Sunday, October 18, 2020

புத்தனின் சீடர்கள்


#அருணகிாி



உலகெல்லாம் பரந்திருந்த இந்துமதம் புத்தன் காலத்தில் திசைதிருப்பபட்டது, புத்தனின் சீடர்கள் இந்து தத்துவங்களை அழிக்க இந்துக்களின் புனித உருவங்களுக்கு புத்தன் பெயரை சூட்டினார்கள்
பிரம்மன் 4 முக புத்தன் என்றானார், பள்ளி கொண்ட பெருமாள் தூங்கும் புத்தர் என்றானார், இப்படி ஏக அழிச்சாட்டியங்களை அந்த புத்தமதம் கிழக்காசியாவில் செய்தது
பிள்ளையார் கூட சிரிக்கும் புத்தராக மாறினார், இன்னும் பல இந்து தத்துவ தெய்வங்கள் அப்படி மாறின‌
முருகன் கூட மயில்மேல் புத்தா என மங்கோலியா பக்கம் மாறினார்
இது ஜப்பானில் கூட உண்டு
சரஸ்வதி ஜப்பானிய மொழியில் அறிவு வழங்கும் கடவுள் என பென்சாண்டைன் என்றானார், பிள்ளையார் மூல கடவுள் என சொல்லபடும் வகையில் காங்கிடென் என்றானார்
குபேரன் செல்வங்களின் அதிபதி என சொல்லபடும் வகையில் பிஷமொன்டன் என்றானார்
சப்த ரிஷிகள் கதையும் ஜப்பானில் இன்று அப்படியே உண்டு மொழி மட்டும் வேறு
பிரம்மனுக்கு முகத்தை புத்தர் என மாற்றிய அம்மதம், சரஸ்வதிக்கு வீணையினை அப்படியே கொடுத்தது
இன்றும் சரஸ்வதி வீணையுடன் ஜப்பானில் பென்சான்டைன் எனும் தெய்வமாக அருள் புரிகின்றாள், ஜப்பானியரின் மிக விருப்பமான கடவுள் அவள்
ஒருவேளை ஜப்பானியர் பெற்றுகொண்ட அனைத்து அறிவுகளுக்கும் அந்த சரஸ்வதி கடாட்சமும் காரணமாக இருக்கலாம்
இந்துமதம் உலகெங்கும் பரவி இருந்தது, இன்று இந்தியாவில் மட்டும் தனித்து பாதுகாக்கபடுகின்றது
தன் வழிபாட்டு வேண்டுதல் வழியெங்கும் "உலகம் " "உலக நன்மை" "உலகை காக்கும் லோக நாயகி" என உலகுக்கு பொதுவான நலன்களை வேண்டிய அம்மதம் அப்படித்தான் உலகெல்லாம் பரவி இருந்தது.
உலகெல்லாம் பரவி இருந்ததாலே லோக ஷேமம் எனும் உலக நலம் அதன் முக்கிய நிலைப்பாடாய் இருந்தது
இன்று  அதன் சுவடுகள் உலகெங்கும் எஞ்சி இருக்கின்றன, வெவ்வேறு வடிவங்களில் அது திரிக்கபட்டாலும் அதன் மூலம் இந்துமதமே என்பது பட்டவர்த்தனமாக தெரிகின்றது
எவ்வடிவில் மழை பொழிந்தாலும் அந்த மேகங்களின் மூலம் இந்து மதமாகவே இருக்கின்றது.
அப்படி உலக மதங்களின் தாய் என சொல்லபடும் இந்துமதம் அதன் பழமையான வேர்களை ஜப்பானிலும் கொண்டிருக்கின்றது
இந்துக்களை போல ஜப்பானியரும் சரஸ்வதியினை வணங்கி இந்நாட்களில் சிறப்பித்து கொண்டிருக்கின்றார்கள்
ஆம், சரஸ்வதி பூஜை ஒரு காலத்தில் உலக பெரும் பண்டிகையாக இருந்தது என்பதற்கான சான்றுகள் இவை..
இந்து என்றொரு மதமில்லை, அப்படி இந்தியா தாண்டி ஒரு பேச்சே இல்லை என திக திமுக ராம்சாமி கோஷ்டி சொல்லி கொண்டிருந்தால் அவனை பரிதாபமாக பார்த்து  கொஞ்சம் சோறும் நீரும் கொடுத்துவிட்டு   நகர்ந்துவிடுங்கள், 
நாம் அவ்வளவுதான் செய்யமுடியும்.

ஸ்டான்லி ராஜன் பதிவிலிருந்து

அருணகிரி

No comments:

Post a Comment