சிவகங்கை மாவட்டம் கீழடி பள்ளிச் சந்தைபுதூரில் நடைபெறும் அகழ் வாய்வில், நகர நாகரிகம் இருந்ததற்கு அடையாளமாக சுடுமண் குழாய் மூலம் உருவாக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் வசதியுடன் கட்டிடங்கள் இருந்தது கண்டறியப் பட்டுள்ளன. மேலும், 3 ஆயிரத்துக் கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.
பெங்களூருவில் உள்ள மத்திய தொல்பொருள் துறை அகழ்வாய்வு பிரிவு சார்பில் சிவகங்கை மாவட் டம், திருபுவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தைபுதூரில் இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள் ஜனவரி 18 முதல் நடைபெற்று வருகின்றன. தொல்பொருள் துறை கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் உதவி தொல்லியலாளர்கள் ராஜேஷ், வீரராகவன், தொல்லியல் துறை மாணவர்கள் உள்ளிட்டோர் அகழ் வாய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதல்கட்ட ஆய்வில் கிடைத்ததைவிட இரண்டாம்கட்ட அகழ்வாய்வில் 10-க்கும் மேற்பட்ட சங்க கால கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஹரப்பா நாகரிகம் போன்று கழிவுநீர் கால்வாய் வசதியுடைய கட்டிட அமைப்புகள் இருந்தது தெரியவந்துள்ளது.
அக்கால மக்கள் பயன்படுத்திய சுடுமண் முத்திரைக் கட்டைகள், எழுத்தாணிகள், அம்புகள், இரும்பு, செம்பு ஆயுதங்கள், அரிய வகை அணிகலன்கள், 18 தமிழ் பிராமி எழுத்துகளையுடைய மட்பாண்ட ஓடுகள் உட்பட 3,000-க்கும் மேற் பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள் ளன. இதுகுறித்து தொல்பொருள் துறை கண்காணிப்பாளர் கே.அமர் நாத் ராமகிருஷ்ணா, ‘தி இந்து’விடம் கூறியதாவது:
தமிழகத்தில் அகழ்வாய்வில் கட்டிடங்கள் கண்டறியப்படுவது மிகவும் அரிய விஷயம். ஆனால், கீழடியில் 53 அகழ்வாய்வுக் குழிகள் தோண்டியதில் 10-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கண்டறியப்பட்டுள் ளன. கடந்த ஆண்டு சங்க காலத் தைப் பற்றிய பல ஆதாரங்கள் கிடைத்தன. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு இரண்டாம்கட்ட அகழ்வாய்வில் சங்க கால கட்டி டங்கள் அதிக அளவில் கண்டறியப் பட்டுள்ளன. ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கான ஆதாரங்கள் கீழடியில் எதிர்பார்த்ததைவிட அதிக மாகவே கிடைத்துள்ளன. இந்த அகழ்வாய்வில் சங்க கால கட்டி டங்கள் குறித்து விரிவான ஆய்வு செய்ய உள்ளோம்.
அரிக்கன்மேடு, காவிரிபூம்பட்டி னம், உறையூர் போன்ற அகழ் வாய்வில் கிடைத்ததைவிட கீழடியில் அதிக எண்ணிக்கையில் தொடர்ச்சியாக பல கட்டிடங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன.
சங்க காலத்தில் கட்டிடங்களே இல்லை என்ற கூற்றை இந்த அகழ்வாய்வு மாற்றியமைத்துள் ளது. கீழடியில் கண்டறியப்பட்டுள்ள கட்டிடங்கள் மூலம் ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கான அத்தனை அடிப்படை ஆதாரங்களும் கிடைத் துள்ளன. சங்க கால கட்டிடங்களின் முழுமை, அதன் தன்மை, விரிவாக் கம் எவ்வாறு இருந்தது என்பதை ஆய்வு செய்ய உள்ளோம்.
முழுமையான கட்டிடங்கள், செவ்வகம், சதுரம் வடிவிலான செங் கலால் ஆன கட்டிடங்கள் கண்டறி யப்பட்டுள்ளன. மேலும் ஹரப்பா நாகரிகம் போன்று சுடுமண் கழிவு நீர் கால்வாய் வசதியுடைய கட்டிட அமைப்புகளும் கண்டறியப்பட் டுள்ளன.
தமிழகத்தில் இதுவரை நடை பெற்ற அகழ்வாராய்ச்சியில் இப் போதுதான் முதல்முறையாக சுடு மண் முத்திரை (ஷீல்) கிடைத் துள்ளது. இது கலை வேலைப் பாடுடன் கூடியதாகவும் உள்ளது. தற்போது ரப்பர் ஸ்டாம்ப் பயன் படுத்துவதுபோல், அக்கால மக்கள் தங்களது வாணிப நோக்கத்துக்காக இந்த முத்திரைக் குறியீட்டை பயன் படுத்தி இருக்க வேண்டும். இது போல் 3,000-க்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கிடைத்துள்ளன என்றார்.
.....
No comments:
Post a Comment