Sunday, September 18, 2016

Tholkappiyam-9000 Years Old Tamil Litreature

ஒன்பதாயிரம் ஆண்டுகள் பழமையானது தொல்காப்பியம்!!!

வெறும் 2800 ஆண்டு பழமை என்று கூறி திட்டமிட்டு தமிழனின் தொன்மையை மறைக்கப்பட்டுள்ளது...
தமிழினத்தின் வரலாற்றைப் பற்றி எழுதிய அறிஞர்களெல்லாம் தமிழினத்தின் தொன்மையை அதிகபட்சம் 3000 ஆண்டுக் காலமே பழமையானது எனக் கூறிவந்துள்ளனர். ஆனால், தமிழர் வரலாறு 3000 ஆண்டுகளுக்கும் அதிகமானது என்பதே உண்மை.
தொல்காப்பியத்தை கி.மு. 8-ஆம் நூற்றாண்டு என்றுதான் தமிழ்ப் பண்டிதர் கள் சொல்லி வருகிறார்கள். அதாவது அது 2800 ஆண்டுகள்தான் பழமையுடையது என்கிறார்கள்.
வானியல் அறிஞர் சினீவாசராகவன் அவர்களின் கணக்கை வைத்துப் பார்க்கும் போது, தொல்காப்பியம் கி.மு. 7000 என்பது தெளிவாகிறது. ஆனால் தமிழிலுள்ள இன்றைய ஆவணங்களை வைத்துப் பார்த்தால் கி.மு. 800 ஆண்டுகளுக்கு மேல் போக இடமில்லை.
ஏனென்றால் ரிக் வேதத்தை 8000 கி.மு. என்று திலகர் நிறுவியிருக்கிறார். அதுதான் அதிகபட்ச பழமை.
தொல்காப்பியத்தை கி.மு. 7 ஆயிரம் என்று 8 ஆண்டுகளாகச் சொல்லி வருகிறேன். கி.மு. 7 ஆயிரம் என்றால் இன்றைக்கு 9 ஆயிரம் ஆண்டுகள் பழமையுடையது.
9 ஆயிரம் ஆண்டு எப்படி?
இப்போது தமிழ் வருடத்தின் ஆரம்பம் சித்திரை என இருக்கிறது. ஆனால், தொல்காப்பிய காலத்தில் வருட ஆரம்பமாக ஆவணி சொல்லப்படுகிறது. ஆயிரம் வருஷத்திற்கு ஒருமுறை வருட ஆரம்பமே மாறுகின்றது. ஆவணியில் ஆரம்பித்த வருடம் 1000 வருடங்களுக்குப் பிறகு புரட்டாசியில் ஆரம்பிக்கிறது.
பின்னர் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி, சித்திரை என்று 9 மாதங்களும் வருஷ ஆரம்பங் களாக மாறுவதால், ஒன்பது ஆயிரம் வருடங்கள் என ஆகின்றன.
இந்த 9 ஆயிரம் வருடத்தில் இப்போதுள்ள கி.பி. 2 ஆயிரம் வருடம் போக, மீதி 7 ஆயிரம் வருடங்களை 7 ஆயிரம் (கி.மு.) என்று நிர்ணயித்தால், அதுதான் தொல்காப்பியம் தோன்றிய காலம் எனக் கணக்கிடலாம்.

தமிழக அரசியல் சார்பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ராமதுரை என்பவர், "வானியல் மூலம் வரலாறு காண் போம்" என்ற ஒரு சிறு நூலை எழுதி யுள்ளார். அந்நூலில் அவருடைய இந்த யுகக் கணக்கு ஆய்வுகள் சிந்திக்கத் தக்கனவாக உள்ளன.
முச்சங்கங்களுக்கு முன்பே கடல் கொண்ட தென்னாட்டில் இருந்த தமிழ்ச் சங்கங்களைப் பற்றி துடிசைக்கிழார் சான்று களுடன் நிறுவியுள்ளார். அவர் கருத்துப் படி முதற்சங்கத்திலிருந்து மொத்தம் 11 சங்கங்கள் இருந்துள்ளன என்கிறார்.
இறையனார் களவியல் என்ற இலக்கண நூலுக்கு உரை கண்டவர் நக்கீரனார். அதில் மூன்று தமிழ்ச் சங்கங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அதில் முதல் தமிழ்ச் சங்கம் கி.மு. 30,000 முதல் கி.மு. 16,500 வரை - 13,500 ஆண்டு கள் இருந்ததாக துடிசை கிழார் தனது தமிழ்ச் சங்கங்களின் வரலாறு என்ற நூலில் கூறியுள்ளார்.

இவ்வளவு நெடிய வரலாற்றையும் சிறப்புகளையும் கொண்ட தமிழ் மொழியை அறியாமல், குறுகிய நோக் கோடு ஆய்வுகள் செய்வதால்தான், தமிழின் பெருமை தமிழராலேயே அறியப்படாமல் போயிற்று.

No comments:

Post a Comment