருந்து திபெத் நாட்டின் சீனப் பகுதிக்குச் செல்கிற சூம்பிப் பள்ளத்தாக்கை ஒட்டி அமைந்துள்ள 'சோழக் கணவாய்' மற்றும் 'சோழ மலைத் தொடர்' ஆகியவற்றின் இடைப்பட்ட பகுதிதான் கரிகாலன் இமயமலையில் புலிச் சின்னத்தை பொறித்த இடம். இது கரிகாலனால் புதிதாக அமைக்கப்பட்ட பாதை, அந்த பகுதியில் வாழும் மக்களுக்கு மலையை கடந்து மறுபுறம் செல்ல வசதியாக இருந்ததால் அதை அமைத்துக் கொடுத்த கரிகால் சோழனுக்கு நன்றி கூறும் முகமாக, அந்தப் பாதைக்குச் 'சோழக் கணவாய்' என்றும் அதை ஒட்டிய மலைத்தொடருக்கு 'சோழ மலைத்தொடர்' என்றும் பெயர்கள் சூட்டி அழைத்துள்ளனர். அவ்வாறு, புதிய வழித் தடத்தை அமைத்த பின், கரிகாலன் அந்த வழித் தடத்தை ஒட்டிய இமயமலைப் பாறையின் மீது புலிச் சின்னத்தை பொறித்தான்.

புதிய வழி தடம் அமைப்பதிலும் பழைய வழி தடத்தை மூடுவதிலும் அவன் போர்ப் படையில் இடம் பெற்றிருந்த சேர நாட்டுப் படை வீரர்களும், பாண்டிய நாட்டுப் படை வீரர்களும் வேற்றுமை பாராட்டாமல் அவன் படை வீரர்களுடன் உற்சாகமாய் ஈடுபட்டனர். ஆதலால், சேர மன்னனின் 'வில்-அம்பு' சின்னத்தையும், பாண்டிய மன்னனின் 'கயல் மீன்' சின்னத்தையும், புலி சின்னத்துடன் பொறித்துத் தன் பெருந்தன்மையை வெளிபடுத்திக்கொண்டான்.

#இமயமலை_வழித்_தடம் 

கரிகாலன் தன் போர்ப் படையுடன் கிழக்குக் கடற்கரையோர வழித் தடம் மூலமாகக்#கலிங்கநாடு, வங்காளத்தில் உள்ள '#வச்சிரநாடு' மற்றும் பீகாரைச் சேர்ந்த பகுதிகள் வழியாக இமயமலையை அடைந்தான். மலையின் மீது சோழ, சேர, பாண்டிய நாடுகளின் சின்னங்களை பொறித்த பின், வச்சிர நாட்டு மன்னனை வென்று அவன் கொடுத்த 'கொற்றப் பந்தரை'த் திரையாகப் பெற்றுக் கொண்டான். திரும்பும் பொது, மேற்குத் திசை வழியாக வந்து #மகதநாட்டு(பீகார்) மன்னனை வென்று அவன் அளித்த அரச குல பட்டி மண்டபத்தை திரையாக பெற்று கொண்டான். மேற்கு திசை நோக்கி மேலும் நகர்ந்து, தன் நண்பனாகிய அவந்தி நாட்டு மன்னன் மனமுவந்து அளித்த 'தோரண வாயிலை' அன்பளிப்பாக பெற்றுக்கொண்டு, தன் நாடு திரும்பினான்.நாடு திரும்பிய கரிகால் மன்னன் தான் பெற்று திரும்பிய மூன்று அரிய பொருட்களையும் பூம்புகார் நகரில் 'சித்திர மண்டபம்' என்னும் ஒரு மண்டபத்தை வடிவமைத்து, அந்த மண்டபத்துக்குள் நிலைநிறுத்தி தன் மக்கள் கண்டுகளிக்கும் வகையில் காட்சி பொருட்களாக வைத்தான்.

இந்த தகவல் டாக்டர் ரா.நிரஞ்சனாதேவி அவர்கள் எழுதிய 'கரிகால் சோழன்' என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது...

கரிகாலனுக்கு பிறகு மேலும் இரண்டு தமிழ் மன்னர்கள் இமயமலை வரை படையெடுத்து சென்று வெற்றிபெற்று, இமயமலையில் தங்கள் அடையாள சின்னங்களை பொறித்து விட்டு திரும்பியுள்ளனர்