Monday, July 6, 2020

இப்போது நோய்களின் பிறப்பிடமான சீனா

பசிபிக் கடல் நிலநடுக்கத்தின் தாய் என அழைக்கபடும், அங்கு அன்றாடம் நிலநடுக்கம் நடக்கும், 
#Sundarji
#Arunagiri

வெகு சில பெரிய நிலநடுக்கமே சுனாமியினை ஏற்படுத்தும்

அப்படி கொரோனா எனும் சுனாமியினை மட்டும் நமக்கு தெரியும், அன்றாடம் சீனாவில் பரவு ஏராளமான நோய் பற்றி நமக்கு தெரியாது

இப்போது நோய்களின் பிறப்பிடமான சீனா இப்பொழுது புதியவகை நோய் எச்சரிக்கையினை விடுகின்றது

அதாவது கண்டதையும் உண்ணும் அச்சமூகம், ஒவ்வொரு மிருகத்தில் இருந்தும் ஒரு நோயினை உருவாக்குவதை வழமையாக கொண்டிருக்கின்றது

விலங்குகளில் உண்ணதக்கன தகாதன என சில வகை உண்டு. 

இந்து தர்மம் மொத்தமாக புலால் மறுத்தல் என மாமிசத்தால் ஏற்படும் நோய்களை விரட்ட வழி சொன்னது.

மேற்காசிய மதங்கள் சிலவற்றுக்கு விலக்கு அளித்தன, அந்த சிலவற்றிலும் சில உடல் பாகங்களை உண்ணாமல் இருக்க சொன்னது

யூத மதம் பன்றி, காலில் குளம்பு இல்லா மிருகம் (முயல், பூனை, நாய்) போன்றவை செதில் இல்லா நீர்வாழ் உயிரினம் (இறால், நண்டு, வஞ்சிரம் மீன் வகையறா) போன்றவை தடை செய்யபட்ட மாமிசம் என்றது

பறவைகளில் கூட பல பறவைகள் உண்ணதகாதவை என அது வரையறுத்தது. 

இதில் உண்மையும் உண்டு, நண்டு வஞ்சிரம் இறால் போன்றவை உஷ்ணத்தை ஏற்படுத்தும் விஷயங்கள், 

சில உடல் உபாதைகளையும் ரத்த சிக்கல்களையும் அவை கொடுக்கும், அவை தவிர்க்கபடத்தான் வேண்டும் 

ஆனால் அதை எல்லாம் சொல்லமுடியாது, யார் கேட்பார்கள்?

(மிருகங்களிலும் பன்றி, பூனை, நாய், நரி போன்றவையின் மாமிசம் மிகபெரும் நோய்களை கொண்டுவரும், அல்லது ரத்தத்தில் சில மாறுதல்களை செய்து மந்த புத்தியினை கொண்டுவரும்)

அனுமதிக்கபட மாமிசமான ஆடு மாடில் கூட இரத்தம் ,குடல் இன்னபிற பாகங்களை உண்ண வேண்டாம் என்றது யூதமதம்.

(அவற்றில் கிருமி இருக்கும் என்பது இன்று ஆய்வில் சொல்லபட்ட உண்மை)

இதையே யூதரில் இருந்து இஸ்லாமியரும், கிறிஸ்தவர்களும் பின்பற்றினர். உண்மையில் கிறிஸ்தவர்களுக்கும் பன்றி, நண்டு, இறால், முயல் எல்லாம் விலக்கபட்டது, ரத்தமும், குடலும் விலக்கபட்டது, உண்ண கூடாது.

ஆனால் அவர்களோ அதெல்லாம் பழைய ஏற்பாடு என நழுவுவார்கள், சரி பத்து கட்டளையும் பத்தில் ஒரு பங்கு காணிக்கையும் பழைய ஏற்பாடுதானே? அதை ஏன் பின்பற்றுகின்றீர்கள் என்றால் "அப்பாலே போ சாத்தானே" என்பார்கள் , இப்போது "அப்பாலே போ சங்கி" என்பார்கள்

ஆம், மாமிசங்களில் பல வகை நோய்பரவும் என்பது அன்றே சொல்லபட்ட உண்மை. கண்ணுக்கு தெரியா கிருமி அதில் கலந்திருக்கும், அதை தொட்டாலோ அருகில் சென்று முகர்ந்தாலோ கண்ணுக்கு தெரியா கிருமி பரவும் என்பதை அறிவுடை சமூகம் அறிந்திருந்தது

இன்னும் வேக வைத்தாலும் சில நுண் உயிர்களை கொல்லமுடியாது என்பது என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்த இனம் பல விதிகளை வகுத்தது

இந்துமதம் இதில் மகா அபாரமாக விதிகளை சொன்னது, புலால் மறுத்தல் என சொன்ன மதம் மேற்கொண்டும் ஏகபட்ட விஷயங்களை போதித்தது

