Wednesday, August 17, 2016

OHM SOUND FROM SUN RESEARCH RESULT BY NASA

# சூரியனில் இருந்து ஓம் எனும் சப்தம் வெளிவருகிறது, நாசாவின் ஆராய்ச்சியில் ஆச்சரியம்!!

பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்து நமது முன்னோர்கள் ஆன்மீகத்தில் பயின்று வந்த, பயன்படுத்தி வந்த "ஓம்" போன்ற ஒலி சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்புறத்தில் இருந்து வெளிவருகிறது என்று நாசாவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஷெபீல்ட் பல்கலைக்கழகம் ஷெபீல்ட் பல்கலைக்கழகதின் வானியல் ஆய்வாளர்கள் சூரியனின் வளிமண்டலத்தில் வெளிவரும் காந்த அலைவரிசையின் மூலம் உருவாகும் அதிர்வுகளை வைத்து ஓர் ஒலியை கண்டறிந்தனர்.சூரியனின் வளிமண்டல வெளிப்புறத்தில் இருந்து பெரிய காந்த சுழல்கள் எனப்படும் ஒளிவட்ட சுழல்கள் கண்டறியப்பட்டது. இது ஒலியின் அலைவரிசையை போல பயணிப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இசை சரங்களில் இருந்து அதிர்வுகள் வெளிவருவதை போன்று அது இருந்தது.விண்வெளி வெற்றிடமாக இருப்பதால் சப்தத்தை பதிவு செய்ய முடியாது. இதனால் சூரியனின் வளிமண்டலத்தில் இருந்து வெளிவரும் சப்தத்தை நேரடியாக பதிவு செய்ய முடியவில்லைஇதனால், ஷெபீல்ட் பல்கலைக்கழகதின் வானியல் ஆய்வாளர்கள் செயற்கை கோளின் உதவியோடு, வெண்வெளியில் ஆயிரம் மைல்களுக்கு பரவியிருந்த பெரிய காந்த சூழல்களை புகைப்படம் எடுத்தனர். பின்னர் அந்த அதிர்வுகளின் அளவை கணக்கிட்டு, அதை ஒலியாக மாற்றினர்.சூரியனின் வளிமண்டலத்தில் இருந்து வெளிவரும் அந்த ஒலியானது ஏதோ இசையை போல இருப்பதாக வானியல் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதெல்லாம் கடந்த 2010ஆம் ஆண்டு நடந்த ஆய்வில் கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது."வாயேஜர் 1" என்ற நாசாவின் ஆய்வறிக்கையில், சூரியனின் சப்தத்தை பதிவு செய்யப்பட்டது என அக்டோபர், 2012 மற்றும் ஏப்ரல் 2013- னில் "Interstellar plasma music" என்ற தொகுப்பு வெளியிடப்பட்டது. இதில் சூரியனில் இருந்து "ஓம்" என்ற ஒலி வெளிவருவதாக கூறப்பட்டிருந்தது .2010 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் சூரியனில் இருந்து "ஓம்" அல்லது "ஓம்" என்பது போன்ற ஒலி வெளிவருகிறது என்பதை காந்த சூழல்களின் மூலம் கண்டறிந்துள்ளனர்.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே "ஓம்" என்ற சொல் அல்லது ஒலியை இந்து மதத்தில் மிக பரவலாக பயன்படுத்தப்பட்டது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில், வேறு எந்த உலக மொழிகளிலும் "ஓம்" என்ற சொல் கிடையாது.

No comments:

Post a Comment