Thursday, May 21, 2020

சசந்தர்ஜியின் இன்று ஒரு தகவல்...

சுந்தர்ஜியின் இன்று ஒரு தகவல்:
பான் கார்டு :
நாம் அனைவரும் பான் கார்டு எடுத்து வைத்திருப்பவராக இருத்தல் வேண்டும்...ஏன்?
நாம் வங்கியில் எந்தவித சிக்கலும் இல்லாம பணபரிவர்த்தனை செய்ய...
50000 ரூபாய்களுக்கு மேல் நாம் செய்யும் வியாபாரம் அல்லது முதலீடு அல்லது கொள்முதல் விற்பனை அனைத்திற்க்கும் பான் கார்டு எண் அவசியம்.
இது இல்லையேல் இன்றைய சூழ்நிலையில் நாம் மேற்சொன்ன எதுவும் செய்ய முடியாது...
சரி எடுத்துவிடுவோம்...
எப்படி?
நாம் அனைவரும் ஆதார் கார்டு வைத்திருப்போம் இல்லையா?
அதை எடுத்து பாருங்கள்...
அதில் நம் பெயர், விலாசம், பிறந்த தேதி நம் கையில் இருக்கும் அலைபேசி எண் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள்..
அனைத்தும் சரியாக இருந்தால் போதுமானது...
அப்படி ஏதாவது பிழை இருந்தால் உடனே ஆதார் மையத்துக்கு சென்று அதை திருத்திக்கொள்ளுங்கள்...
அதன் பின்னர் ஏதாவது ஒரு கணினி மையத்திற்கு சென்று ஆன்லைனில் உடன் பான் அப்ளை செய்து 5 நிமிடத்தில் நமக்கான பான் கார்டு பெற்றுக்கொள்ளலாம்..
அதிகபட்சம் ரூ100 கேட்பார்கள்..
உங்களுக்கு சிரமமாக இருந்தால் என்னை அழையுங்கள்..
ஆன்லைனில் பதிவு செய்து உங்களுக்கு உடனே பான் கார்டை வாட்ஸ் அப்பில் அனுப்பி வைக்கிறேன்.
அடுத்து வருமான வரி தகவலுடன் நாளை சந்திக்கிறேன்..
9842741451

No comments:

Post a Comment