ஒருவேளை தின்று தீர்ப்பேன் என்பவனுக்கு கூட மஞ்சள், மிளகு இன்னும் ஏகபட்ட மருத்துவ குணம் கொண்ட பொருட்களோடு சமைத்து உண்ண சொன்னது. அதாவது மாமிசத்தின் கிருமியினை அழித்துவிட்டு உண்ண சொன்னது

உண்ணாதே என்ற இந்துமதம் அவன் உண்டே தீருவேன் என சொன்னபொழுது பல பாதுகாப்பான வழிகளை சொன்னது

ஆம், கிராமங்களில் ஆடுவெட்டும் பொழுது ரத்தம் எனக்கு வேண்டும் என்றது சாமி, உண்மையில் சாமிக்கு ரத்தம் தேவையா என்றால் இல்லை 

ஆனால் எதற்கு சொன்னது என்றால் "ரத்தம் உண்பது ஆபத்து, விஷத்தை எனக்கு கொடுத்துவிட்டு கறியினை நீ உண்டுகொள்"

ஆடு வெட்டி ரத்தம் தெளிக்கும் விஷயம் இதுதான், அதை மக்கள் உண்ண கூடாது என்பதே

முன்பு கொழுப்பையும் சாமிக்கு படைக்கும் வழக்கம் இருந்ததாம், ஆம் கொழுப்பு மனிதர் உண்ண கூடாதது என்பது விஷயம்

இதுபோக இன்னும் ஏராளமான பாதுகாப்பு வழிகளை சொன்னது, கோவிலில் வெட்டபடும் ஆடு பழதற்று இருக்க வேண்டும், நோயுற்றதாக காயம்பட்டதாக  இருக்க கூடாது என அது சொல்லி வைத்தது

ஏன்? ஆட்டில் காயம் இருந்தால் அதில் கிருமி இருக்கும்., ஆட்டுக்கு நோய் இருந்தால் உள்ளே கிருமி இருக்கும் அதை உண்ணும் மக்கள் நோயுற்று வீழ்வர்

இதை தடுக்கவே கோவிலுக்கு வரும் ஆடு தரமானதாக இருக்க வேண்டும் என சொல்லிற்று அந்நாளைய அறிவுடை சமூகம்

இது போக புவிஈர்ப்பு அதிகபடும் சில நாட்களில், கிரகபலன் அதிகபடும் சில நாட்களில் மாமிசத்துக்கு அது தடை விதித்தது

மாமிச படையலுக்கு முன்னும் பின்னும் பல நாட்கள் விரதம் இருக்க சொன்னது அதில் உடலில் சமநிலை வந்தது, கொழுப்பு ஏறாமல் பார்க்க சொன்னது

சீனாவில் அப்படி அல்ல, அவர்களுக்கு மதமுமில்லை கலாச்சாரமுமில்லை புத்த கொள்கைகளை எல்லாம் கடமைக்கு துடைத்து அழகுக்கு வைத்தாயிற்று, 

கம்யூனிசம் வந்தபின் அதுவுமில்லை
இதனால் வவ்வால், தவளை, எலி, பன்றி இன்னும் எதெல்லாம் உயிருடையதோ அதை எல்லாம் உண்டார்கள்

கோழி பண்ணையில் இருந்து பறவை காய்ச்சல் வந்தது,வாத்து பண்ணையில் இருந்து சார்ஸ் வந்தது, 

வவ்வாலில் இருந்து கொரோனா வந்தது, பன்றியில் இருந்து அடிக்கடி ஒரு காய்ச்சல் வரும்

இப்பொழுது மங்கோலியா பக்கம் ஒரு மர்ம காய்ச்சல் பரவுவதாக சீனா அலறுகின்றது, அது எலி மூலம் பரவும் காய்ச்சல், இதற்கு இருவர் பலியாகிவிட்டார்கள்

இந்த பகுதி ரஷ்ய எல்லைபக்கம் வருவதால், அதாவது சீனா கட்டுபடுத்தி சுயாட்சி வழங்கியிருக்கும் 

மங்கோலியா பக்கம் வருவதால் ரஷ்யா கடும் எச்சரிக்கையில் இருக்கின்றது

ஆக கோழி, வாத்து, பன்றி, வவ்வால் வரிசையில் எலியும் சேர்ந்தாயிற்று

இவ்வளவுதான் விஷயமா என்றால் இல்லை, 

அவர்களின் உணவு வரிசையில் நாய், பூனை, பாம்பு, தேள், கரப்பான் பூச்சி, முதலை, குரங்கு, நரி என ஏகபட்ட வரிசை உண்டு என்பதால் இனி ஒவ்வொரு அம்மாவாசைக்கும் ஒரு நோய் பரவலாம்...
சுந்தா் ஜீ

No comments:

Post a Comment